சீன வங்கிகளே உலகளவில் வங்கிகள் ஈட்டும் லாபங்களில் 29 சதவீதத்தை ஏற்படுத்துகின்றன என்று பேங்கர் பத்திரிகை(Banker Magazine) வெளியிட்டுள்ள தனது வருடாதஆய்வுகள் கூறுகின்றன.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் சீன வங்கிகளின் லாபம் உலகளவில் நான்கு சதவீத அளவுக்கே இருந்தன.
கடந்த ஆண்டில் ஐரோப்பிய வங்கிகள் ஈட்டிய லாபத்தின் பங்கு உலகளவிலான லாபத்தில் ஆறு சதவீதமாகவே இருந்தன.
ஐரோப்பாவின் நட்டம் சீனாவின் லாபமாக அமைந்தது என்று அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ப்ரையன் காப்லென் கூறுகிறார்.
அந்தப் பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியிலில், மிகக் குறைவான லாபங்களை ஈட்டும் 25 வங்கிகளில் பட்டியலில் 24 வங்கிகள் ஐரோப்பாவில் உள்ளன.
சீனத் தொழில் வங்கியே உலகளவிலான லாபப் பட்டியலின் முதலிடத்தில் உள்ளது.
They are becoming an economist giant globally.I hope they continue to assist Sri Lanka.