தமிழர்களின் தொன்மைப் பண்பாடு தொடர்பான ஆதாரங்கள் தமிழ்நாட்டின் பல இடங்களிலும் கிடைத்து வருகிறது. ஆனால், இந்த ஆய்வை இந்தியா முழுவதும் சில மேலை நாடுகளிலும் நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிடுகிறது.
கொற்கை, கீழடி, போன்ற பல இடங்களில் ஆய்வுகள் முடுக்கி விடப்படும் நிலையில் மீண்டும் தமிழ்நாட்டின் தென்னிந்திய கோவில்கள் தொல்லியல் கண்காணிப்பாளர் என்ற உயர் பதவியில் அமர்நாத் ராமகிருஷ்ணன் அமர்த்தப்பட்டார். இவர் முன்னர் பதவியில் இருந்த போதுதான் கீழடி ஆய்வுகளுக்கு வெளிச்சம் கிடைத்தது. ஆனால் அவரை மோடி அரசு அப்பதவியில் இருந்து தூக்கியது. மீண்டும் திமுக அரசு பதவியேற்ற பின்னர் அந்த பதவியில் அமர்த்தியுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளதால் கீழடி ஆய்வுகள் தொடர்பான கூடுதல் அறிக்கை விரைவில் தயாராகும் எனத் தெரிகிறது.
“பொருநை நாகரீகம் மட்டுமல்ல, காவிரி, தென்பெண்ணை,பாலாறி ஆகிய நதிக்கரை நாகரீங்களையும் ஆய்வு செய்தால் கூடுதலாக நம் தொன்ம வரலாறு கிடைக்கும். சிந்து வெளி நாகரீகத்தின் தொடர்ச்சிதான் பொருநை நாகரீகம். தர்மபுரியில் பென்னாகரம் அருகே பெருங்கற்காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் எவ்வாறு தங்களது முன்னோர்களை அடக்கம் செய்தார்கள் என்பது குறித்த அரிய கற்கள் கிடைத்துள்ளன, அது தற்போது தொல்லியால் துறை பழமையான இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.கீழடி குறித்த அகழாய்வுகளின் முழு அறிக்கையும் விரைவியில் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்படும்” என்றார் அமர்நாத் ராமகிருஷ்ணன்.