சர்வதேச சமூகம் என்று இதுவரைக்கும் பொய்யுரைகளுக்கு ஊடாக நம்பவைக்கப்பட்டிருந்த கருத்தாக்கம் எவ்வளவு தவறானது என்ற உண்மை உணரப்பட வேண்டும். இனிமேலாவது நண்பர்களை இனம் கண்டுகொள்ள வேண்டும். வன்னியில் இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்ட இனப்படுகொலை நடந்துகொண்டிருந்த வேளையில் அதனைத் தடுப்பதற்குரிய வலு தமிழ் நாட்டில் இருந்தது என்று இனக் கொலையாளி கோதாபய ராஜபக்சவே ஒப்புக்கொண்டிருகின்றார். அதனை எதிர்கொள்வதற்காக “நாம் ஒரு அறிக்கை நாடகத்தையே நடத்தியிருக்கிறோம்” என்று அவர் மேலும் கூறியொருந்தார். தம்ழ் நாட்டில் உருவாகியிருந்திருக்கக் கூடிய எழுச்சியை, இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தியிருக்கக் கூடிய அந்தப் போராட்டங்களை எவ்வாறு நெடுமாறன், திருமாவளவன், வை.கோ போன்றவர்கள் தடுத்து நிறுத்தினார்கள் என்பதை பலர் ஆதாரபூர்வமாகக் கூறியிருக்கிறார்கள்.
இவை அனைத்தையும் குறித்த உரையாடலை ஜீ.ரி.வி ‘வெளிச்சம்’ நிகழ்ச்சியில் அதன் நடத்துனர் தினேஷ் ஏற்பாடு செய்திருந்தார். அதன் ஒளி வடிவம்:
மேலதிக வாசிப்பு :
” நாங்கள் இலங்கையில் சரியாக இருந்திருந்தால், நண்பர்களை அடையாளம் கண்டிருப்போமானால் முத்துக்குமாரனின் ஊர்வலத்தில் வைக்கோ போன்றோர்களுக்கெதிராக ஒரு தலைமை உருவாகியிருக்கும். நாங்கள் அவர்களை, அந்த இளைஞர்களை ஊக்கப் படுத்தியிருந்தால் முத்துக்குமாரனின் மரணம் இந்தியாவில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தியிருக்கும்… இந்தத் தலைமை நமக்கு சார்பான தலைமை. இவர்களை நாங்கள் ignore பண்ணிவிட்டோம்.” இவை நீங்கள் கூறிய வசனங்கள் சபா நாவலன்.. இதில் எந்த மாற்றுக் கருத்தும் எனக்கில்லை…ஆனால்…இதையே கொஞ்சம் திருப்பி உங்கள் பக்கம் போட்டுப் பாருங்கள்…முத்துக்குமாரன் மூலம் எழுந்த தலைமையை ignore பண்ணிவிட்டோம் என்கிறீர்களே. சரிதான்.. ஆனால் இந்த தலைமைக்கு முன்பே நமக்கு ஒரு தலைமையும் அதன் கீழ் ஆயிரமாயிரம் போராளிகளும் எந்த சுயனலமுமற்று தேசிய விடுதலை என்ற ஒன்றுக்காக தங்கள் உயிர்களை அர்ப்பணித்து வன்னியில் போராடிக்கொண்டிருந்தபோது வெளிநாட்டிலிருந்து பாசிசம் பேசிக்கொண்டிருந்த நபர் நீங்கள்..” நாங்கள் இலங்கையில் சரியாக இருந்திருந்தால்” ..நாங்கள் என்று உங்களையும் சேர்த்தா கூறுகிறீர்கள்? நீங்கள் எப்பொழுதிலிருந்து எங்களுடன் இருந்தீர்கள் சபா நாவலன்? 2009 ஆம் ஆண்டில் நீங்கள் கூறிய வசனங்கள் இதோ! ஆங்கிலத்தில் “Two fascist ideologies, the Sri Lankan government and the Tamil Tigers, have been waging a war for decades. Both parties do not care about the plight of the civilians.”So the Tamil diaspora will have to carry on with their struggle against both ideologies,” இந்த உலகமே வியந்து பார்க்கும் ஒரு தலைவன், அந்த உன்னதமான மனிதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கூட இந்த உலகில் ஒருவருமேயில்லை என்பதுதான் உண்மை… அப்படிப்பட்ட அந்த மனிதனையும் , இனப்படுகொலை புரியும் ராஜபக்ஷேவுடன் ஒரே தராசில் போட்டு நிறுத்தவர் நீர்..