1947 இல் வெள்ளை ஏகாதிபத்தியத்திடம் இருந்து பெற்றசுதந்திரம் இந்திய முதலாளிகளின் கைகளில் சென்று விட்டாலும் அந்த சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பல சுதந்திரபோராட்ட வீரர்கள்தங்கள் இன்னுயிரை துச்சமென மதித்து தாய்நாட்டின் அடிமை தலையை அறுத்தெறிய களம் இறங்கினர். இந்தியாவின்வடக்கே பகத்சிங் , ராஜகுரு,சுகதேவ் ,சந்தரசேகர் ஆசாத் போன்ற ஈடு இணையற்ற சுதந்திர போராட்டவீரர்களை போலவே தெற்கில் பாரதியார், வ.உ.சிதம்பரனார்,வா.வே.சு.ஐயர், சுப்ரமணிய சிவா போன்றவர்கள் சமகாலத்தில் வெள்ளையர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தனர்.
இவர்களுள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்தஆஷ்துரை என்ற கொடுங்கோலனைசுட்டுக்கொன்றதன் மூலம் தமிழக மக்கள் மத்தியில் என்றும் நீங்காத இடத்தை பிடித்துள்ளார் தியாகி வாஞ்சிநாதன்.
தியாகி வாஞ்சிநாதன் திருநெல்வேலி மாவட்டம்செங்கோட்டையில் , 1886 ம் ஆண்டு ரகுபதி மற்றும் ருக்மணிதம்பதியருக்கு மகனாக பிறந்தவர்இவரது இயற்பெயர் சங்கரன் என்றாலும் வாஞ்சி என்றே அனைவரும் அழைத்தனர் .கல்லுரி படிக்கும் போதே பொன்னம்மாளை மனம்முடித்து வனத்துறையில் பணியாற்றினார்.1911 ல் சுதந்திர போராட்டம் உச்சத்தை அடைந்திருந்தது. வ.உ.சி, சுப்ரமணிய சிவா ஆகியோரின் மேடைப்பேச்சுகள் திருநெல்வேலிபகுதியில் சுதந்திரஇயக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதில் ஈர்க்கப்பட்ட வாஞ்சிநாதன் அரசு பணியில் இருந்து விலகி புரச்சிகர இயக்கங்களில் தொடர்ப்பைஏற்படுத்திக் கொண்டார். பாரத மாத சங்கத்தில் இணைத்து வெள்ளை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள்ஆதரவை திரட்டினார். அப்போது சுதேசி கப்பல் கம்பனியை நிறுவிய தியாகி வ.உ.சி, சுப்ரமணிய சிவா ஆகியோர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆஷ் துரை உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டனர். அத்தோடுசுதந்திர போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் அடக்கு முறைய ஆஷ் துரை கட்டவிழ்த்துவிட்டார். அந்தகொடுங்கோலனை கொள்வதன் மூலம் வெள்ளை அரசுக்கு பாடம் புகட்டவும் , இந்திய மக்களை தட்டியெழுப்பி சுதந்திர தாகத்தை ஊட்டி வெள்ளை அரசுக்கு எதிராக தீரம் மிக்கபோராட்டங்களை நடத்தவும் முடிவு செய்தனர்.
ஆஷ் துரையை சுட்டுக்கொல்ல சரியான தேர்வாக தியாகி வாஞ்சிநாதனை பாரத மாத சங்கத்தினர் தேர்வு செய்தனர். 1911ஜூன் 17 , அன்று காலை 10 .45 மணி . திருநெல்வேலியில் இருந்து மதுரை செல்லும் வழியில்உள்ள மணியாட்சி ரயில்நிலைய சந்திப்பில் தன் மனைவியுடன் கொடைக்கானலுக்குச் செல்ல ரயிலில் முதல்வகுப்பில் பாதுகாப்போடு அமர்ந்திருந்த திருநெல்வேலிஆட்சியர் ஆஷ் துரையை தனது கை துப்பாக்கியால் வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்றார். சுடும் போது பலரும் வாஞ்சிநாதனைபார்த்துவிட்டதால் தான் கைது செய்யப்பட்டால் ரகசியமாக இயங்கி வந்த தங்களதுஇயக்கத்தை வெள்ளையர்கள் நசுக்கி விடுவார்கள் உயர்ந்த நோக்கத்தில் அந்த தியாகி தன்னை தானே சுட்டு கொண்டு வீர மரணத்தை தழுவினார்.
தான்ஏன் ஆஷ் துரையை சுட்டுகொன்றேன் என்று அதற்கான காரணத்தை எழுதிசட்டைப்பையில் வைத்திருந்தார். இவ்வாறு பல எண்ணற்ற வீரத் தியாகிகளின் ஒப்பற்ற தியாகத்தால் தான்சுதந்திர போராட்டங்கள் எழுச்சிபெற்றன.
வாஞ்சிநாதன் நினைவு நூற்றாண்டு நிறைவுபெரும் இந்த நாளில் தியாகி வாஞ்சிநாதனின் ஒப்பற்ற தியாகத்தை நினைவு கூறுவோம், அவர்கள் விட்ட பணியினை நாம் தொடர்வோம்.
தொடர்பிற்கு:
advkathiresan@gmail.com
இது ஒரு மீள் பதிவு|Published on: Jun 17, 2011 @ 19:15
“பிளேக் ” நோயை ஒழிப்பதற்காக எலியை கொன்றார்கள் என்பதற்காக [எலி கணபதியின் வாஹனம் ] இரண்டு வெள்ளைக்கார அதிகார்ரிகளை சுட்டு கொன்ற குற்றத்திற்காக 18 மாதம் ஜெயிலுக்கு போன இந்து வெறியன் தான் பால திலக கங்காதரன்.அவர் ஏதோ தேசியத்திற்காக போராடி போனது போல வரலாற்றை புரட்டியவர்கள் பார்ப்பனர்கள்.இப்படி எத்தனையோ கட்டு கதைகள் நமது தேசிய போராட்டங்களிலும் உண்டு.
இந்த வெறியனின் சீடர்கள் தான் பாரதி ,சுப்ரமணிய சிவா ,வ.உ .சி..
தமது இந்து மதத்திற்கு எதிராக[ஆசாரம் ] வெள்ளையன் செயல் பட்டன் என்பதற்காகவே சங்கரன் என்ற பார்ப்பான் ஆஷ் ஐ கொன்றான்.தேசியம் என்றொரு சாயம் பூசப்பட்டது.
பகத்சிங் , ராஜகுரு,சுகதேவ் போன்றோரை இவர்களுடன் ஒப்பிட முடியாது.
சரியாகக் கூறியுள்ளீர்கள் யோகன் அவர்களே! ஆனால் வ.உ.சி. பின்னாட்களில் பார்ப்பனியத் தளையில் இருந்து வெளியே வந்து விட்டார்.
தலைவா நீங்க எப்படி எப்பவுமே இப்படித் தானா இல்ல இப்படிதான் எப்பவுமேவா
மதன் அவர்களே! நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?
அன்றூ தொடக்கம் இன்றூ வ்ரை அய்யர்கள் தம்ழனை சுத்து மாத்து செய்து ஏமாற்றீயெ வ்ருகிறார்கள் ஆனால் தமிழ்ன் அவர்கள தேரில் ஏற்றூவதும்,பல்லக்கில் காவுவதுமாக அல்ல்லாடுகிறான்.வ்,உ.சி அய்ய்ர்மாரின் லொள்ளூம் அவ்ர்களது நஞ்சுப் புத்தியைக் கண்டே விலகினார்.செழிப்போடு இருந்த அவரை சில்லறக் காசுக்கு சிரமப்பட வைத்ததே பிராம்ண்ர்தான். பிராமணனையும்,பாம்பையும் கண்டால் பிராம்ண்னை அடிக்க்ச் சொன்னார் நாய்க்கர் அதனால் ஆனார் பெரியார்.யோக்ன் சிந்தனை பிடிக்கிற்து.
