சுழலும் உலகின் அச்சாணியாய் திகழும் உழைப்பாளர்களின் உரிமை நாள் மே தினம். நவீன காலம் தொழிற்கருவிகள் கண்டுபிடிப்போடு மட்டும் தொடங்கவில்லை. ஓய்வு ஒழிச்சல் அற்றுபலமணிநேரம் அந்த தொழிற்கருவிகளுக்கு இணையாய் சுழன்று உழைத்த உழைப்பாளர்களோடும் தான் தொடங்கியது. இருபது மணி நேரத்திற்கும் மேலாக ஆலைகளில் நசுங்கிய உழைப்பாளர்கள் எட்டுமணிநேரவேலை என்ற உரிமைக்காக போராடினார்கள்.
1886ஆம் ஆண்டு மே 1ஆம் நாள் எட்டுமணிநேர வேலைக்காக அமெரிக்க தொழிலாளர்கூட்டமைப்பு அறிவித்த நாடுதழுவிய வேலை நிறுத்த போராட்டமே மேநாள் என்ற உழைப்பாளர் உரிமை தினத்தின் தொடக்கம். அந்த உரிமைப்போரில் துப்பாக்கிக் குண்டுக்கு பலியாகியும், தூக்குமேடை ஏறியும் உயிர்தந்த ஈகியரை இந்த நாளில் நினைவில் ஏந்துவோம்.
அந்த உரிமை தினத்தை ஆங்கில ஆட்சியின் அடக்குமுறைக்கு முறைக்கு அஞ்சாமல், 1923ஆம் ஆண்டு சென்னை கடற்கரையில் செங்கொடி ஏற்றி இந்த துணைக்கண்டத்திற்கே அறிமுகம் செய்து வைத்தவர் எங்கள் பாட்டன் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்.
நவீனகாலத்தின் தொடக்கத்தில் உலகெங்கும் உழைப்பாளர்களும் அவர்களின் உரிமைப்போரும் தோன்றிய காலத்தில்தான், தமிழினமும் நாடுதோறும் கூலிகளாய் சென்றது. தமிழர்கள் உலகிற்கு உழைப்பையும், அதன்வழி கூலி என்ற சொல்லையும் உலக மொழிகளுக்கெல்லாம் தந்து, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற எம் முப்பாட்டனின் பொதுமைக்கு உயிர்கொடுத்தான்.
தொழிலாளர்களின் உரிமைப்போராட்டத்தில் உலகமுதலாளிகள் கற்றுக்கொண்ட பாடம். இன ஒடுக்குமுறை. அதனால்தான் உலகத்தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்று முழங்கிய மாமேதை லெனின். ஒடுக்கும் இனத்தின் தொழிலாளர்கள் ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைக்கு போராடவேண்டும் என்றார். எம் தமிழினத்திற்கு வந்த சாபக்கேடோ என்னவோ இந்திய பொதுவுடைமையாளர்கள் இதை வாய்ப்பாக மறந்துபோனார்கள்.
அதன்விளைவுதான் 30 கடல் மைல் தொலைவில் எம் உறவுகள் இன ஒடுக்கு முறையால் மண்ணின் மைந்தர்கள் என்ற உரிமையை மட்டுமல்ல உழைப்பாளர்கள் என்ற தகுதியையும் இழந்து பிச்சைக்காரர்களாய் கையேந்தி நிற்கிற கொடுமை.
தாய்த்தமிழகத்திலோ தொழில்வாய்ப்புகள் அனைத்தும் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. இருபது ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த ஏராளமான தொழிற்சாலைகள் இழுத்துமூடப்பட்டு, தமிழர்களை அத்தக் கூலிகளாக மட்டுமே ஏற்கும் பன்னாட்டு தொழிற்சாலைகள் பெருகியுள்ளன. பெரும்பாலான தொழிலாளர்கள் தொழிற்சங்க உரிமையற்ற உதிரிகளாய் மாற்றப்பட்டிருக்கின்றனர். கொஞ்சநஞ்சம் உள்ள ஆலைகளிலும், 12மணி நேரத்திற்கும் மேல் உழைத்தால் தான் வயிற்றைக் கழுவ முடியும் என்ற நிலை. உழவுத்தொழில் தன் இறுதிக்காலத்தில் துடித்துக்கொண்டிருக்கிறது, உழவுக்கு அடுத்த நிலையில் இருந்த நெசவுத்தொழில் அழிந்துவிட்டது. பட்டினிச் சாவுகளும், குடும்பமாய் தற்கொலை செய்து கொள்வதும் தமிழர்களின் தலைவிதியாகிக் கொண்டு வருகிறது.
