உத்தேச உள்ளுராட்சி சபைகள் விசேட திருத்தச் சட்ட மூலம் சிறுபாண்மை மக்களின் நலன்களை பாதிக்கக் கூடியது என்பதால் அதனை அங்கீகரிப்பது இயலாத விடயம்” என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கூறுகின்றார். நேற்று கிழக்கு மாகாண சபையின் அங்கீகார்திற்காக இந்த சட்ட மூலம் முன் வைக்கப்பட்ட போதிலும் கிழக்கு மாகண முதலமைச்சர் உட்பட ஆளும் கட்சி உறுப்பினர்களில் ஒரு தரப்பினர் தமது எதிரப்புகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் “மக்களின் கருத்துக்களைப் பெற்று அமுல் படுத்த வேண்டிய விடயங்களை மத்திய அரசாங்கத்தின் அமைச்சர் வர்த்தமாணி பிரகடனம் மூலம் செய்ய முற்படுவது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல.
கிழக்கு மாகாண சபையைப் பொறுத்த வரை சறுபாண்மை மக்களாகிய தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களைக் கொண்ட சபையாகும் .இந் நிலையில் சிறுபாண்மை மக்களக்கு பாதகமாக அமையும் எந்தவொருவிடயத்தையும் அங்கீகரிக் முடியாது.இந்த உத்தேச சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு ஆகும் இதற்காக ஆளும் தரப்பில் அங்கம் வகித்துக் கொண்டு அரசாங்கததை எதிரப்பதாக யாரும் கருதி விடக் கூடாது. ” என்றும் அவர் தெரிவித்தார்