ஏன் சாதி வெறி உங்கள் கண்களை மறைக்கிறது என்று தெரியவில்லை. அவர் வாழ்ந்த காலம் 1911 அன்று உலகில் கம்யூனிசம் செல்வாக்கு பெறாத காலம் இவை அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்
சாதி வெறியைப் பற்றிப் பார்ப்பனர்கள் பேசுவது நீரோடையின் கீழ்மட்டத்தில் இருந்து நீரைக் குடிக்கும் ஆட்டுக் குட்டியைப் பார்த்து மேல் மட்டத்தில் இருக்கும் ஓநாய் “நான் குடிக்கும் நீரை ஏன் கலக்கி விடுகிறாய்” என்று கேட்பது போல் இருக்கிறது.
“அவர் வாழ்ந்த காலம் 1911 அன்று உலகில் கம்யூனிசம் செல்வாக்கு பெறாத காலம் இவை அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்பதற்கும் இக்கட்டுரைக்கோ அல்லது பின்னூட்டங்களுக்கோ தொடர்பு ஏதாவது இருக்கிறதா?
“தான் ஏன் ஆஷ் துரையை சுட்டுகொன்றேன் என்று அதற்கான காரணத்தை எழுதி சட்டைப்பையில் வைத்திருந்தார்.” அந்தக் காரணம் என்னவென்றால் “இந்த மிலேச்சர்கள் ஹிந்து தர்மத்தைக் காலில் போட்டு மிதிக்கிறார்கள்” என்பது தான் அப்படி ஆஷ் காலில் போட்டு மிதித்த ஹிந்து தர்மம் என்ன தெரியுமா? ஒரு தாழத்தப்பட்ட வகுப்புப் பெண் பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்த போது அவளைத் தன் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு அக்ரஹாரத்தின் வழியே ஓட்டிச் சென்றது தான். அதுவும் அவருடைய வாகன ஓட்டி அப்பெண் தாழ்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவள் என்றும் மருத்துவ மனைக்குச் சீக்சிரம் போக வேண்டும் என்பதற்காக அக்ரஹாரத்தின் வழியே சென்றால் அதனால் பிராம்மணர்களின் வெறுப்பைச் சம்பாதிக்க நேரிடும் என்றும் கிளிப் பிள்ளைக்குச் சொன்னது போல் சொல்லியும் அதைக் கேட்காமல் மனிதாபிமானம் பார்த்தால்……. பொறுத்துக் கொள்ள முடியுமா? பார்ப்பன ஆதிக்கததை விட மனிதாபிமானம் பெரிதாகப் போய் விட்டதா? பார்த்தார் வாஞ்சிநாதன் தன் உயிரை விட ஹிந்து தர்மமே பெரிது என்று நிரூபித்து விட்டார்.
hi Ramea please u give me evidence where u collect this matter because i am a scholar i want some evidence in 1908 to 1918 period. thank u
பின்னோட்டம் எழுதுபவர்கள் சாதி வெறி பிடித்தவர்களோ ? உயர் சாதியில் மட்டும் அல்ல மற்ற சாதியனரிடமும் சதி வெறி உண்டு, http://www.bbc.co.uk/tamil/news/story/2011/06/110617_ashemurdercentu.shtml
ஆஷ் படுகொலையின் நூறாவது ஆண்டு
மணியாச்சி சந்தியில் படுகொலை செய்யப்பட்ட ஆஷ் தனது மனைவியுடன் பேராசிரியர் வெங்கடாசலபதியின் செவ்வீந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில், தமிழகத்தில் நடந்த குறிப்பிடத்தக்க அரசியல் படுகொலைச் சம்பவமென கருதப்படும், பிரிட்டிஷ் கலெக்டர் ஆஷ் துரை, என்றறியப்படும், ராபர்ட் வில்லியம் டெஸ்கூர்ட் ஆஷ் என்ற அதிகாரி, சுதந்திரப்போராளி வாஞ்சிநாதனால், மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டுக்கொல்லப்பட்டு( ஜூன் 17) நூறாண்டுகள் ஆகின்றன.
வாஞ்சிநாதனிந்தக் கொலைச் சம்பவம் குறித்தும், வாஞ்சியின் வாழ்க்கை குறித்தும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் ஏ.ஆர்.வெங்கடாசலபதி, அவர்களுக்கு, கொல்லப்பட்ட ஆஷ் அவர்களின் பேரன், அனுப்பியிருக்கும் மின்னஞ்சலில், இந்தக் கொலை சம்பவம் குறித்து நினைவு கூர்ந்து எழுதியிருப்பதாக செய்திகள் தெரிவித்தன.
இந்த மின்னஞ்சல் குறித்து பேராசிரியர் வெங்கடாசலபதி பிபிசி தமிழோசைக்கு தெரிவித்த கருத்துக்களில், ஆஷ் சுட்டுக்கொல்லப்பட்ட நூறாண்டு, வெள்ளிக்கிழமை, நிறைவு பெறும் தருணத்தில், இந்திய மற்றும் தமிழக மக்களுக்கு ஆஷின் பேரன் மற்றும் அவரது குடும்பத்தினர் தனக்கு எழுதிய ஒரு மின்னஞ்சலில், நடந்தவைகள் மறக்கப்படவேண்டியவை என்று குறிப்பிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
குதிரையில் ஆஷாட்சியாளர்களாக இருந்தாலும், அவர்களால் ஒடுக்கப்படுவர்களாக இருந்தாலும், அரசியல் உக்கிரம்பெறும்போது, சில சமயம் பெரும் பிழைகளை செய்யும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுவிடுகின்றன என்றும் அவர் எழுதியிருந்ததாக வெங்கடாசலபதி தெரிவித்தார்.
ஆனால், வாஞ்சிநாதனைப் பற்றி ஆஷ் துரையின் பேரன் பெரிய கசப்புணர்வு கொண்டிருக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் வெங்கடாசலபதி.
ஆனால் ஆஷின் குடும்பத்தினரின் இந்த கருத்தைப் பகிர்ந்துகொள்ள வாஞ்சி நாதனின் குடும்பத்தினர் எவரும் இன்று உயிருடன் இல்லை. அவருக்கிருந்த ஒரே ஒரு பெண் குழந்தையும் இறந்துவிட்டது. அவரது மனைவி பொன்னம்மாள் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார் என்கிறார் வெங்கடாசலபதி.
:After the shooting the assassin ran along the platform and hid in the latrine. Some time later he was found dead, having shot himself in the mouth. In his pocket was found the following letter:
The mlechas of England having captured our country, tread over the sanathana dharma of the Hindus and destroy them. Every Indian is trying to drive out the English and get swarajyam and restore sanathana dharma. Our Raman, Sivaji, Krishnan, Guru Govindan, Arjuna ruled our land protecting all dharmas and in this land they are making arrangements to crown George V, a mlecha, and one who eats the flesh of cows. Three thousand Madrasees have taken a vow to kill George V as soon as he lands in our country. In order to make others know our intention, I who am the least in the company, have done this deed this day. This is what everyone in Hindustan should consider it as his duty.
sd/- R. Vanchi Aiyar, Shencottah ; this is what your ambi A.R. Venkatachalapathy (chalapathy@mids.ac.in) is a historian and Tamil writer.
wrote.
Brilliant If it Is true
Thanks for the evidence
I am not getting at all who is fighting with whom and what is the reality and not please write it clearly. “Koncham Puriyum padi Eluthunkoo”. Just because he is Bramin we can’t write off his way of struggle. At the same time I agree these Bramins make a lot of fuss about their people struggle. Could you please clarify someone That Bharathi was in that Group. I did not think that way according to his poem etc. Please with some evidence.
வீரன் அவர்களே! சாதிய ஒடுக்கலினால் பாதிக்கப்படுபவர்கள் தங்களுடைய பங்கு பறி போகிறதே என்றும் எப்படியும் தங்கள் பங்கு தங்களுக்கு வேண்டும் என்றும் கதறுவது சாதி வெறி அல்ல. சாதிய ஒடுக்கல் மாறி விடக் கூடாது என்பதற்காக மெளனமாக இருப்பதும் விவாதத்தைத் திசை திருப்புவதும் எப்படியும் இருக்கின்ற சூழ்நிலை மாறி விடக் கூடாது என்று துடிதுடிப்பதும் தான் கொரடூரமான சாதி வெறி.
தங்களுடைய வாதப்படியே இரண்டும் சாதி வெறி தான் என்று சொன்னாலும் இரண்டிற்கும் நிறைய வேறூபடுகள் உண்டு. பிச்சைக்காரனுக்கும் கோபம் வருகிறது: ராஜாவுக்கும் கோபம் வருகிறது என்பதால் இரண்டும் ஒன்றாகி விடாது. பிச்சைக்காரனுடைய கோபத்தினால் மிஞ்சி மிஞ்சிப் போனால் சட்டி உடையும். ராஜாவின் கோபம் ஊரை எரித்து விடும். ஒடுக்கப்பட்ட மக்களின் சாதி வெறி அவர்களுக்குத் தான் நஷ்டத்தை ஏற்படுத்தும். பார்ப்பனர்களின் சாதி வெறியோ நாட்டையே நிர்மூலமாக்கும் : அப்படி நிர்மூலமாக்கிக் கொண்டு தான் இருக்கிறது.
தங்களுடைய வாஞ்சிநாதன் புகழ்ச்சிக்கு ஆளவந்தான் அவர்களின் பின்னூட்டம் சரியான பதிலாக அமைந்து இருக்கிறது.
பார்ப்பணரின் கோபம்தான் இல்ங்கைத் தமிழனை அழித்தது அது மட்டுமல்ல தன்னுடைய திரைப்படங்களீல் பரதேசியாய், கோமாளீயாய்க் காட்டியது.இன்னும் அவன் எழுந்து விடுவானோ என அஞ்சி எதை எல்லாமோ செய்கிறது.தமிழனின் கோபப்படும் குணத்தையும் அவன து ஒன்றூபடாத இய்ல்பையும் பார்ப்ப்ணீயம் சாதகமாக்குகிற்து.
சாதிவெறீ எது என இன்ங்காணாம்லெ நம்மில் சிலர் இருக்கிறோம். அறீயாத சிறூவயதில் அய்யர் என் கையத் தொடாமல் விபூதி தந்ததிற்காய் நான் கோபப்பட்டிருகிறேன்.கால்ங்காலமாய் பார்ப்பனியம் நம்மை கீழானவராகவே கருதுகிறது.ந்மது எழுச்சியை சூழ்ச்சியால் வெல்கிறது.இதுவே வ்ரலாறூ.
தமிழ்மாறன் தொடர்ந்தும் சிந்தித்து எழுதவும். மேலும் உண்மைகளைக் கொண்டு வர முடியும்,-துரை
ஸீந்திக்க சிரமமாக இருக்கிறது துரை.வாழ்க்கை முழுதும் யோசிச்சு, யோசிச்சே உடம்பு மெலிந்து போனதுதான் மிச்சம்.
ஆரம்பிச்சுட்டான்யா!
வ.உ. சி யின் தியாகத்தை யாரும் குறைத்து மதிப்பட முடியாது. அவரோடைய வரலாறை படிக்கும் பொது நெஞ்சமெல்லாம் உருகி விடும்.
அவர் போல எண்ணற்ற கம்யூனிஸ தோழர்கள் பலரின் வாழ்க்கையையும் படித்து பார்க்க வேண்டும்.வசதியான குடுமபத்தில் பிறந்த மார்க்க்சும் ,அவர் மனைவி ஜென்னியும் படாத கஷ்டமா ?
நம்ம ஊர் தோழர் கார்த்திகேசன் [மாஸ்டர் ]அவர்களின் நினைவு மலரில் அவரது மகள் அவர் பற்றி எழுதியிருப்பதை எல்லோரும் வாசிக்க வேண்டும்.
பார்ப்பனர்கள் ஞானிகள் ,முனிவர்கள் என்று வெளியே நாடகம் ஆடிக்கொண்டு , உள்ளே பெண் பித்தர்களாகவும்,பொறுக்கிகளாகவும்,பணத்தாசை பிடித்தவர்களாகவும் இருப்பதை நான் நமது காலத்திலேயே காண்கிறோம். நிஜ வாழ்க்கையில் தமது ஆசா,பாசங்களை வெறுத்து பொது நல வாழ்வில் கம்யூனிஸ தோழர்கள் பலர் ஞானிகள் ,முனிவர்கள் போல வாழ்ந்தார்கள்.
பார்ப்பனர்கள் ஞானிகள் ,முனிவர்கள் என்று வெளியே நாடகம் ஆடிக்கொண்டு——
உங்கள் திராவிட அரசியல்வாதிகள் வைகோ கருனானிதி, சீமான் எனும் சைமன் என்னமாதிரி
வீரன் என்ற பெயரில் வந்திருக்கும் கோழை நீர். பார்ப்பனீயத்துக்கு எதிராக திராவிடத்தை நிறுத்தியது தமிழ் நாட்டின் சாபக்கேடு. அத் தவறிலிருந்து முளைக்கும் விச வித்துக்களில் ஒன்று தான் வீரம்னும்.
எனது கேள்விக்கு பதில் சொல்லாமல் தனி மனித தாகுதலலில் ஈடுபடும் தாங்கள் தமிழ்நாட்டில் அரசியலில் ஈடுபடலாம்,
வீரன் என்ற பெயரில் வந்திருக்கும் கோழை நீர்—–நான் வசிப்பது இலங்கை கண்டியிருந்து 60 கி மி அப்பால் , எனது வீட்டை சுற்றிலும் சிங்கள கிராமம், இருந்தும்நான் கற்றது தமிழ், பேசுவது தமிழ், எனது பிள்ளைகள் கற்பது தமிழ். உம்மை போல் வெளிநாட்டில் வசித்து வீரம் பெசும் தமிழன் அல்லநான் என்பதை அறியும் காட்போட் வீரரே
கருணாநிதி வைகோ சீமான் இன்னும் பல உருப்படாதவர்கள் / உருப்பட விடாதவர்கள் சூத்திரர்களிடையே உள்ளனர். அதனால் என்ன சொல்ல வருகிறீர்கள்? அனைவரும் பேச்சையும் மூச்சையும் அடக்கிக் கொண்டு பார்ப்பனர்க்ளுக்கு அடிமையாகவே இருக்க வேண்டுமா? மாற்று வழிகளைத் தேடக் கூடாதா?
நாடகம் ஆடுவது பர்ப்பணீயம் வீரா, நாமல்ல. எங்கும் பிராமணீ வலை போட்டு அமர்ந்திருக்க அதில் விழாதிருப்பது க்லைஞர் இப்போது சீமான்.வைகோ என் மனதெல்லாம் வாழும் தமிழ் ஆனால் க்லைஞ்ரை விட்டு விலகியது அவரது பெரிய தவறூ. வீரா கடல் அலையில் இருப்பது வேறூ அலையில் நீந்துவது வேறூ.வீட்டுக்குள் இருந்து வீரம் பேசுவது வேறூ……………………………………………..
வீரதம்பி .
உம்முடைய ராமன் கட்டிய பாலம்- ராமர் அணை- தண்ணிக்குள்ளே போய் விட்டது. சாதாரண மனிதன் கட்டிய பாலம் நிற்கிறது.!!! அவனின் மனைவி சீதை ராவணனுடன் ஓடி போய் விட்டாள்.- தன்னுடைய பொண்டாட்டியையே காப்பாற்ற முடியாத கடவுள் !
சந்திரனை பாம்பு விழுன்கிறது அதுதான் சந்திர கிரகணம் என்று பீலா விடுவதை அழித்து விட்டு வாரும். பேசலாம். !!
எனது கேள்விக்கு பதில் சொல்லாமல் தனி மனித தாகுதலலில் ஈடுபடும் தாங்கள் தமிழ்நாட்டில் அரசியலில் ஈடுபடலாம்,
வீரன் என்ற பெயரில் வந்திருக்கும் கோழை நீர்—–நான் வசிப்பது இலங்கை கண்டியிருந்து 60 கி மி அப்பால் , எனது வீட்டை சுற்றிலும் சிங்கள கிராமம், இருந்தும்நான் கற்றது தமிழ், பேசுவது தமிழ், எனது பிள்ளைகள் கற்பது தமிழ். உம்மை போல் வெளிநாட்டில் வசித்து வீரம் பெசும் தமிழன் அல்லநான் என்பதை அறியும் காட்போட் வீரரே
ஆங்கிலேயர்களை எதிர்த்த போராட்டம் பல கட்டங்களை உடையது. ஒவ்வொரு காலகட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்தவர்களுக்கும் வெவ்வேறு நோக்கங்கள் இருந்தன. அவர்களது நோக்கங்களைப் பற்றி இன்று மதிப்பிடும்போது அன்றைய வரலாற்றுக் காலகட்டத்தின் பின்புலத்தில் வைத்தே மதிப்பிடவேண்டும்.
*வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், திப்பு சுல்தானில் தொடங்கி 1957ம் ஆன்டு சிப்பாய் கலகம் எனப்படும் முதல் சுதந்திரப் போர் வரை ஒருகட்டம். கட்டபொம்மனோ, மருது சகோதரர்களோ ஒட்டுமொத்த மக்களின் விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்க்கவில்லை. தங்களது நிலப்பிரபுத்துவச் சுரண்டல் ஆட்சியதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளவே அவர்கள் எதிர்த்தனர். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியிடம் கொஞ்சம், கொஞ்சமாக அரசியல் அதிகாரத்தை இழந்து கொண்டிருந்த நிலப் பிரபுத்துவ வர்க்கத்தார், தாங்கள் இழந்த அரசியல் அதிகாரத்தை மீட்பதற்காகச் செய்த கடைசி முயற்சியே 1957ம் ஆண்டு சிப்பாய் கலகம் எனப்படும் முதல் சுதந்திரப் போர். வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், திப்பு சுல்தானில் தொடங்கி அம்முதல் சுதந்திரப் போரில் வீரமரணம் எய்தியவர்களின் தியாகங்கள் எவ்விதத்திலும் குறைந்ததல்ல.
*அதன் பின்னர் சுமார் 50 ஆண்டுகள் கழித்து சுதேசி இயக்கத்தை ஒட்டி எழுந்தது அடுத்த காலகட்டம். இக்கலகட்டத்தின் ஆரம்பத்தில் ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்புணர்விற்கான அடிப்படையை இந்துமத உணர்வே வழிநடத்தியது. “குதிராமில் தொடங்கி முதற்காலகட்ட புரட்சியாளர்கள் அனைவரும் மாபெரும் நாவலாசிரியர் பங்கிம் சந்திரரால், அவரது சாகாவரம் பெற்ற ஆனந்த மடம் நாவலின் மூலம் உருத்தீட்டப் பட்ட சுதந்திரப் போராட்டம் பற்றிய கொள்கைகளில் இருந்து உணர்வு பெற்றவர்கள். எனவே அந்நிய நாட்டின் அடிமைத் தளையில் இருந்து தாய் நாட்டை விடுவிக்க வேண்டு மென்ற அவர்களின் கருத்துக்கள் இந்து மத நம்பிக்கைகள் மற்றும் கொள்கைகளில் ஊறித் தோய்ந்தனவாகவே இருந்தன. (இதனை ‘நான் ஏன் நாத்திகன்’ எனும் கட்டுரையில் சக புரட்சியாளர்கள் சிலரின் சில நடத்தை முறைகளைப் பற்றி பகத்சிங் எழுதியிருக்கும் குறிப்பே உறுதிப்படுத்தவும் வலுப்படுத்தவும் செய்கின்றது). அம்முதற் காலகட்ட புரட்சியாளர்களின் முழக்கமாக இருந்த “வந்தே மாதரம்”, அந்த ‘ஆனந்தமடம்’ நாவலில் இருந்து எடுக்கப்பட்டதே. அந்நிய சக்திகளின் அடிமைத்தனத்திலிருந்து அடிமைத் தாய் நாட்டை விடுவிப்பது என்பதே அவர்களது கருத்து. ஆனந்தமடம் நாவலில் “அந்நிய சக்திகள்” என்ற கருத்தை குறிப்பிடுவதற்கு பிரிட்டிஷாரை அல்லது மேலை நாட்டு வெள்ளையர்களை மட்டுமல்லாது, முஸ்லீம்கள் உட்பட இந்து அல்லாத அந்நியர்கள் அனைவரையும் குறிக்கும் வகையில் “யவனர்கள்” என்ற வார்த்தையினையே பங்கிம் சந்திரர் பயன்படுத்தினார். அந்த ஆனந்த மடத்தின் கருத்துக்களால் உணர்ச்சியூட்டப்பட்டதனால் முதற்கால கட்டத்தின் இத் தேசபக்தப் புரட்சியாளர்களின் சிந்தனை முறை இயல்பாகவே இம்மத மாச்சரியத்தில் இருந்து விடுபட்டதாக இருக்கவில்லை.” [சேர்மன் சங்கர்சிங், CWP, கேளாத செவிகள் கேட்கட்டும்-தியாகி பகத்சிங் நூலுக்கு எழுதிய பகத்சிங் பற்றிய மதிப்பீட்டுரையிலிருந்து]. இக்காலகட்டத்தின் ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்பில் பிரதிபலித்த இந்து மதவாத தேசியத்தின் பிரதிநிதிகளே வங்காளத்தின் குதிராம் போஸ். தமிழ்நாட்டின் வாஞ்சிநாதன் போன்றோர்.
*வாஞ்சிநாதன் ஒரு கம்யூனிஸ்டோ, புரட்சியாளரோ இல்லை என்றாலும், ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கெதிரான இந்திய மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பின் – வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், திப்பு சுல்தான், ஜான்ஸிராணி, தொடங்கி, குதிராம் போஸ், அரவிந்தர், திலகர், பாரதி, வ.உ.சி., சிவா, கோகலே, மகாத்மா காந்தி, நேதாஜி சூர்யா சென், கல்பனா தத் போன்றோரை உள்ளடக்கி தேர்ந்த கம்யூனிசப் பார்வை கொண்ட இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் பகத்சிங் வரையிலும் தீரமுடன் ஆங்கிலேயரை எதிர்த்த இந்திய மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பின் – ஒரு பகுதியே வாஞ்சிநாதனின் தியாகமும் என்ற வகையில் அவரது தியாகம் நினைவு கூரத்தக்கதே.
