போர்க் குற்றவாளிகளின் சாம்ராஜ்யமாகத் திகழும் இலங்கைஇ ஏலவே நிறுவன மயப்பட்டிருந்த பெளத்த மேலாதிக்க வாதத்தின் கோரத் தீயில் எரிந்து கொண்டிருக்கிறது. பெளத்தத்திலிருந்து மதம் மாறிய சிங்களப் பெண்ணைச் சிறைப் பிடிக்கும் எல்லை வரை பெளத்த அடிப்படை வாதம் விரிவடைந்திருக்கிறது. வடபகுதியின் மழைக்காலக் காளான்கள் போல பெளத்த விகாரைகள் குறுகிய கால எல்லைக்குள் முளைத்தெழுகின்றன. இவை அமைதியின் சின்னங்களல்ல; அழிவின் முன்னறிவிப்பு. திருகோணமலையிலும் மட்டக்களப்பிலும் அரச மற்றும் தன்னார்வ நிறுவனங்களின் உதவியோடு திட்டமிட்ட குடியேற்றங்கள் தமிழ்ப் பிரதேசங்களைச் சூறையாடுகின்றன.
சிங்கள பெளத்த சிந்தனையை உருவாக்கிய பிரித்தானியா..
பிரித்தானிய காலனி ஆதிக்கதிற்கு எதிரான தேசிய உணர்வினையும் தேசியப் போராட்டங்களையும் மட்டுப்படுத்தும் நோக்கிலான; அமைப்புமயப்படுத்தப்பட்ட பெரும் பணச்செலவிலான கிறீஸ்தவ மதத்தினை நாடுமுழுவதும் பரப்பும் பணியில் ஈடுபட்ட ஆங்கிலேயர் இந்த முயற்சி குறித்த எல்லைக்கு அப்பால் வெற்றியடையாது போகவே உள் முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்த ஆரம்பித்தனர்.
கிறீஸ்தவ மதத்தைப் பரப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த ஆங்கிலேய அரசு இந்த நடவடிக்கைகளுக்கு நடுவிலே பௌத்தமதத்தை முன்நிறுத்தும் பாளி மொழியில் எழுதப்பட்ட இந்து புராணக் கதைகளை ஒத்ததான இந்த மன்னர்களுக்கு எதிரான கருத்தோட்டத்தைக் கொண்டிருந்த மகாவம்சம் என்ற வரலாற்றுக் கதையை பாளி மொழியிலிருந்து சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்க உத்தரவு பிறப்பித்தது.
இந்து மதத்தின் ஆதாரமாகக் கருதப்படும் வேத மந்திரங்கள் எந்தத் தென்னிந்திய மொழிகளிலும் ஆங்கிலேயரால் மொழிபெயர்க்கப்படவில்லை. பௌத்தமதத்தினை ஆதாரமாகக் கொண்ட தமிழ் இலக்கியங்களான மணிமேகலையும், குண்டலகேசியும் ஆங்கிலேயரால் வடமொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை.
ஆனால் மகாவம்சம் என்ற பாளிமொழியில் அமைந்த மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்க வல்ல வரலாற்று கற்பனைக் கதை ஆங்கிலேயரின் உத்தரவின்பேரில் அவசர அவசரமாக சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டு மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது.
மொழி மாற்றம் செய்யப்பட்ட மகாவம்சம்
1874ம் ஆண்டு இலங்கையில் இங்கிலாந்து அரசின் கவர்னராகப் பணியாற்றிய சேர் வில்லியம் கிரகரி இங்கிலாந்து நாட்டில் கல்விகற்று வந்த இலங்கைப் பௌத்தர்களுடன் இணைந்து வண. ஹிக்கடுவ ஸ்ரீ சமுனன்கல நாயக்க தேரர் மற்றும் வண. பந்துவந்தாவ ஸ்ரீ தேவராக்கித்த தேரர் ஆகியோரைக் கொண்டு மகாவம்சம் என்ற பாளி மொழியிலமைந்த பௌத்த சமயத்தை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றுக் கதைகளை சிங்கள மொழிக்கு மொழிப்பெயர்ச்சி செய்து கிராமமட்டங்கள் வரை இருந்த விகாரைகள் முழுவதுமாக விநியோகம் செய்தனர். இதனூடாக மொத்த மக்கள் மத்தியிலும் இந்த மகாவம்சம் பரப்பப்பட்டது.
மூலதன உருவாக்கத்துடன் கூடவே எழுந்த நாடுதழுவிய தேசிய உணர்வினை சீர்குலைத்து தமது பிரித்தாளும் தந்திரத்தினை நிலைநிறுத்தும் நோக்கத்துடன் மக்கள் மத்தியில் பரவப்பட்ட மகாவம்சம் உருவாக்கிய முதலாவதும் முக்கியமானதுமாக அறியப்பட்ட மனிதன் தான் அனகாரிக்க தர்மபால என்னும் பௌத்த துறவியாவார்.
இன்றைக்கும் இலங்கை பேரினவாத அரசால் பௌத்தர்களின் நாயகனாகப் போற்றப்பட்டு பள்ளிப்பாடப் புத்தகங்களையும் தபால்தலைகளையும் ஆக்கிரமித்துள்ள இந்த அனகாரிக்க தர்மபால என்ற மகாவம்சத்தின் நவீனகால வாரிசான இவர்தான் புதிய இலங்கையின் பௌத்த பேரினவாதத்தின் கர்த்தாவானார்.
