Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

சரணடைந்த போராளிகள் எங்கே? – கே.பி பதில் சொல்வாரா?

இனியொரு... by இனியொரு...
10/04/2011
in இன்றைய செய்திகள்
0 0
29
Home இன்றைய செய்திகள்

சரணடைந்த போராளிகளில் ஒரு பகுதியினரை இலங்கை அரசு கொலைசெய்திருக்கலாம் எனச் சந்தேகங்கள் தெரிவிக்கப்படுகிறது. சரணடைந்த ஆரம்பத்திலிருந்தே வெவ்வேறு கணிப்பீடுகளைக் கூறிவந்த இலங்கை அரசு இன்னமும் 900 போராளிகள் மட்டுமே விடுதலை செய்யப்படுவர் என்று அறிவித்திருக்கிறது.
இறுதி யுத்தத்தின் போது 11ஆயிரத்து 800 விடுதலைப்புலி உறுப்பினர்கள் சரணடைந்தனர் என்றும் இவர்களில் 8ஆயிரத்து 240 விடுதலைப்புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று புனர்வாழ்வு அமைச்சு உத்தியோகபூர்வமாக கடந்த வாரம் அறிவித்திருந்தது.
புனர்வாழ்வு மறுசீரமைச்சின் கணக்குப்படி 3560 விடுதலைப்புலி உறுப்பினர்கள் அரசாங்கத்தின் தடுப்புக்காவலில் இருக்க வேண்டும். இவர்களில் 1700பேரை நேற்று அலரி மாளிகையில் விடுதலை செய்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.
மிகுதி 1740பேர் புனர்வாழ்வு மறுசீரமைப்பு ஆரம்பத்தில் தெரிவித்த கணக்கின் படி தடுப்பில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 900பேர் மட்டுமே தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாக புனர்வாழ்வு மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.
புனர் வாழ்வு அமைச்சின் உத்தியோக பூர்வக் கணக்கெடுப்பு மட்டுமே அடிப்படையில் தவறானதாக அமையும் நிலையில் இன்னமும் அதிக அளவிலான போராளிகளுக்கு என்ன நடந்திருக்கலாம் என அச்சம் உருவாகியுள்ளது.
இனப்படுகொலை இலங்கை அரசுடன் இணைந்து போராளிகளைப் பாதுகாப்பதாகக் கூறும் கே.பி மற்றும் அவர்களின் புலம் பெயர் ஏஜண்டுகள் இதற்குப் பதில் சொல்ல வேண்டிய நிலையிலுள்ளனர்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

பிரிவு கோட்பாட்டுரீதியானது : ஜே.வி.பி பிரிவுறும் குழுவினர்

Comments 29

  1. Yoga.S says:
    14 years ago

    அவரே சரணடைந்து தானே,ராஜபோக வாழ்க்கை வாழுகிறார்?

  2. veeran says:
    14 years ago

    அதற்கு ஏன் கேபி பதில் சொல்லவேன்டும், புலிகலிடம் சரனடைந்தவர்களை புலிகல் என்ன செய்தார்கள் என்று அவரிடம் கேளுங்கள்

    • நிர்மலன் says:
      14 years ago

      புலிகள் சரணடைந்தது சிறிலங்கா அரசபயங்கரவாதபடையிடம் . இந்நிலையில் பதில் சொல்ல வேண்டியது முப்படைகளினதும் தளபதியான மகிந்தாவே. இதைக்கூட புரிய முடியாதவர்கள் மாதனமுத்தாக்களின் சீடராக இருக்கும் தனித் தகுதிபடைத்தவர்தான்.

  3. Yoga.S says:
    14 years ago

    பெயரில் தான் வீரன்!

  4. veeran says:
    14 years ago

    புலிகல் சரனடைய மாட்டார்களே அவர்கள் சயனைட் வில்லையை கடித்து சாவர்களே தவிர சரனடைய மாட்டார்கள், புலிகலிடம் சரனடைந்தவர்களை புலிகல் என்ன செய்தார்கள் , 

    • Kumar says:
      14 years ago

      இறுதியாக இறக்கும் தறுவாயில் கூட தாங்கள் பிடித்துவைத்திருந்த சிப்பாயை கொல்லாமல் விட்டதாக அறிகிறேன்.இதைக்கூறுவதன்மூலம் புலிகளை தெய்வப்பிறவிகளாக நான் கூற முற்படுவதாக எண்ணவேண்டாம் திருவாளா் வீரன்.ஆனால் எப்போதும் ஒரளவேனும் உண்மையை கொஞ்சம் பேசுவது நல்லது உமது புலி எதிர்ப்பு வெறியால் தவறாக புலம்பக்கூடாது. 

      • Thevan 2 says:
        14 years ago

        ஓம் , ஓம் புலிகள் சரியான மனிதாபிகள். TELO போராளிகள் புலிகள் வருவதை கண்டதும் தாங்களாகவே ஏறி எரியும் TYREல் தீக்குளித்தார்கள்.

        மாத்தையாவின் விசுவாசிகளும் புலிகள் வருவதை கண்டதும் தாங்களே குப்பியை கடித்தது தான் உண்மை.

