இவ்வாரம் உலகெங்கும் பரவலாகப் மக்கள் எழுச்சிகளும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. போத்துக்கலில் அரசாங்கம் அறிவித்துள்ள வரி மற்றும் சமூக உதவித் திட்டங்களின் நீக்கம் தொடர்பாக 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் லிஸ்பன் நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அமரிகாவில் வால் ஸ்ரீட் ஐக் கைப்பற்றும் இயக்கத்தினரின் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக மக்கள் கலந்துகொண்டனர். நூற்றுக் கணக்கானவர்கள் பொலீசாரால் கைது செய்யப்பட்ட போதும் ஆர்ப்பாட்டாம் தொடர்ந்து நடைபெறுகிறது. பன்நாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்கு எதிரான இவ்வியக்கதின் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் நடைபெறுகின்றன. கிரேக்கத்தில் அனாகிஸ்ட் உட்பட பரவலாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. ஸ்பெயின் தலை நகரிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான பல்கேரியா ரூமேனியா ஆகிய நாடுகளில் ஆர்ப்பாட்டங்களில் ஆர்ப்பாட்டங்களில் பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டங்கள் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஐரோப்பிய நாடுகள் தமது அதிகார அமைப்பு முறையிலிருந்து இன்னும் சில வருடங்களுக்குள் தூக்கியெறியப்படும் என பொருளியல் வல்லுனர்கள் எதிர்வு கூறுகின்றனர்.
கடந்த மூன்று தசாப்தங்களாக கொண்டாடப்பட்ட நவதாராள பொருளாதார பொறிமுறை சிதைவுக்குள்ளானதை லேமன் பிறதர்ஸ் இன் வீழ்ச்சி கட்டியங் கூறியது. இப்பொறிமுறையை ஒட்டவைக்க எடுக்கப்படுகின்ற முயற்சிகள் அனைத்தும் பூமராங் போல அவ்வாறு முயற்சிப்பவரையே திருப்பி தாக்குகின்றன. பெருமூலதனத்தின் நலனிற்கேற்ப கருத்துக்கள் தகவமைக்கப்பட்டு பெரியபணமோசடிகளுடனும், சமூக,சுற்றுச் சூழல்,சீரழிவுகளையும் உருவாக்கியிருக்கின்ற இப்பொருளாதார பொறிமுறை முடிவுக்கு வந்த்திருக்கின்றது என்பதை ஐரோப்பிய சமூகங்கள் உணரத்தொடங்கியிருக்கின்றன.
ஐரோப்பா சரிந்து விழவில்லை. ஐரோப்பா என்றுமே! ஐரோப்பா தான். ஐரோப்பாவில் பேணிப்பாதுகாக்க பட்ட முதாலித்துவ உற்பத்தி-சுரண்டல் முறையே
பொறியும் தறுவாயை எட்டிக் கொண்டிருக்கிறது.
இது ஐரோப்பா அமெரிக்காவுக்கு மட்டுல்ல சர்வஉலகத்திற்கும் தான். இந்த பொறிவில் இருந்து யாரும் தப்ப முடியாது. இரண்டாம் உலகமாக யுத்தத்திற்கு பிறகு தனியொருநாட்டு சோசலிசவாதிகளுடன் ஒரு சமாதானஉடன்பாட்டை வைத்து கொண்டு வேறு ஒருவார்தைகளில் சொன்னால் தமக்குரிய நாட்டை தேர்ந்து பிரித்தெடுத்து ஒரு உலகஒழுங்குமுறையில் ஆரம்பித்து வைத்தார்கள்.
வரும்காலத்திற்க்கான மானிடவரலாற்றை யார்பொறுப்பில் விடுவது. முதாலிதுவத்தின் கையில் விடுவதா? சர்வதேச தொழிலாளிவர்க்கம் முன்னெடுப்பதா? இந்த சிக்கலான கேள்விக்கு விடைகாண்பதிலேயே மானிட வரலாறும் உள்ளங்கியிருக்கிறது!. இதற்கு முதல் மாக்ஸ்சின் இரண்டு அறிவுரைகளை முன்தரவேண்டிய தேவையுள்ளது கம்யூனிஸ் கட்சியின் அறிக்கையில் இருந்து….
தொழிலாளிவர்கத்திற்கு தாய்நாடு இல்லை. அவர்களிடம் இல்லாத ஒன்றை அவர்களிடமிருந்து பிடுங்குவது முடியாத காரியம்.பாட்டாளிவர்கம் யாவற்றுக்கும் முதலாய் அரசியல் மேலாண்மை பெறவேண்டும்.தேசத்தின் தலையான வர்க்மாய் உயர்ந்தாக வேண்டும். தன்னையே தேசமாக்கிக் கொள்ள வேண்டும். அதுவரை….
