இலங்கை தமிழ் மக்கள் மீது இந்திய மத்திய அரசாங்கம், தமிழக ஆட்சியாளர்கள் கொண்டுள்ள அக்கறை தொடர்பில் பூரண திருப்தியில்லையென்ற போதும் எம் மக்களுக்காக தமிழக மக்களின் உணர்வு பூர்வமான போராட்டங்கள் உணர்ச்சிவசப்படச் செய்வதோடு தலைவணங்கச் சொல்கிறது. |
எனவே இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாத ராஜ்ஜியத்தை உருவாக்க முயலும் அரசாங்கம், தமிழ் மக்கள் மீது அதிக அக்கறை உள்ளதாகத் தெரிவித்திருப்பது கேலிக்கூத்தாகும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பி. யுமான மனோ கணேசன் தெரிவித்தார்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தமிழ்நாட்டு முதலமைச்சர் கருணாநிதியை விட தமிழ் மக்கள் மீது அதிக அக்கறை செலுத்துவதாக அரசாங்கத்தின் பாதுகாப்புத் துறை பேச்சாளரும், அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல கூறியிருப்பது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். கெஹலிய ரம்புக்வெல தமிழ் மக்கள் மீது அதிக அக்கறையை அரசாங்கம் கொண்டுள்ளதென தெரிவித்துள்ளமை தொடர்பாக பதிலளிக்கும்போதே மனோ கணேசன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். |