அரச ஆதரவுப் பயங்கரவாதிகளான பொதுபல சேனா சிங்களக் காடையர்களின் தாக்குதல் தொடர்வதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலபிடிய பிரதேசத்தில் இனவாத தாக்குதல்கள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன. பல வீடுகள் தாக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊருக்கே 4 முதல் 5 பொலிசாரே காவலுக்கு நிற்பதாகவும் அவர்களை மீறியே இந்த இனவாத தாக்குதல்கள் இடம்பெறுவதாகவும் அறியமுடிகிறது. பலபிடிய பிரதேசத்தில் சுமார் 350 முஸ்லிம் குடும்பங்கள், 2000 பேரளவில் குடிவாழ்வது குறிப்பிடத்தக்கது.
46 நாட்களேயான கைக் குழந்தை தலையில் வெட்டப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் கொழும்பிலிருந்து உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்ட போதிலும் அவை பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு சென்றடைய முன்பு வழிமறிக்கப்பட்டுப் பறிக்கப்பட்டுள்ளதால் உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நேற்று முதல் எதுவும் உண்ணக் கிடைக்காமல் பசியில் வாடும் குழந்தைகளைத் தேற்ற வழியற்ற நிலையில் நம் தாய்மார்களும் உள்ளனர்.
தகவல் – சோனகர் வலைத்தளம்
பேய்கள் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரம்.
யார் கேற்கிறது இதையேல்லாம்