இலங்கையிலே சாதியம் மிகக் கொடுமையாக நடைமுறையிலிருந்த பகுதி யாழ்ப்பாணக் குடாநாடுதான். தென்னிலங்கையில் அந்நியக் குறுக்கீடு நேர்ந்த சூழல் ஒரு குறிப்பிட்ட சாதியின் முழுமையன சமுதாய ஆதிக்கத்திற்கு ஆப்பு வைத்தது. எனவே தான் சாதிய ஒடுக்குமுறையைப் பல்வேறு சமூகச் சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் தனிக்க இயலுமாயிற்று. சர்வசன வாக்குரிமையும் குறிப்பாக 1956ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் சாதி அடிப்படையிலான சமூக ஒடுக்குமுறையைப் தணிப்பதில் முக்கிய பங்காற்றினாலும் சாதியையும் ,சாதியச் சிந்தனையையும், ஆதிக்கத்தையும் இன்னமும் முற்றாக ஒழித்து விடவில்லை.
யாழ்ப்பாணக்குடாநாட்டுச் சூழல் வித்தியாசமானது. அங்கே சாதியத்தின் பிடிப்பு சகல துறைகளிலும் வழுவாக இருந்தது. எனவே அங்குதான் சாதியத்திற்கெதிரான போராட்டங்கள் முனைப்பாக இருக்க நேர்ந்தது. சாதியத்திற்கெதிரான போராட்டங்களின் மையமாக யாழ்ப்பாண குடாநாடே இருந்தது என்பதில் ஐயமில்லை.
சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும் என்ற நூல் 1989ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிரசுரிக்கப்பட்டது. அது இலங்கையில் சாதியத்தின் வரலாற்றுப் பிண்ணணியையும் அதற்கெதிரான போராட்டங்களையும் பொதுப்படக்கூறி அதன் அதிஉச்சக்கட்டமான தீண்டமைக்கெதிரான வெகுஜனப்போராட்டத்தின் வரலாற்றுப் பிண்ணணியையும் வளர்ச்சியையும் நிறைவையும் இந்நூல் விவாதித்து, அதன் இரண்டாவது திருத்திய பதிப்பு தமிழகத்தில் வெளியிடப் பட்டதனால் இலங்கையில் என்ற சொல் நூலின் பேருடன் சேர்க்கப் பட்டது.
இந்த நூலும், எம்.சி.சுப்பிரமணியத்தின் வாழ்க்கை பற்றிய நூலொன்றும் பரிஸிலும் லண்டனிலும் 2008 செப்ரெம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றுள் சாதியமும் அதற்கு எதிரான போராட்டமும் பற்றியதே அதிகம் பேசப்பட்டதில் வியப்பில்லை என்றாலும் பிரான்சில் நடந்த கூட்டத்தில் விமர்சனம் போதாது என்று கூறி, லண்டனில் நடந்த கூட்டத்தில் விமர்சனம் எனற பேரில் சிலரால் ஏதேதோ எல்லாம் பேசப்பட்டன. அவற்றில் நூலை வாசித்து விளங்கிப்பேசப்பட்டது எவ்வளவு என்பது அந்நிகழ்வுகளின் ‘தூ’ இணையத்தளத் தொகுப்பு மூலம் ஓரளவு தெரியவந்தது. வக்கிரமான கருத்துக்களைக் கூறியவர்களில் அரசியல் பிண்ணணியையும் புலம்பெயர்ந்ந சூழலில் அவர்களது செயற்பாடுகளையும் அறிந்தவர்கட்கு அவர்களின் வன்மை விளங்கும்.
தலித், ,தலித்தியம் என்ற சொற்கள் இலங்கையின் போராட்டங்களின் பயன்பட்டவையல்ல .தமிழகத்துத் தலித்தியவாதிகள் கொண்டாடுகிற டானியல் என்றுமே அச் சொல்லைத் தன் நூல்களிற் பயன்படுத்த வில்லை. அவர் பஞ்சமர் என்ற சொல்லை பயன்படுத்தினார். தாழ்த்தப்பட்டோர் என்ற சொல்லே அவர்கள் தாழ்ந்தோர் அல்ல தாழ்த் தப்பட்டோர் என்ற உண்மையான நிலையை உணர்த்துகிறது என்ற அடிப்படையில் தாழ்ந்தோர் கீழ்ச்சாதி, எளியசாதி, பஞ்சமர் என்பவற்றாற் குறிக்கப்பட்டோர் ஆதிக்கக்காரரால் தாழ்த்தப்பட்டோர் என்ற வரலாற்று உண்மையை அச் சொல் குறிப்பிட்டதால் அதையே இலங்கையின் இடதுசாரிகள் அனைவரும் பயன்படுத்தினர் எனலாம்.
தலித் என்ற சொல் அடிநிலை என்பதைக்குறிப்பது. அது மராத்தியி லிருந்து வந்தது. அது தமிழகத்துக்கு வருமுன்னமே சாதியத்திற் கெதிரான போராட்டங்கள் தமிழகத்தில் நடை பெற்று வந்துள்ளன.
சாதியத்திற்கெதிரான போராட்டத்தின் வர்க்கத்தன்மையை வெட்டி விலக்குவதற்காகவே தமிழகத்தின் ‘தலித்திய வாதிகள்’ செயற்பட்டுள்ளனர் என்பது தான் வரலாற்று உண்மை. அவ்வாறு வர்க்கத் தீக்கங் செய்யப்பட்ட அரசியல் தலித் அரசியலாக வளராமல் தமிழகத்தில் சாதி அரசியலாகிப் பிளவுப்பட்டது. இப்படிப் பட்ட ஒரு தலித்தியத்தைப் புலம் பெயர்ந்து சூழலில் உள்ள சிலர் உள்வாங்கிக் கொண்டவர்.
அவர்களிற் பெரும்பாலானவர்கட்கு ஈழத்துச் சாதியமும் போராட்டங்களும் பற்றி எதுவுமே தெரியாது. ஏனென்றால் அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்த் தேசிய வாதத்தின் வழியில் சென்று தான் சாதியம் இன்னும் சாகவில்லை என்று கண்டவர்கள். அவர்கள் தமது தேசிய வாதத்தின் போக்கில் உள்வாங்கிய மாக்சிஸ எதிர்ப்பு இன்னமும் அவர்களை நீங்கவில்லை. அவர்களுடன் இடது சாரி விரோத வண்மம் பிடித்த சிலர் கூட்டமைத்து ‘கௌவர’ தலித்து களாகப் பம்மாத்துப் பண்ணி வருகிறார்கள்.
இலங்கையில் மேர்ஜ என்கிற என்.ஜி.ஓ. நிறுவனத்தின் ‘சரிநிகர் சஞ்சிகையின்’ குளு குளு அறையிலிருந்து நாள்தோறும் கணணியில் ரோஹணு விஜேவீரவின் படத்தை ஆராதனை செய்து வந்தவரான சரவணன், தனிப்பட்ட காரணங்கட்காக நவசமசமாஜக் கட்சியின் ஆதரவாளராகவும் இருந்து வந்தவர் (அக்கட்சி தலைவர் விக்கிரமபாகுவின் விடுதலைப்புலி ஆதரவு இன்னொரு விடயம்) அந்தப் பிண்ணணியிலேயே அவரது மாக்ஸிச லெனிசிச சரிநிகரில் அவரது தலித்தியாக குறிப்புகளில் மாக்சிச வாதிகளின் வரலாற்று பங்களிப்பு பற்றிய இருட்டடிப்பும் இடம்பெற்றன. இப்போது இந்த நூலை ஒரு கட்சி பிரசார நூலாக காட்ட முயன்றிருக்கிறார். இதில் அதிசயம் என்ன?
