அமெரிக்காவின் மியாமி மாநிலத்தில் வசிக்கும் பிலிக்ஸ் ரொட்ரிகேஸ் முன்னை நாள் சீ.ஐ.ஏ உளவாளி. கியூபாவில் பிறந்தவரானாலும் சீ.ஐ.ஏ இன் ஏஜண்டக தனது 20 வது வயதிலேயே இணைந்துகொண்டவர். பொலீவியாவில் மக்கள் மத்தியில் புரட்சிக்கான தயாரிப்புக்களை மேற்கொண்டிருந்த சே குவேராவைப் பிடித்துக் கொலை செய்வதற்காக சீ.ஐ.ஏ இனால் அனுப்பப்பட்ட முகவர்களில் இவர் முக்கியமானவர். ஆர்ஜன்டீனாவின் இராணுவ அரசிற்கு ஆலோசகரகக்கூட ரொட்ரிகேஸ் வேலை பார்த்திருக்கிறார்.
2007 ஆம் ஆண்டு பிபிசி செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் தனது நடவடிக்கைகளை பெருமையுடன் பகிர்ந்துகொள்கிறார்.
இன்று சே குவேரா கொலை செய்யப்பட்ட பின்னர் புகைப்படம் பிடிக்கப்பட்ட உடல் வெளியாகியுள்ளது. இன்னும் உயிர்வாழும் ரொட்ரிகேஸ் போன்ற சே இன் கொலையாளிகள் அவற்றை ஊடகங்களில் பார்த்துக்கொண்ட்ருப்பார்கள்.
ஒக்ரோபர் மாதம் 9 ம் திகது 1967 ஆம் ஆன்டு சே சீ.ஐ.ஏ இன் உதவியுடன் பொலீவியன் இராணுவத்தால் கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட பின்னர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த பிரஞ்சு ஊடகவியலாளர் ஒருவர் சே குவேராவின் கொல்லப்பட்ட உடலைப் புகைப்படம் பிடித்துள்ளார். அப் புகைப்படங்கள் பொலீவியாவில் கிறீஸ்தவ மிஷனரி ஒன்றில் வேலைபார்த்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த லூயி குவேட்டேரோ என்பவரின் கைகளுக்கு இடம்மாறியுள்ளது. பின்னதேக 1967 ஆம் ஆண்டி நவம்பர் மாதம் ஸ்பெயின் உள்ளூராட்சிச் சபை ஒன்றின் உறுப்பினராகவிருந்த இமானோல் ஆர்டியாகா என்பவர் குவாட்டேரோவின் மரணத்தின் பின்னர் அவரது உடமைகளுக்கு மத்தியிலிருந்து கண்டெடுத்துள்ளார்.
ஆர்ஜன்டீனாவில் பிறந்த மருத்துவரான சே குவேரா பிடல் கஸ்ரோவுடன் இணைந்து கியூபாவில் புரட்சியை நடத்தியவர். தனக்கு வழங்கப்பட்ட அமைச்சர் பதவியைத் துறந்து ஏனைய நாடுகளில் புரட்சியை நடத்துவதற்காகப் பயணித்தவர். பொலீவியாவில் புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வேளையில் சீ.ஐ.ஏ இனரால் கைது செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.
சே குவேராவைக் கைது செய்து அதன் பின்னர் கொலை செய்த ஆதாரங்கள் இப்போது வெளியாகியுள்ளன. இக் கொலைகளை பொலீவியன் இராணுவமும், அமெரிக்க உளவுத்துறையும் இணைந்து நடத்தியதாக உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்கின்றன. ஆனால், முப்பது வருடங்கள் நடைபெற்ற ஆயுதப் போராட்டம் பிரசவித்த புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் சே கொல்லப்பட்டது கியூபா இராணுவத்தால் எனப் பிரச்சாரம் மேற்கொள்கின்றன.
கைதான அரசியல் கைதியைக் கொலை செய்தமைக்காக போர்க்குற்றத் தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட வேண்டிய கைதிகளைக் காப்பாற்றும் தமிழ் ஊடகங்கள் எமது சமூகத்தில் அவமானத்தை மட்டுமே விட்டுச் செல்கின்றன.