சிங்கள இனத்தைச் சார்ந்த கிறிஸ்தவ மதத்தவரான இவர் ஆரிய பௌத்த பேரினவாதக் கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்பினார்.
உருவாக்கப்பட்ட சிங்கள பெளத்த பேரினவாதி
ஹெலனா பிளவாட்ஸ்கி என்ற மேற்கத்தையை தத்துவாசிரியரின் நேரடியான மேற்பார்வையில் உருவான அனகாரிக்க தர்மபால தமிழர்களைத் திராவிடர்கள் என்றும் சிங்களவர்களை ஆரியர்கள் என்றும் வகுத்து ஆரியர்களே ஆளப்பிறந்தவர்கள் என்று தமது ஆசிரியரின் கொள்கைகளைப் பரப்பி மக்களைக் கூறுபடுத்தினார். ஹெலனா பெற்றொவ்னா ஹான அல்லது ஹெலனா பிளவாட்ஸ்கி என்ற தத்துவவியலாளரின் எழுத்துக்களினால் அனகாரிக்க தர்மபால மட்டுமல்ல, ஹிட்லர் உட்பட மற்ற உலகத் தலைவர்களும் கவர்ந்திழுக்கப்பட்டிருந்தனர். 31.07.1831இல் ரஷ்யாவின் உக்ரெயின் பிரதேசத்தில் பிறந்த இவர் அமெரிக்காவின் நியு யோர்க்கிலும் ஜேர்மனியிலும் இறுதியாக இங்கிலாந்திலும் வசித்துவந்தார்.
பல தத்துவாசிரியர்களால் நவீன இனத்துவக் கருத்தியலின் ஆரம்பகர்த்தா என வர்ணிக்கப்பட்ட பிளவாட்ஸ்கி பல சர்ச்சைக்குரிய தத்துவங்களை முன்வைத்து அவற்றுக்குச் செயல்வடிவம் கொடுக்கவும் முனைந்தவர். குடியேற்ற நாடுகளில் தனது செயற்பாடுகளைத் தீவிரப்படுத்திய இவரின் கருத்துக்கள் இலங்கை என்ற அழகிய தீவை இரத்த ஆறுபாயும் கோர பூமியாக மாற்றியமைத்தது. மகிந்த ராஜபக்ச போன்ற போர்க் குற்றவாளிகளும் சமூக விரோதிகளும் இந்தத் தீவின் சிறுபான்மைத் தமிழ்ப் பேசும் மக்களை சட்டரீதியாகத் துவம்சம் செய்யவதற்கான ஆரம்பப் புள்ளியை ஹெலேனாவின் தத்துவமே உருவாக்கியது.
1874ம் ஆண்டு கேணல் ஒல்கோட் என்பவரை நியுயோர்க்கில் சந்தித்த ஹெலேனா அவருடன் ஒன்றாக வாழ ஆரம்பித்தார். பின்னதாக வேறொருவரைத் திருமணம் செய்துகொண்ட இவர் 1875ம் ஆண்டு வேதியல் குழுமத்தின் (வுhநழளழிhiஉயட ளுழஉநைவல) என்ற அமைப்பை கேணல் ஒல்கோட் உடன் இணைந்து ஆரம்பித்தார். இதன் கிளைகள் இன்றும் கொழும்பிலும் அடையாறிலும் இன்றும் இயங்குகின்றன.ஆரியர்கள் உயர் குலத்தோர் என்ற கருத்தை அடிப்படையாக முன்வைத்துச் செயற்பட்ட இவ்வமைப்பானது இலங்கையின் இனச்சிக்கலை உருவாக்குவதில் பிரதான பங்கு வகித்த புறநிலைச் சக்தி என்றால் அது மிகையானது ஒன்றல்ல.
ஹெலேனா யின் எல்லா எழுத்துகளுமே இனவாத, நிறவாதக் கருத்துக்களைக் கொண்டவையாக அமைந்திருந்தன. ‘வுhந ளுநஉசநவ ழக னுழஉவசiநெ’ என்ற நூலில் ஆரியர்களைப் பிறப்பால் மனித இனத்தின் உச்சநிலையிலுள்ள நாகரீகமடைந்தவர்களாகவும், அப்ரொஜின் இன மக்கள் போன்ற ஆதிக்குடிகளை அரை மிருகங்களாகவும் வர்ணிக்கிறார். இவ்வாறு இனவாதத்தையும் நிறவாதத்தையும் அடிப்படையாகக் கொண்டு மனித இனத்தைக் கூறுபோட முனைந்த இவர், இந்த நோக்கத்திற்காக இலங்கையில் தேர்ந்தெடுத்த மனிதர் தான் அநகாரிக்க தர்மபால என்பவராவார்.
1864ம் ஆண்டு செல்வாக்கு மிகுந்த ஒரு செல்வந்தரின் மகனாகப் பிறந்த அநகாரிக்க தர்மபாலவின் பிறப்புப்பெயர் டேவிட் ஹேவவிதாரண (னுயஎனை ர்நறயஎவையசயயெ) என்பதாகும். கிறீஸ்தவராகப் பிறந்த அநகாரிக்க தர்மபால தமது ஆரம்பக் கல்வியை கிறீஸ்தவக் கல்லூரிகளிலேயே மேற்கொண்டார். மகாவம்சம் ஆங்கிலேயர்களால் சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட பின்னர், இலங்கையில் எழுந்த சிங்கள-பௌத்த எழுச்சியினால் உந்தப்பட்டார்.