பரிஸில் ஷோபா சக்தி இந்த நூல் எம்.சி. சுப்பிரமணியம் சாதி ஒழிப்பிற்காக எதுவுமே செய்யவில்லை என்று கூறுவதாகச் சொல்லியிருந்தார் அவர் நிச்சயமாக நூலை வாசிக்கவில்லை என்பேன். எம்.சி. சுப்பிரமணியம் தீவிரவாதிகளுடன் நின்றதன் விளைவாக 1966 ஒக்டோபர் எழுச்சி தொடர்பாக தவறுகள் செய்தார் என்று சுட்டிக்கபட்டப்பட்டுள்ளதே ஒழிய அவரது பங்களிப்புகள் நூலில் மறுக்கவோ மறைக்கவோ படவில்லை. 1964க்குப் பிறகு தமிழரிடையே சாதியத்திற்கெதிரான போராட்டத்தை மாக்ஸிச லனிசிசவாதிகளே முன்னெடுத்தனர் என்பதை ஷோபா சக்தியால் ஏற்க இயலவில்லை.
மாதவியின் கருத்து நூலில் கூறப்பட்டுள்ள ஒரு அடிப்டையான உண்மையான மே நிலையாக்கம் பெற்றவர்கள் சாதிய எதிர்ப்பில் பின்நிற்பதையும் தமது சாதி அடையாளத்தை மழுப்பு நிற தன்மையையும் பற்றிய குறிப்பைத் தவறாக வியாக்கியானம் செய்கிற சமூக நீதிக்குப் போராடப் பிண்ணிற்பதைப் கூறுவது எவரையும் சமூகவிரோதிகளாகப் காட்டுகிற முயற்சி என்பது நீதியற்றது.
எல்லாரையும் மிஞ்சிய வண்மம் மு.நித்தியானந்தனுடையது. இவருடைய திருகுதாளங்கள் பற்றிச் சில ஆண்டுகள் முன் புதிய பூமியில் எமுதப்பட்ட பிறகு பதில் கூற வக்கில்லாமல் தனது உளறல்களை சில காலம் அடக்கியிருந்த இவர் இப்போது மறுபடியும் விஷம் கக்கத் தொடங்கியிருக்கிறார்.
இந்திய தலித்தியவாதிகள் பற்றிய சிவசேகரத்தின் குறிப்புகள் வஞ்சக நோக்கமுடையவை என்று கூறி தலிக் என்று ஒடுக்கப்பட்ட மக்களின் சுய கௌரவத்தை சிறப்பாக வலியுருத்துகிற பதம் என்று சொல்லியிருக்கிறார். அச்சொல் தாழ்நிலையில் உள்ளவன் என்ற கருத்துடையது. என்று அவருக்கு ஒருவேளை தெரியாது.
ஒரு சிரேஷ்ட விரிவுரையாளராக வரக்கூடிய போதிய கல்வித் தகுதி பெறாமல் தன்னைப் பேராசிரியர் என்று பிறரை சொல்ல வைத்து பூரித்து போகிற இந்தப் பம்மாத்து பேர்வழிக்கு எந்த விஷயத்திலும் ஆழமான அறிவோ அக்கறையோ இல்லை என்பது இன்று புலம் பெயர்ந்த சூழலில் அம்பலப்பட்டு போன விடயம் என்றாலும், அங்கே மேடை கிடைத்தாலும் ஓடிப்போய் அதற்கேற்ற விதமாக தீவிர இடதுசாரி, புலி ஆதரவாளன், புலி எதிர்ப்பாளன், மாக்ஸிச விரோதி என்ற வேடங்கட்டி ஆடுவதற்கு மட்டும் ஒரு திறமை உண்டு ‘அவைகாற்று கலைக்கழகத்தில்’ ஒட்டிக் கிடந்த போது மேடையில் கண்டு நடிக்க முடியாவிட்டாலும் வாழ்க்யையில் மிக நன்றாகவே நடித்து வருகிறார். இந்தப் புத்தகத்தைச் சாதாரணமானவர்கள் பார்க்க நேர்ந்தால் சிவசேகரமும் செந்திவேலும் மட்டும்தான் சாதியப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள் என்ற கருத்துத்தான் உருவாகும் என்று அவர் கூறிய போது அவருடைய தண்ணீர் தொட்டி நிதானம் எப்படி இருந்தது என்று கூட்டத்தில் இருந்தவர்கள் கவனித்திருக்கக் கூடும். மிகக்கவனமாக எழுதப்பட்ட நூலை வாசிக்காமல் அதுபற்றி உளறுவதும் இரவல் வார்த்தைகளை சொந்த அறிவு மாதிரிப் பேசுவதும் அவரைச் சூழவுள்ள ஒரு சிலருக்கு சிலுசிலுப்பூட்டினாலும் நூலை வாசித்த எவருக்கும் இந்த வெறுங்குடத்தின் கலகலப்பு விளங்கிவிடும்.
பெரியார், அம்பேத்கார் போன்றோர் வெகுஜனப் போராட்டம் செய்யாதவர்கள் என்று சிவசேகரம் கூறுவதாக இன்னொரு புலுடா. அந்த விதமான சாடையிற் கூட எதுவுமே எங்கும் சொல்லப்படாத போது, ஏன் இந்தப் பொய்? ஏனிந்த வன்மம் பிடித்த அயோக்கியத்தனம்?
சண்முகதாசன் பற்றிய சில குறிப்புகள் திருந்திய பதிப்பில் குறைக்கப்பட்டுள்ளதிற் குற்றங் காண்கிறார். அன்றைய சூழலில் நூலாசிரியர்கட்கு முக்கியமாக்கப் பட்டவை. இன்று விவரமான விவரணத்திற்கு அவசிய மற்றவை என்பதாலே சுருக்கப்பட்டன. இதில் நோக்கங் கண்டுபிடிப்பது போதாமல், தோழர் எஸ்.ரி.என்.நாகரத்தினத்துக்கு முதற் பதிப்பு சமர்ப்பிக்கப்பட்டது, இப்பதிப்பு அதைச் செய்யவில்லை என்று வலிந்து நோக்கத் தேடுகிறார். முதற் பதிப்பு நூல்வடிவு பெற்ற போது தோழர் எஸ்.ரி.என். இறந்து சில நாட்களாகின. எனவே அவரது நினைவு நிகழ்வொன்றில் அது அவருக்கு சமர்ப்பணமாக வெளியிடப்பட்டது. இம்முறை அவர் பற்றிய குறிப்புகள் நூலினுள் முன்னை விட விரிவாக உள்ளன. என்பது இந்தப் போலிப் பேராசிரியருக்கு எப்படி விளங்கும். வாசிக்காமலே விமர்சிக்கிற வல்லமை வீண்போகலாமா.
நித்தியானந்நதுக்கு வஞ்சகம் என்ற சொல்லுக்கு பொருள் தெரியாது போலிருக்கிறது. அதனால் தான் எதையெதையோ எல்லாம் வஞ்சகம் என்கிறார். அவருடைய நடத்தையை அவரது இடதுசாரி வேடம், புலி வேடம், புலி எதிர்ப்பு வேடம், தலித் வேடம், போன்ற பல வேடங்களினூடும், முதுகுக்குப் பின்னால் கதைக் காவித் திரிகிற சில்லரைப் புத்தியையும் கண்டு கொண்டவர்கள் வஞ்சகத்தின் ஒரு ஒட்டுமொத்த வடிவமே அவர் என்று நன்றாக அறிவார்கள்.
