மத்திய புலனாய்வுப் பிரிவின் (சி.பி.ஐ.) இணையதளத்தில் தேடப்படுவோரின் பட்டியலில் இருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் 25 ஆண்டுகளாக நீடித்து வந்த கடும் சமர் கடந்த 2009 மே மாதத்துடன் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து 2009 மே 18 ஆம் திகதி விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன், இலங்கையிலுள்ள நந்திக்கடல் பகுதியில் நடந்த சண்டையில் கொல்லப்பட்டதாக இராணுவம் தெரிவித்தது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய எதிரியாகக் கருதப்பட்ட பிரபாகரன் மீது இந்தியாவில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னையிலுள்ள நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், பிரபாகரனின் இறப்புச் சான்றிதழைப் பெறுவதற்கு இந்திய அதிகாரிகள், இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு வந்தனர். இதனைத்தொடர்ந்து கடந்த பெப்ரவரி 1ஆம் திகதி பிரபாகரனின் இறப்புச் சான்றிதழை, இலங்கை அரசிடமிருந்து சி.பி.ஐ. பெற்றுக் கொண்டதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்தார். அதையடுத்து, தற்போது சி.பி..ஐயின் இணையத்தளத்தில், தேடப்படுவோரின் பட்டியலில் இடம்பெற்றிருந்த பிரபாகரனின் பெயரும் படமும் நீக்கப்பட்டுள்ளது.
இன்று 9 மாதங்களின் பின் முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய எதிரியாகக் கருதப்பட்ட, நந்திக்கடலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அமரத்துவம் அடைந்ததை இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவின் (சி.பி.ஐ.) இணையதளத்தில் தேடப்படுவோரின் பட்டியலில் இருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயர் நீக்கப்பட்டிருந்தாலும், புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மத்தியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரால் பணம் சேகரித்தவர்களின் கைதுகளின் தொடரில் யேர்மனியில் Tamil Coordinating Committee (TCC) என்ற அமைப்பின் பெயரால் 2002 ம் ஆண்டு தொடக்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்திற்கு பணம் சேகரித்ததர்ககாகவும், ஓர் ஆயுத களவாடளிர்க்காகவும் 61 வயதான ஒருவர் யேர்மனிய காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
T.M என்று சுருக்கமாக அழைக்கப்படும் இவர் 2002 ம் ஆண்டளவில் அகதியாக புலம் பெயர்ந்து மேற்கு யேர்மனியின் city of Wuppertal என்னுமிடத்தில் வசித்து வந்த ஈழத் தமிழ் குடும்பமொன்றிடம் தமக்கு மாதாந்த கொடுப்பனவு தருமாறு துப்பாக்கி முனையில் மிரட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். (http://www.etaiwannews.com/etn/news_content.php?id=1212956&lang=eng_news )
இவரின் கைது சிலநாட்களுக்கு முன் Oberhausen near Essen இல் கைது செய்யப்பட்ட ஆறு பேரின் தொடர்சியான கைதென அறியப்படுகிறது. (http://www.zeenews.com/news608963.html )
60,000 தமிழர்கள் வசிக்கும் யேர்மனியில் இரண்டு தமிழ் தொலைக்காட்சி சேவைகளும், பதினோரு வானொலி சேவைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே நேரத்தில் இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற 23 ஈழத் தமிழ் அகதிகளை தமிழ் நாட்டுப் பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கைதுசெய்யப்பட்டுள்ள இவர்கள் இலங்கை கடல் எல்லைப் பகுதி வரை செல்வதற்காக 5000 ரூபா பணம் கொடுத்து படகுகளின் மூலம் தப்பிச்செல்ல முயன்றதாகவும் மீனவர்கள் வழங்கிய தகவலையடுத்து, இந்த 23 பேரும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தகவல்களின்படி அறியப்படுகிறது.