இதே காலப்பகுதியில், 1882ம் ஆண்டில் ஹெலனா பிளவாட்ஸ்கியின் வேதியல் குழுமத்தின் தலைமையகம் தென் இந்தியாவிலுள்ள அடையாறு என்ற இடத்திற்கு மாற்றப்பட்ட பின்னர், வேதியல் குழுமத்தின் இனைச் சார்ந்தவர்கள் பௌத்த மதத்துடன் தமது ஆரிய இனவேறுபாட்டுத் தத்துவத்தை அடையாளப்படுத்த ஆரம்பித்தனர். ஹெலேனா பிளவாட்ஸ்கியும் ஒல்கோட்டும் உம் பௌத்தத்தை ஆரியர்களின் உயர்ந்த மதமாகப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர். இந்த இருவரினதும் இறுதிக்கால வாழ்க்கை பௌத்தக் கொள்கைகளுடன் எந்தச் சார்புநிலையிiனையும் கொண்டிராத போதிலும், பௌத்த மதத்தைச் சுற்றிய இவர்களது ஆர்வத்தினால் இலங்கைக்குப் பலமுறை பயணம் செய்தனர்.
ஒல்கோட் மட்டும் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டிருந்த ஆங்கிலேய கவர்னர்களின் ஆதரவுடன் 300 பௌத்த பாடசாலைகளை ஆரம்பித்தார். இந்த நேரத்தில் தான் ஒல்கோட் இன் பௌத்தமதப் பிரச்சார வேலைகளுக்கு அநகாரிக்க தர்மபாலா ஆதரவாக இருந்தார். ஆரிய மேலாதிக்கவாத நாஸிச தத்துவத்தால் ஆட்கொள்ளப்பட்டார். ஹெலனா பிளவாட்ஸ்கியின் ஆளுமைக்கு உட்பட்ட இவர், அவரது ஆதரவுடன் பாளி மொழியைக் கற்றுத் தேர்ந்தார். அநகாரிக்க தர்மபாலவிற்கு 20 வயதாக இருக்கும்போது, 1884ம் ஆண்டில் ஹெலனா பிளவாட்ஸ்கிஅவரை தென் இந்தியாவிலிருந்த வேதியல் குழுமத்தின் இன் தலைமையத்திற்கு அழைத்துச்சென்றார்.
இதன் பின்னர் இலங்கை திரும்பிய அநகாரிக்க தர்மபால, இலங்கையிலிருந்த வேதியல் குழுமத்தின் இன் காரியாலயத்தில் தங்கி முழுநேரமாகப் பணியாற்றினார்.
1886ம் ஆண்டு பௌத்த பாடசாலைகளை நிறுவும் நோக்குடன் ஒல்கோட் இலங்கைக்கு வந்தபோது, அவருடன் இணைந்து பணியாற்றிய அநகாரிக்க தர்மபால பின்னதாக பௌத்த துறவியாக மாறினார். மகாவம்ச மொழிபெயர்ப்பிற்கும், வேதியல் குழுமத்தின் உருவாக்கத்திற்கும் பின்னதாக எழுந்த பௌத்த-சிங்கள மேலாதிக்க உணர்வின் ஆரம்பகர்த்தாவாகத் திகழ்ந்த இவரின் கருத்துக்கள் கிராமப்புறங்கள் வரை சென்று மிகவும் அடிமட்ட மக்களின் சிந்தனை முறையில் மாற்றங்களை ஏற்படுத்தின.
தேசியவாதம், மகாவம்சம், ஹெலனா பிளவாட்ஸ்கியின் சிந்தனைகள் ஆகியவற்றின் நச்சுக் கலவையான இவரின் கருத்துக்களும் பிரச்சாரங்களும் தான் பௌத்த-சிங்கள அடிப்படைவாதத்தினை சிங்கள மக்கள் மத்தியில் தோற்றுவித்தது. அமைதியையும் சமாதானத்தையும் போதித்த பௌத்த விகாரைகள் இனவாதத்தையும் சிங்கள பௌத்த அடிப்படைவாதத்தையும் கக்கும் நெருப்பாக மாறின. இது ஆங்கிலேய அரசின் ஆதிக்கத்திற்கு மிகப் பாரிய வெற்றியைக் கொடுத்தது.
இந்தியாவில் உருவான தேசிய எழுச்சியினது தாக்கத்தாலும், பொருளாதார மாற்றத்தாலும் உருவான ஏகாதிபத்திய மூலதனத்திற்கு எதிரான இலங்கை மக்களது உணர்வலைகள் கூறுபோடப்பட்டு, தேசிய சக்திகளும், தேசிய உணர்வும் சீர்குலைக்கப்பட்டு தேசிய இனப்பிரச்சினைக்கு அத்திவாரமிடப்பட்டது.
ஹெலனா பிளவாட்ஸ்கி யின் சிந்தனைகள் எவ்வாறு ஜேர்மனியில் ஹிட்லர் பரப்பிய நாஸிசத்தின் உருவாக்கத்திற்கான ;காரணிகளில் ஒன்றாக அமைந்ததோ, அதுவே காலனி ஆதிக்கத்தால் எற்கெனவே சீரழிந்துபோன இலங்கையிலும் அநகாரிக்கவில் ஆரம்பித்து பௌத்த சிங்கள மேலாதிக்கத்திற்கும் இனப்பிரச்சினையின் உருவாக்கத்திற்கும் காரணமாக அமைந்தது.
அநகாரிக்கவும், பிளவாட்ஸ்கி யைப் போலவே பிரித்தாளும் நோக்கத்திற்காக பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட ஆரிய தத்துவத்தை தமது எழுத்துக்களினதும் பிரச்சாரங்களினதும் அடிப்படையாகக் கொண்டிருந்தார்.
