பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்காததைக் கண்டித்து இராணுவச் சிறையில் விசாரணைக் கைதியாக சிறைப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவத் தளபதியும் போர்க்குற்றவாளியுமான சரத்பொன்சேகா உண்ணாவிரதத்தைத் துவங்கியுள்ளதாகத் தெரிகிறது. இராணுவ விசாரணைக்கு எதிராக தனது மேல் முறையீட்டு மனு இன்று நீதிமன்ற விசாரணைக்கு வர இருந்த நிலையில் அவர் உண்ணாவிரதத்தைத் துவங்கிதால் நீதிமன்றத்திற்கும் வரவில்லை. அனுமதி மறுக்கப்பட்டதால் பாராளுமன்ற அமர்விலும் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிகிறது.