கட்டுநாயக்கவில் இடம்பெற்ற பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திலிருந்து பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவைப் பாதுகாத்து பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து விலகிய மகிந்த பாலசூரியவிற்கு பிரேசிலுக்கான இலங்கைத் தூதுவர் பதவியை வழங்க ஜனாதிபதி இணங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்டுநாயக்க துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னணியில் பலம்வாய்ந்த சக்தியொன்று இருப்பதாக இரண்டு தினங்களுக்கு முன்னர் மகிந்த பாலசூரிய ஊடகங்களுக்குத் தெரிவித்ததை அடுத்து குழப்பமடைந்துள்ள ஜனாதிபதி, நேற்று மாலை இந்தத் தூதுவர் பதவி வழங்குவதற்கான உறுதிமொழியை வழங்கியிருக்கிறார்.
பதவி விலகிய பின்னர் கடந்த முதலாம் திகதி மகிந்த பாலசூரிய பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தபோது, அவருக்குத் தூதுவர் பதவியொன்றை வழங்குவதாக பாதுகாப்புச் செயலாளர் உறுதியளித்திருந்தார். அதேவேளை, கட்டுநாயக்க சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி விஜேகுணவர்தனவைச் சந்தித்து நலன் விசாரிப்பதற்காக ஜனாதிபதி நேற்று திடீரென ராகம வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.
அதன்போது அவரின் குடும்ப எதிர்காலத்தை பாதுகாப்பதற்கான உறுதிமொழியையும் ஜனாதிபதி வழங்கியுள்ளார். எனினும், துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டவர் தொடர்பாக ஜனாதிபதி எதனையும் தெரிவிக்கவில்லை.
தோழர் கோத்தாவுக்கு கோடரிகள பரிசாகத் தந்து லிபியாவுக்கு நாடு கடத்துங்கள ஏனெனில் அங்கே உள்ள தேசியத்தலைவர் கடாபிக்கு போட வேண்டி உள்ளது.