குவாங் மாநிலத்தில் வுகான் கிராமவாசிகள் தங்கள் கூட்டு நிலத்தை நில அபிவிருத்தியாளருக்கு ஊழல்ரீதியாக விற்பனை செய்வதை எதிர்த்து நடத்தும் உறுதியான போராட்டம், சீனக் கிராமப்புற மக்கள் என்று மட்டும் இல்லாமல் நகர்ப்புறத் தொழிலாள வர்க்கத்திடமும் இனி என்ன வரவுள்ளது என்பதற்கான அடையாளத்தைக் காட்டுகிறது.
சீனாவிலுள்ள கடுமையான சமூக அழுத்தங்கள் பல நேரமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஈடுபாடு கொள்ளும் கணக்கிலா எதிர்ப்புக்கள், வேலைநிறுத்தங்கள் ஆகியவற்றில் தங்கள் வெளிப்பாட்டைக் காண்கின்றன. ஆனால் வுகானில் நடக்கும் எதிர்ப்பு போல் வெகுசிலவே நீடித்து நடக்கின்றன. இது பொலிஸ்-அரசாங்கத்தின் கடுமையான நடவடிக்கைகளை மீறி பல மாதங்களாக நடைபெறுகின்றது. இதில் கைதுகள் மற்றும் 20,000 மக்கள் இருக்கும் ஒரு சமூகத்தை ஆயுதமேந்திய முற்றுகை ஆகியவை உள்ளன.