        புலிகள் சரணடைந்தது // தப்பேயில்லை (?),

        கருணா சரணடைந்தால் துரோகம்,

        ரமேஷ் சரணடைந்தால் ? சார்லஸ் சரணடைந்தால் ? தேசியத் தலைவர் தப்பிப்போகும் போது பிடிபட்டால்? தேசியத் தலைவர் சரணடைந்தால் ?

        தப்பேயில்லை (?),

        குப்பிக்குள் விஷம் தலைவர்கட்கு அல்ல.

  5. Yoga.S says:
    14 years ago

    சொல்லுங்க,வீரன்!அப்புறம்……………………………..?

  6. veeran says:
    14 years ago

    அரசன் அன்றறுப்பான் தெய்வம்நின்று அறுக்கும்

  7. malaravan says:
    14 years ago

    எனது அண்ணன் புலிகளின் சிறை ஒன்றிலிருந்து தப்பி வந்தவர். கை உடைந்த ஒருவருக்கு பயிற்சி குடுக்க மாட்டேன் என்று ஒரு வார்த்தை சொன்னதற்காக அடித்து பல மாதங்கள் சிறை வைத்து சித்திரவதை செய்து தப்பிவந்து 10நாள் கோமாவில் கிடந்தார். இப்ப ஐரோப்பாவில நடை பினமாக வாழ்கிறார். இன்னும் புலி சரி என்டு சொல்லி எத்தனை பேர அவமானப் படுத்துறியள்? வெளி நாட்டு காரருக்கு நீங்கள் புலி என்டால் ஒன்றும் தெரியாது என்றா நினைக்கிறீங்கள்? அண்ணன் மட்டுமல்ல கதை கதையா எத்தனையோ அவர் சொன்னார்.

  8. Yoga.S says:
    14 years ago

    “அரசன் அன்றறுப்பான் தெய்வம்நின்று அறுக்கும்.”யாரை?

  9. Yoga.S says:
    14 years ago

    மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள் தானே புலிகளின் இயக்கத்தில் இருந்தார்கள்,குமார்?வீரனைப் போய் நீங்கள், “புலி எதிர்ப்பு வெறியால் தவறாக புலம்பக்கூடாது”. என்று அறிவுரை வேறு சொல்லி,திருத்தப் பார்க்கிறீர்கள்?

  10. veeran says:
    14 years ago

    VF journalist says many of those who funded the LTTE were ’eminently respectable’ and ‘worked in America, Canada, Australia and Europe’. (Emphasis added). One is intrigued! How on earth could anyone who funds a terrorist group notorious for recruiting child soldiers, civilian massacres, gun running, narcotics smuggling, money laundering, extortion, bombing buses and trains, turning men, women and children into suicide bombers, assassinating politicians, a countless number of murders and violent suppression of political dissent, be called ’eminently respectable’? VF itself lists some of the crimes the LTTE committed: “The Tigers were responsible for hundreds of suicide attacks on buses, temples and shopping malls and for village massacres in which children were killed in front of their parents.” What the world needs to be told is that the savage LTTE killers disported themselves in slashing open bellies of pregnant mothers, taking out unborn babies and dashing them on walls and trees. The Gonagala massacre (Sept. 18, 1999), in which heavily armed Tigers including female cadres chose to use machetes, swords and axes to butcher, under the cover of darkness, over 60 villagers including children, many of them in their sleep, is a case in point.http://island.lk/index.php?page_cat=news-section&page=news-section&code_title=55

    • நிர்மலன் says:
      14 years ago

      லங்காபுவத் வீரன் அவர்களே. உங்களின் லங்காபுவத் செய்தியல்ல நீங்கள் பின்னூட்டமிடும் தலைப்பு. தலைப்புடன் பேசுபொருளுடன் சம்பந்தப்பட்டு கருத்து பகிர்வை மேற்கொள்ள முடியாத கருத்துவறுமையில் தவிக்கிறீர்கள்.
      வட்டுக்கோட்டை வழி கேட்டால் அந்த வழியை பற்றி பேசுங்கள் அதைவிடுத்து அர்த்தமின்றி கொட்டைப்பாக்கின் விலையை பற்றி பேசாதீர்கள்.
      நீங்கள் இணைத்துள்ள இணைப்பு தலைப்புடன் சம்பந்தப்படாதது மாத்திரமல்ல. பொய்யான தகவலை உள்ளடக்கியது. கரும்புலிதாக்குதலில் மிகப்பெரும்பாலானவை கடலில் கடற்படைகெதிராகவே நிகழ்தப்பட்டது. அது எல்லா தமிழருக்கும் தெரியும்.

      • veeran says:
        14 years ago

        புலிகல் சரனடைய மாட்டார்களே அவர்கள் சயனைட் வில்லையை கடித்து சாவர்களே தவிர சரனடைய மாட்டார்கள், புலிகலிடம் சரனடைந்தவர்களை புலிகல் என்ன செய்தார்கள்

        • நிர்மலன் says:
          14 years ago

          1)இப்ப புலிகளை பற்றி யாரும் இங்கு பேசவில்லை ஆயுதபோராட்டத்திலிருந்து விலகிய **முன்னனாள் புலிகளைப்பற்றியே பேசப்படுகிறது.
          2)தலை மகிந்தவே வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து தான் 1800 முன்னனாள் புலிகளிற்கு புனர்வாழ்வழித்து விடுதலை செய்வதாக சொன்னார். வால் நீங்கள் அதற்கு மாறாக பேசுகிறீர்கள். என்ன தலையை மிஞ்சின வாலா!

