முப்பது வருட ஆயுதப்போராட்டம் நந்திக்கடலோடு இரத்தமும் , உயிர்களுமாகக் கரைக்கப்பட்ட பின்னர் , தமிழ்ப் பேசும் மக்கள் தாம் ஒடுக்கப்பட்ட தேசிய இனம் என்பதை உணர ஆரம்பித்துள்ளனர்.
உலகத்தின் எங்காவது ஒரு மூலையில் தமிழ்ப் பேசும் மக்களின் சமூக நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்படுமானால் அங்கு இலங்கை அரச பாசிசத்தின் கோரத்தைக் குறித்துப் பேசாத ஒன்றைக் காண்பது அரிது. தாம் சார்ந்தவர்கள் சாரி சாரியாகக் கொல்லப்படுகின்ற போது உலகத்தின் அனைத்து அதிகாரங்களும் மௌனமாய்ப் பார்த்துக்கொண்டிருந்ததை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். ஆயிரம் தத்துவங்களும் , பிரச்சாரங்களும் இல்லாமல் தம் கண்முன்னே அநீதியையும் ,அக்கிரமத்தையும் உணர்ந்துகொண்டவர்கள் அவர்கள்.
முள்ளிவாய்க்கால் மனிதப் படுகொலைகளின் சூத்திரதாரிகள் இந்திய அரசோடும் உலகின் அனைத்து அதிகாரங்களோடும் இணைந்து நடத்தும் இனச்சுத்திகரிப்பை கண்ட தமிழ்ப் பேசும் மக்கள் இன்று திகைத்துப் போயிருக்கிறார்கள்.
இலங்கை இந்திய அதிகாரங்கள் மட்டுமல்ல உலகத்தின் அனைத்து ஆதிக்க சக்திகளுமே தம்மை நிர்வாணமாகக் கண்டுகொண்ட மக்கள் கூட்டத்தைக் கண்டு பயங்கொள்கிறார்கள். அவர்களை ஒரு புறத்தில் தனிமைப்படுத்தவும் மறுபுறத்தில் இலங்கை அரசின் அழிக்கும் நிகழ்ச்சி நிரலோடு அவர்களை இணைத்துக்கொள்ளவும் முயற்சிக்கிறார்கள்.
அனைத்துத் தமிழ் அரசியல் வியாபாரிகளையும் உள்வாங்கி வைத்துக்கொண்டு இலங்கை அரசு தனது இந்த செயற்பாட்டுத் தளத்தை விரிவாக்கிக் கொள்கிறது. சமூகத்தின் ஒவ்வொரு அசைவையும் மிகவும் திட்டமிட்ட வகையில் தனக்குச் ஏதுவாக பயன்படுத்திக் கொள்கிறது இலங்கை அரசு. அரசியலற்ற தலித்தியம் , அரசியலற்ற மனிதாபிமானம்,. அரசியலற்ற அபிவிருத்தி , அரசியலற்ற இலக்கியம் என்று தனது சமூகவிரோத அரசியலுக்கு எதிர்வினையாற்றாத ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் இலங்கை , இந்திய உலக அதிகாரங்கள் பயன்படுத்திக்கொள்கின்றன.
அரசியலற்ற இலக்கியத்தை நிறுவனப்படுத்தும் முதலாவது “சர்வதேச” முயற்சியாக இலங்கையின் தலைநகரில் தமிழ் எழுத்தாளர்களால் ஏற்பாடு செய்ய்யப்பட்டிருக்கும் இந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டைக் கருதலாம். அவர்களின் நிகழ்ச்சித் நிரலின் சிறிய முதலாவது ஆரம்பமாக “எழுத்தாளர் மாநாடு” இருக்கலாம்; ஆனல் அதன் பின்னணியில் உருவமைக்கப்படுகின்ற அனைத்து மக்கள் விரோத அரசியலும் இவ்வாறு தான் ஆரம்பமாகியிருக்கிறது.
ஒரு நிகழ்வின் அளவையும் பருமனையும் விட கோட்ப்பாடு சார்ந்த அதன் உள்ளடக்கம் என்பது தான் பிரதானமானது. ஆரம்பத்தில் புலம்பெயர் தேசங்களிலிருந்து ஒரிருவர் தான் அரசின் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்குள் உள்வாங்கப்பட்டனர். இன்று தமிழ்ப் பேசும் மக்கள் கூட்டத்தின் ஒரு குறித்த பகுதியினரையே அவர்கள் தமது வலைப்பின்னலுக்குள் உள்ளடக்குவதில் வெற்றிகண்டுள்ளனர்.
அனைத்து ஜனநாயக விழுமியங்களையும் தமது சொந்த நலன்களுக்கு அடகு வைத்துவிடலாம் என்பதைச் சமூகப் பொதுப்புத்தியாக மாற்றும் இன்னொரு நிகழ்வுத்திட்டம் தான் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு.