இவர்போன்ற பல எண்ணற்ற வீரத் தியாகிகளின் ஒப்பற்ற தியாகத்தால் தான் சுதந்திர போராட்டங்கள் எழுச்சி பெற்றன. வாஞ்சிநாதன் நினைவு நூற்றாண்டு நிறைவு பெறும் இந்த நாளில் தியாகி வாஞ்சிநாதனின் தியாகத்தை நினைவு கூர்வோம்
agreee
புரட்சியாளராக யாரும் பிறப்பதில்லை. தன்னை சூழ உள்ள மனிதர்கள் சந்திக்கின்ற ஒடுக்குமுறைக்கு எதிரான தார்மீக கோபமே தனிமனிதர்களை புரட்சியாளர்களாக்குகின்றது. மிக நல்ல உதாரணம் சேகுவேராவின் மோட்டார்சைக்கில் டையரியில் எழுதப்பட்ட விடயங்கள்.. தான் தவறானது என்று கருதுகின்றதனை வன்முறை மூலம் அழிக்கின்ற தனிமனிதபயங்கரவாதம் (வழிமுறை பற்றியவிவாதத்திற்கு அப்பால்) மக்கள் விரோத, எதிர்ப்புரட்சிகரதன்மையை கொண்டிருக்கும் அதற்கு சிறந்த உதாரணங்கள் அமெரிக்க கறுப்பின மக்களின் சிவில் றைட்ஸ் இயக்கதிற்கெதிராக கொதித்தெழுந்து மாட்டின் லூதர் கிங்கை சுட்ட ரேயும் (பின்னணியில் பலர் இருந்தபோதும்) சங்கர அய்யரும் (வாஞ்சி) ஆகும். இவர்கள் ஒத்த உணர்வை கொண்டிருந்தனர். இவர்களின் இலக்குகளின் (எதிரிகளின்) தன்மைதான் வேறுபட்டிருந்தது. நிச்சயமாக ஆர்ஷ் காலனியாதிக்கத்தின் பிரதிநிதி மாட்டின் லூதர் கிங் அல்ல.
அம்பிகள் புகழுகின்ற வெங்கடலாஜபதி என்ற ஆய்வாளர் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகதிற்கெல்லாம் சென்று ஆய்வுசெய்து எழுதியதுதான் சனாதன தர்மத்திற்கெதிரான வெள்ளையரின் நடவடிக்கையாலேயே வெகுண்டெழுந்தார் என்பது. இன்னொரு முக்கியமானவிடயம் ஆஷ் குடும்பத்தினர் காலனியாதிக்கம் குறித்து கொண்டிருக்கக்கூடிய உணர்வு, அவர்கள் மட்டுமன்றி பிரித்தானியாவிலே காலனியாதிக்க காலத்தில் இடம்பெற்ற அடிமைவியாபாரம், உட்பட அதனோடு சம்பந்தப்பட்ட பல குடும்பங்கள் மன்னிப்புகோரியுள்ளனர். இன்னொருவகையில் சொன்னால் பிரித்தானிய பொதுமக்களிடம் பொது போக்காகவே இருக்கின்றது. அரசு வேறுவிடயம். அடிமைவியாபாரத்தில் 400 000 ஆபிக்க கறுப்பினமக்களே விற்கப்பட்டார்கள். சனாதன தர்மத்தால் எத்தனை மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர். இன்றும் யாரிடமும் குற்ற உணர்வை காணோம். மாறாக ராமன் பாலம் என்று வேண்டாத ஊருக்கு வழிகாட்டுகின்றார்கள்.
புரட்சியாளராக யாரும் பிறப்பதில்லை
இது உங்க முன்னைனாள் தலைவர் அதுதான் உங்களை ஆளவிடாமல் தடுத்தவர் அடிக்கடி
உதிர்க்கும் வசனமல்லவா? திரு ஜான் ரஃமான் அவர்களே
உங்கள் ஆதங்கம் புரிகிறது நண்பரே! ஆனால் மேதகு மேல் அதிகநம்பிக்கை வைத்திருந்து
இறுதி காலங்களில் அவர் ஆடிய கூத்துக்களை பொறுக்காமல் வெளிக்கொணர்ந்த உணர்வு பகிர்வாகவும் இது இருக்கலாம். 40,000 உயிர்களை பறித்தவன் முதலாவது குற்றவாளியென்றால் ப்லியாக்கியவன் இரண்டாவது குற்றவாளியல்லவா?
உளுத்துப் போன பிராமணீயத்தை தலையில் வைத்து கொண்டாட இன்னும் எத்தனையோ ” ஆய்வாளர்கள் ” பல வண்ண வடிவங்களில் உலா வருகிறார்கள்.ஆஷின் குடுமபத்தை தேடி சென்று ஆய்வு செய்பவர்கள் ,அருகில் இருக்கும் தாழ்த்தபட்ட மக்களுக்கு செய்த கொடுமைகளுக்கு பார்ப்பனர்களை மன்னிப்பு கேட்க வைக்க முடியுமா ?அவர்கள் கேட்பார்களா ?
அந்த நாகரீகம் இல்லாத கொடியவர்களே பார்ப்பனக் கூட்டம் !
ஆஷின் குடுமபத்தை தேடி சென்று ஆய்வு செய்பவர்கள் ,அருகில் இருக்கும் தாழ்த்தபட்ட மக்களுக்கு செய்த கொடுமைகளுக்கு பார்ப்பனர்களை மன்னிப்பு கேட்க வைக்க முடியுமா ?
ஏன்நீங்கள் குடுமியை கழற்றி விட்டு அந்த் முயற்சியில் இறங்கலமே, குடுமியை யார் உஙளுக்கு வைத்து விட்டது
பார்ப்பனர்களை மாற்ற முயல்வது வீண் டசெயலே. ஒடுக்கப்பட்ட மக்கள் உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.. எந்த ஒரு நிலையிலும் பார்ப்பனர்கள் நமக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள் என்பது மட்டுமல்ல: எதிராக இல்லாமலே இருக்க மாட்டார்கள்.
நீதிக் கட்சியை தோற்றுவித்தவர்களில் ஒருவராகிய T.T.நாயர் அவர்கள் சொன்னது இங்கு பொருந்தும் “சிறுகதை தன்னுடைய புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும் பார்ப்பனன் தனது இயல்பை மாற்றிக் கொள்வது அரிது”. மாமாவுக்கு சொன்னது மாமிக்கும் பொரு ந்தும். மாமி தெளிவாகத்தான் இருக்கிறார்.
பிடித்துக் கொண்டீர்கள் ஆனால் இந்த அறீவுஜீவிகளூக்கு மட்டும் விளங்கவே இல்லையே?
ந்த பதிவிற்கு வந்துள்ள சில விமர்சனங்கள் உண்மையானவையே ஆகும். ஆஷ் துரை உதவி ஆட்சியராக இருந்த போது தியாகி வ.வு.சியின் சுதேசி கப்பல் கம்பனியின் பங்குதாரர்களை மிரட்டி அவர்களின் பங்குகளை விளக்கி கொள்ள செய்தார். பல வழிகளிலும் தனது அதிகாரத்தின் மூலம் அந்த கம்பனியை முடக்கியதும் , வ.வு.சி.யை கைது செய்ததும் இவரின் தூண்டுதல் முக்கியமாக இருந்தது.ஆஷ் துரை கொல்லப்பட்டதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது. வாஞ்சிநாதனை எதிர்பதர்க்காக ஆஷ் துரையை நல்லவன் போல காட்ட நினைப்பவர்களின் வாதம் சொத்தையானதே ஆகும். அவர் வாழ்ந்த காலமும் ,அவரின் குடும்ப பிண்ணனியும் , அவரின் வயதும் அன்று கம்யூனிசம் போன்ற தத்துவ கொள்கைகள் இந்தியாவில் வளராத கால கட்டமும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ‘/அவர்கள் விட்ட பணியினை நாம் தொடர்வோம்/ என்பது தற்போது எனக்கும் நெருடலாகவே இருக்கிறது. மற்றபடி *வாஞ்சிநாதன் ஒரு கம்யூனிஸ்டோ, புரட்சியாளரோ இல்லை என்றாலும், ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கெதிரான இந்திய மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பின் – வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், திப்பு சுல்தான், ஜான்ஸிராணி, தொடங்கி, குதிராம் போஸ், அரவிந்தர், திலகர், பாரதி, வ.உ.சி., சிவா, கோகலே, மகாத்மா காந்தி, நேதாஜி சூர்யா சென், கல்பனா தத் போன்றோரை உள்ளடக்கி தேர்ந்த கம்யூனிசப் பார்வை கொண்ட இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் பகத்சிங் வரையிலும் தீரமுடன் ஆங்கிலேயரை எதிர்த்த இந்திய மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பின் – ஒரு பகுதியே வாஞ்சிநாதனின் தியாகமும் என்ற வகையில் அவரது தியாகம் நினைவு கூரத்தக்கதே.சுட்டிக்காட்டிய தோழர்களுக்கு நன்றி.