        • நிர்மலன் says:
          14 years ago

          சரணடைந்த எதிரிகளை விடுதலை செய்தனர். துரோகிகளிற்கு இராணுவநீதிமன்ற தீர்ப்பின்படி தண்டனையளித்தார்கள்.

          • veeran says:
            14 years ago

            ஆயுதபோராட்டத்திலிருந்து விலகிய **முன்னனாள் புலிகளைப்பற்றியே பேசப்படுகிறது. சரனடைந்தவுடன் புலிகல் செய்த அட்டூழியம் இல்லாமல் போய்விட்டதோ, இவர்கள் சரனடையாமல் தேசிக்காய் தலைவர் சொன்னது போல் சயனைட் கடித்திருக்கலாமே, 

  11. veeran says:
    14 years ago

    ராஜீவ் கொலையாளிகளின் குற்றப் பின்னணி!
    ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை அளிக்கப்பட்ட மூவருக்கு கருணை காட்ட வேண்டும் என்ற பிரசாரம், தொலைக்காட்சிகள் உதவியுடன் நடைபெறுகிறது. சாதாரணமாக ‘தமிழ் உணர்வாளர்கள்’ என்று அறியப்படுபவர்கள், தற்போது ‘மனித நேயக் காவலர்களாக’ அவதாரம் எடுத்துள்ளனர். இந்நிலையில், அந்த படுகொலையைப் பற்றிய சில விஷயங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
    யாழ்ப்பாண மேயர் கொலை வழக்கில் பிரபாகரன் சார்பாக வாதாடிய வக்கீல் எஸ்.நடராஜன், டெஸோ தலைவர் சிறி.சபாரத்தினம், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணித் தலைவர் அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் எம்.பி., E.P.R.L.F. ஜார்ஜ், P.L.O.T.E. வாசுதேவன், E.P.R.L.F. பத்மனாபா, கிருபன், யோக சங்கரி மற்றும் நால்வர் தவிர, ரஞ்சன் விஜயரத்னே, பிரேமதாசா, லக்ஷ்மண் கதிர்காமர், காமினி திசநாயகே, நீலம் திருச்செல்வன், அருணாசலம் தங்கதுரை, சாம் தம்பிமுத்து, சரோஜினி யோகேஸ்வரன், யாழ்ப்பாண மேயர்…. என்று பலர் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார்கள். தவிர விடுதலைப் புலிகளின் தலைவர்கள் மாத்தையா, கிட்டு உட்பட பலரும் கொல்லப்பட்டனர். இவர்களெல்லாம் யார்? இவர்களுக்கு எது பொதுவானது?
    பிரபாகரனுக்குப் பிடிக்காத, அவருக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டவர்கள் என்ற காரணத்திற்காக இவர்கள் எல்லோரும் ‘துரோகி’ பட்டம் சூட்டப்பட்டனர். ஈவு இரக்கமின்றி, கோழைத்தனமாக, மனித நேயம் துளியும் இன்றி கொலை செய்யப்பட்டனர். இவர்களில் சிலரிடம் அவர்களின் விருந்தோம்பலை ஏற்றுக் கொண்டார்கள் விடுதலைப் புலிகள். நிராயுதபாணியாக இருந்தவர்களை ஒருவித விசாரணையுமின்றி விடுதலைப் புலிகள் கொன்ற பல தமிழர்களில் சிலர்தான் இவர்கள். (ரஞ்சன், காமினி, பிரேமதாஸா போன்றோர் சிங்களவர்கள்.)
    பல தமிழ்க் குடும்பங்களிலிருந்து சிறுவர்களைக் கடத்திச் சென்று, கோழைத்தனமாக அவர்களைக் கேடயமாகப் பயன்படுத்தி, இலங்கை ராணுவத்தின் குண்டுகளுக்கு இரையாக்கினார்கள் விடுதலைப் புலிகள். பிரபாகரன் கொல்லப்பட்டதும் இக்குடும்பங்கள் அதை மகிழ்ச்சியுடன் கொண்டாடின. இதுதான் விடுதலைப் புலிகளின் லட்சணம். இப்படிப்பட்டவர்கள்தான் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள்.
    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் முறையாக விசாரிக்கப்பட்டனர். அவர்களுக்கு 10 வக்கீல்களை இந்திய அரசு அமைத்துக் கொடுத்தது. அந்த வக்கீல்களுக்கு ஃபீஸும் இந்திய அரசே வழங்கியது. 26 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 251 குற்றச்சாட்டுகள் பதிவாகின.
    குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே 112 மனுக்களை குற்றம் சாட்டப்பட்டவர்கள் அளித்தனர். எல்லாவற்றையும் பரிசீலித்துதான் தீர்ப்பு வழங்கப்பட்டது. 1993 மே 5– ல் பிராஸிகியூஷன் தனது தரப்பு வாதத்தைத் தொடங்கியது. 1994 ஜனவரி 19–ல் விசாரணை ஆரம்பமானது. ஆயிரத்திற்கும் மேலான ஆவணங்கள், சாட்சியங்கள் பரிசீலிக்கப்பட்டன. சிறப்பு நீதிமன்றம் தனது தீர்ப்பை 28.1.98 அன்று வழங்கியது;