கொலைகளும் கூக்குரல்களுமாகக் காட்சிதரும் இலங்கை அரசின் உள் முற்றத்தில் , மனிதப் பிணங்களின் மேல் நடந்து சென்று கூட்டம் போடக் கூப்பிடும் அரசியலற்ற இலக்கியவாதிகள் ஒரு ஆரம்பம் மட்டுமே. இது குறித்து பேசும் சுதந்திரமுள்ள அரசியல் சூழலில் வாழுகின்ற ஒவ்வொரு சமூக உணர்வுள்ள மனிதனும் எதிவினையாற்ற மறுத்தல் என்பது அவமானகரமானது.
முதலாவதாக சர்வதேச எழுத்தாளர் மாநாட்டின் அடிப்படையில் பொதிந்துள்ள பொதுவான அரசியலின் தீவிர வலதுசாரிச் சந்தர்ப்பவாதம் குறித்துப் பேசப்பட வேண்டும். இரண்டாவதாக இன்றை சமூகப் புறச் சூழலில் அதன் பயன்பாடு குறித்து சொல்லப்பட்ட வேண்டும்.
ஈழப் படுகொலைகளின் பின்னான அரசியல் உலகின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் உரைகல். இங்கு வெறுமனே அரசியல் கனாவான்களாக உலாவந்த பலர் செய்ற்பாட்டுத் தளத்தை நோக்கி நகரவேண்டிய தேவையை இது உருவாக்கியுள்ளது. இங்கு உண்மைக்கும்
பொய்மைக்கும் , நீதிக்கும், அநீதிக்கும் , அடக்குபவனுக்கும் அடக்கப்படுவனுக்கும் இடையேயான அணிசேர்க்கைகள் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்திருக்கிறது. அடக்கு முறையின் பக்கத்திலும் , இலங்கை அரசு சார்ந்தும் வெளிப்படையாகவே ஒரு அணி சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ளது.
அதிகாரத்தின் அரவணைப்பிலுள்ள , இலங்கை அரசின் வலைப்பின்னலுள் அங்கம் வகிக்கின்ற ஒவ்வொருவரும் இந்த மாநாட்டை ஆதரிக்கின்றனர் என்பதே இதன் அரசியலற்ற அரசியலைப் புரிந்துகொள்ள நீண்ட விவாதங்கள் தேவையற்றவை என உணர்த்தி நிற்கின்றது.
தெருக்களில் அனாதைகளாக கொன்றுபோடப்பட்ட ஒவ்வொரு தமிழ் ,சிங்கள எழுத்தாளர்களினதும் உணர்வுகளையும் தமது அரசியலற்ற இலக்கியத்திற்கு விலைபேசி விற்பனை செய்யத்துணியும் ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தைச் சார்ந்த எழுத்தாளர்களான இவர்களை நிராகரிக்குமாறு மக்கள் பற்றுள்ள ஒவ்வொருவரையும் வேண்டுகிறோம்.
தேடகம் – கனடா
புதிய திசைகள் – இங்கிலாந்து
மே 18 இயக்கம் – கனடா
இனியொரு – இங்கிலாந்து
அசை – பிரான்ஸ்
03-12-2010
உடைந்து போன பேனாக்கள யாரும் எடுக்க வேண்டாம்,இரத்தம் நிரப்பி நாம் எழுதிய நம் இனத்தின் விடுதலை வரலாறூ எழுதுவதற்கு இரத்தம் இல்லாது நிற்கிறது.இனியும் எழுத எதுவும் இல்லை எங்களீடம்.தோற்றூப் போன தமிழ் இனம் தோற்கடித்தவர்களோடு வெற்றீ விழா நடத்த முடியாது.மந்தில் ஈரம் இல்லாது இருந்தால் மட்டுமே அது சாத்தியம்.
உணர்வு உள்ளவர்கள் – விழிப்பு உள்ளவர்கள்
உண்மையின் பக்கம் நின்று மாநாட்டைப்
புறக்கணிக்க வேண்டும்!
வெறும் புகழ் மோகிகள்தான்
சுயநலத்துடன் பங்கேற்பார்கள்.
“அனைத்துத் தமிழ் அரசியல் வியாபாரிகளையும் உள்வாங்கி வைத்துக்கொண்டு இலங்கை அரசு தனது இந்த செயற்பாட்டுத் தளத்தை விரிவாக்கிக் கொள்கிறது.”
