வடமாகாணத் தேர்தலில் இலங்கை அரச இராணுவத் துணைக் குழுக்களாகச் செயற்பட்டுவரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் சிறீ ரெலோ என்ற அமைப்பும் இனப்படுகொலை அரசுடன் இணைந்து போட்டியிடுகின்றன. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முதன்மை வேட்பாளராக லண்டனில் வசிப்பவரான தவராஜா முதன்மை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இராணுவ ஆட்சியில் குறைந்தபட்ச ஜனநாயகமும் அற்ற நிலையில், தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் எந்தக் கட்சிகளும், தேர்தலை நிராகரித்து மக்களை உரிமைகளுக்காக அணிதிரளக் கோருவதற்கு முன்வரவில்லை.
தமிழ்ப் பேசும் மக்களின் நலன்களை அன்னியர்களுக்கு அடகுவைக்கும் விதேசிகளான இவர்கள் உரிமைகளை பாசிச அரசோடு பேசியே பெற்றுவிடலாம் என்று வாக்குப் பொறுக்க தெருக்களில் இறங்கிவிட்டனர்.
மறுபுறத்தில் இவர்கள் அனைவராலும் அடக்கப்பட்ட மக்கள் அனைத்திலும் நம்பிகையிழந்து அனாதைகளாக்கப்பட்டுள்ளனர்.