ஒரு பக்கத்தில் அகதியாக ஐரோப்பிய, அமெரிக்க, அவுஸ்திரேலிய நாடுகளுக்கு அகதியாக சென்றவர்கள் வசதியான வாழ்க்கைகளை அமைத்துக்கொண்டு பணம் சேகரிப்பு, அடாவடித்தனங்கள், ஆடம்பரமான விழாக்கள், விரும்பிய பெயர்களில் அமைப்புகள், இணையதளங்கள் என்று தொடர்ந்துகொண்டு இருக்கும் நிலையில் இந்தியாவிலோ எம்மவர் போல் மேற்க்கத்திய நாடுகளுக்கு வரமுடியாமல், உயிரைப் பணயம் வைத்து கடல் பிரயாணத்தில் தமிழ்நாடு சென்று பல இன்னல்களிற்கு மத்தியில் அகதி முகாம்களிலும், வெளியிலும் (வெளிநாட்டில் இருக்கும் உறவுகள் உதவி செய்யும் நிலையில்) இருக்கும் நிலையில் இன்று எமது ஈழத்திலோ போர் முடிந்து 9 மாதங்கள் ஆனா நிலையில் நாடு சகஜ நிலைக்கு திரும்பிவிட்டதான பிரச்சாரத்திற்கு மத்தியில் ஜனாதிபதி தேர்தல் முடிந்து அடுத்த பாராளுமன்ற தேர்தலும் நடக்கும் நிலையில், இந்திய அரசாங்கமும் ஈழத்தில் பல முதலீடுகள், அபிவிருத்திகளில் ஈடுபடும் நிலையில், தமிழ் நாட்டில் தங்கி இருக்கும் எமது உறவுகள் உண்ணவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் இருப்பது போல், தாம் தம் தாய் நாட்டிற்கு திரும்ப வர முடியாத இருக்கும் நிலையில் நம் தமிழ்த் தலைமைகள், நமது மக்களைப் பிரதிநிதிப்படுத்தும் அரசாங்கம் இவற்றை கருத்தில் எடுத்து செயற்படுத்துவார்கள?
அல்லது இன்று தமிழ்நாடில் தஞ்சமடைத்து இருக்கும் இரண்டு இலட்ச்சதிர்க்கு மேற்ப்பட்ட மக்கள் திரும்பி வராத நிலையில் உயர் பாதுகாப்பு வலயம் (முன்பு இவ் அகதிகள் வாழ்ந்த இடங்கள்) என்ற பெயர்களிலும், முன்பு இந்த மக்கள் வாழ்ந்த இடங்கள் பறிபோகும் நிலையில், அபிவிருத்தி என்ற பெயரில் சிங்கள குடியேற்றங்கள் நடைபெறுவதை விரும்புகிறார்களா? தமிழ்நாட்டில் இருக்கும் ஈழத்தமிழ் அகதிகள் திரும்பி வருவதற்கு இன்னல்படும் பல விடயங்களை முன்பும் சுட்டிக் காட்டியுள்ளேன். தயவு செய்து சம்பந்தப்பட்டவர்கள் இவ் உறவுகளின் துயர் துடைக்க, தம் சொந்த இடங்களில் மீள்குடியேற வேண்டிய முறைகளை செய்வார்களா?
“இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் அவர்களின் சொந்தக் காணிகளில் குடியமர்த்தப் படவேண்டும். அவர்களுக்கான உள்ளகக் கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.உயர்பாதுகாப்பு வலயங்கள் அனைத் தும் நீக்கப்படுவதுடன் 1980 ஆம் ஆண்டளவில் இராணுவ முகாம்கள் எந்நிலையில் இருந்தனவோ அந்நிலைக்குத் திரும்பச் செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்”
“எமது தாயகப் பகுதிகளில் நடத்தப்பட்டு வரும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள்.. ஓர் உணர்வு பூர்வமான விடயம். நாம் தடுக்கக்கூடிய சில சந்தர்ப்பங்களை நாம் தவற விட்டுள்ளோம். இதனைத் தடுப்பதற்கு இந்தியாவின், சர்வ தேசத்தின் உதவியை நாம் பெறவேண்டும். இராணுவ மயப்படுத்தப்பட்ட இந்த சூழல் ஆபத்தானது. சிங்கள மக்கள் கிழக்கில் ஒரு சில இடங்களில் ஆரம்பத்தில் இருந்தனர். அதனை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் பெரும்பான்மையாக இருந்த தமிழினத்தை சிறுபான்மையாக்கும் செயல்களை நாம் தடுத்தாக வேண்டும்.” என்று தேர்தல் காலத்தில் முழக்கமிடுபவர்கள் தன்னும் இதை சிந்திப்பார்களா?