இப்படித்தான் இருக்கிறது மாமேதைகால்மாஸ் தொழிலாளவர்கத்தை பற்றி வரைந்த வர்ணணை. நடந்ததென்னவோ வேறுவிதமாக அல்லவா இருக்கிறது!. சோவியத்யூனியன் மக்கிஉழுத்து உருமாறிப் போனது மாக்ஸின் இயங்கில்வாத தத்துவதிற்கு ஏற்பட்ட தோல்வியாக எடுத்துக் கொள்ளலாமா? சீனா திசைமாறிப் போனதும் அப்படியா? நிக்கரகுவா சிலி அறுபது வருடங்களுக்கு பின்பும் கீயூபா சேடமிழுத்த போதிலும் தன்உயிரை தங்கவைத்து கொண்டு சிறு மின்மினிபூச்சி ஒளியையாவது உலகத்திற்கு சிமிட்டிக் கொண்டிருப்பது எவ்வாறு? இவ்வாறான
கேள்விகள் ஒருபக்திலேயோ ஒரு புத்தக்திலேயோ முடித்துவிட கூடிய காரியமல்ல. இதை தெளிவு படுத்தவேண்டியது மாக்ஸியத்தின் வாரிசுகளே!.
பொருளாதரத்தின் அடித்தளத்தில் அரசியல் கட்டப்படுகிறது. முதாலித்துவம் கட்டிய பொருளாதாரத்தின் சாரம் திரும்பவும் பொறிந்து விழுவது தவிர்க முடியாதது. இது சர்வ தேசதொழிலாளவர்கத்திற்கு ஒரு கேள்வியை விட்டு செல்லும். அது சோசலிஸமா? காட்டுமிராண்டித்தனமா? என்பதே!.
இந்த காட்டுமிராண்டித்தனத் தான் சமீபத்தில் யூகோசுலேவக்கியா ஆப்கானிஸ் தான் ஈராக் இன்று லிபியாவிலும் சந்தித்து கொண்டிருக்கிறோம். நாளை எது? ஈரான் வடகொறியாவா?
இரண்டாம் உலகமாகயுத்தம் பத்துகோடிமக்களை மேல்உலகிற்கு அனுப்பி மூன்று உலகம் வாழக்கூடிய உற்பத்திகருவிகள் சொத்துகளை துவம்சம் செய்து இறந்தவர்களின் பிணங்கள்மீது நடந்தேறி வந்துதான் முதாலித்துவம் தனது உபரிமதிப்பு மூலம் சுரண்டலை நடத்துவதற்கு நடந்து வந்திருக்கிறது.
மாக்ஸியம் என்பது மானிடத்தின் வரலாறு. ஐயன்டையின் சொன்னது போல மூன்றாம் உலகமாக யுத்தம்நடத்தால்…நான்காவது யுத்தம் தடிகள் கல்லுகளால் தான் நடைபெறமுடியும். அதன் அர்த்தம் மனிதநாகரீகமே அழிக்க பட்டுவிடும் என்பதே! வர்க்கநனவுள்ளவர்களுக்கு சொல்வது இதுவே!…… மாக்ஸியம் என்றும் மாக்ஸியம் தான். இன்றும் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது. முதாலம்அகிலம் இரண்டாம்அகிலம் மூன்றாம்அகிலம் நான்காம்அகிலம் போன்றவற்றில் மட்டும் தான். இன்று இந்த அகிலம் பத்தொன்பது மொழிகளில் தொழிலாளவர்கத்தின் சாட்சியாக காணக்கிடைக்கிறது. இதற்கு அப்பால்பட்டது எந்தமாக்ஸியமும் இல்லை.
பி.குறிப்பு.: மாக்ஸின் இரண்டு அறிவுரைகள் என்று கூறியிருந்தேன். ஒன்றை தான்
சுட்டிக்காட்டியிருந்தேன். மற்றையது கொஞ்சம் நீண்டதால் விட்டுவிட்டேன். வாசகர்கள் யாருக்காவது அவசியம் என கருதினால் அதை பதிவிடுவேன்.
நான்தலைப்பிலிருந்து விலகி பின்னூட்டமிடும்படி “படிப்பது தேவராம் இடிப்பது சிவன் கோவில்” எனும் நிலையாக உள்ளது உங்கள் செயற்பாடு. ஈபிடிபி அமைப்பு சிறிலங்காபடையின் பிரதான பெண்சப்ளையர்ஸ் என்று விக்கிலீக்ஸ் சிறிலங்கா அமெரிக்கா தூதரகத்தை ஆதரப்படுத்தி தகவல் சொல்லியது. யாழ் மாவட்ட சிறிலங்காபடைத்தளபதி சொல்கிறார் யாழில் நடக்கும் கிரிமினல்நடவடிக்கையின் பின்புலம் ஈபிடிபியுடன் சம்பந்தப்பட்டதென்று. றொபேர்ட் ஒ பிளேக் சொல்கிறார் ஈபிடிபி ஒரு இராணுவ துணைக்குழுவென. இவையெல்லாமே ஈழத்தமிழர் ஏற்கனவே அறிந்த உண்மைகள் என்ற விடயம் ஒருபுறமிருக்கட்டும்.
அண்மையில் யாழ் மாநகரசபையின் ஈபிடிபி உறுப்பினர் மங்களநேசன் அரசஅதிபர் பணிமனையில் பணியாற்றும் பெண்மீது பாலியல்ரீதியான அத்துமீறல் நடத்தியதும் அதை எதிர்த்து ஊழியர்கள் பணிபஸ்கரிப்பு போராட்டம் நடத்தினர். இதுவரை ஈபிடிபி அமைப்பும் யாழ்மேயரும் மங்களநேசன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காது அவரை பாதுகாப்பதில் மூர்க்கமாவுள்ளனர்.
