தமிழக முதல்வர் கருணாநிதி இலங்கையில் தேசிய கீதம் சிங்களத்தில் பாடப்படுவது குறித்த முடிவை எதிர்த்துள்ளார். வன்னிப்படுகொலைகள் நடைபெற்ற காலத்தில் இலங்கை அரசுடன் கருணாநிதி இணைந்து செயற்பட்டமை அறியப்பட்டதே இந்த நிலையில் இவ்வறிக்கை தேர்தலுக்கான நாடகமாகவே கருதப்படுகிறது. தவிர, நேற்றய தினம் டக்ளஸ் தேவானந்த இவ்வாறான முடிவுகள் ஏதும் எடுக்கப்படவில்லை எனவும் அவை தவறு என மகிந்த ராஜபக்சவிற்கு சுட்டிக்காட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவர் தெரிவித்த கருத்துக்களுக்கு மாறானதாக நிலைமைகள் காணப்படுகின்றன.
“இலங்கையில் தமிழ் மக்களும்,சிங்களவர்களும் வசிப்பதால் அந்த நாட்டு தேசிய கீதத்தை சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் இதுவரை பாடப்பட்டு வந்தது.
இந்த நடைமுறையை இலங்கை அதிபர் ராஜபக்சே மாற்றி, இனிமேல் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்றும் தமிழில் தேசிய கீதம் பாடுவதை ரத்து செய்து விட்டதாகவும் அதற்கான தீர்மானம் அமைச்சரவையிலும் நிறைவேற்றப்படிருப்பதாகவும் ஏடுகளில் செய்தி வந்துள்ளது.
அந்த செய்தி உண்மையானால் அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. புண்பட்டிருக்கின்ற ஈழத்தமிழர்களின் உள்ளத்தை மேலும் புண்படுத்தக் கூடியது. எனவே இந்த செயலை கண்டிக்கிறேன்.” என்றார் கருணாநிதி.
தேர்தல் நெருங்குகிறது. அடுத்து கலைஞரின் கடிதத்தையும்ஒருமணித்தியால ல்லது இரண்டுமணித்தியால உண்ணாநோன்பையும் திரையில் காணலாம்.
ஸ்பெக்ரம் விடயத்திலிருந்து திசை திருப்ப ஏதாவது வேண்டுமே
The worst chief minister of tamilnadu sheds crocodile tears for tamils.
செம்மொழியான தமிழ் மொழியாம் என ஒரு கணம் சிலிர்ப்பை ஏற்படுத்தும் பாடல் என்றூம் கலைஞரை நினைக்க வைக்கும்.அது போதும் தமிழர் திசை எங்கும் தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கும்.
கோவிலில் தேவாரம் பாடினால் மோதகம் புக்கை அவல் சுண்டல் கிடைக்கும். படையலுக்கு வைக்கப் பட்டிருக்கிதைப் பார்த்தே நாங்கள் உஷார் ஆவதுண்டு. நேரம் நெருங்க நெருங்க எங்கள் குரல்களும் உச்சஸ்தானியில் ஒலிக்கும். தேவாராப் பாடலும் முடிய எங்கள் வயிறும் அநேகமாக நிறைந்து விடும். தேவாரத்தின் பலன் பாவபுண்ணியமா? வயிற்றுக்கு சாந்தி செய்கிறதா? இதுவரை எதுவென்று நானறியேன். ஆனால் தேசியகீதம் வித்தியாசப் பட்டது. தேசத்தின் செழிமையை வளர்ச்சியை உயர்வை எண்ணி பாடப் படுவதாக நினைக்கிறேன். நாடு அமைதியாக நீதியாக சகலரும் சமத்துவமாக இல்லாமை ஒழிய வேண்டுமென்பதாக பாடசாலைகளிலும் படிக்கப் படுகிறது. ஒவ்வொரு இனமும் தன்மொழியிலே தம்நாட்டின் தேசியசீதத்தை பாடமுடியும். பல இனங்கள் வாழும்நாட்டில் பலபாஷைகளில் கீதத்தை படித்துமுடிப்பதிலும் பார்த்து ஒருபொது பாஷையை தெரிவு செய்யவேண்டும்…..?. இங்கு வந்துவிழும் பின்னோட்டங்கள் எதோ ஒன்றைச் சொல்ல அதற்கு வேறு ஒரு