அமெரிக்காவிலே குறிப்பாக தென்மாநிலங்களில் அறுபதுகளில் இருந்த “கு கு கிளான்” என்ற கிறீஸ்தவமத அடிப்படைவாத நிறவெறியர்கள் தம்மை உண்மையான அமெரிக்க தேசபக்தர்களாகவே தம்மை கருதிகொண்டார்கள். அமெரிக்க தேசியக்கொடியின் மீதே சத்தியப்பிரமாணம் எடுத்துகொண்டார்கள். அவர்களின் இலக்காக கறுப்பின மக்களும், சமூகநீதியில் நம்பிக்கைகொண்டிருந்த வெள்ளையினத்தவரும் இருந்தனர். “கு கு கிளான் ஐ அமெரிக்க தேசபக்தர்களாக ஏற்போமாகவிருந்தால் சங்கர ஐயரும் தேசபக்தன் தான். ஆஷ் துரையை யாரும் யாரும் தலையில் கொண்டாடவில்லை. ஆஷ் காலனியாதிக்கத்தின் பிரதிநிதி. சங்கரனை தூக்கிநிறுத்துகின்ற வெங்கடாஜலபதி சி.சங்கரன்நாயர் என்ற வழக்கு விசாரணையில் மூன்றாவது நீதிபதியாக கடமையாற்றியவரின் கூற்றுக்களையே ஆதாரமாக வைத்து திரிக்கின்றார். நாயர்களும், வெள்ளார்களும் கூட வெள்ளையர் ஆட்சியில் ஜமீன் களாக சாதியத்தையும், ஒடுக்குமுறையயும் ஒழுங்குபடுத்தினர் என்பதுதான் என எண்ணமாகவிருக்கின்றது. வருணாச்சிரம ஒழுங்கில் உச்சாணியில் இருக்கின்ற ஆதிக்கசாதிகளுக்கு சமூக ஒடுக்குமுறையில் எந்த பங்குமே இல்லை என்று சாதிக்கின்ற தமிழின அடிப்படை வாதத்துடனோ, தந்தை பெரியாரின் பெயரை அடிக்கடி உச்சரிப்பதனால் 200 கோடிக்குமேல் கொள்ளையடித்த கருணாநிதிக்குடும்பத்திற்காக இதுதானா பார்ப்பனநீதி என்று புலம்புகின்ற பகுத்தறிவாததுடம்(?) உடன்பட முடியவில்லை.
பார்ப்பன ஆதிக்கக் கொடுமைகளை எதிர்ப்பதற்கு கருணாநிதியை ஆதரிக்க வேண்டும் என்றோ அல்லது அவரை எதிர்க்காமல் இருக்க வேண்டும் என்றோ கட்டாயம் இல்லை. உண்மையில் பார்ப்பனர்களுடன் கள்ள உறவு வைத்துக் கொண்டு பெருந்தலைவர் காமராஜரின் கல்வி ஒளியை அணைத்த கருணாநிதி ஒடுக்கப்பட்ட மக்களின் எதிரியே ஆவார். பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்க்கும் போது கரணாநிதியையும் சேர்த்து எதிர்க்க வேண்டும்.
தவறை திருத்தி கொண்டது பாராட்டிற்குரியது தோழா
ஒரு முறை லெனினிடம் “சோஷலிசம் என்னுடைய மதம் என்று கூறினால் அதை ஏற்றுக் கொள்ளலாமா?” என்ற வினா தொடுக்கப்பட்டது. அதற்கு லெனின் “அது சந்தர்ப்பத்தைப் பொறுத்தது” என்று கூறினார். ஒருவன் மத மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் உழைக்கும் மக்களை அதிலிருந்து மீட்பதற்காக அப்படிக் கூறினால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் விடுதலைக்கு அணியமாகி இருக்கும் உழைக்கும் மக்களை மத நுகத்தடியில் சிக்க வைத்து மீண்டும் மத மயக்கத்தில் ஆழ்த்துவதற்காக அப்படிக் கூறினால் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று விளக்கம் அளித்தார்.
வாஞ்சிநாதனின் தியாகத்தையும் அவ்விதமே அணுகிப் பார்க்கலாம். இப்பின்னூட்டங்களில் வாஞ்சிநாதனை விமர்சிப்பவர்கள் யாரும்
ஆஷ் துரையை நல்லவர் என்று வாதாடவில்லை. வாஞ்சிநாதனைப் புகழ வேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள் தான் ஆஷ் துரையின் சந்ததியினரைக் கண்டு அவர்களுடைய நற்சான்றிதழைப் பெற்று வந்துள்ளனர் | அதைப் பிரம்மாதமாக விளம்பரப்படுத்தவும் செய்கின்றனர்.
ஆஷ் துரை வ..உ.சி.க்கு எதிராக வேலை பார்த்தது அவருடைய வர்க்க சார்பான செயல்கள். வாஞ்சிநாதனை விமர்சிக்கும் யாரும் அதை ஆதரிக்கவில்லை. ஆனால் தனி மனிதர் என்ற நிலையில் அவரிடம் சில நல்ல பண்புகளும் இருந்திருக்கின்றன. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு பெண் சிக்கலான பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்த போது அப்பெண்ணைத் தனது வாகனத்தில் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று இருக்கிறார். மருத்துவ மனையை விரைவில் அடைய வேண்டும் என்பதற்காகத் தன் வண்டியை சுற்றுப் பாதையில் கொண்டு செல்லாமல் அக்ரஹாரத்தின் வழியாகக் கொண்டு செல்ல நேரிட்டுள்ளது. அவரது வாகன ஓட்டி அக்ரஹாரத்தின் வழியாக ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணைக் கொண்டு செல்லக் கூடாது என்று கூறியதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. (இன்றும் பார்ப்பனிய ஆதிக்கத்தால் அடிமைப்பட்டுக் கிடக்கும் நம்மில் பலரும் பார்ப்பனியக் கொடூரங்களைப் புரிந்து கொள்ள முடியாத போது பாவம் ஒரு அந்நியரால் எப்படி புரிந்து கொள்ள முடிந்திருக்கும்? அதுவும் மனிதாபிமானத்திற்கு எதிராக ஒரு தர்மம் இருக்க முடியும் என்று அவரால் கற்பனை செய்தும் பார்த்திருக்க முடிந்திருக்காது தான்)
வாஞ்சிநாதன் ஆஷ் துரையைக் கொலை செய்தது ஆஷ் துரை செய்த இந்த ஹிந்து தர்ம விரோதமான செயலுக்குத்தான் என்று அவரது சட்டைப் பையில் வைத்திருந்த ஒப்புதல் வாக்கு மூலச் சீட்டு சாட்சி கூறுகிறது. அதில் வ..உ.சி. பற்றிய குறிப்பு ஏதும் இல்லை.
பிளேக் நோய் பரவுவதைப் பற்றிய கவலை சிறிதும் இல்லாமல் விநாயகரின் வாகனமான எலிகளைக் கொல்லக் கூடாது என்று கூறி சுகாதார அதிகாரிகளைக் கொலை செய்வித்த பால கங்காதர திலகரைத் தேச பக்தராக உருமாற்றியது போல் வாஞ்சிநாதனையும் தேச பக்தராகச் சித்தரிக்கிறார்கள். இதை ஒடுக்கப்பட்ட மக்கள் ஏன் ஏற்றுக் கெள்ள வேண்டும்?