நீங்களொரு தீவிர ஈபிடிபி ஆதரவாளர் என நன்கு அறியப்பட்டவர். இந்நிலையில் நீங்கள் மார்க்ஸிசம் பேசுவதென்பது அந்த கொள்கையை கேவலப்படுத்துவதாகவே உள்ளது. தயவு செய்து இதை கருத்தில் எடுக்கவும்.
ஈ.பி.டி.பி இலங்கையில் ஒரு உள்நாட்டுயுத்தத்தை விரும்பவில்லை. அது சகோர
இனத்திற்குள்ளேயே சொந்தக் கைகளை முறித்துகொள்வதற்கு ஒப்பானதாகும்.
திருவாளர் நிர்மலன் அவர்களே! ஆயிரக்கணக்காண கொலைகளை ஆதரிக்கும் தாங்கள் பால்லுணர்வுகளை அரசியல்லாக்க முனைவது உமது கையால்லாகத் தனமே!.
உமக்கு முதாலித்துவயரச இராஜயதந்திரிகளின் பேச்சுவார்த்தைகளை இணைத்தில் களவாடும் விக்கிலீக்ஸ் அரசியல் தலைவராக இருக்கலாம் எமக்கு நிச்சயம் இல்லை. இன்று இணையத்தளம் உமக்கு “பங்கர்” நிலைக்கு வந்து விட்டது என்று எண்ணும்போது கவலை அளிக்கிறது. இதில் தாங்கள் ஒரு போதும் வெற்றி பெறப்போவதில்லை.
அவசரநிதி ஆலயநிதி மருந்துநிதி மண்மீட்புநிதி போன்றவற்றிக்கு உண்டியல் குலுக்க முடியாது என்பதே உங்களுக்கு நோய்யாக பிடித்திருக்கிறது. இனிமேல் கொத்துரொட்டி மட்டுமே பணம்சேர்க்க இருக்கும் ஒரேவழி. இதைவிட வேறு எதிர் பார்ப்புக்களை வளர்த்துகொள்ளுளாதீர்கள். இல்லை உருத்திரகுமார் இடமே போய் சரண் அடையுங்கள். வயிறு வளர்ப்பதற்கு.
இன்று இணையத்தளம் உமக்கு “பங்கர்” நிலைக்கு வந்து விட்டது என்று எண்ணும்போது கவலை அளிக்கிறது.. Ha ha aha
யாழ் மாநகரசபையின் ஈபிடிபி உறுப்பினர் மங்களநேசன் அரசஅதிபர் பணிமனையில் பணியாற்றும் பெண்மீது பாலியல்ரீதியான அத்துமீறல் நடத்தியதும் அதை எதிர்த்து ஊழியர்கள் பணிபஸ்கரிப்பு போராட்டம் நடத்தினர். இதுவரை ஈபிடிபி அமைப்பும் யாழ்மேயரும் மங்களநேசன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காது அவரை பாதுகாப்பதில் மூர்க்கமாவுள்ளனர்.”
கணேசலிங்கமும் யாழ்ப்பாணத்தில் தான் இருக்கின்றார்.
உள்ளநாட்டு யுத்தத்தினால் உருப்பெற்றதே ஈபிடிபி எனும் ஒரு கொடிய கிரிமினல் குழு. யாவருமறிந்த உண்மை இப்படியிருக்க நீங்கள் லங்காபுவத் பாணியில் “ஈ.பி.டி.பி இலங்கையில் ஒரு உள்நாட்டுயுத்தத்தை விரும்பவில்லை” என கதை விடுகிறீர்கள்.
தமிழரிடையே அதுவும் குறிப்பாக ஈழத்தமிழரிடையே யாரும் மார்க்சிசம் பேசினால் பேசுவபவர் சிறிலங்கா அரசபயங்கரவாத ஒற்றர்களாக பார்க்கும் நிலையுள்ளது. எதனால்? போலிஇடதுசாரிகளும் இராணுதுணைக்குழுக்களான ஈபீஆர்எல்எப் புளொட் ஈபிடிபி காரர்கள் மார்க்சிசம் பேசியதால் வந்த வினை.
மார்க்சிசம் பேசுபவர்கள் அனைவரும் சிறிலங்கா அரசபயங்கரவாத ஒற்றர்களாக ? என்றால் பெரும்பாலும் ஆம். ஆனால் மார்க்சிசம் பேசுபவர்களில் ஒருசிலராவது மக்கள் நலனில் அக்கறையுள்ள நேர்மையான மார்க்சிசவாதிகள் நிட்சயம் இருப்பார்கள்.
ஈழத்தமிழராலும் சர்வதேச அளவிலும் ஒரு கொடிய கிரிமினல் குழுவாக இனம் காணப்பட்ட ஈபிடியின் தீவிர ஆதரவாளரான நீங்கள் மார்க்சிசம் பேசுவதால் தமிழரிடையே மிகச்சொற்பளவில் இருக்கும் நேர்மையான மார்க்சிசவாதிகளின் செயற்பாடுகள் பாழடிக்கப்படுகிறது. இந்நிலையில் உங்களை மார்க்சிசம் பேசவில்லையென யாரையா அழுதார்கள்!