    மேல்முறையீட்டில் உச்சநீதி மன்றம் இரு தரப்பு வாதங்களையும் கேட்டு 11.5.1999 அன்று பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி ஆகியோருக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்தது. மூன்று பேருக்கு தூக்குத் தண்டனை. நளினியின் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மற்றவர்கள் ஏற்கெனவே சிறையில் கழித்த காலத்தை தண்டனைக் காலமாகக் கருதி, விடுவிக்கப்பட்டனர். தமிழக ஆளுநர் நளினியின் கருணை மனுவை ஏற்று, அவரது தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தார். மற்றவர்களின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
    ஆனால், பிரபாகரனால் துளிக்கூட மனித நேயம் இன்றி கொடூரமாகக் கொல்லப்பட்ட எண்ணற்ற தமிழர்களின் மரணத்தைப் பற்றி, மறந்தும் வாய் திறக்காத இந்த ‘மனித நேயக் காவலர்கள்’, இவ்வளவு முறையாக நடந்து நிறைவு பெற்ற வழக்கில் கொடுக்கப்பட்ட தண்டனையை, ‘மனித நேயமற்ற செயல்’ என்று கூறுவதும், தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று பிரசாரம் செய்வதும் வேடிக்கை; வேதனை.
    சிலர் பொய்ப் பிரசாரத்தின் உச்சத்திற்கே சென்று, “அந்த மூவரும் ‘அப்பாவிகள்’, சும்மா ஒரு பாட்டரி வாங்கிக் கொடுத்ததற்காக மரண தண்டனையா” என்று பேசுகிறார்கள்.
    சில தினப் பத்திரிகைகளும் இப்பிரசாரத்திற்கு இடமளிக்கின்றன. ‘அப்பாவி’ என்று சொல்லப்படும் பேரறிவாளன், முருகன், சாந்தன் என்பவர்களின் பங்கு ராஜீவ் காந்தி படுகொலையில் என்ன என்பதை, கீழ்கண்ட குறிப்புகளின் மூலம் வாசகர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
    அறிவு (எ) பேரறிவாளன்:
    பிரபலமான விடுதலைப் புலி ஆதரவாளரின் மகன். பொது இடங்களில் கடை பரப்பி, கேசட், வீடியோ கேசட், பிரசுரங்கள், புத்தகங்களை விற்பனை செய்து, மற்றும் விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டிக் கொடுப்பவர். விடுதலைப் புலித் தலைவர் பேபி சுப்ரமணியத்துடன் கள்ளத்தனமாக யாழ்ப்பாணம் சென்று 1990 மே முதல் நவம்பர் வரை தங்கியுள்ளார். அவர் விடுதலைப் புலிகளுடன் இருக்கும் வீடியோ படங்கள், சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் உள்ளன. ராஜீவ் காந்தியைக் கொல்வதுதான் திட்டம் என்பது தெரிந்தே முழு மூச்சாக விடுதலைப்புலி சிவராசனுக்கு உதவினார் பேரறிவாளன்.
    பஜாஜ் மோட்டார் சைக்கிளை இவர் பெயரில் சிவராசனுக்கு வாங்கிக் கொடுத்தது, ஒயர்லஸ் செட்டுக்கு வேண்டிய பேட்டரியை வாங்கிக் கொடுத்தது, மனித வெடிகுண்டு தனுவின் உடம்பில் கட்டிய வெடிகுண்டை இயக்க, கோல்டன் பவர் பேட்டரியை வாங்கிக் கொடுத்தது எல்லாம் இவர்தான். படுகொலை நடந்த பின் செய்தித் தொடர்பு வேலையைச் செய்தவரும் இந்தப் பேரறிவாளன்தான். விடுதலைப் புலிகளின் மறைவிடத்திலிருந்து தூர்தர்ஷன் செய்திகளைப் பதிவு செய்து, யாழ்ப்பாணத்திற்கு அனுப்புவது இவருடைய முக்கிய வேலையாக இருந்தது. சுபா சுந்தரம் ஸ்டூடியோவிற்கு அடிக்கடி சென்று செய்திகளைப் பரிமாறிக் கொண்டு, திட்டம் தீட்டும் வேலையில் ஈடுபட்டார் இவர். முருகன் அவ்வப்போது இவர் வீட்டில் தங்குவார்.
    முருகன்:
