இலங்கை இராணுவத்திலிருந்து வெளியேறி 2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கனடாவில் அரசியல் தஞ்சம் கோரிய இலங்கை இராணுவத்தில் கப்டன் தரத்திலிருந்த ரவீந்துர வதுத்ர இலங்கை இராணுவத்தின் போர்க்குற்றங்கள், பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்த பல தகவல்களை வெளியிட்டுள்ளார் என கனடாவிலிருந்து வெளியாகும் நஷனல் போஸ்ட் என்ற பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.
அந்த நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எம்.கே. சிவாஜிலிங்கம், வீட்டில் குண்டு பொருட்கள் வைக்குமாறு தனக்கு கேணல் ஒருவரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கனேடிய அதிகாரிகளிடம் கூறியுள்ளார். ரவீந்திரவிற்கு கனடாவில் அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டுள்ளது. மனிதத்திற்கு எதிரான குற்றங்களுக்குத் துணைசென்றவர் என்ற அடிப்படையிலேயே அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மைத் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசுப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள், குற்றச்செயல்கள் குறித்து தனக்குத் தெரியும் என்று கனேடிய குடிவரவு அதிகாரிகளிடம் இவர் கூறியுள்ளார்.
சில சிங்கள சிப்பாய்களும் , சில சிங்கள ஊடகவியலாளரும் சிறீலங்காவை அம்பலப் படுத்திய அளவுக்கு எம்மிடையே உள்ள சாட்சிகள் வெளியே வரவில்லை. அமெரிக்க கப்பல் என்றும் , சரணடைவு என்றும் , மெளனித்தல் என்றும் நேரடியாக சம்பந்தப்பட்டோர். மவுனித்துக் கொள்வதும். எனக்கு தெரியாது என உருத்திரா போல் மறுதலிப்பதும் ,புலம் பெயர் தேசம் வந்த முள்ளி வாய்க்கால் சாட்சிகள் சுயநலமிகளாய் மாறுவதும் வேதனைக்கு உரியது. ….நிலமை இப்படி இருக்க, இந்த சாட்சியை பாதுகாத்தல் தந்திரரோபாய ரீதியாக நல்லது . .
மிக சரியான வார்த்தை…. இன்னும் எம்மவர்கள் என்னத்தை எதிர்பார்க்கிறார்கள்…………?
Lawyer Sri – Kumar and Dr. Shri – December 1950 – sarath Fonseka Released. 3851 Finch and Kennedy, Scarborough, Ontario, Canada. 416-321-9739.
என்றுமில்லாதவாறு கனடிய மண்ணில் 2009 முள்ளிவாய்க்காலிற்க்குப் பிற்பட்டதான காலகட்டத்தில் சிங்களவர்களின் வருகை பெருமளவில் இருந்தது. வந்தவர்களுக்கு தனிப்பட்டவர்களின் விசேட வேலை வழங்குநிறுவகங்கள் பல துறைசார்நிறுவகங்களில் பணிக்கு அமர்த்திக் கெளரவித்தது. பெரும் பார ஊர்தி ஓட்டிகளாக,பாரம்தூக்கி இயக்குபவர்களாக, பயிற்சியற்றே திறமையாளர்களாயிருந்த அவர்கள் இலங்கை இராணுவங்களில் மேன்னிலை மட்டங்களில் உள்ளவர்களாகவே கண்ணிற் பட்டார்கள். அவர்களில் பலர் திறமையாக தமிழ் பேசுபவர்களாக இருந்தார்கள். தமிழர்களின் பெருமளிப்பில் பங்கெடுத்தமைக்குப் பரிசாக இந்த வெளினாட்டுப் பரிசு அவர்களுக்கு அரசு அளித்த கொடையாக இருக்கக் கூடும். இன்னமும் அவர்களில் பலர் தமிழர்கள் வீடுகளில் வாடகையாட்களாக, வருகைதரு விருந்தினர்களாக இருக்கிறார்கள் என்பதில் சந்தோசம் அடைவதா?/ துக்கம் அடைவதா/
This really an interesting case. Sri Lankan Tamils cannot claim refugee status anymore.
Do uou have an approximate head count ?