மங்களநேசனை யாழ்மேயர் யோகேஸ்வரியும் டக்ளசும் பாதுகாப்பதாக நான் சொல்ல. கணேசலிங்கத்தை யாழ் பல்கலைகழக உபவேந்தரும் டக்ளசும் பாதுகாப்பதைethayam
ஞாபகப்படுத்துகிறார்.
சந்திரன்ராசா நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்கள் உண்மையானால்?? சட்டவாட்சி மேம்பட்ட நிலையிலுள்ள ஐரோப்பிய நீதிமன்றுகளை அணுகுங்கள். அதற்கு எத்தடையுமில்லையே!
மற்றவனை “கிறிமினல்”எனக் குற்றம் சாட்டினால் தாம் கிறிமினல் தனங்களில் இருந்து தப்பிவிடலாம் என்று புலிபுவத் கனவு காண்கிறார். நான் யாருக்கெதிராக குற்றம் சாட்டப்படவேண்டும்?.
ஒருகாலத்தில் ஐரோப்பாவில் கிறிமினல் வேலைகளை செய்துவிட்டு தப்புவதற்கு வாய்ப்பிருந்தது. புலம் பெயர்மக்களிடம் விரட்டிப்பறித்த தமிழ்பள்ளிக்கூடங்கள் ஆலயங்கள் பொதுநிறுவனங்கள் எல்லாம் இன்று பத்துஆண்டுகளுக்கு மேலாக கிறிமினல் தனத்தில் ஈடுபட்டதாக ஐரோப்பிய-அமெரிக்க நீதிதுறை சந்தேகப்படுகிறது. இதன்பிரதிபலிப்பாக தான் ஏற்கனவே பிரான்சிலும் அமெரிக்காவிலும் சிறைதண்டனை காலத்தை அனுபித்துக் கொண்டிருக்கிறார்கள். நெதர்லாந்தில் இருவருக்கு தண்டனை தீர்ப்பு வழங்கப் படுகிறதும் அல்லாமல் புலிபுவத்தின் பள்ளிகூடங்களுக்கும் மூடுவிழா நடக்கிறது. இதெல்லாம் யதார்தமாக “தெய்வம் நின்று கொல்லும்” என்று சொல்வது போல அணுவும் பிசகாமல் நடந்து கொண்டிருக்கிறது. நான் ஏன்? நீதிமன்றத்தை நாடவேண்டும்? அதுவும் அல்லாமல் உங்களைப் போல் புளியங்கொப்பை பிடித்த வசதிபடைத்தவன் நான் இல்லையே!.
ஈயத்தை பார்த்து இளித்த்தாம் பித்தளை ஈபிடிபி எனும் ஒரு கொடிய கிரிமினல் குழு என்று சொல்பவர்கள் அகிம்சைய பின்பற்றியவர்கள் போல
தமிழர் அகிம்சை வழியில் தமது உரிமைக்காக போராடியபோது எந்த நாடுகள் அதைகண்டுகொள்ளாது சிங்கள பேரினவாதத்தை ஆதரித்தார்களோ அவர்களே ஈழத்தமிழர் ஆயுதவழியில் போராடும்போதும் எதிர்த்தார்கள். அவர்களிற்கு தமது நலனே எப்போதும் முக்கியமாக இருந்ததே தவிர இலங்கைவாழ் தமிழரின் அவலம் பற்றி கவலைப்பட்டவர்களல்ல. அதுவே இன்றும் தொடர்கதை. இவர்களை சட்டவழியில் அணுகுவதே தமிழருக்கு சாதகமானது அதை சளைக்காது தொடர்ந்து செய்வார்கள்.
பலபத்துபேர் சிறைவாசம் சென்றாலும் புலம்பெயர் தமிழ்தேசீய செயற்பாட்டாளர்கள் சோர்ந்து விடவுமில்லை. விலகி ஒடவுமில்லை. “விழ விழ எழுவோமென” எழுந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
மறுபக்கம் சிறிலங்கா ஐனநாயக சோசலிச குடியரசு என பீற்றிக்கொள்ளும் ஒரு நாட்டின் ஐனாதிபதி அவரது தூதர்கள் அமைச்சர் மீதான நீதிமன்ற நடவடிக்கைக்கு முகம்கொடுக்காது தப்பியோடும் கேவலத்தை பார்க்கிறோமே. அதை ஆதரிக்கும் உங்களிற்கு ஐரோப்பிய நீதி பற்றிபேச என்ன யோக்கியதையிருக்கு!
சிறிலங்கா இராணுவத்திற்கு பெண்சப்ளை யாழ்குடாநாட்டின் ஒட்டுமொத்த கிரிமினலின் மொத்த குத்தகைக்காரர் சிறிலங்கா அரசபயங்கரவாத துணை இராணுவகுழு செயற்பாட்டிற்கு பெயர் “ஈழமக்கள் ஐனநாயகம்” வெட்கமாயில்லை!
திரும்பவும் கேட்கிறேன் மேற்குறிப்பட்ட கிரிமினல் தனங்களை ஆதரிக்கும் உங்ளை மார்க்சிசம் பேசவில்லையென யாரைய்யா அழுதார். மார்க்சிசத்திற்கும் ஈபிடிபியின் கிரிமினல் தனத்திற்கும் என்ன சம்பந்தம்? பதில் சொல்வீர்களா!