இந்த விதமான கூட்டங்கள் நூல் பற்றிய ஒரு விரிவான ஆய்வையும் விளக்கத்தையும் தரவல்லன என நான் எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் குறைந்தபட்ச நேர்மையுடன் நூலின் குறைநிறைகளை கூறக் கூடிய எவருமே லண்டன் ‘அறிமுக ஏற்பாட்டாளர்கட்கு’ கிடைக்கவில்லையா ? தூ!! வெட்கக்கேடு!!!
பின்குறிப்பு:
இந்தியாவில் சாதிவெறிக் கெதிராக யார் முன்னின்று போராடுகிறார்கள் என்பதைக் கொஞ்சம் விசாரித்தால் தமிழகத்தின் தலித்தியப்பிரமுகர்கள் பலரது முகமுடிகள் கழரும். ஐரோப்பியத் தலித்தியவாதிகள் புலி எதிர்ப்பாளர்களாக இருக்கையில் அவர்கள் மெச்சும் தமிழகத் தலித்திய வாதிகள் என்.ஜி.ஓ. தலித்திய வாதிகள் ஓரிருவர் போக புலி ஆதரவாளர்களாகக் கூடத் தோன்றியும் கருணாநிதியுடன் கைகோர்த்தும் என்.ஜீ.ஓ பினாமிகளாகவும் உலாவருகின்றனர் என்று விளங்கும்.
தற்போதுள்ள சூழ்நிலையில் இக்கட்டுரை ஆறுதல் தருவதாகும்.போலிகளுக்கு நல்ல பதிலடி.
சித்திரா அச்சகத்தில் கொல்லப்பட்ட புதியபாதை சுந்தரத்தின் கொலைகளையே அன்று அந்த அச்சகத்திற்கு அடிக்கடி போய்வந்த பேராசிரியர் நித்தியானந்தன் நியாயப்படுத்தியதையும் இங்கே நினைவு கூருதல் வேண்டும். சுந்தரத்தின் வரகையை …………………. ……………………….. பெருமையையும் இவரையே சாரும். இதன் சாட்சிக்காரரும் லண்டனில் இவரடன் நெருக்கமாக உள்ளவர்.
சாதீயம் தொடர்பான போராட்டங்களை முன்நின்று நடாத்திய செந்தில்வேலையே கடாசி எடுத்த இந்த “கெளரவ” தலித்துக்கள். தெருவுக்கு வந்த்துவிட்டார்கள்!
சம்புகன் அவர்களுக்கு உங்கள் சில கட்டுரைகள் படித்துள்ளேன் அதில் உள்ள ஆழமான பார்வை இக் கட்டுரையில் காணப்படவில்லை. இலங்கை சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் இடதுசாரிகளின் பங்கை முக்கியத்துவத்தை இருட்டடிப்பு செய்யும் போக்கும் இடதுசாரிகளை கொச்சைப்படுத்தும் செயலும் இன்று புலம்பெயர்ந்த சூழலில் ஒருசிலரால் மிக திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டுவருகிறது. அதில் முக்கியமானவராக நித்தியானந்தம் போன்றோர் உள்ளனர். இவ்வாறானவர்களை நீங்கள் அரசியல் தத்துவார்த்த கோட்பாட்டு அடிப்படையில் அம்பலப்படுத்துவது அவசியம். அவர்களுடைய தனிநபர் நடத்தைகளுக்கும் செயல்களுக்குமான அரசியல் பிண்னனிகளை அலசி ஆராய்வது அவசியம். வெறுமனவே தனிநபர் சாhந்த குறைபாடுகளை சுட்டிக்காட்டுவது இவர்களின் பிற்போக்கு அரசியலிருந்து இவர்களை காப்பாற்றுவதாக போய் முடிந்துவிடும். தனிநபர் சார்ந்த குறைபாடுகள் இவர்களின் பிற்போக்கான சுயநல அரசியலில் இருந்தே உருவாகிறது. எனவே இவற்றை அரசியல் சார்ந்து எதிர்கொள்வதே சாலச்சிறந்தது. எனினும் நித்தியானந்தன் தொடர்பான விமர்சனம் அவரோடு பழகிய தெரிந்த பலருக்கு புதியதல்ல. அவை பழக்கப்பட்ட தெரிந்தசமாச்சாரங்கள். முடியுமானால் இலங்கை சாதிய ஒடுக்குமுறையின் இன்றைய வடிவங்களும் போக்குகளும் தொடர்பாய் ஒரு ஆய்வு கட்டுரை எழுதலாமே.இதற்கூடாக பல்வேறு விடயங்களை நீங்கள் தொடமுடியும்.முயற்ச்சி செய்யுங்கள்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நித்தி விரிவுரையாளராக இருந்த போது, கலைப்பீடத்தில் இருந்த அனேகமான விரிவுரையாளர்களை விடவும் அதிகமான கல்வியறிவும், அனுபவ அறிவும் கொண்டவராக இருந்தார் என்பதை அக்காலத்தில் கலைப்பீடத்தில் கல்வி பயின்ற எவரும் மறுக்க மாட்டார்கள். பேராசிரியர் என்ற சொற்பதம் அவராக வலிந்து தனக்குச் சூட்டிக் கொண்டதல்ல. அத்துடன், பேராசிரியர் என்ற பதம் இலஙையில் பயன்படுத்தப்படும் முறைக்கும், தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் முறைக்கும் நிறைய வேறுபாடு உண்டு. தமிழ்நாட்டில் இளமாணி பட்டத்திற்கான கல்வியைப் போதிக்கும் கல்லூரிகளில் பணிபுரியும் விரிவுரையாளர்கள் அனைவரும் பேராசிரியர் என்றே அழைக்கப் படுகின்றனர்.அவ்வகையில் பார்த்தால் நித்தி வகித்த பதவியின்படி அவரும் ஒரு பேராசிரியரே. சிரேஷ்ட விரிவுரையாளராக நியமிக்கப் படாததற்கு பல்கலைக்கழத்தின் நிர்வாகம் தான் காரணமே தவிர,நித்தியின் தகுதி காரணம் அல்ல. ஏ.ஜே. கனகரத்தினா ஆங்கிலத் துறையில் விரிவுரையாளராகவே இறுதிவரை இருந்தார். அதற்காக அவருக்கு அறிவு போதவில்லை என்று கொள்ளலாமா?
கட்டுரையில்
1. இலங்கையின் சாதியொழிப்புக்கான போராட்டங்கள் இந்தியநிலைமைகளிலிருந்து வேறுபடுவதாகவும்
2. இந்தியாவில் தலித்தியப் போராட்டங்கள் இலங்கையில் பெற்ற வெற்றியைப் பெறவில்லை என்றும்.
3. இதனால் இந்திய மாதிரியைப் பின்பற்றும் புலம்பெயர் தலித் ஆர்வலர்கள் விமர்சனத்திற்குட்படுத்தப்பட வேண்டியவர்கள் என்றும்.
4. இந்திய தலித்தியப் போராட்டங்கள் வெற்றுச் சீர்திருத்தப் போராட்டங்களாக மாற்றமெடுத்து, மார்க்சியத்தை அதிலிருந்து அன்னியப்படுத்துகின்றது என்றும்.
5. சிங்கள மக்கள் மத்தியில் சாதி ஒடுக்குமுறையின் வன்மை குறைந்ததற்கான வேறுபட்ட சமூகப் பொருளாதாரப் பின்னணிகள் அமைந்திருப்பதாயும்.
போன்ற ஆழமான விவாதத்திற்குரிய விடயங்களை சம்புகன் ஒரே சிறு கட்டுரையில் குறித்துக்காட்ட முற்பட்டதில் கட்டுரை வலுவிழந்து போயுள்ளது.
