இலங்கை அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள எதிரணி ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் இராணுவத் தளபதியுமாகிய சரத்பொன்சேகா அவர்களை விடுதலை செய்யுமாறு நாட்டில் உள்ள நான்கு முக்கிய பௌத்த பீடாதிபதிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.
மல்வத்தை, அஸ்கிரிய, அமரபுர மற்றும் ராமன்ன ஆகிய பௌத்தபீடங்களின் பீடாதிபதிகள் இணைந்து இந்தக் கோரிக்கையை எழுத்து மூலம் விடுத்திருக்கின்றார்கள்.
சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளதையடுத்து, நாட்டில் தோன்றியுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் நிச்சயமற்ற நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக வரும் 18 ஆம் திகதி கண்டியில் மாநாடு ஒன்றிற்கு நான்கு பௌத்த பீடாதிபதிகளும் அழைப்பு விடுத்திருக்கும் நிலையிலேயே சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற அவர்களது கோரிக்கை பற்றிய தகவல் வெளியாகியிருக்கின்றது.
நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முன்னின்று செயற்பட்ட சரத் பொன்சேகாவுக்கும், ஜனாதிபதிக்கும் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜபக்சவுக்கும் இடையில் எழுந்துள்ள முரண்பாடானது பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னர், நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கின்றது என்பதையும் பௌத்த பீடாதிபதிகள் ஜனாதிபதியிடம் விடுத்துள்ள வேண்டுகோளில் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
BBC
The Mahanayakes in their letter, issued ahead of Thursday’s crucial meeting of the Maha Sangha in Kandy said that if the government was able to accept and offer ministerial posts to Vinayagamoorthy Muralitharan (alias Karuna) and Sivanesathurai Chandrakanthan (alias Pillayan) who were once members of the terrorist organization, the government should definitely release General Fonseka and the others and provide them maximum security as they had made sacrifices in the battlefield to protect the lives of all Sri Lankans.
நல்லை ஆதீனம் யாழ்ப்பாணத்தில் தமிழரைக் கட்டுப்படுத்துவதில்லை சங்கர மடம் தமிழக அரசியலில் தலையிடுவதில்லை ஆனால் இலங்கையில் மகாநாயக்கர்களீன் கொடுமை தாங்க முடியவில்லை.அரசியலுக்கும் பிக்குகளூக்கும் என்னய்யா சம்பந்தம்? சிங்களவரின் மூலையை தொடர்ந்தும் கழுவி அவர்கலை சிந்திக்கவே விடுகிறார்களீல்லை. சனல் அய்ந்தின் மீன் பிடிக்கும் நிகழ்ச்சி ஒன்றீல் கொலை என்பதெ கூடாது என்றூ ஒரு புத்த பிக்கு சொல்லும்போது அய்ம் இன் தி டெரிபிள் கண்றீ என்றூ சொல்கிறார் நிகழ்ச்சியாளர்.
இலங்கையில் குட்டையை குழப்புபவர்கள் பிக்குகள் தான் என்பது அவருக்கும் தெரிந்ததோ?
தாவர உணவு சாப்பிட்டுக் கொண்டு மனிதக் கறீ சமைக்க ஆசைப்ப்டும் மதக்குருக்கள் என்றால் இந்த பிக்குகள் தான்.
இப்போது வாய் திறந்து இலங்கையின் சன்நாயகம் என்போர் தமிழ் மக்கலையும் நினைத்துப் பார்ப்பது நல்லது.