அர்த்தப்படுத்தி கருத்து வரும்.இதற்கு பத்திரிக்கைகள் செய்திஊடகங்கள் விதி விலக்கல்ல. எதோ அர்த்தம் கற்பித்து செய்தி வெளியிடுவார்கள்.அநேகமாக அது நாட்டுநலன் சார்ந்ததாக இருப்பதில்லை.தம்வாழ்வு தம்குடும்பம் சார்ந்ததாகவே இருக்கும். இதற்கு உதாரணம் தேடிப்போனால் முதல் தரத்தில் கருனாநிதி ஜெயலலிதா அம்மை ஐயனார்களே அகப்படுவார்கள்.இதன் பிறகே மற்றவர்களை கணக்கிட முடியும். உண்மையில் மனப்பூர்வமாக தேசியகீதத்தை இசைத்த காமராஜர்
ப.ஜீவானந்தம் போன்றவர்களை நினைவு படுத்தத்தான் முடியும். மீட்டுவிட முடியுமா? வரலாறு எப்பவும் நேர்கோட்டில் வராமல் நெளிவு சுளிவுக்கு உட்பட்டது என்பதை தெளிவு படுத்துவதற்காக இருக்கிறர்களா? என்றும் சிந்திப்பதுண்டு. தேசியகீதம் நாட்டைப் பற்றியதும் நாட்டில் வாழும்மக்களைப் பற்றியதும். தன் நாட்டை பற்றியல்லாமல் பிறநாட்டின்மக்களை இணைத்து பாடுவது சர்சதேசியகீதம் இந்த உலகமயமாதல் போன்ற நிகழ்காலங்களில் சர்வதேசியகீதமே பொருத்தமானதும் அல்லாமல் நேர்மையானதும் கூட. 1917-ம் ஆண்டில் சர்வதேசியகீதத்தை பாடியே போல்சேஷவிக்குகள் முதாலித்துவத்திடமிருந்து ஆட்சியைப் பறித்தெடுத்தார்கள். ஆனபடியால்தான் உலகின் அடக்கியொடுக்க பட்டமக்கள் நிமிர்ந்து நின்று வியந்து பார்த்து தாமும் செயலாளர் ஆனார்கள். ஆகவே தேசியகீதத்தை விட சர்வதேசியகீதம் என்றுஒன்று
உண்டு என்று தமிழ்மக்கள் உணரவேண்டும்.அதன் அர்த்தத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும்.
மிக ஆழமான ஆனால் விளங்கிக்கொள்ள இலகுவான கருத்து, இல்லை படிப்பினை.
சர்வதேச கீதம் பாடியே முன்பு அமெரிக்காவில் வடக்கும் தெற்கும் போரிட்டன. அதேபோல் சர்வதேச கீதம் பாடியே நாசிகளும் ஜரோப்பாவை ஆள முயன்றார்கள். இந்தியாவும் சர்வதேச கீதம் பாடியே ஆதிவாசிகளை அடியோடு அழிக்கின்றது.
இப்படியே உலகில் நல்ல பல விடயங்களுக்கு எல்லாம் சர்வதேச கீதமே வழிகாட்டியாக இருந்துள்ளதால் கருணாநிதி, ஜெயலலிதா, மன்மோகன் சிங் ஆபிரிக்கவிலும் சர்வதேச கீதமுள்ளதா என்று போல்சேஷவிக்குகள் போல் சீன முதலாளிதுவதிடமிருந்து ஆபிரிக்காவை மீட்க அம்பானி போன்ற தொழில் சங்கத் தலைவர்களை அனுப்பவேண்டும். ஆபிரிக்க ஆதிக்குடிகளாம் அபோறிஜின்கள் அமெரிக்கவின் ஆதிக்குடிகளாம் சுமேரியரோடு சர்வதேச கீதம் பாடும்போது உலக மயமாக்கலால் எத்தனை நன்மை மானிடருக்கு உண்டாயிற்று என்று தமிழரும் இதை உணர்ந்து அதன் அர்த்தத்தையும் உணர்ந்து அத்துடன் கற்றுக்கொள்ளவேண்டும்.
சிலரின் பின்னோட்டங்கள், கருத்துக்கள் விளங்குவது கடினம். இதற்குள் அடியேனினதும் அடங்கும். இதன் ஆழ்ந்த அர்த்ததைப் விளங்கிக்கொள்ள கோவிலில் சர்வதேச கீதம் பாடி மோதகம் புக்கை அவல் சுண்டல் சாப்பிட்டால் மட்டுமே முடியும்.