தம் உயிரை துச்சமாக மதித்து நம் மண்ணையும் பெண்ணையும் காக்க அங்கே அவர்கள் போராடிக்கொண்டிருந்த வேளையில், புலம் பெயர் மக்கள் இதே காவல் தெய்வங்களுக்கெதிராகப் போராடவேண்டுமென்று கேவலமான ஒரு செவ்வி அளித்த மகா புருஷன் நீர்…யாருக்கும் கிடைக்காத ஒரு உன்னதமான தலைமை கிடைத்தும் அந்த தலைவனுக்காகவும் நம் தேசியத்தித்காகவும் தம் உயிரை முழு விருப்புடன் தியாகம் செய்த போராளிகள் கிடைத்தும் நம் போராட்டம் பின்னடைவை சந்தித்ததென்றால் அது உங்களைப் போன்ற தமிழர்களின் விஷ வார்த்தைகளாலும் கருணா, டக்லஸ் போன்ற ஈனத் தமிழர்களாலும்தானே ஒழிய சிங்களவர்களால் அல்ல..உயிரைத் துச்சமாக மதித்து அவர்கள் போராடிய வேளையில் நாட்டை விட்டே வெளியில் ஓடிவந்த நீங்கள், இங்கிருந்தபடி வாலை ஆட்டியிருக்கக் கூடாது. பிடிக்கவில்லை என்றால் தள்ளியே இருந்திருக்கவேண்டும்..உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருக்கவேண்டும்..அதைச் செய்தீர்களா?..அப்படிப்பட்ட அந்தத் தலைமையையே பயன் படுத்த தெரியாத நீங்கள் முத்துக்குமாரனின் மரணத்தின் மூலம் எழும் தலைமையை வைத்து என்னதான் செய்திருப்பீர்களோ?..புரியவில்லை.. உங்களுக்குத் தெரிந்ததை செய்திருப்பீர்கள்..அதாவது அவர்களையும் ஏதாவது வசைபாடியிருப்பீர்கள்(உங்கள் வயிற்றையும் வளர்க்க வேண்டுமே)..” they don’t care about the plight of the civilians”.. இப்படியெல்லாம் கூற எப்படி முடிந்தது?..அந்த மக்களுக்காகத்தான் தங்கள் உயிர்களையே ஈந்தவர்கள் அவர்கள்..அவர்கள் அங்கே இருக்கும்வரை நம் மண்ணில் ஒரு அங்குல நிலம்தான் பறிபோயிருக்குமா அல்லது ஒரு பெண்ணைத்தான் சிங்களவன் தொட்டிருப்பானா?..அவர்கள் அழியவேண்டுமென்று ஆசைப் பட்டீர்களே சபா நாவலன், அவர்கள் அழிந்தது மட்டுமல்ல பேச்சு வார்த்தை பேச்சுவார்த்தை என்று நம் உரிமைகளை விற்றுக் கொண்டு திரியும் ஒரு கூட்டத்தினால் இன்னும் இரண்டு வருடங்களில் அந்த மண்ணில் தமிழன் இருந்த அடையாளமே இல்லாமல்போய்விடும்..மாக்சிசம் என்று உச்சரிப்பதனால் மட்டும் நீங்கள் மாக்சிஸ்ட் ஆக முடியாது…அதன் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து பேசுங்கள்.
உங்கள் தே.த உருவாகியவர்களுள் ஒருவரையாவ்து காட்டுங்கள், இப்ப தேசியத்துக்காக கதைப்பவர்கள். மகிந்தனோடு பிசினஸ், இந்தியாவோடு பிசினஸ், எம்பி மாரோடு பிசினஸ்,…. யாரவது தேசியத்துக்காகக் கதைச்சாலும் அவையளைக் காட்டிக்கொடுத்து பிசினஸ்…. ஒரு ஆளைக் காட்டுங்கோ தேசியத் தலை உருவாக்கியவர்களை….
கௌரி,
ஒற்றைப் பரிமாண சிந்தனைக்குளிருந்து வெளிப்படையான விவாதத்தளத்திற்கு முன்வந்ததற்கு முதலில் நன்றிகள். நீங்கள் எழுதியவற்றிலிருந்தே சில உண்மைகளைப் பேசுவோம்.