பிற்காலத்தில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கும், கிறீஸ்தவ மதத்திற்கும் எதிராக அநகாரிக்க கடும் பிரச்சாரங்களையும் போராட்டங்களையும் மேற்கொண்ட போதிலும் இலங்கையில் உருவாகிவந்த அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உணர்வையும், நாட்டின் சொந்த மூலதனத்தை அபிவிருத்தி அடையச்செய்யும் தேசியவாதத்தைக் கூறுபோட்டு, நாட்டைச் சீரழிப்பதில் அநகாரிக்கவின் பங்கானது, பிரித்தானிய பிரித்தாளும் தந்திரத்திற்கு பெரும் சேவையாற்றியதுடன், சிங்கள-பௌத்த தேசியவாதத்தையும், தமிழ் தேசிய வாதத்தையும் உருவாக்கி பெரும் தேசிய இன மோதல்களை ஏற்படுத்திற்று.
ஆரியர் கோட்பாட்டின் இலங்கைப் பிரதிநிதி
ஆங்கிலேயர் உருவாக்கிய ஆரியர் கோட்பாட்டின் முதலாவது சர்வதேசப் பிரதிநிதி ஹெலனா பிளவாட்ஸ்கிஎன்றால், அதன் இலங்கைப் பிரதிநிதி அநகாரிக்க தர்மபாலவாகத் திகழ்ந்தார்.
‘இந்த அழகான, பிரகாசமான தீவு ஆரியச் சிங்களவர்களால் சொர்க்க பூமியாக மாற்றப்பட்டிருந்தது. அதன் மக்களுக்கு மதசார்பற்ற நிலை பற்றித் தெரியாது. இந்துக்களும், கிறீஸ்தவர்களும் மிருகக் கொலைக்கும் களவுக்கும் பொய்க்கும் விபச்சாரத்திற்கும் பொறுப்பானவர்களாவர்’ என்று குறிப்பிடும் அநகாரிக்கவின் உரைகளில் ஒன்று மிகப் பிரபல்யம் வாய்ந்ததாகும்.
இவரின் உரைகள் இலங்கையின், கல்வி கலாச்சார அமைச்சினால் நூலுருவில் வெளியிடப்பெற்றுள்ளது.
ஒல்கோட் மற்றும் ஹெலனா பிளவாட்ஸ்கிஆகியோரால் தொடர்ச்சியாக ஊக்குவிக்கப்பட்ட அநகாரிக்க தர்மபால, தமிழர்களையும், முஸ்லீம்களையும் சிங்கள மக்களின் எதிரியாகக் காட்டுவதற்கு தம்மாலான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டதனூடாக, பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு மகத்தான சேவை செய்து வந்தார். துட்டகமுனு, எல்லாளன் போரைத் தமிழர்களுக்கு எதிரான போராகச் சித்திரித்து தமிழர்களை இலங்கையின் எதிரிகளாகக் காட்ட முற்பட்டார்.
மேலும், நிறவாதத்தைத் தூண்டும் நோக்குடன் சிங்களவர்களைத் தூய்மையான ஆரியர்களாகக் குறிப்பிட்ட இவர், தாம் வட இந்தியர்கள், ஐரோப்பியர்கள், ஈரானியர்களை ஒத்த ஆரிய இனத்தைச் சார்ந்தவர்கள் என்றும், தமிழர்கள் இரண்டாம்தர நாகரீகமடையாத திராவிட இனத்தைச் சார்ந்தவர்கள் என்றும் பிரச்சாரம் செய்தார்.
தமிழர்களையும், முஸ்லிம்களையும், ஏனைய சிங்கள பௌத்தர்கள் அல்லாதவர்களையும் இலங்கையை விட்டு வெளியேற்றி இலங்கையை மறுபடி பௌத்த சிங்கள ராஜ்யமாக்க வேண்டும் என்று இவர் ஆரம்பித்துவைத்த அமைப்புமயப்படுத்தப்பட்ட இனவாதம், இன்றைக்கு இலங்கையை பிணக்காடாக மாற்றியுள்ளது.
போருக்கான முன்னறிவுப்பு..
இந்திய அதிகாரத்தின் துணையோடு தமிழ்ப் பேசும் மக்களின் அடையாளம் அவசர அவசமாக அழித்துத் துடைக்கப்படுகின்றது. வன்னிப் படுகொலையின் தடயங்களை இன்னும் முற்றாக அழித்து முடிக்காத இலங்கை சோவனிச அரசதிகாரம் சிறுபான்மைத் தேசிய இனங்களின் அடையாளத்தை அழிக்க ஆரம்பித்துவிட்டது.
இந்தத் திட்டமிட்ட அழிப்பிற்கு எதிரான வாக்குக் கட்சிகளின் வேலைத்திட்டம் என்னஇ இடது சாரிக் கட்சிகளின் வேலைத்திட்டம் எங்கே? இவைதான் சமூக உணர்வு கொண்ட அனைத்துத் தரப்பினதும் கேள்வி. போர்க்குறவாளிகளதும் சமூகவிரோதிகளதும் தத்துவார்தப் பின்புலம் நிறுவன மயப்பட்ட பெளத்த சிங்கள மேலாதிக்க வாதமே. இதற்கெதிரான இன்னொரு போர் தவிர்க்கவியாலாது என்பதை இலங்கை அரசு மறுபடி மறுபடி கூறுகிறது. அதனைத் தலைமை வகிப்பது முற்போகுத் தேசியவாதமா இல்லை குறுந்தேசிய ஆதிக்கமா என்ற சிக்கலை இடதுசாரிகள் மக்கள் முன்வைக்கும் வேலைத் திட்டம் தான் தீர்மானிக்கும். இன்றைக்கு வரை அது பேசாப் பொருள் என்பதை சுயவிமர்சனமாக முன்வைப்பதிலிருந்தே புதியதை நோக்கிப் பயணிக்க முடியும்.