//ஈயத்தை பார்த்து இளித்த்தாம் பித்தளை ஈபிடிபி எனும் ஒரு கொடிய கிரிமினல் குழு என்று சொல்பவர்கள் அகிம்சைய பின்பற்றியவர்கள் போல//
விடுதலைப்புலிகள் எப்போவாவது தம்மை ஐனநாயகவாதிகளென சொன்னார்களா! பிறகெப்படி அவர்களிடம் அகிம்சையை எதிர்பார்க்கிறீர்கள்!
“சிறிலங்கா ஐனநாயக சோசலிச குடியரசு” “ஈழமக்கள் ஐனநாயகம்” என பீற்றிக்கொள்பவர்கள் ஒருகொடிய கிரிமினல்களாய் இருப்பதை தெரிந்து கொண்டும் அதை ஆதரிக்கும் நீங்கள் யார்? ஒரு அப்பட்டமான கிரிமினல்கள்தான்.
தமிழினத்தின் பிரச்சனைகள் தீரவேண்டுமாக இருந்தால் வைக்கோ நெடுமாறன் ( இவர்பாவம் என் அப்பன் மாதிரி) சீமான் அதையொட்டிய நிர்மலன் தோஸ்து போன்றவர்களை சிறையில் அடைக்க வேண்டும். இந்த துக்கடா சாமிகளே! இனத்தின் பெயரை வைத்து பிழைப்பு நடத்து பவர்களாகும். சிறை என்னும் போது அந்த சிறை எந்தவகை பட்டதாக இருக்க முடியும் என்பதும் பாரதூரமான கேள்வி. இதை ஆய்வு படுத்துவதற்கு ஒரு மன்றம் வேண்டும். அதாவது இனமொழி வேறுபாடுயின்றி ஒரு கட்சி வேண்டும். அதுவே சர்வதேசிய தொழிலாளர் கழகம்.
agree with u my friend
னீங்கள் வழக்குபோடுங்கோ தலைகீழாநில்லுங்கோ,நாங்கல் கவலை பட போவதில்லைநாங்கள் விரும்பியதுபிரபாகரனையும் அவனது கிரிமினல் கோஸ்டியையும் ஒழிப்ப்து தான் அவனையுன் ஒழித்து அவனது குடும்பத்தையும் ஒழித்து விட்டோம்,நீக்கள் வழ்க்கு போட்டு புரக்குராசி புடித்து அலையுங்கோ, அதுகும் கொத்து ரொட்டி விற்று காசு சேருங்கோ, இவன் பிரபாகரன் இலங்கைகு வராமல் கேர்ளாவில் இருந்திருந்தால் சினிமாவில் பெரிய வில்லன்நடிகனாகக இருந்திருப்பான்
//தமிழினத்தின் பிரச்சனைகள் தீரவேண்டுமாக இருந்தால் வைக்கோ நெடுமாறன் ( இவர்பாவம் என் அப்பன் மாதிரி) சீமான் அதையொட்டிய நிர்மலன் தோஸ்து போன்றவர்களை சிறையில் அடைக்க வேண்டும்.//
இலங்கைவாழ் தமிழரின் உரிமை மறுப்பென்பது 60 வருடகாலத்திற்கு முற்பட்டது. நெடுமாறன்ஐயா வைகோ சீமான் போன்றோரின் இலங்கைவாழ் தமிழரின் உரிமை தொடர்பான ஈடுபாடு என்பது 20-30 வருடங்களிற்குட்பட்டது. எனவே உங்களிற்கு இலங்கைவாழ் தமிழரின் உரிமை போராட்ட வரலாறோ காரணங்களோ தெரியாது என்பது நிருபணமாகிறது. சிறிலங்கா அரசபயங்கரவாத லங்காபுவத் என்ன சொல்கிறதோ அதையே உண்மையென நம்புகிறீர்கள்.
ஈபிடிபி கிரிமினலான தங்களிற்கும் சர்வதேச தொழிலாளர்களிற்கும் என்ன சம்பந்தம்? யாருடையவோ கட்டுரைகளில் இருந்து ஒரிரு சொற்களை பொறுக்கியெடுத்துவிட்டு அதை வைத்து மார்க்சிச பீலா காட்டுகிறீர்களா!
என்ன உங்கள் தோஸ்த்துக்களையே சிறையில் அடைக்கப் போகிறீர்களா!நோய் கொஞ்சம் முத்திதான் போச்சு.
வீரன் எசமானின் எலும்புத்துண்டிற்கு நல்லாய்தான் வாலாட்டுகிறீர்கள்.
//வீரன் எசமானின் எலும்புத்துண்டிற்கு நல்லாய்தான் வாலாட்டுகிறீர்கள்.
//நிர்ம்லன்
எசமானின் எலும்புத்துண்டை விட தன் இனத்தினை சுவைபார்க்கும்
இனமாக
ஈழத்தமிழினம் உலகெங்கும் வாழுகின்றது. காட்டில் வாழும்புலிகூட
தன் இனத்தை தானே புசிப்பதில்லை. புலியின் பெயரால் தமிழீழ விடுதலை
என்று
பெயர் வைத்து தமிழரையும் சிங்களவரையும் பயமுறுத்தி
வாழ்ந்து
வந்தவ்ர்கள்தான் இந்த தமிழீழவிடுதலை கேட்கும் பரம்பரை.