உண்மைதான். அதேபோல் நீங்களும் இன்று பினாமி புலிகளின் தோளில் ஏறி அரசியல் நாடாத்த முயல்கிறீர்கள். இடது சாரிகளாக வேடம் போட்டு உங்கள் குறும் தமிழ் தேசியதிர்ற்கு காவடி தூக்குகிறீர்கள். புலிகளின் அழிவுக்கு முன் புலிகளின் பாசிசத்தை கண்டிக்கத நீங்கள் இன்று தேசிய வாதிகளாக வேடம் அணிந்தபடி, மஹிந்த பாசிசத்தை எதிர்கிரீர்கள். முதலில் உங்களின் பொய் முகமூடிகளை களையுங்கள். உங்கள் இடது சாரிகள் என்ற படத்தைக்க காட்டும் தொழிலை விட்டு விட்டு, உங்களின் மேல்வர்க்க சிந்தனயூடு சேர்ந்த வலது சாரிகள் நீங்கள் என்பதை பகிரங்கமாக வெளிபடுத்துங்கள்.
வீடு எரிகிறது அணக்க வேண்டும்.கூட்டம் ஓடி வருகிறது.ஒருவர் கிணற்றூத் தண்ணீர் வேண்டாம் என் கிறார்.இன்னொருவர் குளம் என் கிறார்.கடல் தண்ணீர்தான் கடலுக்குப் போகிறார் இன்னொருவர்.இப்படியே வீடு எரிந்து சாம்பலானதும் வீட்டுக்காரர் வருகிறார்.இப்படி பேசிப் பேசியே என் வீட்டை எரித்து விட்டீர்களே என்றூ புலம்பி அழுகிறார்.உங்கள் பின்னூட்டமும் அதைப் போன்றதே காசு.
இடதுசாரி என்ன இடதுசாரி? வெறும் ஜனநாயகவாதிகளையே புலி என்று முத்திரை குத்தும் ஒரு கூட்டம் முளைத்திருக்கிறது. அதுகூட இலங்கை அரச நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதி தான். இவர்களின் வழி கிசுகிசு, அவதூறு, துதிபாடல், தூற்றுதல், இப்படி இன்னோரன்ன செயல்களைத் திட்டமிட்டுச் செய்வார்கள். மத்தியதர வர்க்க மனோவியாதி கொண்டவர்கள் இப்படி அவதூறுகளில் குஷி அடைந்து விடுவார்கள். ஒன்லைன் கேம் போல தான் இவர்களின் அரசியல். எதைப்பற்றியும் அக்கறை இல்லத இந்தக் கூட்டம் மக்கள்பணத்திலிருந்து அவர்களின் உணர்வுகளைக் வரை சுருட்டிவைத்துக்கொண்டு அரசியல் கதைப்பார்கள்.
கொழும்பில் இடம்பெறவுள்ள சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு தொடர்பாக எதிர்வினையாற்றி விடுக்கப்பட்டுள்ள காத்திரமான அறிக்கைகளில் ஒன்றாக இவ்வறிக்கையை நோக்க முடியும். மற்றும் பல்வேறு நாடுகளில் பணியாற்றிவரும் தமிழ் அமைப்புக்கள் ஒன்றுகூடி விடுத்துள்ள இவ்வறிக்கை; எதிர்காலத்தில் ஒடுக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களுக்கான உரிமைப் போராட்டத்தில் மேலும் இவை தொடர்பான நடவடிக்கைகளையும், செயற்பாடுகளையும் ஒன்றுபட்ட தளத்தில் முன்னெடுப்பதற்கான அவசியத்தையும் கோரி நிற்பதாகவே நான் கருதுகின்றேன்.
கொலைகளும் கூக்குரல்களுமாகக் காட்சிதரும் இலங்கை அரசின் உள் முற்றத்தில் , மனிதப் பிணங்களின் மேல் நடந்து சென்று கூட்டம் போடக் கூப்பிடும் அரசியலற்ற இலக்கியவாதிகள் குறித்துப் பேசும் சுதந்திரமுள்ள அரசியல் சூழலில் வாழுகின்ற ஒவ்வொரு சமூக உணர்வுள்ள மனிதனும் எதிவினையாற்ற மறுத்தல் என்பது அவமானகரமானது என்ற வார்த்தைகளைத் தாங்கியிருக்கின்ற இவ்வறிக்கையோடு நான் உடன்படுகின்றேன்.
போராட முதல் அதற்கான சூழல் ஏற்படுத்தப் பட வேண்டும்.
நிச்சயமாக! ஆனால் அதை இலங்கை அரசாங்கமும் உலகின் எல்லா பிற்போக்கான அரசாங்கங்களும் சேர்ந்து சோல்லும் “அரசியல் வேண்டாம்” கொம்பனியோடு சேர்ந்த ஏற்படுத்த முனைகிறீர்கள்? அல்லவே! மூன்று வழிகள் உண்டு.
1. அழுத்தங்களை ஏற்படுத்தும் அரசியல் போராட்டங்கள்.
2. சீர்திருத்தப் போராட்டங்களை அரசியல் மயப்படுத்தல்.