    இவர் விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர். இந்தப் படுகொலையை நடத்துவதற்காகவே, சிவராசன் தலைமையில் கோடியக்கரையில் வந்து இறங்கிய 9 பேர்களில் இவர் ஒருவர். வயர்லெஸ் செட் தொடர்பு, சிவராசனுக்குப் பல வகைகளிலும் உதவுவது, பணம் பட்டுவாடா செய்வது ஆகியவை இவரது பொறுப்புக்கள். நளினியைச் சந்தித்து அவர் மீது இவர் காதல் வயப்பட்டதால், பொட்டு அம்மன் இவரை யாழ்ப்பாணத்திற்குத் திரும்ப உத்தரவிட்டார். படகுக்காக கோடியக்கரையில் சில நாட்கள் காத்திருந்தார். அந்த நாட்களில் நளினியின் ஒத்துழைப்பு சிவராசன் குழுவுக்குக் கிடைப்பது வெகுவாகக் குறையத் தொடங்கவே, நளினியின் ஒத்துழைப்பு வேண்டுமென்றால், முருகன் இங்கு இருப்பது அவசியம் என்று கருதி, சிவராசன், முருகனைத் திரும்ப அழைத்தார்.
    முருகன், யாழ்ப்பாணம் செல்லும் முன், இயக்கத்தின் முக்கியமான கடிதங்கள், ஆயுதங்கள், புத்தகங்கள் மற்றும் வரவு செலவுக் கணக்குகளை கோடியக்கரை சண்முகத்திடம் கொடுத்து, பத்திரமாக வைத்துக் கொள்ளச் சொன்னார். அதை சண்முகம் கடற்கரை மணலில் புதைத்து வைத்தார். சண்முகம் கைதானவுடன் அவை அனைத்தும் தோண்டி எடுக்கப்பட்டு, சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு வலுவான ஆதாரங்கள் கிடைத்தன; முருகனின் முழுப் பங்கும் வெளியானது.
    இந்து மாஸ்டர் எனப்படும் முருகன்தான் நளினியை மூளைச் சலவை செய்து, ராஜீவ் காந்தி கொல்லப்பட வேண்டியவரே, அதற்காக எதையும் செய்யலாம் என்ற நிலைக்கு நளினியைக் கொண்டு வந்தவர்.
    மே 7, 1991 அன்று வி.பி.சிங் கூட்டத்தில் நடந்த படுகொலைக்கான ஒத்திகையில் பேரறிவாளன், ஃபோட்டோ கிராபர் ஹரிபாபு, நளினி, சிவராசனுடன் முருகனும் பங்கேற்றார்.
    முருகனின் மடிப்பாக்கம் வீட்டிலிருந்து வயர்லெஸ் செட்டுகளும், சங்கேத மொழிக்குறிப்பும் கைப்பற்றப்பட்டன. இவர் பிடிபட்டவுடன், சயனைட் சாப்பிட முயன்றார். அது தடுக்கப்பட்டு கைதானார்.
    சாந்தன்:
    சின்ன சாந்தன் என்கிற சுதேந்திர ராஜா, சிவராசனின் உதவியாளர். இவரும் விடுதலைப் புலிகளின் உளவுத் துறையைச் சேர்ந்தவர். சிவராசனுடன் மே 2–ல் சென்னைக்கு வந்து, அவருடன் ஜெயக்குமார் என்பவர் வீட்டில் தங்கியவர். ஃபோட்டோ கிராபர் ஹரிபாபுவுடனும் 1 வாரம் தங்கினார்.
    மே 1– ஆம் தேதி சிவராசன் தலைமையிலான குழுவுடன் கோடியக்கரைக்கு வந்தார். சிவரூபன் போன்ற விடுதலைப் புலிகளை வேதாரண்யத்திலிருந்து திருச்சிக்கு அழைத்துச் சென்றவர் இவர். சிவராசனின் கூட்டாளிகளுக்குத் தகவல்களை எடுத்துச் செல்வது, பணப் பட்டுவாடா செய்வது, சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்வது, ஒரு மறைவிடத்திலிருந்து மற்றொரு மறைவிடத்திற்கு ரகசியமாக நபர்களை அழைத்துக் கொண்டு போவது போன்றவை இவரது வேலை.
    1988–ல் அமைதிப் படையினரால் யாழ்ப்பாணத்தில் பிடிபட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டவர் இவர். 1990 பிப்ரவரியில் சிவராசன் பண உதவி செய்ய, சென்னை எம்.ஐ.இ.டி. கல்லூரியில் சேர்ந்தார். பத்மநாபா கொலையில் இவருடைய பங்கு முக்கியமானது. ஜக்கரியா காலனியில் EPRLF உடன் பழகி அவர்களது நம்பிக்கையைப் பெற்று, பத்மநாபாவின் நடவடிக்கைகளை கண்காணித்து, சிவராசனிடம் அவ்வப்போது சொல்லி, பத்மநாபா மற்றும் 7பேர் படுகொலை செய்யப்பட ஏற்பாடு செய்தவர்.
    1991 ஏப்.28 அன்று சிவராசனுடன் பொட்டு அம்மனைச் சந்தித்தபோது, ராஜீவ் காந்தி படுகொலைத் திட்டம் பற்றி இவரிடம் விளக்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர்தான் கொலை செய்யப்பட வேண்டிய இடம் என்று முதலில் சிவராசன் இவருக்குத்தான் சொன்னார். அதன்பின் ஏற்பாடுகள் இவருடையது. மரகதம் சந்திசேகரின் மகன் மூலம், ரூ.5 லட்சம் தேர்தல் நிதி கொடுத்து, மாலை போட அனுமதி வாங்கியதும் இவர்தான். படுகொலைக்குப் பிறகு, சிவராசன், நளினி, சுபாவுடன் ஆட்டோவில் ஏறி டிரைவர் அருகே உட்கார்ந்து சென்னைக்கு வந்தார். கத்திப்பாராவில் இறங்கிக் கொண்டார். சிவராசன் தப்பிக்க சிவராசனுக்கும், திருச்சி சாந்தனுக்கும் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தார். இதுதான் இவர்களுடைய பூர்வோத்ரம்.