//2009 ஆம் ஆண்டில் நீங்கள் கூறிய வசனங்கள் இதோ! ஆங்கிலத்தில் “Two fascist ideologies, the Sri Lankan government and the Tamil Tigers, have been waging a war for decades. Both parties do not care about the plight of the civilians.”So the Tamil diaspora will have to carry on with their struggle against both ideologies,”//
இது பி.பிசி யில் வெளியான எனது நேர்காணலின் ஒரு பகுதி மட்டுமே. இதனால் இலங்கை அரசிற்கு எதிராக நடைபெற்ற புலிகளின் போராட்டத்தைக் கொச்சப்படுத்தவில்லை. அதனைச் செழுமைப்படுத்தி வளர்க்க வேண்டும் என்பதே எனது நோக்கம்.. இதற்கு முன்பதாக நடைபெற்ற சில சம்பவங்களை-இதுவரை நான் கூறாதவற்றை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.-
முதலாவதாக, வன்னியில் மக்கள் அழிக்கப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் நான் பல கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். நான் எழுதியவற்றை ஆதாரங்களாக இனியொருவின் 2008ம் ஆண்டு பதிவு வரை சென்று பார்க்கலாம். அவை *தேசம்னெட்டிலும் இனியொருவிலும் வெளியாகியிருந்தன. அதன் சாராம்சம் இதுதான்” புலிகளும் புலிசார் அமைப்புக்களும் எதிரிகளை நண்பர்கள் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக இந்திய அரசியல் வாதிகள், அமரிக்கா, ஐக்கிய நாடுகள், பிரித்தானிய பாராளுமன்றக் கட்சிகள் என்பவை.இவற்றிற்கு அப்பால், உலகில் மக்கள் அழிக்கப்படும் போது இலட்சக்கணக்கில் தெருவில் இறங்கிப் போராடுகின்றவர்கள் ஐரோப்பாவிலும் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். பிரித்தானியாவில் சர்வதேச அழிப்புக்கள் நடைபெறும் போது அரசுகளுக்கு அழுத்தம் வழங்கி நிறுத்தக் கூடியவர்கள் பலரைக் கண்டிருக்கிறோம்.” இவைகுறித்து பல கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
இந்த நிலையில், இன அழிப்பை நிறுத்த வேண்டுமானால் இவர்களை அணுக வேண்டும் என்பதை செயல் முறைக்குக் கொண்டுவரும் நோக்கோடு பல அமைப்புக்களை மின்னஞ்சல் ஊடாகவும் நேரடியாகவும் தொடர்புகொண்டிருக்கிறேன். குறிப்பாக தாரிக் அலி, ஜோர்ஜ் கலோவே, பிரித்தானிய தேசிய மாணவர் அமைப்பு, ஆசிரியர் சங்கம் உட்பட ஹூகோ சவேஸ் போன்றவர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன், இந்தியாவிலும் பலரைத் தொடர்புகொண்டேன். இவற்றிற்கான ஆதரங்கள் இன்னும் என்னிடம் உள்ளன. எதற்காக? இன அழிப்பை நிறுத்துவதற்காக! எப்படி? நீங்கள் ஒத்துக்கொண்டது போல, //நாங்கள் இலங்கையில் சரியாக இருந்திருந்தால், நண்பர்களை அடையாளம் கண்டிருப்போமானால் முத்துக்குமாரனின் ஊர்வலத்தில் வைகோ போன்றோர்களுக்கெதிராக ஒரு தலைமை உருவாகியிருக்கும். நாங்கள் அவர்களை, அந்த இளைஞர்களை ஊக்கப் படுத்தியிருந்தால் முத்துக்குமாரனின் மரணம் இந்தியாவில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தியிருக்கும்… இந்தத் தலைமை நமக்கு சார்பான தலைமை. இவர்களை நாங்கள் ignore பண்ணிவிட்டோம்.” இவை நீங்கள் கூறிய வசனங்கள் சபா நாவலன்.. இதில் எந்த மாற்றுக் கருத்தும் எனக்கில்லை…//
இவர்களின் தொடர்புகளின் பின்னர் பிரித்தானிய தமிழர் பேரவையைத் தொடர்பு கொள்கிறேன். ஏன்? பிரித்தானியாவில் அரசிற்கு அழுத்தம் வழங்கிப் போராட வல்லவர்களையும் பிரித்தானிய தமிழர் பேரவை போன்ற அறியப்பட்ட அமைப்புக்களையும் இணைத்துப் வலுவான போராட்டத்தை உருவாக்குவதற்காக. பி.ரிஎப் சந்திப்பதற்குக் கூட மறுத்துவிட்டார்கள். இதன் பின்னர் நான் தனியே இதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டிய நிலையிலிருந்தேன். இந்த நேரத்தில் புலிசார் அமைப்புக்களை என்ன ஜனநாயக அமைப்புக்கள் என்றா நேர்காணல் வழங்கச் சொல்கிறீர்கள்? நேர்காணலிலின் முழுமையான பகுதியில் இலங்கை அரசாங்கம் நிகழ்த்திய இன அழிப்பு நிறுத்தப்பட்டு மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அடிப்படையானதாக இருந்தது. அதற்காக மட்டுமே நான் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களை நிராகரித்து, நீங்கள் சரியென்று ஒப்புக்கொண்ட வழியில் வேலைசெய்தேன்.