பல ஆயிரம்
வருடங்களிற்கு முன்பே தமிழரை அழித்து தமிழரினுள் தலைமைதாங்கி
நிற்கும்
ஓர் சமூகத்தின் உலகினை ஏமாற்ரிப் பிழைக்கும் வழியே இந்த தமிழீழப்போராட்டமும், உலகளாவிய தமிழாலங்கழும், இந்துக்கோவில்கழும்.
தமிழரின் உருமைகளை பயங்கரவாதமா மாற்ரியவ்ர்களின் கட்டுப்பாட்டில்
இவைகள் உள்ளது இத்ற்கு சான்றாக்வுள்ளது.-துரை
சரியான் பதில் அன்பரே
சரச்சந்திரன் சண்முகம் தனது மகனைப் பற்றிப் பேசுகிறார்)
ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கா கிளர்ச்சியாளர்களுக்காக ஆயுதக் கொள்வனவு செய்யும்போது கைதான மூன்று கனடியர்கள் சிறையிலிருந்து கையொப்பமிட்டு அனுப்பியுள்ள பகிரங்கக் கடிதம் ஒன்றில் தாங்கள் செய்தது தவறு என்று ஏற்றுக்கொண்டுள்ளதுடன் அரசியல் வன்முறைகளையும் நிராகரித்துள்ளார்கள்.
எங்கள் இலட்சியத்தை வன்முறை மூலம்தான் அடைய முடியும் என நாங்கள் தவறாக நம்பி விட்டோம். நாங்கள் செய்தது ஸ்ரீலங்காவில் நிலவும் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு ஒன்றை எட்டுவதற்கு உதவி செய்யாது என இப்போது நாங்கள் உணருகிறோம்” என அவர்கள் எழுதியுள்ளார்கள்.
ஸ்ரீலங்காவின் நீண்ட உள்நாட்டு யுத்தத்தின் போது எல்.ரீ.ரீ.ஈ எனப்படும் தமிழ் புலிகளுக்கு ஆயுத வினியோகம் செய்யும் சர்வதேச ஆயுதக் கொள்வனவு வலையமைப்பின் ஒரு அங்கமாகவிருந்த இந்த ரொரான்ரோ நபர்கள் ஆயுதப் போராட்டத்தை நிராகரித்திருப்பது முற்றுமுழுதான ஒரு தலைகீழ் திருப்பமாகும். ஆனால் நியுயார்க்கில் 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிலத்திலிருந்து ஆகாயத்துக்கு ஏவப்படும் எறிகணைகளையும் மற்றும் ஏகே – 47 ரக துப்பாக்கிகளையும் கொள்வனவு செய்ய முயன்று பிடிபட்டபோது அந்தக் குற்றம் அவர்களுக்கு 25 வருட சிறைத்தண்டனையை சம்பாதித்துக் கொடுத்தது, அதிலிருந்து அவர்கள் மனமாற்றம் அடைந்து விட்டார்கள் என வெளிப்படையாகத் தெரிகிறது.
“நாங்கள் ஒவ்வொருவரும் முடிவுக்கு வந்திருப்பது,எங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தண்டனைக்கான நாங்கள் புரிந்துள்ள குற்ற நடவடிக்கை சகல ஸ்ரீலங்காப் பிரஜைகளுக்குமே மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய செய்கை என்று” இவ்வாறு சத்ஹஜன் சரச்சந்திரன், திருத்தணிகன் தணிகாசலம் மற்றும் சஹிலால் சபாரட்னம் ஆகிய மூவரும் எழுதியுள்ளனர்.
“ஆயுத வன்முறை என்கிற எல்.ரீ.ரீ.ஈ சித்தாந்தத்துக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் தமிழ் மக்களுக்கு சமாதானத்தை கொண்டு வர முடியும் என் நாங்கள் தவறாக நம்பி விட்டோம். இப்போது நாங்கள் அந்த எண்ணத்திலிருந்து தூர விலகிவிட்டோம்” என்று தெரிவிக்கிறது நியுயோhக் புரக்லீனில் உள்ள அவர்களது சிறைச்சாலையிலிருந்து ஆகஸ்ட் 21ந் திகதி அவர்கள் ஒவ்வொருவரினாலும் கையொப்பமிட்டு எழுதப்பட்ட கூட்டுக் கடிதத்தில் எழுதப்பட்டள்ளது. நஷனல் போஸ்ட் பிரத்தியேகமாக பெற்றுக்கொண்ட அந்தக்கடிதம் வரும் நாட்களில் பகிரங்கமாக வெளியிடப்பட உள்ளது.
கூட்டாட்சி அமைப்பால்; தடை செய்யப்பட்ட பிரிவினைவாத ஆயுதக் குழுவும் ரொரான்ரோவில் நீண்ட காலமாக தீவிரமாக செயற்பட்டு வருவதுமான தமிழ் புலிகளுடன் தொடர்புள்ள தீவிர கனடிய ஆதரவாளர்களினால் அரசியல் வன்முறை நிராகரித்து ஒதுக்கப்பட்டிருப்பது இதுதான் முதல்முறை.