லெனின் அறிவுறுத்தியுள்ளது போல் ஒருவன் எதற்காக அச்செயலைச் செய்கிறான் என்பதில் இருந்து தான் அதை ஏற்பதா மறுப்பதா என்று முடிவு செய்ய வேண்டும். அவ்விதத்தில் பார்த்தால் வாஞ்சிநாதனின் கொலை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று அல்ல. ஏற்றுக் கொள்ளவே முடியாது என்ற நிலையில் அதைத் தியாகம் என்று கூறுவது ஹிந்து தர்மத்திற்கு ஏற்றதாக இருக்கலாம். மனித தர்மத்திற்கு ஏற்புடையதல்ல.
இதைப் புரிந்து கொள்வதற்கு மார்க்சியம் போன்ற உயர்ந்த மெய்ஞ்ஞான அறிவு தேவை இல்லை. ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு சராசரி இந்தியனாக இருப்பதே போதுமானது.
ஆஷ ,டயர், எல்லாரும் நல்லவங்க பாரதியார் ,வாஞ்சிநாதன், கெட்டவங்களா பிராமணர்கள் என்பதாலையே அவர்களை புறகனிப்பது நியாயமா ராமியா
ஐயா ரவி அவர்களே! ஆஷ் நல்லவர் என்று யாரும் சொல்லவில்லை என்று தான் நான் எழுதி இருக்கிறேன். நீங்கள் எப்படி இது போல் கற்பனை செய்கிறீர்கள்? போதாக் குறைக்கு டயருக்கு வேறு நற்சான்றிதழ் கொடுக்கிறீர்கள். பார்ப்பன ஆதிக்கம் நிலையாக இருக்க வேண்டும் எனும் வெறியில் எப்படி வேண்டுமானாலும் புழுதி வாரி இறைக்க வேண்டாம்.
மேலும் வாஞ்சிநாதன் பற்றிய இக்கட்டுரையில் வாஞ்சிநாதனின் மனித தர்ம விரோதச் செயல்கள் தான் குறிப்பிடப்பட்டுள்ளன. பாரதியாரைப் பற்றி யாரும் குறிப்பிடவில்லை.
பார்ப்பனர்கள் என்பதனாலேயே புறக்கணிப்பது நியாயமா என்று ஒரு நியாயமான வினாவை எழுப்பி உள்ளீர்கள். யாரும் அப்படி விரும்பவில்லை. நியாயத்தை நிலை நிறுத்த முன் வரும் பார்ப்பனர்களை வரவேற்கவே செய்கிறோம்
நானும் பல பார்ப்பனர்களிடம் (தங்களைக் கம்யூனிஸ்டுகள் என்று மார் தட்டிக் கொள்ளும் பார்ப்பனர்களிடமும் நல்லவர்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள் என்று வெளிச்சம் போடும் பார்ப்பனர்களிடமும்) கேட்டுப் பார்த்து விட்டேன். பார்ப்பனர்களில் நல்லவர்கள் என்று வெளிச்சம் போட்டுக் காண்பிக்கப்படுபவர்களின் படைப்புகளைப் படித்துப் பார்த்தும் இருக்கிறேன். யாருக்கும் பார்ப்பன ஆதிக்கம் ஒழிந்து மனித நேயம் வர வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை. பார்ப்பன ஆதிக்கம் ஒழிவது ஒரு புறம் இருக்கட்டும்: தேய்வதற்கும் மனம் ஒப்ப மறுப்பவர்களாகத் தான் இருக்கிறார்கள்.
என்னுடைய எளிய வினா இது தான.;. அறிவுத் திறன் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. அனைத்து வகுப்பு மக்களிலும் வெவ்வேறு நிலை அறிவுத் திறன் உடையவர்கள் இருக்கிறார்கள். பார்ப்பனர்களில் அறிவுத் திறன் மிகுந்தவர்கள் இருக்கிறார்கள்: இடைநிலை அறிவுத் திறன் கொண்டவர்கள் இருக்கிறார்கள்: குறைந்த அறிவுத் திறன் உடையவர்கள் இருக்கிறார்கள். இதே போல் மற்ற ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களிலும் வெவ்வேறு நிலையில் அறிவுத் திறன் உடையவர்கள் இருக்கிறார்கள். ஆனால் கல்வி வேலை வாய்ப்பு மற்றும் அனைத்து சமூக நடவடிக்கைகளிலும் உயர் நிலைகள் அனைத்தும் பார்ப்பனர்களின் வசமாகி விடுகின்றன. பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்களும் அதிகாரம் இல்லாத ஊதியம் குறைந்த உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பி விடுகிறார்கள். இதனால் அவ்வேலைகளை ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த திறமைசாலிகள் செய்ய நேரிடுகிறது. இதனால் மனித வளம் வீணாகிறது. இதை விடக் கொடுமை என்னவென்றால் பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்கள் அதிகாரம் இல்லாத ஊதியம் குறைந்த உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பி உயர்நிலை வேலைகளில் அமர்வதால் நாட்டு நிர்வாகம் பாழாகிறது. இது கொடூரமான தேசத் துரோகம். இக்கொடிய விசைக்கு எதிராக என்ன செய்ய வேண்டும்? பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்கள் அதிகாரம் இல்லாத ஊதியம் குறைந்த உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பி விடுவதைத் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
இவ்வினாக்களுக்கு இது வரைக்கும் ஒரு பார்ப்பனர் கூட சரியான விடை தரவில்லை. நல்லவர்கள் என்று வெளிச்சம் போட்டுக் காண்பிக்கப்படும் பார்ப்பனர்களின் (பாரதியாரையும் சேர்த்துத் தான்) படைப்புகளிலும் இதற்கான விடை கிடைக்கவில்லை.
ஐயா ரவி அவர்களே! பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்கள் அதிகாரம் இல்லாத ஊதியம் குறைந்த உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பி விடுவதைத் தடுப்பதற்கும் ஒடுக்கப்பட்ட மக்களில் உள்ள திறமைசாலிகள் உயர்நிலை வேலைகளுக்குச் செல்வதைத் தடுக்கும் தடைக் கற்களை நீக்குவதற்குமான வழிகளை நீங்களாவது கூறுகிறீர்களா?
ஐயா ரவி அவர்களே! இராமியாவின் கேள்விக்கு பதிலே காணோமே?
Kandiah
Posted on 08/07/2014 at 14:21
I am not getting at all who is fighting with whom and what is the reality and not please write it clearly. “Koncham Puriyum padi Eluthunkoo”. Just because he is Bramin we can’t write off his way of struggle. At the same time I agree these Bramins make a lot of fuss about their people struggle. Could you please clarify someone That Bharathi was in that Group. I did not think that way according to his poem etc. Please with some evidence.
பார்ப்பனர்கள் தங்களைப் பற்றி ஏகப்பட்ட சந்தடிகளை ஏற்படுத்துபவர்கள் என்று புரிந்து கொண்டு உள்ளமைக்கு நன்றி.
வாஞ்சிநாதன் பார்ப்பனர் என்பதற்காக அவரை விமர்சிக்கவில்லை. அவர் ஆஷ் துரையைக் கொன்றதற்கான காரணம் மிகவும் அருவருக்கத்தக்கதும் கொடூரமானதும் ஆகும்.