3. வெகுஜன எழுச்சிகளைப் பாதிக்காத வன்முறைப் போராடங்கள். அதைவிடுத்து இலங்கை அரசு முன்வைக்கும் கருத்துடைய நிகழ்ச்சிநிரலில் இனைந்தல்ல. எதைப்பற்றியும் கவலைப்படாத லும்பன் களைப் போல் கதைக்காதீர்கள்.
முரளீதரன் சொல்வது சரியேதான். புகலிடத்தில் புலி ஆதரவு சக்திகளை தவிர்த்து மாற்றுத் தளத்தில் முற்போக்கு அம்சங்களோடு செயல்படும் இந்த ஐந்து அமைப்புக்களும் ஒன்றிணைந்து வெளியிட்டுள்ள இந்த அறிக்கை முக்கியமானதுதான். எதிர்காலத்திலும் இவர்கள் இணைந்து செயல்படவேண்டும். இலங்கை அரசுக்கு ஆதரவாக நாம் நம்பியிருந்த நபர்களும் அமைப்புக்களும் இணையத் தளங்களும் தலையாட்டி பொம்மைகளாக அற்ப சலுகைகளுக்காக துதிபாட தொடங்கியுள்ளன. புலிகளும் தங்களுடைய ஆதிக்க அரசியலில் இருந்து விடுபட தயாரில்லை. இன்னும் புலிக்குணத்தோடே செயல்படுகிறார்கள். இவையெல்லாவற்றிலிருந்தும் எமது மக்களைப் பற்றி அக்கறைகொள்கின்ற மாற்று சக்திகளின் இவ்வாறான ஒன்றிணைவுகள் வரவேற்க்கப்படவேண்டியவை.
ரஐனியின் கருத்துகளோடு நான் முற்றாக உடன்படுகின்றேன். நாடுகடந்த “அரசுக்காரர்கள்” போல்> ஏற்றுமதி அரசியலை விடுத்து> சுயமான நிகழ்வுகளை நடாத்த உதவவேண்டும். புலம்பெயர் வருடாந்த நிகழ்வுக்காரர்கள் இவைகளை அங்கு நடாத்தி>தாயகமக்களை பங்குபற்ற வைக்கவேண்டும். இது ரஐனி குறிப்பிடும் 3-நிலைகளை நோக்கிச் செல்லும்.
இந்த எழுத்தாளர் மகாநாடு எரியாத தீக்குச்சு.காற்றூப் போன பந்து.நாலு பேர் கூடி டீ யும் வடையும் சாப்பிடப் போகிறார்கள்.எனக்கு என்ன தோன்றூகிறது என்றால் சும்மா கிடந்த் சங்கை ஊதிக் கெடுத்து விட்டோமோ,அவசரப்பட்டு விளம்பரங்கள அள்ளீ வழங்கி விட்டோமோ?
உண்மைதான்>சும்மா கிடந்த சங்கைத்தான் ஊதிக் கெடுத்தாச்சு! அவசரங்கள் நிதானங்களை இழந்துவிடும்.
தேடகம் – கனடா
புதிய திசைகள் – இங்கிலாந்து
மே 18 இயக்கம் – கனடா
இனியொரு – இங்கிலாந்து
அசை – பிரான்ஸ் போன்ற மனித நேய அமைப்புக்களினால் வெளியிடப்பட்டிருக்கும்
இந்த எதிர்வினை அறிக்கை மனதிற்கு இதமளிக்கிறது.தமிழினத்தின் மட்டற்ற கொடுமைகளின் உச்சத்தில் தலைநகர் கொழும்புவில் கொண்டாட விளகிற இம் மாநாடு உண்மையில் தமிழினத்தையே கேலிக்கும், கேள்விக்கும் உரியதாக்கும் எனும் வாதங்களை எழுத்தாளர் முருகபூபதி உட்பட மாநாட்டு அமைப்பாளர்கள் இதுவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இதுவரை பலரின் கையெழுத்திட்டஎதிர்ப்பறிக்கைகள்,மகஜர்கள்,மின்னஞ்சல்கள் என எல்லாவற்றையும் துடைத்தெறிந்துவிட்டு ஒன்றுமறியாதவர்கள் போல பாசாங்கு செய்கிறார்கள் இவ்விழாஅமைப்பாளர்கள். இணையவலையில் இலங்கையில் இதனை வைத்தால் தப்பேயில்லை வைக்கலாம் என முலாம் போடுகிற மயூரன் போன்றவர்கள் அமைப்பினர் பற்றியும், மாநாடு எதற்காகவென்றும் அறியாதவர்கள் தாங்கள் எனக் கைவிரிக்கிறார்கள். எஸ்.