தவிர, நித்தியானந்தன் தொடர்பான விடயங்கள் தனிப்பட்ட தாக்குதல் போன்று தொனிக்கிறது.
ஒருவரின் அரசியல் கருத்தை அவரது தனிமனித பலவீனங்களூடாக நிராகரித்தல் என்பது பலவீனமானதே.
சம்புகன் புதியபூமியில் எழுதிய பலகட்டுரைகளின் ஆழத்தை இங்கு காணமுடியவில்லை!
//யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நித்தி விரிவுரையாளராக இருந்த போதுஇ கலைப்பீடத்தில் இருந்த அனேகமான விரிவுரையாளர்களை விடவும் அதிகமான கல்வியறிவும்இ அனுபவ அறிவும் கொண்டவராக இருந்தார் என்பதை அக்காலத்தில் கலைப்பீடத்தில் கல்வி பயின்ற எவரும் மறுக்க மாட்டார்கள்//தாமிரா மீனாட்சி .
தாமிரா மீனாட்சி நீங்க சொல்லற இவ்வளவும் இருந்த நித்தி ஏன்பாருங்கோ கொலைகாற இயக்கமாக தன்ன முதல் இனம் காட்டிய புலிகளோடு ஒட்டிக்கொண்டார்? அப்ப சரியோ பிழையோ மாக்ஸ்/ லெனின் /மாவோ எண்டு பேசிய இயக்கங்கள் இரண்டு மூண்டு இருக்க வேலுப்பிள்ளையின் மகனின் இயக்கத்தில் எப்பிடி பாருங்கோ இவர் இருக்க முடிஞ்சது? சும்மா இருந்தாலும் பறவாயில்லை வேலுப்பிள்ளை மகன் செய்த எல்லா அடவாடித்தனங்களுக்கும் உங்க நித்தி தத்துவ முலாமும் நியாயப்படுத்தலும் அல்லலோ செய்து கொண்டிருந்தவர். அந்தக்காலத்தது ஆட்களிடம் கேட்டுப்பாருங்கோ. கதை கதையாய் சொல்லுவினம்.
யாழ்ப்பாண பலகலைக்கழகத்தில் நித்தி விரிவுரையாளராக இருந்தபோது அனேகமான விரிவுரையளர்களை விட அதிகமான கல்வியறிவும்> அனுபவ அறிவும் கொண்டவராகவும் இருந்தார் என்கின்றார். தாமிரா மீனாட்சிஇதை எந்த அளவுகோல் கொண்டு அளக்கின்றார் என்று விளங்கவில்லை. >இது நிற்க நித்திக்கு பல முகங்கள் உண்டு. லண்டன் புத்தக விமரசனக் கூட்டத்தில் செந்தில்-சிவசேகர எதிர்ப்பு-அகோர முகத்துடன் புத்தகத்தை பிழை பிடிக்கும் கண்ணாடியை அணிந்து வாசித்துவிட்டு>பேசியுள்ளார்! இதன் விளைவு விமர்சனமாக அல்லாது தாக்குதலாக மாறியது!
தாமிரா மீனாட்சி நீங்க சொல்லற இவ்வளவும் இருந்த நித்தியை பாருங்கோ இந்தகைலாசபதி மலையகத்தில இருந்து ஒருத்தரும் பேராசிரராக இரக்கவேணும் எண்டு முதல் டிகிறியோடயே பதலி கொடுத்தது நீங்க என்னடா எண்டால் எல்லாம் பெரிசாக்குகிறீர்கள் …
அன்புடன் நித்திக்கு. உங்களின் கடந்த காலம் புலிகளின் பங்கு போன்ற விடயங்களை நீங்கள் என்றுமே விமர்சித்ததில்லை ஆனால் யாழ்பாணத்தான்களையும் மற்ற எல்லாரையும் விளாசித்தள்ளுவீங்கள் நாங்கள் மிக பல காலம் இவறறை அதானித்தே வந்துள்ளோம் நீங்கள் பொது மேடைகளில் விளாசும் போது முன்னால் இருந்து கேட்கும் நாங்கள் எத்தனையோ சுந்தரம் கொலை தொடக்கம் பதில் வருமா என்று தான் தேடுவொம்.
நிறையவே கேட்கக் கூடியவாறு இப்போததான் இணையத்தளங்கள் வந்துள்ளதே இது உங்களை மட்டுமல்ல புலிகளில் இருந்த பலரின் பதில்கள் தேவையாக உள்ளது.
உங்களின் தனிப்பட்ட வாழ்க்கைகளை நாம் கேட்க வில்லையே!! புலிவாழ்க்கையைத்தான் கேட்கிறோம் பதில் வரும் வரை கேட்போம்.
Jeyabalan T on January 19, 2009 11:38 am தத்துவங்களை மட்டும் வைத்துக் கொண்டு தங்கள் கைகளில் ஊத்தைபடாது ஆடிக்கொரு புத்தக வெளியீடு அமாவாசைக்கு மாநாடு செய்யும் புலம்பெயர் முன்னணிகளின் பின்னணிகள் யாவரும் அறிந்ததே.
தத்துவங்கள் அற்ற நடைமுறையும் நடைமுறையற்ற தத்துவமும் பயன்தரப் போவதில்லை.
இலங்கையில் சாதியப் போராட்டங்களை நடாத்தி ஒடுக்கப்பட்ட மக்களின் விலங்குகளை ஒடித்த பெருமை மார்க்ஸிய லெனினிய கட்சிகளுக்கு உரியது. அந்த பின்னணிகளில் இருந்து வந்தவர்களே ‘இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்’ என்ற நூலை எழுதிய சி கா செந்திவேல் மற்றும் ந இரவீந்திரன். மேலும் இன்றும் அவர்கள் அந்த மக்களுடன் நின்று போராடிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட முடியாது.
ஆனால் இன்று புலம்பெயர் நாடுகளில் சாதியம் பற்றி பேசுபவர்களும், தலித்திய அறிவு மாற்றம் செய்பவர்களும், அநேகமானோர் சாதியப் போராட்டங்களை புத்தகங்களில் மட்டும் படித்தவர்கள். மேலும் அவர்கள் சார்ந்து இயங்குகின்ற அரசியலும் சந்தேகத்திற்கு உரியதே. கடந்த ஆண்டு பேராசிரியர் திஸ்ச விதாரணவிடம் தலித் முன்னணி மகஜர் ஒன்றைக் கையளித்தது. அதன் பின்னர் நடந்த உரையாடலில் அங்கு வந்திருந்த எ பி நிஸாம் காரியப்பர். ‘நல்ல காலம் ஜாதிக ஹெல உறுமயவினர் வரவில்லை. வந்திருந்தால் இன்னும் கொஞ்சகாலம் இதை வைத்து அரசியல் செய்திருப்பார்கள்’ என்ற வகையில் கருத்து வெளியிட்டார். அதுமட்டுமல்ல தலித் முன்னணியின் முக்கிய உறுப்பினர் இலங்கை அரசுசார்பான கட்சிகளுடன் இணைந்தது என்பனவும் அண்மைய வரலாறு. இந்த பின்னணிகளில் இருந்தே புலம்பெயர் தலித் அரசியல் பார்க்கப்படுகிறது அது தவிர்க்கவும் முடியாது.
