தெற்காசிய பிராந்திய வலய நாடுகளின் தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளார். இதுவரையில் சார்க் அமைப்பின் தலைமைப் பொறுப்பை வகித்து வந்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடமிருந்து ஜனாதிபதி தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். இதேவேளை, சார்க் அமைப்பு பிராந்திய நாடுகளுக்கு காத்திரமான வகையில் பங்களிப்பு செய்ய வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பயங்கரவாத்தை பிராந்தியத்திலிருந்து முற்றாக இல்லாதொழிப்பதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.