போ போன்றவர்கள், தங்களைக் கைவிட்ட மாநாடு கரணம் தப்பினால் மரணித்துப்போகட்டும் என்கின்றனர். இன் நிலையில் வெளிவந்துள்ள இவ்வறிக்கை முப்பது வருட ஆயுதப்போராட்டம் நந்திக்கடலோடு இரத்தமும் , உயிர்களுமாகக் கரைக்கப்பட்ட பின்னர் , தமிழ்ப் பேசும் மக்கள் தாம் ஒடுக்கப்பட்ட தேசிய இனம் என்பதை உணர ஆரம்பித்துள்ளனர் என்று எதுகையோடு ஆரம்பிக்கிறது. ஆனாலும் உணமையில் தமிழர் தாம் ஒடுக்கப்பட்ட தேசிய இனம் என உணரத் தலைப்பட்டு 60 வருடங்களுக்கு மேலாகிறது, அது இப்போது தான் என்றில்லை. ஒரு வேளை புலிகள் அவ்வாறு உணர்ந்திருக்கலாம்..இதற்கிடையே இலங்கையிலிருந்து மநாட்டிற்கு ஆதரவான அமைப்பொன்று இப்படி எழுதுகிறது இலங்கையில் மாநாடு நடத்துவது எமது பிறப்புரிமை. முப்பது வருடகால யுத்தத்தில் எழுத்தாளர்கள் கலைஞர்களிடமிருந்து இலங்கை அரசாலும் தமிழீழ விடுதலைப் புலிகளாலும் இன்னபிற ஆயுதக் குழுக்களாலும் பறிக்கப்பட்ட கருத்து – எழுத்து உரிமைகளை மீட்டெடுக்க வேண்டிய நெடிய போராட்டம் எம்முன்னே உள்ளது. அந்த நெடிய பாதையில் இவ்வாறான ஒரு மாநாடு நடைபெறுவது ஒரு முன்னேற்றகரமான புள்ளியென்றே கருதுகிறோம் என்று இதற்கு உடன்பாடாக முஸ்லிம் மக்களையும் மலையகமக்களயும் திரட்ட அவர்கள் பாடுபடுகின்றார்கள். ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், சோபாசக்தி- லும்பினி – அ. மார்க்ஸ் என்று பலரும் இம்மாநாடு தமிழருக்கு கிடைத்தற்கரிய வாய்ப்பென்ற தோரணையில் வாய்ப்பந்தல் போடுகின்றார்கள்.
இதைவிடப் பேட்டியெடுத்த மயூரனிடம் உண்மையைப் பேசலாம், அரசியல் பேசக்கூடாது என்கின்ற ஞானத்தினுடைய பேட்டி நகைபிற்கிடமானது. எந்த உண்மையை நாம் பேசுவது??? அந்த உண்மையைப் பேசினால் அது அரசியலாக மாறாதா?? அந்த உண்மையை நாம்பேசிவிட்டால் நாமுயிரோடு வீடுதிரும்ப முடியுமா??வாழிடம் அறுத்து சேரா இடத்திலே மாறாத்துயரோடு இருக்கிற எம்மக்களின் துயர் துடைக்க இந்த மாநாடு பயன்படுமா? என்கின்ற கேள்விகளையும் கேட்டாகிவிட்டது. இந்த எதிர்வினையமைப்புகள்
வெறும் வாய்சவடால் போடுபவர்களாகட்டுமன்றி தமிழருக்காகபோராடும் தியாக உணர்வோடு செயற்படுபவர்களாக வேண்டுமென பிரார்திப்போம்.
என்னதான் இருந்தாலும் கால்வாயில் மீன் பிடித்து குழம்பாக்கிச் சாப்பிட அலைகிறது ஒரு கூட்டம் இதுகள் பளீங்குக் கற்கள் இருக்கிறது என்பதற்காக கழிவறயிலே பாய் போட்டுத் தூங்கும்.இதுகளீட்ட தர்மம் நியாயம் கதைத்தால் அதுக்கும் ஒரு பில்ல போட்டு மகிந்தாவிட்ட அறவிடும்.கோயில்ல சாப்பிர்ற கூட்டம் அதுகளீட்ட போய் ரசம்,மோர்,நெய் என்றால் தெரியவே போகுது.கோவிந்தா…கோவிந்தா….மகிந்தாவுக்கு கோவிந்தா.