    இவை அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டவை. ராஜீவ் காந்தி கொலைச்சதியில் முக்கியப் பங்கு வகித்ததால்தான், இவர்களுக்குத் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.
    ‘ராஜீவ் காந்தி உயிரோடிருந்தால் இவர்களை மன்னித்திருப்பார்’ என்கிறார் கருணாநிதி. இந்தப் பிதற்றலை துக்ளக் ஆசிரியர் சிறப்பாக நையாண்டி செய்திருந்தார். ராஜீவ் காந்தி உயிரோடு இருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தை நினைவு படுத்திப் பார்ப்போம். அவரது தாயார் 31 அக்.1984 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். அப்படுகொலையில் சம்பந்தப்பட்ட சத்வந்த் சிங்குக்கு தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டது. அவருக்குத் தூக்கு வேண்டாம் என்று ராஜீவ் காந்தி சொல்லவில்லை! சத்வந்த் சிங் தூக்கிலிடப்பட்டார்.
    சரி, ராஜீவ் காந்தியுடன் இறந்த மற்றவர்களின் குடும்பங்களுக்கு என்ன நீதி? ஒரு கொலை செய்யப்பட்டாலே, இறந்தவர்களின் குடும்ப வேதனையைக் காண்பிக்கும் தொலைக்காட்சிகள், இந்த 17 பேரின் குடும்பங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பற்றி ஏன் விவாதிக்கக் கூடாது? குண்டு வெடிப்பின்போது சுற்றி நிற்கும் பல அப்பாவிகளும் இறந்து போவார்கள் என்று, தெரிந்தே செய்யப்பட்ட தீவிரவாதச் செயல் இது.
    இதில் பலியானவர்கள்
    1. பி.கே.குப்தா, ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு அலுவலர்,2. பி.கே. எஸ்.முகமது இக்பால், செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி., 3. ராஜ குரு, பல்லாவரம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர், 4. சி.எட்வர்ட் ஜோசப், சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர், 5. வி.எத்திராஜுலு, குன்றத்தூர் காவல்நிலைய எஸ்.ஐ., 6. எஸ்.முருகன், சோமங்கலம் காவல்நிலைய கான்ஸ்டபிள், 7. ஆர்.ரவிச்சந்திரன் (எஸ்.பி.சி.ஐ.டி. கமாண்டோ கான்ஸ்டபிள்), 8. தர்மன், காஞ்சிபுரம் ஸ்பெஷல் பிராஞ்ச் கான்ஸ்டபிள், 9. திருமதி. சந்திரா, காஞ்சிபுரம் கான்ஸ்டபிள், 10. திருமதி. லதா கண்ணன், அரக்கோணம், 11. செல்வி. கோகில வாணி (லதா கண்ணனின் மகள்), 12. திருமதி. சந்தானு பேகம், திருமுல்லைவாயில், 13. டரியல்பீட்டர் (கொலைக்குழு) திருமங்கலம், சென்னை, 14. செல்வி.சரோஜாதேவி, ஸ்ரீபெரும்புதூர், 15. முனுசாமி (முன்னாள் எம்.எல்.சி., சென்னை), 16. தனு (விடுதலைப் புலி), 17. ஹரிபாபு (கொலைக் குழுவின் ஃபோட்டோ கிராபர், சென்னை) 
    இவர்களில் கொலைக் குழுவினரைத் தவிர மற்றவர்கள் உயிருடனோ, ஆவியாகவோ திரும்பி வந்தால், இந்த மூவரையும் மன்னித்து விடுவார்களா? அவர்களின் குடும்பங்கள்தான் மன்னிக்குமா?
    மிகவும் பாராட்டப்பட்ட தீவிர புலனாய்வுக்குப் பின் 6 வருடங்கள் வழக்கு நடந்து, இரு தரப்பினருக்கும் அதன் பிறகே அனைத்து வாய்ப்புகளையும் வழங்கி, சிறப்பு நீதிமன்றம் தண்டனை வழங்கியது. அதை மறுபரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம், இந்த மூவருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. பிறகு கருணை மனு கவர்னரால் தகுந்த காரணங்களால் நிராகரிக்கப்பட்டது. மற்றொரு கருணை மனு ஜனாதிபதியால் தகுந்த காரணங்களால் நிராகரிக்கப்பட்டது. இவ்வளவு நடந்த பிறகும் ‘இவர்களுக்கு தூக்குத் தண்டனை கூடாது; காலம் கடந்து விட்டது. இதற்கு சட்டத்தில் இடம் இல்லை’ என்று கூறுவதை மனசாட்சி உள்ளவர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.