அல்லது “ஈழத்தமிழர்களின் பிரச்சி னைக்கான தீர்வில் புலம்பெயர் சமூகம் தவிர்க்க முடியாத சக்தி, நிச்சயமாக அவர்கள் தவிர்க்கப் பட முடியாதவர்கள். நாட்டைவிட்டு வெளியேறிய அவர்கள் மீண்டும் இங்கு வரவேண்டும். இங்கு முதலீடுகளைச் செய்யவேண்டும். இளம் தலைமுறைக்கும் இம் மண் ணுக்குமான உறவு விட்டுப் போய்க்கொண்டு இருக்கிறது. அந்த இடைவெளியை நாம் நிரப்பவேண்டும். புலம்பெயர் இலக்கியமே இன்று அழிந்துபோய்க் கொண்டுள் ளது. அங்குள்ள கலைச்செல்வங்கள் இங்கு கொண்டு வரப்படவேண்டும்.”
“புலம்பெயர் சமூகத்துடன், அம்மக்களுடன் தொடர்ச்சியான உறவைப் பேணி வருகின் றோம். அங்குள்ள மாற்றுக் கருத்துடையவர் களையும் சந்திக்கின்றோம். அங்கு நடை பெறும் இலக்கியச் சந்திப்புக்கள், பெண் கள் வட்ட சந்திப்புக்கள் என்பவற்றில் எமது பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். அங்கிருந்தும் புதிய தலைமைகள் உருவாக வாய்ப்புகள் உள்ளன.” என்று மேற்க்கத்திய நாடுகளில் வசிக்கும் புலம்பெயர் உறவுகளை மட்டும்தானா தொடர்ந்து கணக்கில் எடுக்கப்போகிறார்கள்?
மேலும் சம்பந்தப்பட்ட செய்திக்கு:
http://www.dailythanthi.com/article.asp?NewsID=555859&disdate=3/26/2010&advt=1
திருட்டு விசைப்படகில் இலங்கைக்கு தப்ப முயன்ற 23 அகதிகள் கைது
குமரி மாவட்டத்தில் விசைப்படகை திருடி அதில் இலங்கைக்கு தப்ப முயன்ற 23 தமிழ் அகதி வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் விடுதலைப்புலிகளா? என்று தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
குமரி மாவட்டம் மேற்கு கடற்கரை கிராமமான நித்திரவிளையை அடுத்த தூத்தூரை சேர்ந்தவர் சகாயதாஸ். இவர் விசைப்படகில் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டு படகில் நேற்று முன்தினம் கரைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது நடுக்கடலில் தனியாக நின்று கொண்டிருந்த ஒரு படகில் இருந்து “காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்” என்று அலறல் சப்தம் கேட்டது. உடனே சகாயதாஸ் அந்த படகின் அருகில் தனது படகை கொண்டு சென்றார். அங்கிருந்தவர்களிடம் எதற்காக காப்பாற்றுங்கள் என்று சப்தம் போட்டீர்கள் என்று கேட்டார்.
அதற்கு படகில் இருந்தவர்கள் தங்களது படகு என்ஜின் பழுதாகி விட்டது என்றும், அதை சரிசெய்வதற்கு ஆட்களை அழைத்துவருவதாக கூறிவிட்டு 2 பேர் பைபர் படகில் சென்றனர் என்றும், அவர்கள் ஒருநாள் ஆகியும் இதுவரை திரும்பிவரவில்லை என்றும் கூறினர்.
உடனே சகாயதாஸ் தனது படகில் அந்தபடகை கட்டி தூத்தூர் கடற்கரை பகுதிக்கு இழுத்துவந்தார். பழுதான படகில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க 23 பேர் இருந்தனர்.
