கொழும்பில் அலரி மாளிகைக்குப் பின்புறம் உள்ள 80 ஆண்டுகால பழமைவாய்ந்த இந்துக் கோவில், பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவு காரணமாக இன்று வேறு இடத்துக்கு மாற்றப்படவுள்ளது.
கொழும்பு கொள்ளுப்பிட்டி தர்மாலோக மாவத்தையின் முடிவில், அலரி மாளிகைக்குப் பின்புறமாக சிறி மாரி அம்மன் கோவில் உள்ளது. 1920களில் இந்தப் பகுதியில், கொழும்பு மாநகரசபையினால், கொள்ளுப்பிட்டி தர்மகிட்யராமய விகாரைக்குப் பின்பாக, குடியமர்த்தப்பட்ட சலவைத் தொழிலாளர் சமூகத்தினரின் வழிபாட்டிற்காக 1930களில், இந்தக் கோவில் நிர்மாணிக்கப்பட்டது.
சலவைத் தொழிலாளர்கள் இலங்கையில் தாழ்த்தப்பட்டவர்களான பஞ்சமர்களுள் உள்ளடக்கப்படுகின்றனர்.
புலம் பெயர் நாடுகளிலும் இலங்கையிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காகக் குரல்கொடுகின்றோம் என்ற முகமூடிக்குள் மறைந்துகொண்டு இலங்கை அரசின் உளவுப்படைகள் போன்று செயற்படும் தன்னார்வ தலித் அமைப்புக்கள் இவ்வாறான சம்பவங்களைக் கண்டுகொள்வதில்லை.
மூன்று தல விருட்சங்களைக் கொண்டு 80 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்தக் கோவில் கொள்ளுப்பிட்டிப் பிரதேசத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வழிபாட்டிற்காக வந்து செல்கின்றனர்.
இந்த நிலையிலேயே கொழும்பு மாநகரசபை இந்தக் கோவிலை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபையே இதற்கான உத்தரவை வழங்கியுள்ளது. இந்தக் கோவில் அமைந்துள்ள இடத்தில் கொழும்பு மாநகரசபை வாகனத் தரிப்பிடம் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
இந்தக் கோவிலை அமைக்க நவம் மாவத்தையில் மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த இடம், சலவையகப் பகுதி என்றும், அது கோவில் அமைப்பதற்குப் பொருத்தமான இடம் இல்லை என்றும் கொழும்பு மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் ருக்சன் பெரேரா தெரிவித்துள்ளார்.
பிரான்ஸில் இருந்து இயங்கும் மகிந்த அரசின் செல்லப்பிள்ளைகளில் ஒன்றான இலங்கை தலீத் சமூக மேம்பாட்டு முன்னணி கோத்தபாயவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுக்குமா? ஸ்ரீடெலோ கீரன், எஸ்எல்டிஃஎவ் ராகவன், நிர்மலா ஈபிடிபி சட்டத்தரணி ரெங்கன் தேவராஜன் போன்றோர் பூனைக்கும் நண்பன் பாலுக்கும் காவல் என்பது போல் தலீத் அரசியலும் பேசி கோத்தபாயவின் அடியாட்களாகவும் எப்படி இருக்கு முடிகிறது? உண்மையில் இவர்கள் பதிலழித்தே ஆகவேண்டும்? அல்லது
…….
நான்
வேண்டுவது இதுதான்…
இறந்து கிடக்கும்
நம்மவர்கள் பேராலே
கேட்கிறேன்…
தண்டனை அளியுங்கள்!
நமது
தந்தையர் நாட்டு மண் மீது
சிவப்பு ரத்தத்தை
சிதற வைத்தவர்களுக்கு
தண்டனை அளியுங்கள்!
யாருடைய
ஆணையின் பேரில் இந்த
அக்கிரமங்கள் நடந்தனவோ
அந்த துரோகிகளுக்கு
தண்டனை அளியுங்கள்!
இந்த சவங்களின் மீது
சிம்மாசனம் ஏறிய
அந்த துரோகிகளுக்கு
தண்டனை அளியுங்கள்!
மறப்பவர்களுக்கும்
இந்தக் கொடுமைகளை
மன்னிக்கச் சொல்பவர்களுக்கும்
தண்டனை கொடுங்கள் !
நான்
எல்லோருடனும்
கை குலுக்க விரும்பில்லை
ரத்தக் கறை படிந்த
கரங்களைத்
தொடுவதற்கே விரும்பவில்லை
நான்
தண்டனை கோருகின்றேன்…! ( பாப்லோ நெருடா)
Dear Varathan,
How can you forget Rayakaran Ltd which is collaborating with all these guys? Rayakaran, ஸ்ரீடெலோ கீரன், எஸ்எல்டிஃஎவ் ராகவன், நிர்மலா ஈபிடிபி சட்டத்தரணி ரெங்கன் தேவராஜன் ..etc..
மாரியம்மனோட விளையாடினால் ரத்தம் கக்கித்தான் சாவிங்கள்….
Please just learn to work with that guy. Please do not try to fight him. New York – Oklahoma – Indiana, USA.
புலிகலின் வருடிகள் இப்போது புது அவதாரம் எடுத்து மனித உரிமை காவல்ர்களாக, ஆகி விட்டனர்,நல்லநகைச்சுவை, அந்த புலி கூட்டம் பச்சை பச்சை யாக மனித இறைச்ச்சி சாப்பிட்ட போது எஙு போனீர்கல்நீங்கள் …