இது வெளிவருவது ஒன்ராறியோவில் உள்ள இந்தக் கைதிகளின் உறவினர்கள் இவர்களை கைதிகள் இடமாற்றத்தின் கீழ் கனடாவுக்கோ அல்லது ஸ்ரீலங்காவுக்கோ மாற்றும் படியான கருணை கோரி வருவதானால்தான். மற்றும் அது அரசாங்கத்துக்கு ஒரு கடிமான கேள்வியாக உள்ளது. பயங்கரவாதத்துடன் தொடர்புள்ளவர்கள் மனம் வருந்தி மன்னிப்புக் கோரினால் அவர்கள் கருணை காட்டப்படும் தகுதிக்கு உள்ளாகிறார்களா?
சில நிபுணர்கள் வாதிப்பது உயர் சுயவிபரமுடைய முன்னாள் போராளிகள் பகிரங்கமாக தங்கள் கடந்தகால நடவடிக்கைகளுடன் இப்போது தொடர்பு இல்லை எனத் தெரிவிப்பதன் மூலம், ஆயுதக்குழுக்கள் வன்முறையை நியாயப்படுத்த கூறும் கதைகளையும் மற்றும் புதியவர்களை சேர்த்துக் கொள்ளும் முயற்சிகளையும் தாக்கத்துக்கு உட்படுத்தி குறைப்பதற்கு முடியும் என்று.
“ஒரு பகிரங்க மனவருத்தம், குழுவிலிருந்து பிரிந்து விட்டதாக தெரிவிக்கும் ஒரு பகிரங்க அறிவிப்பு உண்மையில் மற்றவர்களுக்கு அக்குழுவுடன் தொடர்பு கொள்ள முயலும் சட்டபூர்வ தன்மை மற்றும் கவர்ச்சி என்பனவற்றைக் குறைத்து விடும். குறிப்பாக விலக முனைபவர்கள் தங்கள் கரங்களில் இரத்தக்கறை படிந்துள்ளது என்று தெரிவிக்கும்போதுதான்” என்று கூறியுள்ளார் பென்சியல்வானியாவின் அரச பல்கலைக்கழகத்தின் பயங்கரவாத கற்கைகளுக்கான சர்வதேச நிலையப் பணிப்பாளர் ஜோண் ஹோர்கன்.
ஸ்ரீலங்காப் படைகளுக்கும் தமிழ் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்களாகி விட்டன. தமிழ் புலிகள் தங்கள் முயற்சிக்காக கனடாவிலிருந்து மில்லியன் கணக்கில் நிதி திரட்டியதுடன், ரொன்ரோவிலும் ஒட்டவாவிலும் உள்ள அவர்களின் ஆதரவாளர்களினால் கொடிகளை வீசி உற்சாகப் படுத்தப்பட்டார்கள். இந்த மனிதர்கள் தாங்கள் முன்பு வகித்த நிலைகளை இப்போது நிராகரிப்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
31 வயதான சரச்சந்திரன் ரொரான்ரோ பகுதியின்; தமிழ் இளைஞர் அமைப்பின் முன்னாள் தலைவர். அதேவேளை 32 வயதான சபாரட்னம் நாட்டின் முன்னணி அமைப்பான கனடியன் தமிழ் காங்கிரசின் தொடர்பாடல் பணிப்பாளர், 43 வயதான தணிகாசலம் இவரது மைத்துனர்.
“இங்கே மூன்று தமிழ் நபர்கள் தங்கள் நிலைப்பாட்டினை மிகவும் பகிரங்கமாகவே அறிவித்துள்ளார்கள். இவர்கள் ஸ்ரீலங்கா மக்களிடையே மட்டும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை, அவர்கள் கனடியப் பிரஜைகளாக இருப்பதால் ஸ்ரீலங்காவுக்கு வெளியே வாழும் பெருந்தொகையான தமிழ் இனத்தவர்களின் மனங்களிலும் பாதிப்பை உண்டாக்க முடியும்” என்று இவர்களின் நியுயார்க் வழக்கறிஞரான லீ கின்ஸ்பேர்க் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். இவர்களது கூட்டறிக்கைக்கு மேலதிகமாக அவர்கள் ஒவ்வொருவரும் கனடாவில் உள்ள தமிழ் இனத்தவர்கள் ஆயுதம் தாங்கிய பிரிவினைவாதிகளின் பிரச்சாரத்தை கைவிட்டு அதற்குப் பதிலாக ஸ்ரீலங்காவை மீளக் கட்டியெழுப்ப உதவும்படி கேட்டு தனிப்பட்ட முறையில் நீண்ட கடிதங்களையும் எழுதியுள்ளார்கள்.
“ஆயுதங்களைப்பற்றிய ஒரு இரண்டாவது பேச்சைக்கூட நாங்கள் பேசாதிருக்க வேண்டும்” என்று தணிகாசலம் எழுதியுள்ளார், ”இவைகள் யாவற்றிலுமிருந்து நாங்கள் சிலவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும். எந்த ஒரு காரியத்துக்கான பதிலும் யுத்தம் என்பதல்ல. ஒரு ஆயுதத் தாக்குதலுக்கு ஆதரவளித்து நாங்கள் எங்கள் மக்களுக்கு மிகப் பெரிய தவறைச் செய்துவிட்டோம்” என்று சபாரட்னம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சரச்சந்திரன் எழுதியிருப்பது,” எதற்கும் இரத்தம் ஒரு பதில் அல்ல, வன்முறையை ஊக்குவிக்கும் எந்த ஒரு பாதையையும் உங்களில் ஒருவரும் தெரிவு செய்யக்கூடாது என உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன்” என்று.