//ஆனால், முப்பது வருடங்கள் நடைபெற்ற ஆயுதப் போராட்டம் பிரசவித்த புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் சே கொல்லப்பட்டது கியூபா இராணுவத்தால் எனப் பிரச்சாரம் மேற்கொள்கின்றன.//
அவை எவை எனச் சொல்ல முடியுமா?
அவர்களைக் கேள்வி கேட்க வேண்டும்.
ஸ்ரீலங்கா அரச ஒட்டுண்ணி ஊடகங்களைக் குறிப்பிட வேண்டாம்.
http://www.tamilwin.com/show-RUmszBSaKYkt2.html
You made it sound like fifteen different outlets did it, as usual you have done your exaggeration ? You reported a false news item about forced marriage in Jaffna and quietly pulled it out even without apologizing and now you are picking on others ??
பொலிவிய டைரியில் கடைசியாய் சே கொரில்லாப்படை மூலம் மட்டுமே விடுதலையை சாதிக்க முடியாது என்பதை உணர்வது தெரிகிறது. ஆனால் சேயின் வேலைத்திட்டமானது சோசலிசப் புரட்சிக்கானது அல்ல. தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டி அதன் தலைமையில் விவசாயிகளையும் ஏனைய ஒடுக்கப்படும் மக்களையும் அணிதிரட்டுவதற்கான வேலைத்திட்டத்தின்பால் அவருக்கு நாட்டம் இல்லை.எனவே அவரது வேலைத்திட்டம் குட்டிமுதலாளித்துவ இளைஞர்களை தொழிலாள வர்க்கத்தின் இடத்தில் வைக்கும் வேலைத்திட்டம். அது பொலியாவில் தோல்வி அடைந்தது. இனி நீங்கள் வருத்தப்படும் விஷயத்திற்கு வருகிறேன். சே வை கியூப இராணுவம் கொன்றது என பொய் சொன்னமைக்காக புலம்பெயர் ஊடகங்கள் மீது வருத்தப்படுவதில் உங்களின் நியாயம் எனக்கு தெரிகிறது.
இதுபோன்று வரலாற்றில் எத்தனையோ புரட்சியாளர்கள் வேட்டையாடப்பட்டனர் என்பதை உலகம் நன்கு அறியும்.
புரட்சியாளர்களை கொன்ற அயோக்கியர்களை தலையில் வைத்துக் கொண்டாடுபவர்கள் மற்றும் அதற்கு துணைபோனவர்கள் பற்றியும் கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.
போல்ஷேவிக் கட்சியில் லெனினுடன் இணைத்தலைவராக இருந்த, அக்டோபர் புரட்சியை வெற்றிகரமாக நிறைவேற்றிய ட்ரொட்ஸ்கியை கொன்ற ஜிபியு (ஸ்டாலினது) வின் கொலையாளி ரேமன்மெக்கார்டரை மெக்சிகோவிலிருந்து.கியூபா வழியே உள்ளே விட்ட தற்போது இருக்குப் ஃபிடல் கேஸ்ட்ரோ வயதாகி இறந்தபோவதற்கு முன்னமாவது வாயைத் திறந்து உண்மைகளை உலகுக்கு கூறுவாரா? போல்ஷேவிக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களை கொன்றழித்த, காணாமற் போகும்படி செய்த, ட்ரொட்ஸ்கியின் குடும்ப உறுப்பினர்களையும் வேட்டையாடிய, பல புரட்சியாள தோழர்களையும் புத்திஜீவிகளையும் கடூழிய சிறையில் அடைத்து சித்திரவதை செய்து கொன்ற ஸ்டாலினை தலையில் வைத்துக் கொண்டாடிய, அந்த பாரம்பர்யத்தை வழிபடுகிற, நியாப்படுத்துகிற ‘புரட்சி’ பற்றி வாய்கிழிய பேசுபவர்களுக்கும், ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 75 வருடங்கள் ஆகிய பின்னரும் இன்னும் வாய் திறக்காதவர்களுடைய மௌனத்தை இட்டும், பல இரகசியங்கள் இன்னும் மூடிமறைக்கப்படுகின்றதையிட்டு வருந்தும் பல உள்ளங்களின் வேதனையையும் இந்த நேரத்திலாவது வாசகர்களும் பகிர்ந்து கொள்ளட்டும்..