வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஈபிஆர்எல்எப் கட்சியினர் மீது திட்டமிட்டுக் குற்றஞ்சாட்டுவதாக் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார்.
வடக்கு மாகாண அமைச்சர்கள் பங்கீட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரும் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் தமது கட்சியினரின் கோரிக்கைகளை கணக்கில் எடுக்கவில்லை என்றும் அவர் தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.
சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது சகோதரருக்கு அமைச்சுப் பதவி கோரியதைப் பற்றிக் கூறும் முதலமைச்சர், ஏன் முல்லைத்தீவு மாவட்டத்துக்காக அமைச்சுப் பொறுப்புக் கோரியதைப் பற்றி ஊடகவியலாளர்களிடம் வாய் திறக்கவில்லை என்றும் சுரேஷ் கேள்வி எழுப்பினார்.
முதலமைச்சர் நேர்மையாக நடந்திருந்தால் தங்கள் கட்சியினர் கோரிய முழுமையான விடயங்களையும் ஊடகங்களிடம் கூறியிருக்க வேண்டும் என்று தெரிவித்த சுரேஷ் தெரிவித்தார். பங்காளிக் கட்சிகள் பலவும் பதவிப் பிரமாண நிகழ்வைப் புறக்கணித்திருந்த நிலையில், தமது கட்சியை மட்டும் கொச்சைப்படுத்தும் விதத்தில் விக்னேஸ்வரன் கருத்துக்கூறியுள்ளதாகவும் சுரேஷ் கூறினார்.
விக்னேஸ்வரன் ஈ.பி.ஆர். எல்.எப் மீது மட்டுமல்ல அனைத்து ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் மீதும் ஒடுக்கப்படும் மக்கள் பிரிவுகள் மீதும் குற்றம்சுமத்திக் கொச்சைப்படுத்துகிறார். இதனை பின்னணியிலுள்ள அரசியலுக்கு ஒத்துழைப்பு வழங்கிய பிரேமச்சந்திரன் தன்னைச் சுயவிமர்சமன் செய்துகொள்வதும் மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பதும் இன்றைய தேவைகளில் ஒன்று.
மண்டையன் குழுத் தலைவர்.என்ன என்ன சிந்தனையில் உள்ளார் பெரிசா கிழிப்பதற்கு… பாதிக்கப்பட்டவருள் நானும் ஒருவன்.எனக்கு சாவு மணி இது.ஊ ஊ ஊ
Suresh Premachandran has no standing to question the CM. it is high time for all these militant groups to pack up their baggage and leave politics for good. Let CVW, Sampanthan and Sumanthiran run the rest of the show.