அவர்கள் மீனவர்கள் போல இல்லாததால், “நீங்கள் எப்படி கடலுக்குள் வந்தீர்கள்?” என்று கேட்டார். அப்போதுதான், அவர்கள் இலங்கைக்கு செல்ல திட்டமிட்டதும், அனைவரும் இலங்கை அகதிகள் முகாம்களில் வசித்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதுபற்றி உடனடியாக சகாயதாஸ் கடலோர காவல் நிலையத்திற்கும், நித்திரவிளை போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார்.
உடனே போலீசார் கடற்கரைக்கு விரைந்து வந்து 23 பேரையும் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு இலங்கை அகதிகள் முகாமில் இருந்து தப்பி வந்தவர்கள் என்பதும், கள்ளத்தனமாக படகில் இலங்கைக்கு செல்ல முயன்றதும் தெரியவந்தது. இது போலீசாருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதனால் படகில் இருந்தவர்கள் விடுதலைப்புலிகளாக இருப்பார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.பிடிபட்டவர்கள் இலங்கையில் போர் தொடங்கிய போது தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள் என்பதும், இதுவரை தமிழகத்தில் உள்ள பல அகதிகள் முகாமில் வசித்துவந்ததும் தெரியவந்தது. தற்போது இலங்கையில் போர் முடிந்து விட்டதால் அங்குள்ள உறவினர்களையும், நண்பர்களையும் பார்க்க விசைப்படகில் இலங்கைக்கு புறப்பட்டு செல்ல முயன்றதாகவும் தெரிவித்தனர்.
மேலும், அரசு அனுமதி பெற்று முறைப்படி இலங்கை செல்ல வேண்டும் என்றால் அதிக பணம் செலவாவதோடு, அதிக நாட்களும் ஆகிவிடும் என்பதால் இந்த குறுக்கு வழியை கையில் எடுத்ததாகவும் தெரிவித்தனர்.
இப்படி கள்ளத்தனமாக படகில் ஏற்றி இலங்கை கடற்பகுதியில் இறக்கி விடும் ஏஜெண்டு கும்பல் தனியாக செயல்படுவதாகவும் கூறினர். படகில் ஏற்றிச் செல்வதற்கு ஏஜெண்டுகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் கொடுத்ததாகவும், தங்களிடம் இருந்த செல்போன் சிம்கார்டுகளையும் ஏஜெண்டுகள் வாங்கிவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இவர்கள் அனைவரும் அகதிகள் முகாமில் இருந்து எப்படி தப்பி வந்தார்கள் என்பது மர்மமாக இருக்கிறது.
இவர்களை இலங்கைக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்த ஜெகன் என்ற ஏஜெண்டின் பின்னணி என்ன? என்பதும் தெரியவில்லை. அவர் யார் என்பதும் மர்மமாக உள்ளது.
இப்படிப்பட்ட படகுகளுக்கு டீசல் சப்ளை செய்பவர் குமரி மாவட்டம் வள்ளவிளையை சேர்ந்த ஜாண் தேவதாஸ் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இலங்கைக்கு செல்வதற்காக தமிழ் அகதிகள் புறப்பட்டு சென்ற படகு குமரி மாவட்டம் பூத்துறையை சேர்ந்த ஜான்சன் என்பவருக்கு சொந்தமானது. அவர் கடந்த 21-ந் தேதி தூத்தூர் பகுதியில் படகை நிறுத்திவிட்டு, பராமரிப்பு பணிக்காக பேட்டரியை கழட்டி எடுத்துச் சென்றார். 23-ந் தேதி வந்து பார்த்தபோது படகு மாயமானதை பார்த்து போலீசில் புகார் செய்தார். அவர் புகார் செய்தபிறகு தான் ஏஜெண்டுகள் அந்த படகை திருடிச் சென்று, அதில் இலங்கை தமிழ் வாலிபர்களை கள்ளத்தனமாக ஏற்றி சென்றது போலீசாருக்கு தெரியவந்தது.