உங்களது “காவல் தெய்வங்கள்” களுக்கு எதிராகப் போராடுவது எனது நோக்கமல்ல. அதற்குப் பின்புலத்திலிருந்த ஜனநாயக மறுப்பிற்கும் அழிவிற்கான வழிகளுக்கும் எதிராகவே போராட வேண்டும் என்பதையே இன்றும் சொல்கிறேன். மனிதர்கள் தவறு செய்வார்கள். நானும் நீங்களும் கூடத்தான். அவர்களுக்கு எதிராகப் போராடுவது என்பதை விட அவர்களின் பின்புலத்திலுள்ள தத்துவார்த்த அடிப்படைகளுக்கு எதிராகப்ப் போராட வேண்டும் என்பதே எனது இன்றைய கருத்தும் கூட. எமக்குள் நாமே விமர்சித்துத் முன்னோக்கிச் செல்லாவிட்டல் நாம் அழிக்கப்பட்டுவிடுவோம்.
//நம் போராட்டம் பின்னடைவை சந்தித்ததென்றால் அது உங்களைப் போன்ற தமிழர்களின் விஷ வார்த்தைகளாலும் கருணா, டக்லஸ் போன்ற ஈனத் தமிழர்களாலும்தானே ஒழிய சிங்களவர்களால் அல்ல..//
இதையே தான் தீபம் தொலைக்காட்சியில் இலங்கை அரச ஆதரவாளர்கள் எனக்கு எதிராகச் சொன்னார்கள். உங்களைப் போன்றவர்களால் தான் முஸ்லீம் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்று.
./’/.உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருக்கவேண்டும்..அதைச் செய்தீர்களா?..//
நான் உதவி என்று எண்ணுவதன் முதல் அடிப்படையே என்னை விமர்சனம் செய்பவர்களைத் தான். அது மட்டுமே என்னைச் செழுமைப்படுத்த உதவிசெய்யும். நான் போராட ஆரம்பித்த நாளிலிருந்து இலங்கை அரசிற்கும் இந்திய ஏகாதிபத்திய அரசுகளுக்கு எதிராகவும் போராடுகிறேன். நான் செய்வது தவறு என்று சொல்பவர்களிடமிருந்து கற்றுக்கொள்கிறேன். அதுஎன்னைச் செழுமைப்படுத்துகிறது. ஆக, என்னைப் பொறுத்தவரையில் இலங்கை அரசிற்கு எதிரான போராட்டத்தில் என்னால் முடிந்த விமர்சனங்களை முன்வைத்து உதவி செய்திருக்கிறேன்.
புலி எதிர்பாளர்கள் எல்லாம் என்னை “புலிப் பினாமி” என்று 90 களிலிருந்தே கூறிவருகிறார்கள் அதே போல புலி ஆதரவு அடிப்படை வாதிகள் எல்லாம் என்னை உங்களைப் போல திட்டுகிறார்கள், இது நான் முன்வைக்கும் அரசியலுக்குக் கிடைத்த வெற்றி.
ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், நான் இலங்கையை விட்டு வெளியேறியதே நீங்கள் ஒத்துக்கொண்ட கருத்தைச் சொன்னதனால்தான்.