போகும் திசை தெரியாமல் புதியதை நோக்கி எப்படி பயணீக்க முடியும்.முதலில் நமக்குள் ஒரு உடன்பாடு வேண்டும் அடுத்து உடன் படும் நோக்கில் வித்தியாசமான கருத்துக்கலையும் கேட் கும் பக்குவம் மலர வேண்டும்,வெவ்வேறூ திசையில் நின்றூ பேசிக் கொண்டிருந்தால் மனநோயாளீகள் போலாகி விடும். அரோக்கியமான அணூகுமுரையும் அதை மக்களீடம் எடுத்துச் செல்லும் பொறூமையும் அவசியம்.ஊடகங்களீன் பணீ மிக, மிக முக்கியம் அவை வியாபார நோக்கில் மட்டும் செயற்படாது சமூகம் நோக்கிய பார்வையையும் கொண்டு இயங்க வேண்டும்.இவை இலங்கையில் சாத்தியமா?
சம்பந்தர் ஐயா சொல்லுகிற மாதிரி நடந்தா எல்லாம் சரி வரும் சைவமும் தமிழும் தழைத்தினிதோங்கும் எண்டு சொல்ல மறந்த்திட்டியள்.
ஐயா தமிழ்மாறன், அந்த ஆள் கனதியா என்னவோ சொல்லப் பாக்குது. மனிசர் விஷயத்தை விளங்கிப் பிரயோசனமா எதேன் சொல்ல வேணும். சும்மா உளம்பக் கூடாது.
மகா வம்சமானது தமழ் நாட்டின்சிலமோசமான புனைகதை எழுத்தாளர்களின் புனைவுகளைவிட மோசமானது.
உங்களூக்குப் புரிகிறது ஆனால் சிங்களவருக்குப் புரியவில்லையே என்ன செய்வது.
மகாவம்சத்தை அன்றைய தேரவாத பெளத்தத்தின் குறிப்பான தேவைகளின் கண்ணோட்டதிலிருந்து தான் மதிப்பிட முடியும்.
எல்லா வரலாறுகளும் வென்றவர்கள் எழுதியவை தாம்.
எனவே புனைவு இல்லாத வரலாறு இல்லை.
நம்மிடமும் மூவேந்தர் பற்றியும் பொற்காலங்கள் பற்றியும் புனைவுகள் உள்ளன.
தேரவாத பெளத்தம், அன்று தனக்குப் பகையாய் இருந்த்தவற்றை முழுநாட்டுக்கும் பகையாய்க் காட்டியது.
எனினும் இன்று மகாவம்சம் சிஙளப் பேரினவாத நோக்கில் மேலும் திரிக்கப்படுகிறது.
மகாவம்சத்தை முற்றாக நிராகரிக்க இயலாது. தென்னாசிய வரனாற்றில் ஆவணப்ப்பட்ட பதிவுகள் குறைவு. பல குறைபாடுகளுடனும் அது வரலாற்று நிகழ்வுகளைக் கால ஒழுங்கில் பதிவு செய்துள்ளது. புனைவுகளை விலக்கல் பொறுப்புள்ள வரலாற்றாசிரியர்களது பொறுப்பு.
லெஸ்லி குனவர்தன, இந்திரபால போன்றோரிடம் அதற்குரிய நிதானம் இருந்தது.
இன்று பொறுப்புள் ள பல புதிய சிங்கள வரலாற்றாசிரியர்கள் நம்மிடையே உள்ளனர்.
உங்கள் கட்டுரைகள் கூறும் கருத்துகள் பெரும்பாலும் அறிவுபூர்வமானதாயும், எதிர்காலம் குறித்த( பொதுவாக எல்லாத் தமிழரினதும்) கேள்விகளை முன்வைப்பதாயும் உள்ளன. வாழ்த்துக்கள்.
ஆனால், நீங்கள் குறிப்பிடும் உண்மையான ‘பொதுவுடமை வாதிகள்’ இதுவரை இலங்கையிலோ அன்றி இந்தியாவிலோ உருவாகவில்லை என்பதுதான் கவலைதரும் விடயம். அவ்வாறு இருக்கும் ‘உண்மையான தலைவர்களும்,மக்களும் காலப்போக்கில் மறக்கடிக்கப் பட்டுள்ளார்கள். அல்லது தடம் மாறிப் போய்விடுகிறார்கள்.எனவே தமிழினப் பிரச்னைகள் சம்பந்தப்பட்ட வகையில்;ஓரளவு மக்களின் ஆதரவினைத் தொடர்ந்து பெற்றுவரும் தலைவர்களையும்,அவர்கள் சார்ந்துள்ள கட்சிகளையும் ;நீங்கள் குறிப்பிடும் ‘இடதுசாரிச் சிந்தனைக்கு’ இழுத்துவரும் செயல்பாடுகளில் ஈடுபடுவது சிறப்பாக இருக்கும் அல்லவா?ஏற்கனவே சிதறிப்போயுள்ள எமது இனத்தின் ஒற்றுமையையும்,மன வளுவையும் மேன்மேலும் கட்சிகளின் பெயராலும், கொள்கைகளின் பெயராலும் பிரித்து எதுவுமேயில்லாது ஆக்கும் பணியை நாமும் செய்யவேண்டுமா?