    • Kumar says:
      14 years ago

      இந்த மூவரையும் தூக்கில் ஏற்றிவிட்டால் பல மனிதா்கள் சந்தோசப்படுவார்களா??
      அப்படியாயின் கொலைகளிற்கு உடந்தையாக இருந்த இவா்களைவிட பயங்கரமான கொரூர பளிவாங்கும் மனோபாவம் கொண்ட மனிதா்கள் நம்மிடையே உள்ளனா் என்பது மிகவும் வருத்தத்தை தருகிறது.

      ஆயிரத்தை கூறுங்கள் ஆனால் கொலைக்கு கொலை அல்ல தீா்வு இதற்கு அரசுகளும் உடந்தையாக இருப்பது அவமானமே,தூக்கிலிடுவதை எதிர்ப்பவா்கள் மனச்சாட்சி அற்றவா்களா??? என்ன கொடுமை இது.

  12. நிர்மலன் says:
    14 years ago

    //சரனடைந்தவுடன் புலிகல் செய்த அட்டூழியம் இல்லாமல் போய்விட்டதோஇ இவர்கள் சரனடையாமல் தேசிக்காய் தலைவர் சொன்னது போல் சயனைட் கடித்திருக்கலாமே//

    சர்வதேசம் தொடங்கி மனிதவுரிமை அமைப்புக்கள் என்ன இவர்களை விடுதலைசெய்யச்சொல்லிய கேட்கிறது?? அவர்கள் மீது குற்றச்சாட்டிருந்தால் நீதிமன்றில் நிறுத்து. அது முடியாவிட்டால் விடுதலைசெய்யச்சொல்லிதான் கேட்கிறது. நீங்கள் லங்காபுவத்தின் செய்தியை தவிர வேறெதுவும் கேட்காத வெற்றுக்கோம்பை என்பதைதான் நிரூபணம்செய்கிறீர்கள்.
    விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலகுபவர்கள் முதலில் சயனைட்டையும் ஆயுதத்தையும் புலிகளிடம் ஒப்படைக்க வேண்டும். பிறகெப்படி முன்னாள் புலிகளிற்கு சயவனட் கிடைக்கும்? அடுத்தது அவர்களை சாகச்சொல் நீங்கள் யார்??? என்ன சைக்கோதனத்தின் வெளிப்பாடா!
    மேலுள்ள தலைப்பிற்கும் ராஜீவிற்கும் என்ன சம்பந்தம்???? தொடர்பற்றும் அர்த்தமற்றும் பேசுவது ஒரு சாதரண மனநிலை இல்லை! அது சரி இந்த ராஜீவ் என்பதற்கு பின்னாலுள்ள காந்தி எனும் அடையாளம் எங்கிருந்து வந்தது என்று இதுவரை சொல்லவில்லை! ஏன் தயங்குகிறீர்கள்???

    • veeran says:
      14 years ago

      எனக்கு தெரியாது செத்த புலிகலின் குரல் அன்பரே தாங்கள் சொல்லுக்களேன்

    • veeran says:
      14 years ago

      விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலகுபவர்கள் முதலில் சயனைட்டையும் ஆயுதத்தையும் புலிகளிடம் ஒப்படைக்க வேண்டும். பிறகெப்படி முன்னாள் புலிகளிற்கு சயவனட் கிடைக்கும்? ஆமிக்காரன் சுற்றி வளைத்தவுடன் அமைப்பிலிருந்து விலகி விட்டார்களோ, அதாவது பயந்து விலகி விட்டார்கள் அட பாவ்மே, இவர்களைநம்பியா தேசிய தலைவர் போராட கிளம்பினார்,

  13. veeran says:
    14 years ago

    லை! அது சரி இந்த ராஜீவ் என்பதற்கு பின்னாலுள்ள காந்தி எனும் அடையாளம் எங்கிருந்து வந்தது என்று இதுவரை சொல்லவில்லை! ஏன் தயங்குகிறீர்கள்???  எனக்கு என்ன தயக்கம், அவரது தந்தை பெரோஸ் காந்த்தி பர்சி இனத்தை சேர்ந்த்தவர், இதில் த்யக்கம் பட ஒன்றும் இல்லையே, அப்துல் கலாம் இஸ்லாமியர், அவரது முன்னோர்கள் அராபியாராக இருக்கலாம் அதற்கு என்ன

    • நிர்மலன் says:
      14 years ago

      //ஆமிக்காரன் சுற்றி வளைத்தவுடன் அமைப்பிலிருந்து விலகி விட்டார்களோ அதாவது பயந்து விலகி விட்டார்கள் அட பாவ்மே இவர்களைநம்பியா தேசிய தலைவர் போராட கிளம்பினார்//

      தலைப்புடன் சம்பந்தப்படாத விடயத்தை விட்டிட்டு பேசுபொருளுக்கு வாருங்கள். எனிச் சொல்லுங்கள் அரசபயங்கரவாதத்தின் கணக்குப்படி மிகுதி 840 முன்னனாள் போராளிகள் எங்கே?

      //எனக்கு என்ன தயக்கம் அவரது தந்தை பெரோஸ் காந்த்தி பர்சி இனத்தை சேர்ந்த்தவர் இதில் த்யக்கம் பட ஒன்றும் இல்லையே அப்துல் கலாம் இஸ்லாமியர் அவரது முன்னோர்கள் அராபியாராக இருக்கலாம் அதற்கு என்ன//

      1)ஓஓ உங்களிற்கு எந்த தயக்கமும் இல்லாமலா இந்த பதிலை சொல்ல ஒரு வாரத்திற்கு மேல் 3 தடவையாக நான் “ராசீவ் பின்னால் வரும் “காந்தி” அடையாளம் எங்கிருந்து வந்தது” என கேட்க வேண்டியிருந்தது!
      2) அப்துல்கலாமைப்பற்றி ஏன் எந்த தேவையுமின்றி பேசுகிறீர்கள்? என்ன உங்களிற்கு தொடர்பற்று பேசும் வியாதி பீடித்துள்ளதா!
      3) இப்ப ராஜீவின் தந்தையர் நாடு இந்தியாவில்லை பாகிஸ்தான் என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள். ஆக அவர் ஒரு அரை(1/2) இந்தியன். அவரது மகன் ஒரு கால் (1/4) இந்தியன். இந்த அரையும் கால்லும் ஆன அரைகுறைகளைதான் ஏதோ இந்தியன் இந்தியன் என்று சொல்கிறீர்கள்.

