சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு திருகோணமலை பஸ் நிலையத்துக்கு முன்பாக காணாமல் போனோரது உறவினர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது இனந்தெரியாதோரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காணாமல்போனோரை தேடியறியும் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தின்போது முகத்தை மறைத்துக்கொண்டு வந்த சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்த பதாகைகள் மற்றும் காணாமல்போனோரின் புகைப்படங்களையும் கிழித்து வீசியுள்ளனர். இலங்கை அரசபடைகளே இத்தாக்குதலைக் நடத்தியிருக்கின்றன என்பது சந்தேகத்திற்கு இடமானதல்ல. 30 இற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்த போதும் சம்பந்தப்பட்டவர்களைத் தடுக்கவோ கைது செய்யவோ எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை . தாக்குதல் சம்பவத்தில் காயமுற்ற சிலர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் தலைவர்கள் ‘சர்வதேசம்’ பார்த்துக்கொள்ளும் என ஓடி மறைந்துகொள்ள ‘சர்வதேசம்’ என்று அவர்கள் பெருமையுடன் அழைக்கும் அழிக்கும் அரச அதிகாரங்கள் தொடர்ச்சியாக பேரினவாத அரசுகளைப் பாதுகாத்துவருகின்றன.