இந்த நிலையிலிருந்து மீள்வதற்கும், இன அழிப்பு உள்ளிட்ட அனைத்து ஒடுக்குமுறையிலிருந்தும் விடுபட்டு உழைப்பாளர்கள் உரிமைக்காய் ஒன்று சேர்வதற்கும், மேதின ஈகிகளின் நினைவைத் தாங்கி தொடர்ந்து உழைப்போம்.
சீமான் சிலவிஷயங்களை தெளிவாகவே பேசுகிறார்.ஆனால் தனது காலடிகளை பிழையாகவே தடம்பதிக்கிறார். தொழிலாளி வர்க்கம் சீமானின் பாஷையில் கிள்ளு கீரை எனநினைத்தாரா? நினைத்த பாட்டுக்கு கசமுசா செய்வதற்கு. கம்யூனிசத்திற்கும் நாம்தமிழருக்கும் என்ன சம்பந்தம்?.
ஒருதொழில்சாலையை யார்வைத்திருந்தால் என்ன? முதலாளிக்கும் தொழிலாளிக்கும் உறவுகள் தானே கணக்கெடுக்கப்பட வேண்டும். இதில் என்ன பன்னாட்டு மூலதனம் என்கிற வியாக்கியாணம்?. சினிமாதொழில் வகிக்கும் சீமான் மேதின நிகழுவுகளை வரவேற்பதில் சந்தோஷமே!
ஆனால் அவரது கொள்கைகளும் மேதினத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை அவரை பின்பற்றும் அடியார்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாம் தமிழரில்லை நாம்தமிழ்யினத்திலுள்ள தொழிலாளவர்க்கத்தை சார்ந்தவர்களே என்கிற தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டும். இதுவே எமது மேதினசெய்தி திரு சீமானுக்கு வழங்குவது.
சீமானின் நிலைமையோ பரிதாபம். ஒருநாட்டில் மட்டுமல்ல உலகமுழுவதும்
வேலையின்றி வாழ்வோர் தமிழரின் பெயரால் தமிழனைச்சுரண்டி
முதலாளிகளாக் வாழ்வ்தற்கு செய்த ஏற்பாடே தமிழீழப்போராட்டமும் தென்னிந்திய சினிமா
உலகின் தொடர்புக்ழும். இதில் மாட்டிகிட்டு தவிக்கிறாரே.-துரை
தொழிலாளி வர்க்கம் என்றால் கம்யூனிசமா? அதற்கு அப்பால் எதுவுமே நினைவில் வராதா? அப்படி வந்தாலும் அது ஈழப்போராட்டத்தை உள்ளே இழுத்து முடிச்சுப்போடும் சிந்தனைதானா? தமிழீழப்போராட்டம் இன்று நாய்களுக்கு கிடைத்த இறைச்சித்துண்டுபோல்……… அதில் கசியும் இரத்தமும் சிவப்பு என்பதால் கம்யூனிசத்தை மேலும் சிவக்கவைக்க ஈழத்தமிழனின் இரத்தத்தை குடித்து கும்மாளம் போடாதீர்கள்.
ஆம் மகேந்திரா!. தொழிலாளிவர்க்கம் என்றால் கம்யூனிஸம் தான். இதில் ஏதாவது ஐய்யப்பாடு இருந்தால் உடனடியாக களைந்து விடுங்கள். இல்லையேல் நயவஞ்ச வர்க்கத்துற்கு தாவிவிடுவீர்கள். எமக்கெல்லாம் பலமுகங்கள் இருப்பதில்லையா? வேண்டுமானால் இந்தியாவை எடுத்துக் கொள்ளுங்களேன். எத்தனை வித இனபிரிவு மதப்பிரிவு. இவர்கள் எல்லாம்
மானிடத்தை சேர்ந்தவர்கள்தானே. இவர்களில் எவரை கொடுமைக்கார இனம்மா காணப்போகிறீர்கள். ஒரு தெலுங்குகாரன் ஒரு மலையாளி ஒருகன்னடக்காரன் அல்லது ஒரு சிங்களவனையா? எப்பவும் ஒவ்வொரு இனத்திற்கும் இரணடு முகங்கள் இருப்பதென்பதை அறியுங்கள். இனத்தோடு இனங்களை மோதவிட்டால் உலகில் ஒரு இனமும் இருக்க முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு இனத்திற்கும் இரண்டு முகங்கள் உண்டு. உள்ளவன். இல்லாதவன். அடக்குபவன் அடக்கப்படுபவன். அடக்குபவன் எப்பவும் சாதூரியமான வழிகளிலேயே கைய்களை நகர்த்திச் செல்வான். அடக்கப்படுபவன் தனக்கு தலைமையில்லாத வரை முட்டிமோதி தனது மண்டையை உடைத்துகொள்வதுமல்லாமல் இறுதியில் அழிந்தும் போகிறான். இதுவே வரலாறுபூராவும் கண்டுகொள்ளும் காட்சிகள்.