  14. veeran says:
    14 years ago

    Feroze Jehangir Gandhi (Firoz Jahangīr Gāndhī; Hindi: फिरोज जहाँगीर गांधी; 12 September 1912 – 8 September 1960) was an Indian politician and journalist, and publisher of the The National Herald and The Navjivan newspapers from Lucknow.[3]He became a member of the provincial parliament (1950–1952), and later a member of the Lok Sabha, the Lower House of India’s parliament. In 1942 he married Indira Nehru (later Prime Minister of India) and they had two sons, Rajiv Gandhi (also later a Prime Minister) and Sanjay Gandhi, and thus became part of the Nehru dynasty.[4Feroze Jehangir Gandhi was born in Bombay, to a Parsi family from Gujarat. He was the youngest of the five children of Faredoon Jehangir Gandhi, a marine engineer, and Rattimai Hatta(later changed to Commisariat).[5][3] His family had migrated to Bombay from Bharuch in South Gujarat. Their ancestral home, which belonged to his grandfather, still exists in Kotpariwad. His family was not related to that of Mahatma Gandhi.[3]:p93

  15. veeran says:
    14 years ago

    பெரொஸ் காந்தி பம்பாயில் பிறந்தார்,  இப்ப ராஜீவின் தந்தையர் நாடு இந்தியாவில்லை பாகிஸ்தா

    அட பம்பாய் பாக்கிஸ்தானிலா இருக்கின்றது, தேசிக்காய் தலை மாற்றி வைத்து விட்டு செத்து போனது போல், அது சரி இவன் தேசிக்காய் தலை மலையாளி என்று வாசித்தேனே, அவன் கேரளாவில் இருந்திருந்தால் அவனுக்கு இருந்த திறமைக்கு பெரிய வில்லன்நடிகனாக வந்திருப்பான்

  16. estate boy says:
    14 years ago

    அப்ப இவன் வைகோ தமிழனல்லவே, அவன் தெலுஙுகு தான் வீட்டில் பேசுகின்றான், மன்மோகன் சிங்  பாகிச்தானில் பிறந்தவர், எனவே அவர் இந்தியர் இல்லையா, பர்வேஸ் முசாரப் டெல்லீயில் பிறந்தவர் அவர் இந்தியரா, எனது முப்பாட்டனார், மலையாலி என்று வதந்தி , அப்பநான் தமிழ் இல்லையா, அப்பநம்ப எம்ஜிஆர் இல்ங்கையில் கண்டியிலே பிறந்தார், அவர் சிங்களமா அல்லது மலையாலியா, ஒரே குழப்பமாக இருக்கின்றது,நிர்மலன் என்ற சம்ஸ்கிருத பெயர் கொண்ட வட இந்தியரிடம் கேட்போம்

  17. நிர்மலன் says:
    14 years ago

    ஐயா விதாண்டவாத வீரனே!தங்கள் ராஜிவ் எசமானின் இனஅடையாளத்தை திட்டமிட்டு வேணுமென்று கேள்விகுட்படுத்தியவுடன். அடிமைவிசுவாசம் துடித்து எழுந்து உண்மை ஆதாரங்களை தேடவைத்துள்ளதல்லவா! இதே மாதிரி எனி பொறுப்பாக பதிலைக் கூறுங்கள்.”அரசபயங்கரவாதத்தின் கணக்குப்படி மிகுதி 840 முன்னனாள் போராளிகள் எங்கே?”
    வீம்புத்தனமாக பேசுவது விதாண்டவாதம் செய்வது உங்களால் மட்டும் முடிந்த காரியமில்லை. எல்லோராலும் முடியும் என்பது இப்பவாவது புரிகிறதல்வா? எனிவரும் காலங்களில் ஆவது நேர்மையுடன் பேசும் தலைப்புடன் கருத்துப்பகிர்வை செய்ய முயற்சியுங்கள்.

    // எனது முப்பாட்டனார் மலையாலி என்று வதந்தி அப்பநான் தமிழ் இல்லையா //estate boy
    இதிலைவேறை சந்தேகமா! ஒருவன் தன்னினத்திற்கு குழிபறிக்கான். இந்நிலையில் நீங்கள் எப்படி தமிழராக இருக்க முடியும்! தமிழை படித்தால் யார் வேண்டுமென்றாலும் தமிழ் பேசலாம். சிறிலங்கா முஸ்லீமும் தமிழ்பேசுகிறார்கள் மலையாளிகளும்தான் தமிழ் பேசுகிறார்கள். அதற்காக அவர்கள் தம்மை தமிழரென சொல்வதில்லையே! ஆங்கிலத்தை உலகில் பலர் பேசுகின்றனர் அதற்காக அவர்களெல்லாம் ஆங்கிலேயரா???
    //நிர்மலன் என்ற சம்ஸ்கிருத பெயர் கொண்ட வட இந்தியரிடம் கேட்போம்//
    உங்கள் அடையாளம் “estate boy” என இருப்பதால் நீங்கள் பிரித்தானியர் ஆகிவிடுவீர்களா! படுகேணைத்தனமாயில்லை.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...