நாடென்ற வகையில் 2,500 வருட பெருமைமிக்க வரலாறு கொண்ட எமக்கு எம்மிடையேயான அனைவரையும் பாதுகாத்து வாழ்வாதாரங்களும் வழங்கும் பண்பாடு இருக்கிறது என ஜனாதிபதி 63 சுதந்திர தின தேசிய விழா உரையில் தெரிவித்திருக்கிறார்.
ஜனாதிபதி கதிர்காமத்தில் நடைபெற்ற சுதந்திர தின தேசிய விழாவில் உரையாற்றுகையலேயே இவ்வாறு தெரிவித்திருக்கிறார். மேலும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் அனைத்து பிரஜைகளினதும் உரிமை என்பது போலவே தாய் நாட்டின் கௌரவத்தை மதித்து அந்த உரிமையை அனுபவிக்க வேண்டியதும் அவர்களினது பொறுப்பும் கடமையுமாகும் எனவும் இது சிங்கள, தமிழ், முஸ்லிம் இன மக்களினதும் சகல அரசியல் கட்சிகளினதும் பொறுப்பு என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றேன் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
செல்வாக்குமிக்க தீர்வுகளை எடுப்பதனால் மட்டும் நாடு அபிவிருத்தி கண்டுவிடாது. ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்குக் கஷ்டமான தீர்மானங்களும் அவசியம். பிரசித்தமான தீர்மானங்களை எடுத்து எமது பிள்ளைகளின் எதிர்காலத்தை இருளில் தள்ளுவதைவிட பிள்ளைகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக்குவதற்குக் கஷ்டமானதும் சிரமமானதுமான தீர்மானங்களை எடுக்க வேண்டியது இந் தேசத்தின் பொறுப்பாகும் எனவும் தனது உரையில் தெரிவித்திருக்கிறார்.
ஜனாதிபதி தனது உரையில் கடந்த 30 வருடகால பயங்கரவாதத்தினால் இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் மீளக்கட்டியெழுப்பும் பாரிய சவால்களுக்குனு நாம் முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இவ்வாறான அழிவுகளிலிருந்து மீளக்கட்டியெழுப்ப நீண்ட கால அவகாசம் தேவை என்பதை உலக வரலாறுகள் எடுத்தக்காட்டுகின்றன எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
சட்டம், ஒழங்கை மதிக்காத சமுதாயத்தினால் எமது சுதந்திரம் அர்த்தமுள்ளதாகாது. ஆகவே சட், ஒழுங்கை மதிக்கும் சமுதாயத்தை நாம் கடடியெழுப்ப வேண்டும். அபிவிருத்திக்கு ஒழுக்கம் மிக்க சமுதாயம் அவசியம் உரையில் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
இயற்கை அனர்த்தத்தினாலும் காலநிலை மாற்றத்தினாலும் இன்று பல நாடுகளும் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றன. எமது நாட்டின் சில பகுதிகளைச் சேர்ந்த எமது சகோதர மக்களும் இந்த நிலைமையின் கீழ் பாதிக்கப்பட்டுள்ளனர். இயற்கை அனர்த்தத்தை எம்மால் கட்டுப்படுத்த முடியாத போதிலும் அதில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மேம்பாட்டின் பொருட்டு உரிய நிதிகளை பகிர்ந்தளித்து வருகிறோம். எந்த தடைகள், சவால்கள் வந்தாலும் அபிவிருத்திக்கான இழந்த வாய்ப்புக்களை மீண்டும் பெற்றுக்கொள்ள நாம் ஒரு போதும் காலம் தாழ்த்த மாட்டோம் எனவும் ஜனாதிபதி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த உரை மூலம் சுதந்திரத்திற்கு வயது 63 ஆகிறது என்பது உணர்த்தப்பட்டுள்ளது