சல்மான்குர்ஷித் அறக்கட்டளையில் மோசடி நடைபெற்றதாக கூறப்படுவது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.
குர்ஷித்தின் மனைவி நடத்தி வரும் தொண்டு நிறுவனம், மாற்றுத்திறனாளிகளுக்கான நிதியை அபகரித்துக்கொண்டதாகவும், இதையடுத்து சல்மான் குர்ஷித் பதவி விலக வேண்டும் எனவும் சமூக சேவகர் அரவிந்த் கெஜ்ரிவால் புகார் தெரிவித்திருந்தார். கெஜ்ரிவாலின் புகாரை குர்ஷித் மறுத்துள்ளார். இந்நிலையில், இன்று காலை11.30 மணியளவில் பிரதமர் மன்மோகன் சிங்கை, குர்ஷித்தும் அவரது மனைவியும் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தன்னார்வ தொண்டு நிறுவன வியாபாரத்தில் இவை வழமையானவை என பெரும் இலாபம் தரும் அந்த வியாபாரத்தில் ஈடுபட்ட பலர் தெரிவிக்கின்றனர்.