செம்மொழி வளர்க்கும்… “பராசக்தி” கண்ட… தமிழ் மரபுப்படி ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ் முறைக்கு முன்மாதிரியாக திருமணம் செய்த.., இன்றும் சென்னையில் தமிழ் வளர்க்கும்… தம் நாட்டிலேயே தமிழில் தேசிய கீதம் பாட முடியாதவர்… தென் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் செருகி செருகி முன் கதவாலும்… பின் கதவாலும் வரும் வடமொழி ஹிந்தியை உட்புகவிடுபவர்… இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று ஓர் செய்தி வந்தவுடன் துள்ளிக் குதித்து… முண்டியடித்து அறிக்கை விடுகிறார்.
அதுவும் ஓர் கண்டன அறிக்கை…
மேலும் சொல்கிறார், “தமிழ் தேசிய கீதம் ரத்து செய்த முடிவு ஈழத்தமிழர்கள் மனதை மேலும் புண்படுத்தும்” என்று.
தமிழ்நாட்டில் அகதியாக வந்தவர்களிடம் அவர்களின் ஒவ்வொர்தேவைக்கும் இலஞ்சம் கேட்பது அவ்ஈழத்தமிழர்களின் மனதை மேலும் மேலும் புண்படுத்தாதோ?
ஏனய்யா பெரியவரே திரும்பத் திரும்ப எங்கள் முதுகிலேயே சவாரி செய்ய முயல்கிறீர்கள்…???
முதலில் உங்கள் முதுகின் அழுக்கைப் பாருங்கள்…!!!
உங்கள் செம்மொழியாம் தமிழ் மொழி வளர்க்கும் தமிழ்நாட்டில் அன்றாட வாழ்க்கையில் தேவையான வங்கிப் படிவங்கள், தென்னிந்திய இரயில் ஆசனப் பதிவு படிவங்கள் முதலியவற்றில் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலுமே உள்ளது (இப்படிப் பல). செம்மொழியாம் தமிழ் மொழி மட்டும் தெரிந்த மக்கள் இப்படியான அன்றாட வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட படிவங்களை எப்படி நிரப்புவார்கள்…???.
ஏனய்யா பெரியவரே திரும்பத் திரும்ப எங்கள் முதுகிலேயே சவாரி செய்ய முயல்கிறீர்கள்…???
முதலில் உங்கள் முதுகின் அழுக்கைப் பாருங்கள்…!!!
தற்போது தாங்கள் இந்த கண்டன அறிக்கையை தொடக்கி விட்டீர்கள், இனி தொடர்ந்து ஈழத்தமிழ் அகதி மாணவர்களின் மருத்துவ, பொறியியல், விவசாய கல்லூரிகளுக்கான இடஒதுக்கீடுகளை எடுத்த ஜெயலலிதா அம்மா தொடக்கம்… வைகோ, கப்டன் பிரபாகரன் புகழ் விஜயகாந்த், வன்னிய சாதித் தடிப்பு ராமதாசு, புலம்பெயர் பினாமிப் புலிகளின் தயவில் வாழும் சிறை மீண்ட பிரபாகரனின் அன்புத் தம்பி சீமான் மட்டும் எல்லோரும் தமிழ் உணர்வு… தொப்புள் கோடி உறவு… என்று தொடக்கி கண்டன அறிக்கையை விட வெளிக்கிடுவார்கள்.
இனி தேர்தல் வேறு வருகிறது. எங்களை வைத்து ஜமாயுங்க…!!!
வாழ்க தமிழ் நாட்டின் ஜனநாயகம்…!!!
ஈழதமிழருக்கு தேவையான நேரத்தில் உதவாமல் போனதிற்கு ஸ்பெக்றம் ஊழல் தடையாக இருந்ததோ தாத்தா
கலைஜர் மீது 72ல் போடப்பட்ட ஊழல் வழக்கு சர்க்கரியா கமிசன் விசாரண இன்னும் அப்படியே கிடக்கிறது.தள்ளாடும் வயது,முதுமையின் பாரங்கள் எனக் கலைஜரும்—-
கலைஞரை விடுவோம்>சிங்கள இனவெறி நோக்கிலான> சிங்களத்தில் தேசியகீதம் பாடும் திட்டமிட்ட அபத்தம் பற்றிக் கதைப்போம்.
கோழி மிதித்து குஞ்சு சாவதில்லை.நீங்கள் அவசியமற்றூக் கவலைப்பட்டு அரசியல் வாதிகளோடு சேர்கிறீர்கள் ஆதவன்.