சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு வரும்போது தி.மு.க தனது நிலையைத் தெரிவிக்கும் என்று கருணாநிதி கூறியிருந்தார்.
இதை அடுத்து, தி.மு.க. தலைவரை சமாதானப் படுத்த காங்கிரஸ் தரப்பு குலாம் நபி ஆசாத்தை அனுப்பிவைத்தது. அவர் இன்று மாலை 4.30 மணி அளவில் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சு நடத்தினார்.
அதன் போதே ஆதரவு கோரி பேசியதாகக் குறிப்பிட்டார். இந்தியாவில் எஞ்ச்யிருக்கும் சிறிய முதலீடுகளிக் கூட ஏகாதிபத்திய பல்தேசிய நிறுவனங்கள் ஆக்கிரமிக்க முற்படுகின்றன. இதற்கு பல்தேசிய நிறுவனனங்களின் பங்காளி அரசான இந்திய அரசு துணைபோகிறது. மேற்கு நாடுகளை பொருளாதார நெருக்கடிக்குள் உள்ளாக்கிட பல்தேசியக் நிறுவனங்கள் இந்தியாவை இன்று ஒட்ட சுரண்டுவதற்கு இறுதித் திட்டத்தையும் முன்வைத்துள்ளன. கருணாநிதி இதற்காக பேரம் பேசிக்கொண்டு அன்னிய முதலீட்டை ஆரம்பிப்பார் என்பது அறியப்பட்டதே.