காரைநகர் நலன்புரிச் சங்கத்தில் ஒருவர் அவரது சாதி அடையாளத்தைக் கூறி ஒதுக்கப்பட்டது தொடர்பாக நண்பர் சேனன் கடைசியாக லண்டனில் நடைபெற்ற தலித் மாநாட்டில் ஒரு விடயத்தைக் கொண்டு வந்தார். தலித்துகளுக்காக போராடுபவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் கூட்டிய மாநாட்டில் தலித் ஒடுக்குமுறைபற்றி பேச அவர்கள் தயாராக இருக்கவில்லை. அதனைக் கதைப்பதற்கு இது இடமல்ல இது நேரமல்ல என்ற வகையில் தட்டிக் கழிக்கப்பட்டது. அதற்குப் பின்னர் இன்று வரையும் தலித் முன்னணி அது பற்றி எவ்வித அக்கறையும் எடுக்கவில்லை. தலித் முன்னணி வெளியிட்ட முதலாவது அறிக்கை கூட தலித் மக்களுக்காக வெளியிடப்படவில்லை. தனிநபர் முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்ளவே அவ்வறிக்கை வெளியிடப்பட்டு இருந்தது. நிற்க.
இதில் மிகத் துரதிஸ்ட்ம் என்னவென்றால் இலங்கையில் சாதிய ரீதியில் ஒடுக்கப்பட்ட மக்களுடன் எவ்வித தொடர்பு மற்றவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து கொண்டு அந்த மக்களுடன் வாழ்ந்து அந்த மக்களுடன் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு தலித்தியத்தை ஏற்றுமதி செய்ய முற்படுகின்றனர். இங்கு இவர்களுக்கு அந்த மக்கள் சார்ந்த நலன் என்பதிலும் பார்க்க தாங்கள் சார்ந்த தங்கள் கட்சி சார்ந்த நலன்களே முன்வைக்கப்படுகிறது. அதற்கு இலங்கையில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களைப் பயன்படுத்த முற்படுகிறார்கள்.
கன்பொல்லை மக்களுக்கும் இலங்கையில் வாழும் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கும் யார் உண்மையான போராளிகள் என்பது தெளிவாகத் தெரியும். சம்புகன் போன்றவர்களின் எழுத்தக்கள் அந்த மக்களை நோக்கி அமைந்ததாக இருக்கட்டும். நேரம் இருந்தால் இங்குள்ள பகுதிநேர தத்துவவித்தகர்களுக்கு கொஞ்சம் ஆழமாகவும் எழுதவும். ஏனென்றால் அவர்களுக்கு மக்களிடம் கற்றுக்கொள்ளத் தெரியாது அல்லது வாய்ப்பில்லை. அதனால் நீங்கள் எழுதுவது அனைவருக்கும் உதவியாக இருக்கும்.
த ஜெயபாலன்.
(நீங்கள் சொல்வதுபோல்) வேலுப்பிள்ளையின் மகனோடு நித்தி ஒட்டிக்கொண்டதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், அதே காலகட்டஙகளில், மாக்சீயமும், லெனினியமும் பேசிக்கொண்டு அதே வேலுப்பிள்ளையின் மகனின் யுத்த முறைகளைப் பின்பற்றியவர்கள் இறுதியில் அதே வேலுப்பிள்ளையின் மகன் தான் மக்களின் இரட்சகர் என்று துதி பாடிக்கொண்டு சோத்துக்கும், புகழுக்கும் அவரது காலில் விழுந்த கண்கொள்ளாக் காட்சிகள் பல இன்னமும் மக்கள் மனதிலிருந்து மறையவில்லை. அது அவர்களது இயஙகியலாக அல்லது பொருள் முதல் வாததின் பாதிப்பாக இருக்கலாம். அப்படியானால்,நித்தி செய்த மனிதாபிமான உதவி எவ்வளவோ மேல். அவர் தனது வாழ்க்கையையும் , பிரகாசமான எதிர்காலத்தையும் பணயம் வைத்தே அவ்வுதவியையும் செய்தார்.(இன்று அவர் அதே யாழ்ப்பாண பல்கலைக்கழகதின் துணை வேந்தர் பதவியிலிருந்து ஒய்வு பெற்றிருக்க கூடும்).போராட்டம் சரி, ஆனால் நோக்கம் தவறு என்று பேசித்திரிந்து விட்டு இறுதியில் ஒசிச் சவாரி செய்த மாஜி மாக்சியர்களைப்போல் அவர் சிந்திக்காமல் போனது அவருடைய தவறு என்று சொன்னால் அதை நான் மறுக்க மாட்டேன்.
ஒருவருடைய சிந்தனை முறையில் மருத்துவ ரீதியான தலையீடு எதுவும் தேவைப்படாத பட்சத்தில் அவரால் அறிவையும் அறியாமையையும் எந்த அளவுகோல் கொண்டு வேறுபடுத்த முடியுமோ அதே அளவுகோல் கொண்டுதான் நானும் நித்தியை அளவிட்டேன்.நித்தி விரிவுரையாளராகப் பணியாற்றிய அதே காலகட்டத்தில் தமது படிப்புநெறி சார்ந்து ஒரு ஆங்கிலப் புத்தகத்தைக் கூட புரட்டிப் பார்க்காத பல விரிவுரையாளர்கள் (குறிப்பாக) கலைப்பீடத்தில் இருந்தார்கள். (இன்றுள்ள நிலைமையைப்பற்றி பேசவே வேண்டாம்) இன்னும் பலர் தமது ஊரைவிட்டு முதன் முறையாக வெளியே வந்த அனுபவத்தைதான் தமது பேச்சிலும் நடையுடை பாவனையிலும் வெளிப்படுத்தினார்கள்.
கூட்ட்ங்களில் நித்தியின் பேச்சுக்கள் தான் பேச எடுத்துக்கொண்ட விடயத்தின் மீது ஒருநடுநிலையான அவதானிக்கு ஆர்வம் எழக்கூடியதாக அமைவது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டதே. அவருடைய பேச்சுக்களை நீஙகள் பிழைபிடிக்கும் நோக்கத்துடன் பாராமல் சாதாரண மனிதன் என்ற நிலையில் இருந்து பார்ப்பது மன ஆரோக்கியத்திற்கு நல்லது. செந்தில்வேலும் சிவசேகரமும் தம்மீது வீசப்படும் குற்றச் சாட்டுக்களுக்கு அறிவு ரீதியாகாப் பதில் தருவதே நல்லது. அதுவே அவர்களது விருப்பமாயும் இருக்கும்.
ஜெயபாலன் சரியாகச் சொல்லியுள்ளீர்கள். வடபுலத்தில் தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக களத்தில் நின்று போராடிய இன்றும் போராடிக் கொண்டிருக்கும் செந்திவேல் ரவீந்திரன் மற்றம் இப்போராட்டத்திற்கு எல்லா வகையிலும் துணை புரியும் சிவசேகரம் போன்றவர்களை கீழ்தரமாக விமர்சிக்க நித்தியானந்தனுக்கு என்ன உரிமை உண்டு. காலத்திற்கு காலம் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்பதுபோல கொள்கை மாறும் நித்தியானந்தம் எங்கே வாழ்க்கை பூராக ஒடுக்கப்பட்ட எங்கள் மக்களுக்காக போராடும் தோழர் செந்தில் எங்கே. நித்தியானந்தம் இதை புரிந்துகொள்ளவேண்டும்
பல்கலைக்க்ழகத்தில் விரிவுரையாளராக நியமிக்க்ப்பட முதல் டிகிரிதான் அடிப்படைத் தகுதி நண்பரே.