இப்போது தமிழினம் அடைந்திருக்கும் குழப்பமான நிலைக்கு யார் கரணம் என்று ஆராய்வதை விட்டுவிட்டு இனியாதல் நாம் பாதுகாப்புடனும், தன்மானத்துடனும் வாழ்வதற்கு எது சிறந்தது என்பதைத் தீர்மானித்து அதனைச் செயல்படுத்துவோம். இப்போது நமக்குத் தேவை ஒற்றுமையே!
இது கொஞ்சம் முன்னுக்குப் பின் முரண்படுகிறது:
:”உண்மையான ‘பொதுவுடமை வாதிகள்’ இதுவரை இலங்கையிலோ அன்றி இந்தியாவிலோ உருவாகவில்லை என்பதுதான் கவலைதரும் விடயம். அவ்வாறு இருக்கும் ‘உண்மையான தலைவர்களுமிமக்களும் காலப்போக்கில் மறக்கடிக்கப் பட்டுள்ளார்கள்.”
இலங்கையிலும் தமிழகத்திலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் இருக்கிறார்கள். இனியும் இருப்பார்கள் . அவர்களை மறைப்பதும் மறக்கடிப்பதும் குறுகிய தேசியவாதிகளதும் பேரினவதிகளதும் வேலையாக இருந்து வந்த்துள்ளது.
இனியாவது கண்கள் திறக்கட்டும்.
தமிழகத்தில் அயோத்திதாசனால் ஆரம்பிக்கப்பட்டதே திராவிட இயக்கம் பின்னாளீல் இது தெலுங்கர் இயக்கமாய் மாறீற்றூ.நல்லகண்ணூ நல்ல கம்யூனிஸ்ட்டே.ஜீவா ஒரு முன்னோடி.சாதிப்பிரிவுகள், வ்ரதடசண இல்லா வாழ்க்கை முறயாய் சைவம் இருந்ததால் பொதுவுடமைக்கு தமிழரிடம் தேவை இருக்கவில்லை.ஆரியன் வந்து நம்மை குரங்குகளாக்கி, கடவுள் ஆனான் அவனால் நிகழ்ந்ததே தமிழ்ரிடம் இன்றூள்ள பிளவுகளூம் பேதங்களூம்.
மெய்யாகவே “ஆரியன் வந்து நம்மை குரங்குகளாக்கி” விட்டான் என உங்கள் கருத்துக்கள் என்னை நம்பத் தூண்டுகின்றன.
தயவு செய்து நீங்கள் எழுதுவது உங்களுக்கே விளங்குகிறதா என்று யோசித்த பின் இடுங்கள்.
வரலாற்றைச் சரிவர அறியும் நோக்கம் உங்களுக்கு இல்லை என்பதையே ஒவ்வொரு முறையும் உறுதிப் படுத்தி வருகிறீர்கள்.
குதர்க்கமாய் பேசி முட்டாளாக்க முயல வேண்டாம் நான் பேசியது இராவண்ன என்ற தமிழ் மன்னன் அரக்கனாகி திராவிடனையும் சைவத்தையும் அழிக்க வந்த இராமன் என்ற ஆரியன் கடவுளான கதையை.
இராமாயணம் எப்போ எங்கே நடந்தது என்றே தெரியாமல் யார்யாருடனோ நம்மை அடையாளப் படுத்தி அவதிப் படுகிறோம்.
நான் ஒன்றும் குதர்க்கமாக எழுதவில்லை. எப்படிச் சொன்னால் உங்களுக்கு விளங்குமோ அப்படிச் சொன்னேன்.
நீங்களே உங்களை முட்டாளாக்கிக்கொண்டிருக்கையில் எனக்கேன் வீண் சிரமம்!
ஏற்றுக் கொள்கிறேன். ‘கொஞ்சம்’ அல்ல ‘அதிகம்’ முரண்பட்டே இருக்கிறது. “உண்மையான பொதுவுடமைவாதிகள்…………………………………………………………… அவ்வாறு இருக்க முயலும் சில தலைவர்களும், மக்களும்……. …….. மறக்கடிக்கப் பட்டுள்ளார்கள்” என்று இருந்திருக்கவேண்டும். ஒட்டுமொத்தத் தமிழினமே குழ்ப்பத்தில் இருக்கும்போது அதில் ஓர் சிறு துளியான எனக்கும் எழுதும்போது சற்று குழம்பித்தான் போய்விட்டது.மன்னிக்கவும்.
நன்றி. தயங்காமல் தவறுகளை ஏற்கிற மனப்பக்குவம் பலரிடம் இல்லை.
“ஃபாபியன் சொசைட்டிதான்” இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை.கொண்டப்பள்ளி சீத்தாராமையவின் மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்டுகள் “மாவோயிஸ்டுகள்” அல்ல!.ரஷிய சார்பு சிபிஐ யின் தீவிர பகுதியே இவர்கள்.அதில் “மென்ஷிவிக்குகளாக” இருந்தவர்களே,”சந்திரபுல்லா ரெட்டி,யத்தேந்திர குமார்” ஆகியோரின் “புதிய ஜனநாயக கட்சி”,இவர்களே ம.க.இ.க. வினரின் அடிப்படை! இவர்கள் “சிதம்பரம் கோயிலில்” “ஐன்ஸ்டின் – ஜித்தேந்திரநாத்” “போ(ஸ்)ஸான் தியரியை” குழப்புவது புரியவில்லை?!!.