தகவல் அறிந்த குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் நேற்று காலை தூத்தூர் பகுதிக்கு நேரில் சென்று நடுக்கடலில் பிடிபட்ட 23 இலங்கை அகதிகளிடம் விசாரணை நடத்தினார்.
கைது செய்யப்பட்ட 23 பேரும் தமிழகத்தில் உள்ள பல்வேறு அகதி முகாம்களில் வசித்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் பெயர் விபரம் வருமாறு:-
1.முருகையா (வயது 40), சென்னை, பழவந்தாங்கலில் வெளிப்பிரிவில் வசித்தவர்.
2.உமா சந்திரன் (23), யானைக்கூட்டம் முகாம், சிவகாசி.
3.யோகதாஸ் (28), யானைக்கூட்டம் முகாம், சிவகாசி.
4.அலிஸ்டன் (23), பவானிசாகர் முகாம், ஈரோடு.
5.ஜெயச்சந்திரன் (29), திருலதா ஊர்முகாம், மதுரை.
6.ஜோசப் பிரதீப் (28), பவானிசாகர் முகாம், ஈரோடு.
7.ராஜா (29), உச்சம்பட்டி முகாம், மதுரை.
8.கிரேசி (25), வாணியர் கேம்ப் முகாம், தர்மபுரி.
9.ரமேஷ் (25), திருச்சி முகாம்.
10.இன்பரூபன் (24), கீழ்புத்துப்பட்டு முகாம், திண்டிவனம்.
11.அருணகிரி நாதன் (37), பவானிசாகர் முகாம், ஈரோடு.
12.டெடிலேசன் (27), பவானிசாகர் முகாம், ஈரோடு.
13.ஜெயரதன் (30), கீழ்புத்துப்பட்டு முகாம், திண்டிவனம்.
14.கனகராஜா (26), கோபால சமுத்திரம் முகாம், நெல்லை.
15.ரவி (40), காலாங்கரை முகாம், சென்னை.
16.ஜெகநாதன் (33), ராயலூர் முகாம், கரூர்.
17.நிக்ஷன் (28), கானாங்கரை முகாம், புழல்.
18.பாக்கியராஜ் (27), லேடர் காலனி முகாம், மேட்டுப்பாளையம், கோவை.
19.சர்மிளன் (23), நாக்கூர் முகாம், சிவகங்கை.
20.கக்கேஸ்வரன் (21), பவானிசாகர் முகாம்.
21.பிரதீபன் (21), சென்னை முகாம்.
22.தேசியன் லாரன்ஸ் (32), சென்னை முகாம்.
23.இம்மானுவேல் ஜெயக்குமார் (35), சென்னை முகாம்.
மேலும் இவர்களுடன் படகில் சென்றவர்கள் 2 பேர் ஏஜெண்டுகள் ஆவார்கள். அவர்களின் பெயர் விவரம் தெரியவில்லை. அந்த 2 மர்ம ஆசாமிகளும்தான் 23 பேரையும் இலங்கைக்கு அழைத்துச் செல்வதாக கூறி படகில் அழைத்துச் சென்று இருப்பார்கள் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-பல்வேறு அகதிகள் முகாமில் இருப்பவர்களில் இலங்கைக்கு செல்ல விரும்புபவர்களை நாகர்கோவில் அழைத்து வந்து, அங்குள்ள லாட்ஜில் தங்கவைக்கின்றனர். பின்னர் அங்கிருந்து ஒரு தனியார் வேனில் அழைத்துச் சென்று கடற்கரை பகுதியில் உள்ள ஒரு தோப்புக்குள் திருட்டுத்தனமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அதன்பின்னர் அங்கிருந்து பைபர் படகில் தூத்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட இடப்பாடு என்று இடத்திற்கு கொண்டுவந்துள்ளனர். அங்கு தயாராக நின்ற விசைப்படகில் ஏற்றி இலங்கைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
நடுக்கடலில் படகில் பழுது ஏற்பட்டபோது, ஏஜெண்டுகள் 2 பேரும் கரைக்கு சென்று படகை சரிசெய்ய ஆட்களை அழைத்துவருவதாக கூறி பைபர் படகில் சென்றனர். அவர்கள் அதன் பின்னர் திரும்ப வரவில்லை.