உண்மையான மாக்சிச-லெனினிச வாதிகள் ஒருபோதும் வேலுப்பிள்ளையின் மகனின் காலில் விழுந்திருக்க மாட்டார்கள்! வெறும் மாக்சிச-லெனினிச சருகுககள்தான் கூழுக்;கும் கஞ்சிக்கும் வீழ்ந்திருக்கும்! இது அதிசயமல்ல! இதைவிட பெயர்களைக் குறிப்பிட்டால் விவாதிக்க வசதியாயிருக்கும் தாமிரா மீனாட்சி அவர்களே! புதுவை இரத்தினதுரை -யோகேந்திரநாதன் போன்ற சருகுகள் வேலுப்பிள்ளையின் மகனை >தமிழ்மக்களின் இரட்சகர் என்றே போனவர்கள்! இப்போ புரிந்நதிருக்கும் . இரடசகர் யாரென்று? தமிழ்மக்களின் அபிலாசைகளை கணக்கில் எடுக்காது எதிரி யார்? நணபர்கள் யார்? என்று தெரியாது குறுந்தேசிய இனவெறி அரசியலால் நீயும் >உன் போராட்டமும் வெகுவேகமாய் இல்லாது போகும் என்று இயங்கியல்-பொருள்முதல்வாத கணணோட்டத்தில் சொன்னவர்களும் உண்மையான மார்க்சிச-லெனினிச வாதிகளே! இதை நிவர்த்தி செய்தால் உன் போராட்டம் விடுதலைப் போராட்டமாகப் பர்ணமிக்கும் எனச் சொன்னவர்களும் அவர்களே! இது நித்திக்கும் தெரியும்!
தாமிரா மீனாட்சி அவர்கட்கு!
நீங்கள் நித்தியின் மீதுள்ள அதீத பக்தியால்> அவரை முழுமுதற் கடவுளாக தொழுகின்றீர்கள்!
இது உங்கள் புரிதலின் தவறே!
“அடிமை விலங்கொடிப்போம் அதில் ஆயுதங்கள் செய்திடுவோம்
கொடுமை மிக மலிந்த குவலயத்தை மாற்றிடுவோம்”
இந் வகையான ஆக்குரோசமான முறையில் போராட்ட வடிவத்தை வடபகுதி முதன் முதலில் கையிலெடுத்ததே தீண்டாமைக் எதிராகத்தான்.
சிறுபான்மைத் தமிழர் மகாசபை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அதன் தொழிற்பாடுகள் தொடாந்த போதும் கால்நூற்றாண்டு காலமாகியும் சாதிப்பிரிவுகளுக்காகக் அரங்கேற்றப் பட்ட சமூக வன்மங்கள் குறைந்த பாடில்லை!
இந்த வன்மங்கள் உடனடியாகத் தீர்க்கப்படவேண்டும் என்று வடபிரதேசக் கமம்யுனிஸ்டக் கட்சிதான் பிரசதசக் கமிட்டியில் தீர்மானம் போட்டது. இதில் முக்கிய பங்கெடுத்தவர்கள் கார்த்திகேசன்> கந்தவாமி> சின்னத்தம்பி உட்பட அன்று கட்சியின் உறுப்பினர்
வேலைத் திட்டத்தை வகுத்தபோது சிறுபான்மைக் தமிழர் மகாசபையும் உள்வாங்கப்படவேண்டும். அதேவேளை தீண்டாமை ஒழிப்பில் தீவிரம் காட்டவேண்டின் திறல்மிக்க இளம் அபைப்பின் தேவையுள்ளதென
கருதி தீண்டாமையொழிப்பு வெகுஸன இயக்கமும் உருவாக்கும் தீர்மானமும் எடுக்கப்பட்டது
இந்த அமைப்புகளின் தலமை அந்த பாதிப்புக்குள்ளான எங்களிடமே தரப்பட்டது.இந்த வகையில் உள்வாங்கப்பட்டவர்கள் எஸ்ரிஎன்/ எம்ஜி/ ரகுநாதன்/ பொன்னையா இன்னும் பலர் இந்தப் போராட்டத்தின் பின்பலத்தில் பெருமளவு பங்கு கம்யூனிஸ்ட் கட்சிக்கே இருந்தது. போராட்டத்தின் போது பல கொலைகளைத் தவிர்த்தும் சிலரைத் தண்டனைகளிலிருந்து தப்பவைத்தும் தேர்தலைப் பகிஸ்காpத்தும் ஆலயப்பிரவேசங்களை செய்தும் வெறும் 5 ஆண்டு காலப்பகுதியில் பாரிய மாற்றத்தை கொண்டு வந்தனர்.
இருந்தும் இன்று இதுபற்றிய யாருடைய பார்வையிலும் கட்சியின் பங்கு மறைக்கப்பட்டே காண்கிறது. இதற்காக பாரிய பங்களித்த சிலர் மேல் ஜாதியினராகப் பார்க்கப்பட்டு பதிவுகளில் உள்வாங்கப்படாத பாரிய குறைபாட்டை பாரிஜ் மகாநாட்டில் பார்க்கமுடிந்தது.
எனவே எழுதுபவர்கள் பூரிதலோடும் ஆய்வோடும் எழுதுவதும் விமர்சிப்பவர்கள் பொறுப்போடு விமர்சிப்பதும்.
அவசியத்தலும் மேலானவை.
ஆம்! நித்தியின் விமர்சனம் பொறுப்பற்றது என்ற போதும் அதற்காக நித்திபறி எழுதியதும் பிரசுரமானதும் அதைவிடப் பொறுப்பற்ற தனம்.
எதற்கெடுத்தாலும் கம்யுனிஸ்டுக்கள் என்று காட்டி அதன் மேல் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும் தேவை ஒருவகை யாழ்ப்பாண வர்க்க குணாம்சம். அதுக்கொன்றும் மருந்தில்லை.
நித்தி எப்பொழுதாவது கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்ததை நான் அறியவில்லை.. நித்தியின் கற்பிதம்/ பொருளாதார தலைப்புகளில்-பொதுவான தலைப்புகளில் பேசும் போது தரமற்ற தன்மை தோன்றுவதில்லை.
தகுதியற்றவர் என்றோ/ மலையகத்தைப் பிரதிநித்தவப்படுத்தும் நியமனமென்றோ எழுதுவது மிகமோசமான அணுகுமுறை என்றே கூறலாம்.
நித்தி புலிகளிடம் சிக்கியது தற்செயல் நிகழ்சி என்பது தொpந்தவன் நான். வெளியில் வரமுடியாதிருந்ததும்/ எதிர்த்து இயங்கவோ பேசவோ முடியாதிருந்தது நித்திக்கு மட்டுமல்ல பலருக்கு ஏற்பட்ட துன்பம். மிக நெருக்கமாகப் பழகுபவர்கள் நிஜமான போக்கை அறியக்கூடும். இருந்தும் இந்தக் கட்டுரையின் போக்கிற்கு பதிவாகும் பின்னூட்டங்களில் இது பற்றிய தேடல் அவசியமா?
சரணியனின் பதிலிடுகையுடன் நான் பெருமளவுக்கு உடன்படுவதால், நித்தி பற்றிய விவாதத்தில் சிறிய ஒரு விபரத்தை மட்டும் தர விரும்புகின்றேன். நித்தியை அநேகமானோர் அவருடைய கைதுக்குப் பின்னரே கேள்விப்பட்டிருக்கிறார்கள். அதன் காரணமாக அவரை வெறும் முன்னாள் புலியாகவே பார்க்கிறார்கள். அவர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழத்திற்கு விரிவுரையாளராக வருமுன்னரே மலையகத் தொழிலாளர்களை தொழிற்சஙக ரீதியாக அணிதிரட்டுவதிலும், கம்யூனிஸ்ட் கட்சியின் (சண்முகதாசன்) அரசியல் நடவடிக்கைகளில் தீவிர பங்காற்றியவர் என்பதும் யாழ்ப்பாணத்திலும் மட்டக்கள்ப்பிலும் அரசியல் அரிச்சுவடி ப்டித்துக்கொண்டிருந்த பலருக்குத் தெரிய நியாயமில்லை. ஒரு பத்திரிகையாளராக, தான் சார்ந்திருந்த மக்களின் அவலஙகளை வெளிக்கொணர்வதில் அவருடைய பங்கு மகத்தானது என்பதையும் விபரம் தெரிந்தவர்கள் ஒப்புக்கொள்வார்கள்.