இங்கு நடைபெறவிருக்கும் எழுத்தாளர் மகாநாடு தொடர்பாக நிறைய செய்திகள் வெளிவருகின்றன. இதில் உண்மை பொய் புரியாமல் பலர் இருக்கிறார்கள். இங்கு இவர்களோடு தொடர்பில் இருப்பவன் என்பதால் சில விடயங்களை கூற விரும்புகிறேன். உண்மையான பெயரோடு எழுத விரும்பவில்லை. இந்த மகாநாட்டை நடாத்துவதற்கு முன்னோடியாக இருந்தவர் எழுத்தாளர் அந்தனிஜுவா. இவர் இலங்கை அரசோடு மிக நெருக்கமானவர். இலங்கை அரசாங்க பத்திரிகையான லேக் கவுஸ் நிறுவனத்தோடு தன்னை இணைத்துக் கொண்டவர். இந்த மகாநாட்டில் புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களையும் இணைத்து நடாத்துவது நல்லது என்ற திட்டத்தை வழங்கியவர் அவுஸ்ரேலியாவில் வசிக்கும் இலங்கை அரசுக்கு மிகவும் வேண்டப்பட்டவரான நோயல்நடேசன் என்பவராகும். இவர் அவுஸ்ரேலியாவில் ஒரு பத்திரிகை நடாத்துகிறார்.அத்தோடு மகிந்த ராஐபக்சாவுக்கு புலம் பெயர்ந்த தமிழர்களை அறிமுகப்படுத்தி அதனோடு பற்பல லாபங்களை அடைந்துவருபவர். கே.பி.பத்மநாதன் புலிக் குழுவினரோடும் இவருக்கு நல்ல நட்புண்டு .இதில் தற்செயலாக இடையில் மாட்டி நிற்பவர்தான் அவுஸ்ரேலிய எழுத்தாளர் முருகபூபதி. இவருக்கு நோயல்நடேசன் நண்பர் என்பதால் நோயல்நடேசன் நேரடியாக இந்த மகாநாட்டிற்குள் பங்குபெறாமல் முருகபூபதியை வைத்து தன் காரியங்களை சாதிக்கிறார். இந்த மகாநாட்டை நடாத்துவதற்கு இவர்கள் மகிந்தராஐhபக்சாவையையும் டக்கிளஸ் தேவானந்தாவையும் சந்தித்து உதவிகோரிய விடயம் இங்கு அனைவருக்கும் தெரிந்த விடயம். இதற்கு பூரண ஆதரவும் உதவியும் செய்வதற்கு அவர்கள் உறுதி வழங்கி இருந்தார்கள். இதன் பின் மகாநாட்டிற்கு தமிழக எழுத்தாளர்களை அழைப்பதற்கு அந்தனிஜுவா குழுவினர் தமிழ்நாடு சென்றனர். அங்கு பலபேரைச் சந்தித்து அழைப்புவிடுக்கப்ட்டது. அதில் குறிப்பாக இரண்டு விடயங்களுக்கு உறுதி அளிக்கப்பட்டது. ஒன்று எழுத்தாளாகளுடைய போக்குவரத்து தங்குமிடம் உணவு எல்லா செலவுகளையும் மாநாட்டிற்குழுவினர் பொறுப்பு ஏற்பார்கள். இரண்டாவது பங்குபெறும் எழுத்தாளர்களுக்கு இலங்கையில் ஒருவார சுற்றுலாப் பயணம் ஒழுங்கு செய்து தரப்படும் என்பதே. ஆரம்பத்தில் தமிழ் நாட்டு எழுத்தாளாகள் பலர் இதனை ஏற்று வருவதற்கு தயாராக இருந்தார்கள். ஆனால் கடைசி நேரத்தில் இந்த மாகாநாட்டிற்கு தமிழ் நாட்டில் ஏற்பட்ட எதிர்ப்பால் பலர் பின்வாங்கிவிட்டனர். இந்த மகாநாட்டிற்க ஊடாக அந்தனிஜுவா குழுவினரும் இலங்கை அரசாங்கமும் பல லாபங்களை அடைய திட்டம்போட்டிருந்தது கடைசியில் குழம்பிவிட்டது. இருந்தாலும் மகாநாடு சொன்ன திகதியில் கட்டாயம் நடக்கும். அதில் அரச ஆதரவு எழுத்தாளர்கள் கலந்து கொள்வார்கள்.இதை வைத்து பற்பல பிரச்சாரங்களை அந்தனிஜுவா குழுவினர் தங்களுற்கு சாதகமாக ஏற்படுத்தி கொள்வார்கள்.
முருகபூபதிக்கு முருங்கைக்காய் குழம்பு பற்றீத் தெரியாது என்றூம் அதை அந்தனி ஜீவாவே காட்டித் தந்ததாகவும் கொமடி டைம் மா நடத்துகிறீர்கள்.விரல் சூப்பும் குழந்தையும் கொம்பியூட்டர் கேம் ஆடும் காலமிது.நீங்கள் முருகபூபதியை ஒன்றூம் தெரியாத பாப்பா ஆக்க வேண்டாம் ப்ளீஸ்.
இந்த மாநாட்டைப்போன்ற சிறீ லங்கா அரசின் இன்னொரு அரங்கேறியிருக்கிறது.
விம்பம் என்றொரு சர்வதேச திரைப்படவிழாவினை இலங்கை அரசின் இன்றைய எடுபிடிகள் இனிதே நடத்தி முடித்திருக்கிறார்கள்.
