தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் நேற்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற “உறவுப் பாலம்” நிகழ்வில் சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இந்த அமைச்சுக்குப் பொறுப்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தேசியக் கொடியை ஏற்றிய சமயமே இவ்வாறு தேசிய கீதம் ஒலித்தது.
இன ஐக்கியத்தை ஏற்படுத்தும் முகமாக நேற்று மாலை இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மற்றும் தெற்கைச் சேர்ந்த இலக்கிய வாதிகள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.
இதேவேளை, “வடக்கு கிழக்கில் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் பாட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தமிழ் மொழியில் தாராளமாகப் பாடலாம்” என்று பொது நிர்வாக உள்நாட்டு அமைச்சர் ஜோன் சென விரத்ன நாடாளுமன்றில் அண்மையில் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
நேற்றைய நிகழ்வில் அமைச்சின் உயர் அதிகாரிகள், யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரி எவ்.மகாலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
வாசுதேவ நாணயகார சில இலங்கைத் தமிழர்களின் அழைப்பில் பிரான்சில் நடைபெற்ற ஒன்றுகூடல் ஒன்றில் கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேசியகீதத்தை என்ன மொழியில் பாடினால் என்ன!
சிறிலங்காவின் தேசீய கீதம் சிங்களத்தில் மட்டும்தான் பாடப்பட வேண்டும் அதிலென்ன தவறு. சிறிலங்காமாதாவின் புத்திரர்களிற்கு எந்த சங்கடமும் தேவையில்லையே.
தமிழர் உரிமைகள் மறுக்கப்பட்டது போய் இப்போது பறிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் எந்தவித எதிர்ப்புமின்றி மிகவும் சுலபமாக நிறைவேற்றிவருகிறது. இப்படியான தமிழர் அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசுக்கு எல்லா வகையிலும் சாதகமான சூழல் தோன்றியுள்ளதன் காரணங்களை ஆராய்ந்தால் தமிழர்கள் தாங்களே தங்கள் தலையில் மண்னை வாரிப் போட்டதை அறியலாம் இவற்றுக்கு தமிழ் தலைவர்களும் தமிழ் மக்களும்தான் காரணம் என்றால் அது மிகையாகாது. பலருக்கும் உண்மை கசக்கும் சிலர் உண்மையை ஏற்க மறுப்பர். தமிழீழம் பிரிந்து சின்னாபின்னமானாலும் தமது சுயநலத்துக்காக கண்மூடித்தனமாக முழு இனத்துக்குமே ஆபத்தை ஏற்படுத்துவர். இன்றும் அது நடந்து கொண்டிருக்கிறது
வரத்ன் , மிகசரியான ஆனால் கசப்பான உண்மை என்ன்பதில் மாற்றுக்கருத்திட்கே இடமில்லை!.