ஒருநூல் விமர்சனத்தில் அதை வெளியிடுபவர்கள் எதை எதிபார்க்கிறார்கள்? பேப்பர் நல்லாயிருக்கு, மட்டை வடிவாயிருக்கு, விலையும் மலிவாயிருக்கு.. போன்ற சமாச்சாரங்களையா? அதுதான் நல்ல விமர்சனம் என்றால் அதைச் செய்வதற்கு அய்ரோப்பா என்ன உலகம் முழுவதும் நிறையப் பேர் காத்திருக்கிறார்கள்..நித்தி முன்வைத்தது விமர்சனம் என்பதையும் (நாவலன் சொன்னது போல்) அதற்கு உஙகள் அறிவால் பதிலிடுஙள் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இந்தக் கட்டுரையில் நித்தியானந்தனைப் பற்றி சொல்லப்பட்டதை விடவும் சில முக்கியமான கருத்துகள் சொல்லப்பட்டிருப்பதை அவதானிக்கவும். அவை தொடர்பாக விவாதங்களைத் தொடராலாம்.
“செந்தோழர்கள்”, “பசை வாளிகள்” என்றெல்லாம் நித்தி “அறுவை” செய்து மற்றய இயக்கங்களைக் தாக்கி எழுதியவை ஆவணங்களாக உள்ளன.
நித்தியின் அருவருக்கத் தக்க கமுயூனிச எதிர்ப்பும், புலிகளின் துதிபாடலும் இன்னும் எழுத்துக்களாக உள்ளன. மறுக்க முடியாதவை.
நித்தியை நான் சந்தித்தது புலிகளின் கரையோரப் பயிற்சி முகாம் ஒன்றில் தான்.
தாமிரா, இவையெல்லாம் இங்கு வேண்டாம் கேவலாமாக இருக்கும்.. கட்டுரையைப் பற்றிப் பேசுங்கள். …
இந்த புத்தக விமாசன அரங்கு இங்கு லண்டனில் நடந்தபோது நானும் சமூகம் அளித்தேன். நித்தி வழமையான தன் பாணியில் நக்கலும் கிண்டலும் நளினமும் கொண்டு அருவருக்க தக்கவகையில் சிவசேகரத்தை சாடினார். இக் கூட்டத்தில் சிவசேகரத்தோடு இன்றுவரை நெருக்கமாக உள்ள பலர் / சிவசேகரத்தோடு சேர்ந்து புத்தகம் விட்டவர்கள். எல்லோரும் நித்தியின் இப் பேச்சை கேட்டு ரசித்துக்கொண்டுதான் இருந்தனர். ஒருவர்கூட நித்தியின் இந்த தனிப்பட்ட தாக்குதலை விமர்சிக்கவும் இல்லை. கண்டிக்கவும் இல்லை. இங்கு சும்மா குந்தியிருந்துவிட்டு புனைபெயர்களில் இப்போது பின்னூட்டம் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். நித்தியை விட மிக கேவலமானவர்கள் இவர்கள். நித்தியை விமர்சிக்கவோ கண்டிக்கவோ இவர்களுக்கு எந்த தகுதியும் கிடையாது.
நித்தியானந்தனை மட்டுமல்ல சரவணன் மீது மேற்கொண்டதும் தனிப்பட்ட தாக்குதலே.
சரவணனின் கட்டுரைகளை நான் வாசித்திருக்கிறேன். அவரிடம் ரோகணவிஜேவீர தொடர்பான விமர்சனம் இருந்ததே தவிர ஆராதனையை அவர் தனது கட்டுரைகளில் வெளிப்படுத்தியதாக நான் காணவி;ல்லை. சரவணனுக்கு ஜேவிபியில் இருந்து அதனுடைய இனப்பிரச்ச்pனை தொடர்பான கொள்கைகளால் முரண்பட்டு வெளியேறியவர்களுடன் தொடர்பிருந்ததாகவே நான் அறிந்திருக்கிறேன். அந்தவகையில் சரவணைனைத் தாக்க எடுத்த ஒரு எடுகோளாகவே அதனைக் காணமுடிகின்றது. மறுபுற்தில் நவசமசமாஜக்கட்சியின் ஆதரவாளராகவும் இருந்து வந்தவர்எனவும் விக்கிரமபாகு கருணாரத்ன புலிகளின் ஆதரவாளர் என்று சொல்வதனூடாக சரவணனைபுலிகளின் ஆதரவாளர் என்று நிறுவுவது கட்டுரையாளருக்கு அவசியமாகப்படுகிறது. கட்டுரையாளர் இதற்காக இவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டியதில்லை. மிக வெளிப்படையாகத் தொpகிற விடயம் என்னவென்றால் சரவணன் ஜேவிபியின் இனப்பிரச்சினை தொடர்பான கொள்கைகளால் அதனுடன் முரண்பட்டு வெளியெறியவர்களுடன் தொடர்பைக் கொண்டிருந்த சரவணனன் தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமையை ஏற்கும் நவசமசமாஜக் கட்சியை ஏற்றதில் ஆதாpத்ததில் என்ன தவறிருக்க முடியும். சரவணனுடைய அரசியல் ரீதியான அபிப்பிராயத்தை கொச்சைப்படுத்தித் தான் தன்னை நிறுவ வேண்டிய பரிதாபம் கட்டுரையாளருக்கு.
மறுபுறத்தில் சரவணனுடைய தலித்தியக் கொள்கை குறித்த அபிப்பிராயத்தில் எனக்கும் உடன்பாடு இருந்ததில்லை. ஆனால் ஒரு தலித்தினுடைய அபிப்பிராயம் என்றளவில் அதை மதிப்பதற்கு நாம் பழக்கிக் கொள்ள வேண்டும். மதிப்பது என்பது விமர்சனம் இல்லாமல் ஏற்றுக் கொள்வது என்பதல்ல.
தமிழ்நாட்டில் தலித்திய இயக்கங்கள் சாதிச்சங்கங்களாகச் சுருங்கிப் போய் இருப்பதும் வாக்கு வங்கிக்கான ஒரு வழிமுறையாக தலித்தியம் இன்று பயன்படுவதும் கண்கூடு.
புலம்(ன்) பெயர்ந்த நாட்டில் புலிகளை எதிர்க்கும் யாழ். உயர் சைவ வேளாளருடைய அரசியல் இருப்புக்கான ஒரு ஆயுதமாக தலித்தியம் பயன்படுகிறது என்பது தான் உண்மை. அங்கு தலித்தியம் பேசும் யார் தலித்தாக இருக்கிறார் என்பதை யாராவது நிறுவ முடியுமா? அந்த வகையில் சரவணன் தார்மீக உரிமையைக் கொண்டவராக இருக்கிறார். எவ்வளவு குறைபாடுகள் அவரது பார்வையில் இருந்த போதும்.