உலகம் பூராகவும் உண்மையான சமூக அக்கறையுள்ள சினிமாக்கலைஞர்கள் திரைப்படத்தை அரச அதிகாரங்களுக்கும் ஒடுக்குமுறைக்கெதிராகவுமே பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். உண்மையான கலைஞன் அப்படித்தான் இருப்பான். எடுபிடிகள் தான் தெரிவு செய்யப்பட்ட உண்மைகளை மட்டும் பேசுவார்கள்.
விம்பத்தில் தெரிவு செய்யப்பட்ட படங்களில் ஒன்று கூட சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்கள் பற்றிப் பேசவில்லை.
குறிப்பாக இவ்விழா லண்டனில் நடைபெறுவதும் சந்தேகத்துக்கிடமானதே.
சிறீ லங்கா அரசின் போர்க்குற்றங்களை மூடிமறைக்கவும் ல்லண்டனில் இத்தகைய விழாக்களை நடத்தி புலம்பெயர் தமிழரிடையே சிறீலங்கா அரசு அம்பலப்பட்டுப்போவதை தடுப்பதும் தற்போது பொங்கி எழும் உணர்வுகளை திசைதிருப்பவுமே இவ்விழா நடத்தப்பட்டுள்ளது என்பது வெளிப்படை உண்மை.
இலங்கையில் எழுத்தாளர் மாநாட்டை நடத்தும் அதே அரசு புலம்பெயர் சூழலில் ஐரோப்பாவில் இவ்விழாவையும் ஒழுங்கு படுத்தி நடத்துகிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
இலங்கையில் மாநாடு நடத்தும், விம்பம் குறும்பட விழா நட்த்தும் சிறீலங்கா அரசின் எடுபிடிகளை அம்பலப்படுத்தவேண்டியது ததேசியத்தலைவரின் வாரிசுகள் அனைவரதும் கடமையாகும்.
தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கம் இவ்வாறான நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்துவது சிந்திக்கத்தூண்டுகிறது.
விம்பம் குறும்பட விழாவினை உண்மையாகவே தமிழரின் மீதான அக்கறையோடு நடத்த வேண்டுமானால், வன்னியில் திரைபோட்டு இலங்கை அரசின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தும் படியான ப்டாங்களைப் போட்டுக் காண்பித்து அதையே ஒரு அரசியல் இயக்கமாக்கி அரசுக்கெதிராக மக்களை அணிதிரட்டி இருக்க வேண்டும்.
இன்றைய சூழ்நிலையில் செய்யப்பட வேண்டியது இது ஒன்றுதான். ஆனால் நடப்பது என்ன? போர்க்குற்றங்கள் பற்றி ஒருவார்த்தை கூடப் பேசாத மொண்ணைப்படங்கள், எமது உறவுகள் முள்ளிவாய்க்காலில் குதறப்பட்டு உடலும் நிர்வாணமாக்கபப்ட்டு வீசப்பட்டிருக்கும் நேரத்தில் அரசியலுக்கும் தமக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல பாவலாக்காட்டும் படங்கள்.. தானே பரிசுக்குரியவையாக்கப்பட்டன? இலங்கையில் எத்தனையோ கலைஞர்கள் போர்க்குற்றங்களை வெளிப்படுத்தி இலங்கை அரசை உலுப்ப நினைக்கும் போது இலங்கையிலிருந்து சில அரச எடுபிடிகளை அழைத்து போர்க்குற்றம் அப்ற்றியே வாய்திறக்காத படங்களைக் கொண்டுவ்ரச்செய்தது விம்பம். உண்மையாகவே இலங்கையின் போர்க்குற்றங்களை வெளிக்கொணர நினைக்கும் கலைஞர்கள் விம்பத்தில் தம் படத்தை திரையிட முடியுமா, லண்டனுக்குத்தான் வந்துவிட முடியுமா?
விழாவை வன்னியிலல்லவா நடத்தியிருக்க வேண்டும்?
முருகபூபதி, ஞானசேகரன், விம்பம் குழுவினர், பத்மநாத ஐயர் என்று ஈளும் துரோகிக்கும்பல் பட்டியல் இன்னும் என்னவென்ன வெல்லாம் செய்யப்போகின்றதோ தெரியவில்லை.
நாம் விழித்தெழ வேண்டிய காலம் இது
ஊடகவியாளர்களை அனாதைப் பிணங்களாக தெருவோரத்தில் பேரினவாத நரிகளின் பசிக்குப் புசிக்கக் கொடுக்கும் இலங்கை அரச பாசிசத்தின் முகத்தை தோலுரித்த மக்கள் எழுச்சியின் தேசத்திலேயே, அந்த எழுச்சியைப் பார்த்தும் மவுனமாயிருந்து போர்க்குற்றத்தை ஆதரித்து நின்ற பிருத்தானிய அரசின் எல்லைக்குள்ளேயே விம்பம் குறும்பட விழா நடத்தி, திரைக்கலையின் வீரியத்துடனும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான உண்மையான கலைஞர்க்கே உரிய அக்கறையுடனும் கேள்விகேட்கப் போகிறார்களோ என ஒரு கணம் சிந்திக்கத் தோன்றியது.