“தான் ஏன் ஆஷ் துரையை சுட்டுகொன்றேன் என்று அதற்கான காரணத்தை எழுதி சட்டைப்பையில் வைத்திருந்தார்.” அந்தக் காரணம் என்னவென்றால் “இந்த மிலேச்சர்கள் ஹிந்து தர்மத்தைக் காலில் போட்டு மிதிக்கிறார்கள்” என்பது தான் அப்படி ஆஷ் காலில் போட்டு மிதித்த ஹிந்து தர்மம் என்ன தெரியுமா? ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்புப் பெண் பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்த போது அவளைத் தன் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு அக்ரஹாரத்தின் வழியே ஓட்டிச் சென்றது தான். அதுவும் அவருடைய வாகன ஓட்டி அப்பெண் தாழ்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவள் என்றும் மருத்துவ மனைக்குச் சீக்சிரம் போக வேண்டும் என்பதற்காக, சுற்று வழியில் சென்று காலங் கடத்தக் கூடாது என்பதற்காக அக்ரஹாரத்தின் வழியே சென்றால் அதனால் பிராம்மணர்களின் வெறுப்பைச் சம்பாதிக்க நேரிடும் என்றும் கிளிப் பிள்ளைக்குச் சொன்னது போல் சொல்லியும் அதைக் கேட்காமல் மனிதாபிமானம் பார்த்தால்……. பொறுத்துக் கொள்ள முடியுமா? பார்ப்பன ஆதிக்கததை விட மனிதாபிமானம் பெரிதாகப் போய் விட்டதா? பார்த்தார் வாஞ்சிநாதன் தன் உயிரை விட ஹிந்து தர்மமே பெரிது என்று நிரூபித்து விட்டார்.
பொதுவாக பாரதியாரைப் பற்றியப் பேசும் பொழுது அவருடைய பாடல்களை மட்டுமே மேற்கோள் காட்டுகின்றனர். அவர் கட்டுரைகளை, கதைகளை எழுதி இருக்கிறார். அவற்றிலும் அவருடைய எண்ணங்கள் தான் உள்ளன. அரசு நிறுவனங்களிலும், சுதந்திரப் போராட்ட அமைப்புகளிலும் பார்ப்பனர் அல்லாதவர்கள் நிர்வாக வேலைகளில் இடம் பெற வேணடும் என்பதைப் பற்றி (அதாவது விகிதாச்சாரப் பங்கீடு பற்றி) எழுதும் போது அதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி விட்டார். (இராஜகோபாலாச்சாரியாரும் பெரியாரிடம் இதே “அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்” தான் கூறினார். அந்த அப்புறம் இன்று வரை வந்த பாடில்லை.) கதைகள் எழுதும் போது வர்ணாசிரம அதர்மத்தை வரிந்து கட்டிக் கொண்டு ஆதரித்து எழுதி இருக்கிறார்.
பாரதியாரின் படைப்புகளைக் கால வரிசைப் படுத்தி ஆராய்ந்தால் ஒரு உண்மை புரியும். அறியாப் பருவத்தில் தெரியாத்தனமாக சாதிக் கொடுமைகளை எதிர்த்து எழுதி இருப்பது புரியும். வளர்ந்து விவரம் புரிந்த பின் வர்ணாசிரம அதர்மத்தையும் பார்ப்பன ஆதிக்கத்தையும் உயிர் மூச்சிலும் மேலாகப் பற்றி இருந்ததும் புரியும். பார்ப்பனர்களும் பார்ப்பனர்களிடம் (அச்சத்தினாலோ ஆசையினாலோ) அடிமைப் பட்டுக் கிடப்பவர்களும் இந்த அணுகு முறையை வேண்டுமென்றே மறைக்கின்றனர்.
Thanks Ramea, could you please let me know where could I find the “அரசு நிறுவனங்களிலும், சுதந்திரப் போராட்ட அமைப்புகளிலும் பார்ப்பனர் அல்லாதவர்கள் நிர்வாக வேலைகளில் இடம் பெற வேணடும் என்பதைப் பற்றி (அதாவது விகிதாச்சாரப் பங்கீடு பற்றி) எழுதும் போது அதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி விட்டார். ” Can you please direct me.
நானும் பல பார்ப்பனர்களிடம் (தங்களைக் கம்யூனிஸ்டுகள் என்று மார் தட்டிக் கொள்ளும் பார்ப்பனர்களிடமும் நல்லவர்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள் என்று வெளிச்சம் போடும் பார்ப்பனர்களிடமும்) கேட்டுப் பார்த்து விட்டேன். பார்ப்பனர்களில் நல்லவர்கள் என்று வெளிச்சம் போட்டுக் காண்பிக்கப்படுபவர்களின் படைப்புகளைப் படித்துப் பார்த்தும் இருக்கிறேன். யாருக்கும் பார்ப்பன ஆதிக்கம் ஒழிந்து மனித நேயம் வர வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை. பார்ப்பன ஆதிக்கம் ஒழிவது ஒரு புறம் இருக்கட்டும்: தேய்வதற்கும் மனம் ஒப்ப மறுப்பவர்களாகத் தான் இருக்கிறார்கள். Do you still believe in this?
Can you please direct me?
நண்பரே! பாரதியார் கட்டுரைகளில் ‘சமூகம்’ என்ற தலைப்பில் ‘ஜாதிபேத வினோதங்கள்’ என்ற துணைத் தலைப்பில் இதைப் பற்றிய குறிப்பு உள்ளது. அன்று பிராம்மணர் அல்லாதோர் தங்களுக்கு சர்க்கார் அதிகாரங்கள் கொண்ட வேலைகள், ஜில்லா போர்டு, முனிசிபாலிட்டி, சட்டசபை முதலியவற்றில் பங்கு வேண்டும் என்று போராடியதற்கு எதிராக, பாரதியார் பிராம்மணர் அல்லாதார் என்ற கருத்தையே மறுத்து எழுதி இருக்கிறார். இந்தியா ஸ்வராஜ்யம் அடைந்து விட்டால் போதும் என்றும் அது தான் ஜாதி பேதங்கள் மறையும் உபாயம் என்றும் எழுதி உள்ளார். (அதாவது ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி உள்ளார்.)
Do you still believe in this?
நண்பரே! இதை நான் இன்னமும் நம்புகிறேன். சொல்லப் போனால் இந்தப் புரிதல் மேலும் மேலும் வலுவடைந்து கொண்டு தான் உள்ளது. எனக்குத் தெரிந்து இதுவரைக்கும் ஒரு பார்ப்பனரும் பார்ப்பன ஆதிக்கம் அழிவதைப் பற்றி அல்ல; முனை மழுங்குவதற்கும் மனம் ஒப்புவதாகத் தெரியவில்லை. மண்டல் குழுவின் பரிந்துரைகளில் ஒரு சிறு பகுதியை அமல் செய்ய முற்பட்ட பொழுது, அதனால் சமூக அமைப்பு சிதைந்து விடும் என்று பொருள்பட ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் எழுதினார். இந்த சமூக அமைப்பைச் சிதைத்துத் தான் தீர வேண்டும் என்ற கொள்கை கொண்ட பொதுவுடைமைக் கட்சியின் தலைவர், இந்த சமூக அமைப்பைக் காக்க வேண்டும் என்று துடிதுடிப்பது ஏன்?
அருந்ததி ராய் சாதிக் கொடுமைகளைக் களைவது பற்றி மிக நன்றாகவும், துணிவாகவும் பேசுகிறார். ஆனால் விகிதாசராப் பங்கீடு பற்றி அவர் பேசியதை நான் இது வரை படிக்கவில்லை. விகிதாசாரப் பங்கீடு பற்றிய விழிப்புணர்வு இன்றி சாதிக் கொடுமைகளைக் களைய முடியாது. விகிதாசாரப் பங்கீட்டின் முக்கியத்துவத்தைப் பற்றி அறிய, கீழ் கண்ட இணைப்பில் தரப்பட்டு உள்ள என்னுடைய கட்டுரையைப் படிக்கவும்.
http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/26631-2014-06-03-06-34-45
நன்றி
நன்றி
I have read your கட்டுரை. Very good.