தனது 3நாள் ஜப்பானிய சுற்றுப்பயணத்தை வியாழக்கிழமை முடித்துக் கொண்ட இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சீனத்தலைநகர் பெய்ஜிங் சென்றடைந்தார்.ஜப்பானில் அந்நாட்டுப் பிரதமர் தாரோ அஸவுடன் மன்மோகன் சிங் இருதரப்பு உறவுகள் குறித்து புதன்கிழமை விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.அஸவுடன் நிகழ்த்திய பேச்சுவார்த்தை மிகுந்த பலனளிப்பதாக இருந்தது என மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.2ஆண்டுகளுக்குள் 2முறை தான் ஜப்பானுக்கு விஜயம் செய்ததன் மூலம் அந்நாட்டுடன் உறவு கொள்வதற்கு இந்தியா எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும் என்றும் மன்மோகன் கூறினார்.
இப்பயணத்தின்போது இரு நாடுகளும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.அத்துடன் பல ஆயிரம் கோடி மதிப்பு வர்த்தகத்துக்கும் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று உச்சி மாநாடு: பெய்ஜிங்கில் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஆசிய- ஐரோப்பிய உச்சி மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கிறார்.
இந்த அமைப்பில் ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த 27நாடுகள்,ஆசியான் அமைப்பைச் சேர்ந்த 10நாடுகளுடன் சீனா,ஜப்பான்,தென் கொரியாவும் உள்ளன.
இந்தப் பயணத்தின்போது சீன அதிபர் ஹூ ஜிந்தாவோ,ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்கெல் உள்ளிட்ட தலைவர்களை மன்மோகன் சிங் சந்திக்கிறார்