Mr.XXX,Here you can get some links…Helena Petrovna Blavatsky 1831 – 1891 in London,was a founder of Theosophy and the Theosophical Society.Helena’s maternal grandparents were Andrey Mikhailovich Fadeyev, Governor of Saratov, later of Tbilisi, and his wife Princess Helene Dolgoruki prominent figures of the age of Russian enlightenment. Helena grew up amid a culture rich in spirituality and traditional Russian mythologies, which introduced her to the realm of the supernatural.She claimed to have become Buddhist while in Sri Lanka and to have been initiated in Tibet. She returned to Russia in 1858 and went first to see her sister Vera, a young widow living in Rugodevo, a village which she had inherited from her husband.Living in New York City, she helped found the Theosophical Society in September 1875, with Henry Steel Olcott, William Quan Judge and others.She had moved to India, landing at Bombay on February 16, 1879, where she first made the acquaintance of A. P. Sinnett. In his book Occult World he describes how she stayed at his home in Allahabad for six weeks that year, and again the following year.
Sometime around December 1880, while at a dinner party with a group including A. O. Hume and his wife, she is claimed to have been instrumental in causing the materialization of Mrs Hume’s lost brooch.By 1882 the Theosophical Society became an international organization, and it was at this time that she moved the headquarters to Adyar near Madras, India (now Chennai).Annie became involved with Union organisers including the Bloody Sunday riot and the London matchgirls strike of 1888 and a leading speaker for the Fabian Society and the (Marxist) Social Democratic Federation and was elected to the London School Board for Tower Hamlets, topping the poll even though few women were qualified to vote at that time.
Iyothee Thass or Pandit C. Ayodhya Dasa (May 20, 1845–1914).Iyothee Thass was born Kathavarayan on May 20, 1845 in a Dalit(Paraiyar) family from Coimbatore district.Iyothee Thass remains the first recognized anti-Brahmin leader of the Madras Presidency. In many ways, Periyar, Dravidar Kazhagam, Dr. Ambedkar, Udit Raj and Thirumavalavan are inheritors of his legacy. He was also the first notable Dalit leader to embrace Buddhism.Iyothee Thass met Colonel H. S. Olcott with his followers and expressed a sincere desire to convert to Buddhism. According to Thass, the Paraiyars of Tamilakam were originally Buddhists and owned the land which had later been robbed from them by aryan invaders. With Olcott’s help, Thass was able to visit Ceylon and obtain diksha from the Sinhalese Buddhist monk Bikkhu Sumangala Nayake.
புதன்கிழமை, மார்ச் 31, 2010.கடவுளின் அணுத் துகளைத் தேடி…பயணம் ஆரம்பம்….
ஜெனீவா: உலகம் உள்ளிட்ட பிரபஞ்சத்தின் அனைத்துப் பொருட்களும் உருவாகக் காரணமாக இருந்ததாகக் கருதப்படும் Big Bang எனப்படும் மாபெரும் வெடிப்பின்போது என்ன நடந்திருக்கும் என்பது குறித்த சோதனையில் நேற்று மிக முக்கியமான நாள்.
ஜெனீவாவுக்கு அருகே பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் (CERN) அமைத்துள்ள Large Hadron Collider (LHC) சோதனை மையத்தில் புரோட்டான்களின் ‘அதிவேக அடிதடி’ ஆரம்பமாகியுள்ளது….ஒரு அணு என்பது புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் ஆகிய துகள்களைக் கொண்டது. இதில் ஒரு புரோட்டான் என்பது குவார்க், பெர்மியான், குளுயான்ஸ் ஆகியவற்றால் ஆனது.இந்த Higgs Boson இதுவரை எந்த அறிவியல் சோதனைகளிலும் சிக்காத ஒன்று. இதனால் இதை ‘கடவுளின் அணுத் துகள்’ (God’s particle) என்கிறார்கள்…….வைரஸ் முதல் நட்சத்திரம் வரை இந்த பிரபரஞ்சத்தில் உள்ள அனைத்துமே நமக்குத் தெரிந்த அணுத் துகள்களால் ஆனவை. இதைத் தான் matter என்கிறது இயற்பியல். ஆனால், நமக்குத் தெரிந்த matter வெறும் 4 சதவீதம் தானாம். நமக்குத் தெரியாத ‘dark matter’ தான் மிச்சமுள்ள 96 சதவீத பிரபஞ்சத்தையே அடைத்திருக்கிறது அல்லது உருவாக்கியிருக்கிறது….– http://thatstamil.oneindia.in/editor-speaks/2010/03/31-atom-smasher-achieves-big-bang-collisions.htm
இதைத் தவிர Higgs Boson என்றொரு துகளும் இருப்பதாகக் கருதப்படுகிறது.
I am not sure what you are driving at here.
Thank you for the physics, although I have read all of that before I tried to understand string theory, with which I could not get to grips. Nor could Feinman, so I am not in bad company.
Perhaps you could help.
The story of the origins of the Theosophical Society also has been often repeated, with subjective interpretations.
With all due respect to Ayoththithasar for his contribution to the anti-Brahminist struggle and resistance to caste ideology, his views on some matters are speculation rather than objective analyses.
I remember a reference to “புதிய ஜனநாயக கட்சி” in Sri Lanka elsewhere in a comment. Whatever you had in mind, ம.க.இ.க. are successors to the Naxalbari tradition. There are differences among Naxalites and there is a tendency for some of them to call others something or the other that is not complimentary. Do not take such things literally.