இதனால் பதற்றமடைந்த 23 பேரும் கடந்த 24-ந் தேதி படகில் இருந்துகொண்டு காப்பாற்றுங்கள் என்று கூக்குரல் எழுப்பியுள்ளனர். அந்த சமயம் அந்த பகுதியில் சென்ற படகின் மூலம் அவர்கள் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.
மேலும், வள்ளவிளையை சேர்ந்த ஜாண் தேவதாஸ் இந்த படகுகளுக்கு டீசல் சப்ளை செய்தது தெரியவந்துள்ளது. பூத்துறையை சேர்ந்த ஆரோக்கியம் வீட்டில் கேரள மாநிலம் விழிஞ்சம் பகுதியை சேர்ந்த தேவதாஸ், ஜாண் ஆகியோர் அடிக்கடி வந்து தங்குவது உண்டு. அவர்களை பிடித்து விசாரித்தால் உண்மை நிலவரம் தெரியவரும். அது பற்றி விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.
நன்றி!
– அலெக்ஸ் இரவி.
வாசகர்களே! பெரிய வருத்தம் என்னவென்றால், இந்த 23 பேர் பிடிபட்ட செய்தியை போடும் இனிய தளங்கள் எல்லாம், முக்கியமாக ஊடக சுதந்திரம் கதைக்கும் இணையத்ததளங்கள் “அகதியாகச் சென்றவர்கள் தமது தாய் நாட்டிற்கு திரும்பி வரும்போது பிடிபட்ட செய்தியை, இந்திய ஊடகங்களில் வந்தபடியே,
” குமரி மாவட்டத்தில் விசைப்படகை திருடி அதில் இலங்கைக்கு தப்ப முயன்ற 23 தமிழ் அகதி வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.”
“இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற 23 இலங்கைத் தமிழர்களை தமிழ்நாட்டுப் பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர்”
போடுவதுதான்.
முறைப்படி அவர்கள் தாயகம் திரும்ப இரு அரசாங்களும் ஒத்துழைத்து தேவையான ஒழுங்குகள் செய்தால் அவர்கள் ஏன் அப்படி உயிரை பணயம் வைத்து புறப்படுகிறார்கள். இன்றும் எனக்கு தெரியும் எத்தனை பேர் exit permit க்காக காத்து இர
திரு அலெக்ஸ் அவர்களூக்கு நன்றீ. தாய்லாந்தில் வாழும் தமிழ் அகதிகள் மனிதர்களாக மதிக்கப்படுகிறார்கள் ஆனால் தமிழ் நாட்டில் வாழும் தமிழராகவே பார்க்கப்படுவதில்லை.தமிழ் இனத்திற்கு குரல் கொடுப்பதாய் பேசும் விஜயகாந்த், வைகொ,நெடுமாறன்,சீமான் போன்றோர் தமிழ் எனும் மாயை காட்டி காசு பார்க்கிறார்களே தவிர தமிழர் எனும் கருனை காட்டுவதில்லை.ஏமாற்றூம் அரசியல்வாதிகளூம் சில தமிழ் உண்ர்வாளர்களூம் ஏமாறூம் மக்கலை தொடர்ந்தும் எமாற்றூம் கலையை நன் கு அறீந்து நன்றாகவே விலையாடுகிறார்கள்.
ஒரு பக்கத்தில் இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான போர் முடிவுற்று அமைதி திரும்பிவிட்டது என்ற பிரச்சாரத்திற்கு மத்தியில் உல்லாசத்துறையினரை வரவேற்பதுடன் மறுபக்கத்தில் உயர்பாதுகாப்ப்பு வலயங்களை மேலும் வலுவாக்கிக்கொண்டு பாரம்பரிய தமிழ் பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தொடர்வதையும் இடம்பெயர்ந்த அகதிகளின் நிலையையும் கீழ் காணும் 12 நிமிட வீடியோவில் காணுங்கள். http://www.france24.com/en/20100204-reporters-sri-lanka-tamil-tigers-civil-war-refugees-civilians-return-army-probation