தொழிலாளிவர்கம் தனது தலைவிதியை தனது சொந்தக் கைகளில் எடுத்தாக வேண்டும். அடக்கியொடுக்கப்படும் வர்க்கத்திடம் கையளிக்கக் கூடாது. மனிதஉயிரில் அக்கறையில்லாமல் சாகவிடுவதும் செத்தால் வீரமரபு என்று பெயர் குத்துவதும் இனத்தின் மானத்திற்காக உயிர் விட்டான் என்பதும் அடக்கியொடுக்கப் பட்டவர்கத்தின் கபடத்தனமாக வார்த்தைகளே!. இப்படித்தான் மனிதவரலாற்றை நுனிபுல்மேய்ந்து போட்டு வந்த பிரபாகரன் அவரின் தம்பி சீமான் இவர்களின் தாத்தா நெடுமாறன் வைகோல்களை கருதுகிறேன்.
ஆத்திரப்படாதீர்கள். காரியம் ஆற்றவேண்டுமாக இருந்தால் பொறுமையாக சிந்திப்பதற்கும் கடமைப்பாடு உண்டு தங்களுக்கு.
கம்யூனிசம் என்பது ஒரு இயல்பு. மனிதர்களின் இயல்பான ஒரு உணர்வு. மனிதர்களிடையே தோற்றம்பெறும் முரண்பாடுகளால் அவர்கள் பாதிப்படையாது தடுத்துப் பாதுகாப்பதும் கம்யூனிசத்தின் இயல்பு எனவும் கம்யூனிசம் பற்றி சிறிதளவு அறிந்துள்ளேன்.
ˊசாலையில் நடந்து செல்லும் ஒருவர் அங்கு ஒருவன் மற்றொருவனை அடித்து உதைத்துக்கொண்டிருப்பதை கண்டால், பாதிக்கப்பட்டவனின் சார்பில் தடுத்து நிறுத்த முன்வருவாரே அதன் பெயர் தான் கம்யூனிசம். அந்த உணர்வு தான் கம்யூனிசத்தின் சாரம். அந்த உணர்வை பரந்துபட்ட தன்மைகளுடன், பின்னணி, விளைவுகள் குறித்த பார்வையோடு உலகளாவிய நிகழ்வுகளுடன் பொருத்தி அதற்கான தீர்வுகளை சிந்தித்தால் அதன் பெயர்தான் கம்யூனிசம்ˋ என்று விளக்கமும் அளித்துள்ளார்கள்.
தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளை வென்றெடுத்து அவர்களின் வாழ்வுக்காக, உயர்வுக்காக போராடி தங்களின் இன்னுயிர்களை ஈகம்செய்த புரட்சியாளர்களை நினைவுகூரும் தினம்தான் மே தினம். இங்கு தொழிலாளி முதலாளி வர்க்கத்திடையே உள்ள முரண்பாடுகளை அகற்றும் செயல்பாடுகள் கம்யூனிசத்தின் இயல்பை கொண்டதாக உள்ளது. அதேபோன்றதுதான் அழிக்கப்படும் ஓர் இனத்தின் அழிவை தடுத்து நிறுத்தி அவ்வினத்தின் உரிமைகளை வென்றெடுக்கப் போராடும் போராட்டம். இனங்களிடையே உள்ள முரண்பாடுகளை அகற்றும் செயல்பாடுகள். அதில் ஈடுபடும் மனிதர்களின் இயல்பில் குறைபாடுகளை காணும்போது அதனை நிவர்த்திசெய்ய விமர்ச்சனம் செய்வது, கடுமையாக இருந்தாலும் அது ஆரோக்கியமானது. காழ்புணர்ச்சி கொண்டு தூற்றுவது தரக்குறைவானது. ஏற்புடையதல்ல.