ஒரு விடயத்தில் உங்களோடு ஒத்துப்போகிறேன்,
//அவர்கள் அழிந்தது மட்டுமல்ல பேச்சு வார்த்தை பேச்சுவார்த்தை என்று நம் உரிமைகளை விற்றுக் கொண்டு திரியும் ஒரு கூட்டத்தினால் இன்னும் இரண்டு வருடங்களில் அந்த மண்ணில் தமிழன் இருந்த அடையாளமே இல்லாமல்போய்விடும்..//
இது உண்மை!!!. இதற்கு என்ன செய்யப்ப் போகிறீர்கள்?? இலங்கை அரசிற்கு எதிரானவர்களை ஒன்றிணைத்துப் போராடப் போகிறீர்களா, இல்லைத் திட்டித் தீர்த்து அன்னியப் படுத்தப் போகிறீர்களா??, உலகத்தில் எமது நண்பர்களை அடையாளம் கண்டுகொள்ளப் போகிறீர்களை அல்லது அன்னியப்படுத்தப் போகிறீர்களா???? இலங்கை இந்திய அர்சுகளுக்கு எதிரானவர்களுடன் பொது வேலைத்திட்டத்தை முன்வைக்கப் போகிறீர்களா அல்லது ஓடி ஒதுங்கிக்க் கொள்ளப் போகிறீர்களா???, தலவர் பெயரை உச்சரித்துக்கொண்டே இலங்கை அரசுடன் கைகோர்த்துக்கொள்ளும் வியாபாரிகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளப் போகிறீர்களா அல்லது போராட்டத்தை முன்னோக்கி நகர்த்த வேண்டும் என்று எண்ணுபவர்களை இனம்கண்டு கொள்ளப் போகிறீர்களா??? இந்தக் கேள்விகளுக்கு விடை காண்பீர்களானால் உரையாடல் இன்னும் ஆக்கபூர்வமானதாக அமையும்.
குறிப்பு:
1 இலங்கை அரசிற்கு எதிராகப் போராடுவதற்கு நான் உறுதியான வேலைத்திட்டத்தை முன்வைக்கத் தயார், போராடத்தயாரனவர்களைத் தலைவரின் பெயரால் தடுத்து நிறுத்துகின்றனர். உங்களின் நோக்கம் இனச் சுத்திகரிப்பிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதா இல்லை தலைவர் பெயரால் பூஜைசெய்வதா?
*வன்னி இன அழிப்பு நடந்துகொண்டிருந்த வேளையில் தேசம்னெட் கின்ங்ஸ்டன் பகுதியில் ஒரு ஒன்றுகூடலுக்கு என்னை அழைத்திருந்தனர். பசில் ராஜபக்சவுடன் இணைந்து மக்களுக்கு உதவி செய்வதற்கு ஒரு திட்டம் வைத்திருப்பதாகக் கூறினர். 50 பேர் வரை வந்திருந்த அந்தக் கூட்டத்தில் நான் மட்டுமே இனக் கொலையாளிகளுடன் இணைவது மக்களை அழிப்பதற்கு ஒப்பானது என்று கூற எனக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்தன, அவை இன்னமும் நிறுத்தப்படவில்லை. அவை உங்களின் தாக்குதலைவிடக் கொடியவை.
எது புறநிலை உண்மைகளோ அதிலிருந்து தான் முடிவுகளுக்கு செல்ல வேண்டும்.ஏற்க்கனவே முடிவு செய்த கருத்தை வைத்துக் கொண்டு பேசக்கூடாது. – லெனின்
புரட்சிகரமான போராட்டம் என்பது பகைவனுள் இருக்கும் நஞ்சை அழிப்பது மட்டுமல்ல.நமக்குள் இருக்கும் நஞ்சையும் அழிப்பது.- மாவோ
இதில் ஒன்றையும் 30 வருட போராட்டத்தில் எள்ளளவும் செய்ய முயலவில்லை புலிகள்.பேச்சுவார்த்தை என்பதெல்லாம் தற்கால ஆய்த சேகரிப்புக்காகவே நடத்தப்பட்டது.மக்கள் பட்ட அவஸ்தைகளை கிஞ்சித்தும் உணராதவர்கள் புலிகள்.அப்படி அவஸ்தைப்பட்டாள் தான் போராட்டத்திற்கு வருவார்கள் என்பதே அவர்கள் அணுகுமுறை.அப்பாக்காத்துமாரையும்,சந்தர்ப்பவாதிகளையும் ,அதிகாரவர்க்கத்தினரையும் நம்பினார்களே தவிர மக்கள் சக்தியை வெளியே வைக்கவே விரும்பினார்கள்.
தங்கள் மேல் கத்தி வந்ததுமே மக்கள் எழுச்ச்சியை உணர்ந்தார்கள்.அது காலம் கடந்தாகி விட்டது என்பது இப்போது தான் எல்லோரும் உணர முடிந்தது.
அமெரிக்கா வரும் வைக்கோ பேச போகிறார்,கஸ்பர் பேச போகிறார் என்று மக்களை நம்ப வைத்தனர்.இப்போ புலம்பி என்ன பயன்.?