சரவணனைத் தாக்க கட்டுரையாளர் பயன்படுத்திய இன்னொரு உபாயம் பொதுப்புத்தி சார்ந்த மலினமான ஆயுதம். என்ஜிஓ பத்திரிகையின் குளு குளு அறை என்கிற படிமம். இதற்கும் தமிழ்நாட்டுத் தினசாpகளில் பாலியல் தொழிலாளர் கைது செய்யப்படும் சந்தா;ப்பங்களில் ‘அழகிகள் கைது’ என்று எழுதி உருவாக்கும் படிமத்துக்குமிடையே அதிக வேறுபாடுகளில்லை. ஒரு இடது சாரி எழுத்தாளரின் எழுத்து இவ்வளவு பலவீனமாக இருப்பது தான் இலங்கையில் இடதுசாரி இயக்கத்தின் தோல்வியின் அடிப்படை. இந்த இடத்தில் இன்னொன்றையும் சுட்டிக்காட்டுவது பொருந்தும். அதாவது தமிழ்நாட்டில் தலித்திய இயக்கங்கள் இன்று சாதிச்சங்கங்களாகச் சுருங்கியது போல இலங்கையில் இடதுசாரி இயக்கங்கள் வெறுமனே சாதி எதிர்ப்புப் போராட்ட அமைப்புக்களாகச் சுருங்கி விட்டதும் வரலாறு. இதனால் தான் அவை பேரினவாத அரசுகளுடன் தமிழரசுக்கட்சி போல கூட்டுச் சேர முடியுமாக இருந்தது. இருக்கிறது. இது குறித்த இலங்கையின் இடதுசாரி இயக்கங்களின் சுயவிமர்சனம் என்ன? இன்றுவரை இனப்பிரச்சினை குறித்த அவர்களுடைய பார்வை தான் என்ன?
இறுதியாக இன்னொரு விடயத்தையும் மேர்ஜ் என்ஜிஓ குளு குளு அறை என்பது பற்றியும் குறிப்பிட வேண்டும். முதலிலேயே சரிநிகரின் எல்லாக் கருத்துக்களுடனும் எனக்கு உடன்பாடில்லாவிடினும் இலங்கையில் வெளிவந்த பத்திரிகைகளுள் சரிநிகா; கருத்துத் தளத்தில் ஏற்படுத்திய அதிர்வுகள் மிக முக்கியமானவை. இலங்கைப் பத்திரிகைச் சூழலில் ஒரு புதிய போக்கிற்கும் அது வழிவகுத்தது. அது நடாத்திய விவாதங்கள் பயன்மிக்கவை. ஆனால் மேர்ஜ் என்ற நிறுவனத்தில் சரிநிகரின் இடம் என்பது இலங்கையில் தமிழா;களின் நிலை போலத் தான் என்று சொல்வதில் ஒன்றும் தவறிருப்பதாக நான் நினைக்கவில்லை. மேர்ஜ் நிறுவனத்தின் கணக்காளராக இருந்தவர் தொழில்முறையில்; என்னுடைய நண்பர். அவரைச் சந்திப்பதற்காக நான் பலமுறை அங்கு சென்றிருக்கிறேன். மேர்ஜ் நிறுவனத்திலேயே குளிரூட்டப்பட்டிருந்தது கணணிகள் வைக்கும் அறை தான். மற்றப்படி குளிரூட்டப்பட்ட அறை எதுவும் அங்கிருக்கவி;ல்லை. அடுத்தது என்னுடைய நண்பரான அந்தக் கணக்காளரின் தகவலின்படி சரிநகருக்கு என புறம்பாக கணக்கோ நிதி;க்கையாளுகைக்கான அதிகாரமோ இருக்கவில்லை. மேர்ஜ் நிறுவனத்திடமே அது இருந்தது. சரிநிகா; ஊழியர்களுக்கு மாதாந்தப் படியே வழங்கப்பட்டு வந்தது. அவர்கள் தமது சம்பள உயர்வுக்காக மேர்ஜ் நிறுவனத்திற்குள்ளேயே போராட வேண்டியிருந்தது. மேர்ஜ்ஜின் மற்றைய பிhவுகளில் வேலை செய்தவர்களுடைய சம்பளத்தை விட இவர்களுடைய சம்பளம் குறைவானது என்பதையும் நண்பர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
இவற்றை வைத்துப் பார்க்கும் போது சம்புகனின் விமர்சனம் மிகப்பவீமானதாக இருக்கிறது இலங்கையின் இடதுசாரிகளைப் போல என்ற உண்மை முகத்திலறைகிறது.
இங்கு கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் புதிய ஜனநாயகக் கட்சியான முன்னாள் இடதுசாரிக்கட்சியினரிடம் பாலசுப்ரமணியம் என்பவர் பகிரங்கமாகவே ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார். என்ஜிஓவிடம் பணம் வாங்கினார்கள் என்று மற்றவர்களைத் திட்டுகிறீர்களே உங்களுடைய கட்சிக்கும் உங்களுடைய புத்தகசாலைக்கும் சீனாவிடமிருந்து பணம் கிடைத்து வந்தது எனக்கு நன்றாகத் தெரியும். எந்த நோக்கமுமில்லாமல் இல்லாமல் அவர்கள் பணம் தரவில்லை. அதேபோல இப்போது என்ஜிஓக்கள் பணம் வழங்குகின்றன. அவ்வளவு தான். சீனா பணம் தரவில்லை என்பதை உங்களால் மறுக்கமுடியுமா எனப் பகிரங்கமாகவே கேட்டிருந்தார். அங்கிருந்த பேராசிரியர் சிவசேகரம் உட்பட புதிய ஜனநாயகப்க் கட்சிப் பிரமுகர்கள் எவரும் இந்தப் பகிரங்கமான கேள்விக்கு பதிலெதையும் தரவில்லை. அவர்களால் பேச முடியாது. உண்மை அப்படி!
//நித்தியானந்தனை மட்டுமல்ல சரவணன் மீது மேற்கொண்டதும் தனிப்பட்ட தாக்குதலே//Hasan Ali
கசன்அலி உங்கள் கருத்து ஏற்புடையது. அவ்வாறாயின் நித்தியானந்தன் அவர்களோடு ஒட்டிப்பிறந்த மற்றவர்களை கொச்சைப்படுத்தும் விமர்சனங்கள் தனிப்பட்ட தாக்குதல் இல்லையா? லண்டனில் நடந்த புத்தக விமர்சன கூட்டத்தில் நித்தியானந்தம் சிவசேகரம் பற்றி பேசியது தனிப்பட்ட தாக்குதலாக உங்களுக்கு தெ ரியவில்லையா. எதையும் நியாயக் கண்ணாடி கொண்டுபாருங்கள்.
நித்தியின் மீது மேற்கொள்ளப்பட்டது தனிப்பட்ட தாக்குதல் என்று சொல்வதால் நித்தி தனிப்பட்ட தாக்குதல் செய்வததில்லை என்றோ செய்ய மாட்டாரென்றோ அர்த்தமில்லை. அந்த அர்த்தப்பட நான் எழுதவுமில்லை. கருத்துக்களை விவாதியுங்கள் என்று தான் நான் கோரியிருக்கிறேன்.
ஹசன் அலி சொல்வதில் நியாயமிருக்கிறது. விவாதப் பொருளாக ஒரு கருத்து அமையும் போது வாய் திறக்காதவர்களெல்லாம் தனிநபர்களை நியாயப்படுத்துவதில் மட்டும் உற்சாகம் காட்டுகிறார்கள்.
கசன் அலி அண்ணா! இப்பத்தான் நித்தியின்றை ஒருமாதிரி ஓய்ந்திருக்குப் போலை கிடக்கு! அதுக்குள்ளை சரவணன்ரை குப்பைத்தொட்டியைத் திறந்து விட்டிருக்கிறயள்! ஐயோ நாறவெல்லோ போகுது!
சிவசேகரத்திற்குச் சுனாமி அடித்த கதை தெரியுமா?
http://unidentifiedspace.blogspot.com/2008/04/6.html