Produce evidence to prove a point rather than cite polemical utterances.
இராமாயணம் பொய் உண்மை என்பதற்கு அப்பால் ஒரு கதை புனையப்படும் போது எந்த ஒரு உண்மையோ நடைமுறையே இல்லாமல் கனாக்கூடக் காண இயலாது. எந்த ஒரு கதையிலும் புனைவுகள் இல்லாத கதைகள் சுவைப்பதில்லை. இராமாயணம் எனும் இதிகாசம் இன்றுவரை சுவைக்கிறது என்றால் உண்மை கலந்த புனைவுகள் இருக்க வேண்டும். இந்தக் கணனி உலகில் ஒரு சிறுகதைத் தொகுப்பை உருவாக்கவே எத்தனை வருடங்கள் செல்கின்றன: மகாபாரதம் இராமாயணம் போன்றவற்றை எழுத்தாணி கொண்டு எழுதுவது என்பது மனிதசக்திக்கு அப்பாற்பட்ட சில சக்திகளின் உதவிகள் இருந்திருக்க வேண்டும் என்பதை யாரும் மறுக்க இயலாது. எழுதிக் கொண்டு போகும் போதே முன்னுக்கு நாம் என்ன எழுதினோம் என்பது மறந்து விடும். இராமாயணத்தில் நான் அடிப்படையாக விளங்கியது இதுதான்: யாரோ ஒரு வடக்கைச் சேர்ந்த அரசன் அரசை இழந்து தெற்குநோக்கி வந்து தன் மனைவியை இழந்து தெற்கிலுள்ள சில உதவிகளுடன் இலங்கையை அடைந்து தன் மனைவியை மீட்டான் என்பது மட்டும் உண்மை. அதேவேளை இலங்கைளில் பலம்வாய்ந்த மனிதர்கள் சக்திவாய்ந்த மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை இராவணனாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதை எழுதிய வான்மீகி என்பவர் பொய்சொல்லத்தெரியாத ஒருவழிப்பறிக் கொள்ளைக்காரன். இவரால் பெரும் புனைவுகளை ஏற்படுத்தியிருக்க முடியாது. இராமாயணத்தில் இலங்கை பற்றி வருகிற பல செய்திகள் இன்றும் சரியாக இருப்பது ஆச்சரியத்துக்குரியதே. இராவணன் பற்றி வரலாற்றில் தன் தாயின் ஈமைக்கிரியைகளுக்காக கிண்ணியாவிலுள்ள கொதிநீர் கிணறுகள் உருவாக்கப்பட்டது என்றும் கோணேசராலைய வழிபாடும் இராவணன் வெட்டும் என சீதா எலிய போன்ற தரவுகள் இராமாணம் போன்ற ஒன்று நடந்திருக்கிறது என்பதை உறுதி செய்கின்றன. வடிவிந்தியாவில் இருந்த வான்மீகியால் கிஸ்கிந்தை பற்றியோ கோணேஸ்வரம் இராமேஸ்வரம் பற்றியோ முழுமையான அறிவைப்பெற்றிருக்க இயலாது. இராமாயணம் முழுக்கற்பனைப்புனைவு என்று சொல்வது முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் புதைப்பது போன்றது.
சிறந்த பதிவு.
பின்வருவதை என்ன அடிப்படையில் கூறுகிறீர்கள்?
“இதை எழுதிய வான்மீகி என்பவர் பொய்சொல்லத்தெரியாத ஒருவழிப்பறிக் கொள்ளைக்காரன். இவரால் பெரும் புனைவுகளை ஏற்படுத்தியிருக்க முடியாது.”
பின்வருவன நம்முட் புழங்கும் பல கட்டுக்கதைகளுட் சில:
“இராவணன் பற்றி வரலாற்றில் தன் தாயின் ஈமைக்கிரியைகளுக்காக கிண்ணியாவிலுள்ள கொதிநீர் கிணறுகள் உருவாக்கப்பட்டது என்றும் கோணேசராலைய வழிபாடும் இராவணன் வெட்டும் என சீதா எலிய போன்ற தரவுகள் இராமாணம் போன்ற ஒன்று நடந்திருக்கிறது என்பதை உறுதி செய்கின்றன.”
ராமாணம் போன்ற ஒன்று நடந்திருக்கிறது என்பதில் மறுப்பில்லை.
ஆனால் ராமாயணம் வரலாறல்ல. (இந்துத்துவக் குண்டர்கள் அதை வரலாறாக்கப் பார்த்து வரலாற்றை அழிக்கிறார்கள்.)
மேற்கூறிய்வை போன்ற புனைவுகள் ராமயணக் கதை போன நாடுகளிலெல்லாம் உள்ளன.
வால்மீகி ராமயணத்தில் மேற்கூறியவற்றுக்கு எவ்விதச் சான்றும் இல்லை. கம்ப ராமாயணத்திற் கூட இல்லை.
எத்தனையோ ராமாயணங்கள் உள்ளன. எந்த ராமாயணத்தில் உங்கள் சான்றுகள் உள்ளன என்று சொன்னால் உதவியாயிருக்கும்.
பொதுவாகவெ தென்னாசியர்கட்கு வரலாற்றுணர்வு குறைவு. அதனால் தான் நம்மால் ஒழுங்கான வரலாற்றுப் பதிவுகளைக் கொண்டிருக்க முடியவில்லை.நமது வரலற்றுநிகழ்வுகள் நடந்த காலங்கட்குச் சில “0”களைச் சேர்ப்பதில் நமக்குத் தயக்கம் இல்லை.