கூட்டாட்சி அமைப்பின் குற்றவாளிகள் தங்கள் தண்டனையின் குறைந்தது 85 விகிதத்தையாவது அனுபவிக்க வேண்டியுள்ளதால், இன்னும் 16வருட சிறைவாச காலத்தை எதிர்நோக்கியுள்ள இவர்கள் திரு.கின்ஸ்பேர்க்கின் உதவியுடன் அமெரிக்காவை விட்டு இடம் மாறுவதற்கான உதவியைத் தேடுகிறார்கள். கனடா அமெரிக்காவுடன் ஒரு கைதிகள் இடமாற்ற உடன்படிக்கையை செய்திருக்கிறது. ஆனால் அவர்களைத் திரும்ப ஏற்றுக்கொள்வதற்கு ஒட்டவா சம்மதிக்க வேண்டும்.
அத்தோடுகூட அவர்கள் பிறந்த இடமான ஸ்ரீலங்காவுக்கு இடம்மாறுவதைக் குறித்தும் அவர்கள் பரிசீலித்துக் கொண்டிருக்கிறார்கள். 2009ல் ஸ்ரீலங்காவின் உள்நாட்டுப் போர் முடிவடைந்ததிலிருந்து, மோதலின்போது பிடிபட்ட கிட்டத்தட்ட 11,000 வரையான தமிழ் புலிப் போராளிகள் மறுவாழ்வு அளிக்கப்பட்டதின் பின்னர் விடுவிக்கப் பட்டுள்ளார்கள. இந்த மூன்று கனடியர்களும் ஸ்ரீலங்கா தங்களை ஏற்றுக் கொண்டு இத்தகைய பரிகாரத்தை வழங்கும் என்று நம்புகிறார்கள்.
“அவர்கள் கனடியப் பிரஜைகள். ஆனாலும் கனடாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும். மற்றும் அவர்களை ஏற்றுக்கொள்வதால் என்ன அரசியல் நலன்கள் கிடைக்கும் என்பது அத்தனை தெளிவாக இல்லை” என்று தெரிவித்தார் திரு.கின்ஸ்பேர்க். ”எங்களிடம் ஒருவகையான நம்பிக்கையும் மற்றும் எனது கட்சிக்காரர்கள் விடயத்தில் எல்.ரீ.ரீ.ஈ சார்பாக வன்முறையுடன் தொடர்பு பட்டிருந்த ஸ்ரீலங்கா பிரஜைகளுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் என்ன செய்ததோ அதே போன்ற நலன்களைப் பின்பற்றி இவர்களும் மறுவாழ்வு பெறுவதைக் காணும் அவாவினைக் கொண்டிருக்கும் என்கிற நிலைப்பாடும் உள்ளது – முக்கியமாக அதற்கு மேலும் ஏனெனில் இவர்களின் விடயம் மிகவும் பிரசித்தமானது என்பதால்;.
ரொன்ரோவின் சுற்றுப்புறப் பகுதியான மார்க்கமில் ஒரு உணவு அறையின் மேசைக்கு முன்னாலிருந்து சரச்சந்திரனின் தந்தையான சரச்சந்திரன் சண்முகம் பேசும்போது தனது மகன் கிளர்ச்சியாளர்களுடன் தொடர்பு வைத்திருந்தார் என்பதை அவருடைய கைதைப்பற்றி வானொலியில் கேட்கும்வரை தான் அறிந்திருக்கவில்லை எனத் தெரிவித்தார்.
அவரது மகன் செய்தது தவறு என்பதில் அவருக்கு குழப்பம் எதுவுமில்லை,ஆனால் அதற்காக மன்னிப்பு வழங்குவதற்கான சில நடவடிக்கைகள் உண்டென அவர் நம்புகிறார். போர் முடிவடைந்துவிட்டது,தமிழ் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள்,மற்றும் தமிழர்களின் மீதுள்ள நல்லெண்ண நம்பிக்கையாக அவரது மகனுக்கு ஒரு இரண்டாவது சந்தர்ப்பத்தை வழங்குவது யுத்தத்தின் பின்னான சமரச முயற்சிகளுக்கு உதவியாக இருக்கும். கடந்த மே மாதம் இலாப நோக்கற்ற ஒரு அமைப்பான தமிழ் கைதிகளிடம் கருணை காட்டுங்கள் என்கிற அமைப்பை ஆரம்பிக்க திரு.சண்முகம் கூட்டாக நிதி வழங்கியுள்ளார். அதன் நோக்கம் ஸ்ரீலங்காவில் நடந்த மோதல்களின்; விளைவாக தடுத்து வைக்கப் பட்டுள்ளவர்களுக்கு குரல் கொடுப்பதாகும் ஆனால் இதன் மூன்று பணிப்பாளர்களும் சரச்சந்திரன்,தணிகாசலம்,மற்றும் சபாரட்னம் ஆகியோரது உறவினர்களே.
pls read thenee.com ,