தொடரும் இன அழிப்பின் ஒவ்வொரு பிரதான காலத்திலும் ஐரோபாவின் ஏதாவது ஒரு மூலையில் தன்னலமற்ற போராட்டம் நடந்திருக்கிறது. பெரினவாதம் கொன்று போடும் ஒவ்வொரு மனிதனதும் கடைசி நம்பிக்கைகளில் ஒன்றாக புலம்பெயர் தேசங்கள் இருந்திருக்கின்றன. இதனால் தான் இலங்கை அரசு கூட புலம்பெயர் தமிழர்களுக்குப் பயந்தது போல இதுவரை யாருக்காகவும் அச்சமடைந்ததில்லை எனலாம். வெளிநாட்டு அரசுகளோடு இணைந்து பல அரசியல் நாடகங்களை ஏற்பாடுசெய்துதான் புலம்பெயர் தமிழரின் எழுச்சியைக் கட்டுப்படுத்தினோம் என்று படுகொலைகளின் முக்கிய சூத்திரதாரி கோதாபய ராஜபக்சவே ஒத்துக்கொள்கிறார்.
விம்பம் விழா அப்பட்டமான ஒரு சதிவலையே.
புலிகளை ஆதரித்து நின்று, அவர்களின் மானுடத்தின் தமிழ்க்கூடல் போன்ற விழாக்களில் முன்னின்ற ஞானசேகரன் போன்றவர்களே இன்று அரசின் கைக்கூலிகளாகி மாநாடு நடத்துகிறார்கள். இப்போது அந்தப்பட்டியலில் பத்மநாப ஐயர் போன்றவர்கள் இணைகிறார்கள்.
விழா நடத்நு முடிந்துவிட்டது என்று சும்மா இருக்கக்கூடாது.
பலமான எதிர்ப்பினை ஒடுக்கப்பட்ட மக்களுக்குச்சார்பான அனைவரும் பதிவு செய்ய வேண்டும்.
இனி ஒரு விம்பம் விழா நடத்த முடியாதபடிக்கு அவர்களது முகத்தோலைக்கிழித்துத் தொங்கப்போட வேண்டும்.
விலைப்படாத புத்தகங்களூக்கு இலக்கிய முலாம் பூசி விற்றூ பின்னர் காலச்சுவடுக்கு காலை வாரி இப்போது மகிந்தாவுக்கு வடையும்,டீயும் கொடுக்கும் கலைச் சேவையில் ஈடுபடும் அனைத்து அடிவருடிகளூம் இனியாவது திருந்த வேண்டும்.சாகப் போகிற வயசில புண்ணீயம் செய்து விட்டுப் பொங்கோ.
மூக்கைப் பிடிச்சா வாயை ஆ வெண்டத் தெரியாதோரெல்லாம் இப்போது இலங்கை அரசுக்கு விசிறீ வீசி ஆதாயம் தேடி அலைகின்றனர்.மாட்டுச் சாதி எண்டு இன்னொரு பெயரும் தமிழருக்கு உண்டு அதை பொய்யாக்காமல் எதையாவது செய்ய நினைக்கினமோ,காலச்சுவடுக்கு சந்தா சேர்த்த அய்யர் இருப்பது அதிசயமல்ல அந்தாள் அந்தக் காலம் தொடக்கம் அப்படித்தான் விம்பம் குழுவினரும் அந்த வகையே ஆனால் முருகபூபதி? வேப்பில அடிக்கிற நிலைக்கு வந்து நிற்கிறாரே அதைத்தான் தாங்க முடியவில்லை.
சரியான கருத்து தமிழ்மாறன்.
//காலச்சுவடுக்கு சந்தா சேர்த்த அய்யர் இருப்பது அதிசயமல்ல//
நீங்கள் சொல்லத்தான் ஐயருக்கு இப்படி ஒரு வரலாறு இருப்பது தெரியவந்தது.
நன்றி.
இப்போதுதான் இப்படி மகிந்தவை நியாயப்படுத்தும் திரைப்படவிழா நடத்துமளவு பல்டி அடித்தார் என்று நினைத்தேன்.
இலங்கையில் இருந்து எல்லாம் படம் எடுப்பித்து விருது கொடுக்கிறோம் என்று காட்டுகிறார்கள். இலங்கையிலிருந்து எடுத்த படத்தின் உள்ளடக்கம் என்ன?
இவர்கள் எதை சர்வதேச சமூகத்துக்குக் காட்டி மைந்தவை நியாயப்படுத்த நிற்கிறார்கள்?