இந்திய மக்கள் தொகையில் பெரும்பான்மை மக்கள் பிற்படுத்தப்பட்ட மக்கள். அதன் பின்னர் பட்டியலின மக்கள் ஆனால், அரசு வேலை வாய்ப்புகளில் இந்திய மக்கள் தொகையில் வெறும் 3 சதவிகிதம் மட்டுமே உள்ள உயர்சாதி பார்ப்பனர்களே உள்ளார்கள். 90 சதவிகித அரசுப்பணிகளை ஆக்ரமித்து இருப்பவர்கள் இவர்களே. ஆனால் இந்து என்ற ஒற்றை அடையாளத்தினுள் அனைத்து மக்களையும் அடக்கி இந்த உயர்சாதியினர் காலங்காலமாக சலுகைகளை அனுபவித்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் இருந்துதான் பெரியாருக்கு முன்பே வகுப்புவாரி பிரதிநித்துவம் என்ற கோரிக்கை உருவானது. அதாவது சாதி வாரியாக பிரதிநித்துவம் வேண்டும். சாதி ரீதியாக ஒடுக்கப்படும் மக்களுக்கு சாதி ரீதியாக இடப்பங்கீடு வேண்டும் என்பதுதான் வகுப்புவாரி பிரதிநித்த்துவம். அதில் தமிழ்நாடு மிகப்பெரிய சாதனைகளை நடத்திய நிலையில் இன்று வட இந்தியாவிலும் இதே எண்ண ஓட்டங்கள் உருவாகி விட்டன.
இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டில் இருந்து உருவானது. பின்னர் இதையே பல மாநில முதல்வர்கள் கேட்ட போதும் பாஜக மறுத்து வருகிறது. காரண்ம அரியவகை ஏழைகள் என்ற பெயரில் பிரமாணர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவது பாதிக்கப்படும், இந்தியாவில் எவ்வளவு மகக்ள் எத்தனையெத்தனை சாதிகளில் வாழ்கிறார்கள் என்பது தெரிந்து விடும் என்பதால் மத்திய மோடி அரசு சாதி வாரிக் கணக்கெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில்,
பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவரும் லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி 33 மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இந்தியாவில் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்த ஆதரவு கோரி கடிதம் எழுதியுள்ளார்.