Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

சமூக வழக்குகளில் ஏற்றத் தாழ்வுகள் – பரதமும் பண்பாட்டு மேன்மையும் : சி.சிவசேகரம்

இனியொரு... by இனியொரு...
10/17/2010
in பிரதான பதிவுகள் | Principle posts, ஆக்கங்கள், இலக்கியம்/சினிமா
0 0
13
Home பிரதான பதிவுகள் | Principle posts

பரத நாட்டியம் இந்தியாவின் நடன வடிவங்களில் மிகவும் விருத்தி பெற்ற வடிவமாகக் கொள்ளப் படுகிறது. தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில், அது மிகத் தொன்மையானதும் தெய்வீகமானதுமாகக் கொள்ளப்படுகிறது. கர்நாடக இசைக்கும் மேலான ஒரு தெய்வீகத் தன்மை அதற்கு வழங்கப்படுகிறது. அது தெய்வங்கட்குத் தெய்வமான சிவனாலும் சிவனாரின் பாகமானவரான சக்தியாலும் விண்ணிலும், மாலின் அவதாரமான கண்ணனால் மண்ணிலும் ஆடப்பெற்ற நடனங்களின் வழி வந்தது என்ற விதமான நம்பிக்கைகள் நம்மிடையே இன்னமும் உள்ளன.

இசையும் நடனமும் தொன்று தொட்டு இருந்து வந்தன என்பது பற்றி நமக்கு ஐயம் வேண்டாம். ஒவ்வொரு வகையானதினதும் சிறப்புக்கள் பற்றி விவாதிக்கும் இடமும் இதுவல்ல. ஆயினும், ஒன்றை மூலமானதாகக் கொள்ளுவதைக் கேள்விக்கு உட்படுத்த வேண்டும். அது புனிதமான நோக்கங்கட்காகவே விருத்தி செய்யப்பட்டதா என்பதை நாம் விசாரிக்க வேண்டும். அது புனிதமான தேவைகட்காகவே பயன்பட்டு வந்துள்ளதா என்பதையும் நாம் விசாரிக்க வேண்டும்.

பத்மா சுப்ரமணியம் தமிழகத்தின் ஆடற் கலைஞர்களுள் முக்கியமான ஒருவராக இருந்தவர். இன்றும் அக் கலைத்துறையில் மிகவும் மதிக்கப்படுபவர். அதில் சில மாற்றங்களைப் புகுத்தி அதன் நவீனப்படுத்தலுக்கும் பங்களித்தவர். அவருக்குப் பல ஆண்டுகள் முன்பு ‘டாக்டர்’ பட்டம் வழங்கப்பட்டது. அது கருணாநிதிக்கோ ஜெயலலிதாவுக்கோ வேறு பிரமுகர்கட்கோ வழங்கப்பட்ட விதமான கௌரவ டாக்டர் பட்டமல்ல. பரதம் பற்றிய அவரது ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்ட பட்டம். அவரது ஆராய்ச்சி மூலம் அவர் நிறுவிய விடயங்களுள் ‘பரத முனிவரே’ பரத நாட்டியத்தை உருவாக்கியவர் என்பது முக்கியமான ஒன்று. அதைப் பற்றி அப்போது மிகவும் பேசப்பட்டது. நமது அறிவுச் சூழலில் நாம் ஒன்றை நம்புவதற்கு யாராவது அதை ஏற்று எழுதினாலே போதும். எழுதியவர் பேராசிரியரோ ‘டாக்டரோ’ என்றால் சிறப்பு. எழுதியதற்கு ‘டாக்டர்’ பட்டம் வழங்கப்பட்டிருந்தால் சொல்லவும் வேண்டுமா?

மொழி, தொழில் நுட்பம், மருத்துவம் என்பன போன்று, அனைத்துக் கலை வடிவங்களும் சமூக நடைமுறையிலிருந்து உருவாகின்றன. சமூக நடைமுறை மூலம் அவை வளர்கின்றன. சமூக தேவைகட்கேற்ப அவை விருத்தி பெறுகின்றன. சமூகத்தில் எவருடைய ஆதிக்கம் இருக்கின்றதோ, அதுவே எந்தக் கலை வடிவம் முக்கியம் பெறுகிறது என்று தீர்மானிக்கிறது. அது மட்டுமில்லாமல் அது எதற்குப் பயன்படுகிறது, எந்த விதமான செய்தியை சொல்லுகிறது என்பவற்றையும் தீர்மானிக்கிறது.

இசையும் நடனமும் முக்கியமாக மக்களுக்கு களிப்பூட்டுவதற்காகவே பயன்பட்டு வந்துள்ளன. களிப்பூட்டுகிற போக்கில் அவை சமூகம் பற்றிய செய்திகளைக் கூறுகின்றன. சிலவாறான விழுமியங்களை வலியுறுத்துகின்றன. பிறவற்றை மறுக்கின்றன. சில வேளைகளில் மாற்றங்களைப் பரிந்துரைக்கின்றன. ஆதிக்கத்தில் உள்ளோர் வேண்டுகிற களிப்பூட்டலும் அவர்களால் சுரண்டி ஒடுக்கப்பட்டோர் வேண்டுகிற களிப்பூட்டலும் ஒன்றல்ல. பிரதானமான சமுதாய உறவின் எல்லைகட்கு வெளியில் வாழ்வோருக்கு வேறுவிதமான தெரிவுகள் இருக்கலாம். என்றாலும் நாடுகளதும் சமூகங்களதும் எல்லைகளைத் தாண்டி வருவதிலும் உள்ளடக்கத்திலும் புதிய நடைமுறைகள் ஒவ்வொரு கலை வடிவத்துள்ளும் போய்ச் சேருகின்றன. எனவே ஷதூய| என்ற கருத்தாக்கம் அடிப்படையிலேயே தவறானது.

‘பரத முனிவர்’ என்று பெயர் சூட்டப்பட்டவரது சிந்தனையில் தோற்றம் பெற்றதே பரத நாட்டியம் என்பது அறிவுக்கு ஒவ்வாதது. அவர் செய்ததெல்லாம் அவரது காலத்தில் விருத்தி பெற்றிருந்த அரங்கக் கலையின் மேடையமைப்பு முதலாக அழகியற் பண்புகள் வரையிலானவற்றை வகைப்படுத்தியதுதான். அவரது காலத்திற்குரிய உயர் நிலை மாந்தரின் பண்பாட்டு விழுமியங்கட்கமைய அவரது அழகியற் கொள்கை அமைந்திருக்கும் என்பது நம்பத்தக்கது. அதற்கு உடன்பாடான நடைமுறைகள் கொள்ளப்பட்டதும் அல்லாதன தள்ளப்பட்டதும் விளங்கிக் கொள்ளக் கூடியது.

பரத முனிவர் என்ற ஒருவர் செய்ததாகச் சொல்லப்படுவது, உண்மையில் எந்தவொரு இலக்கண நூலாசிரியரும் செய்து வந்ததைப் போல ஒரு காரியமே. பரதத்தை அவரது ஆக்கமாக்குவதன் நோக்கம், யாருமே அறிந்ததாக ஒரு பதிவும் இல்லாத பரத முனிவர் எனப்படும் ஒருவரைச் சிறப்பிப்பது அல்ல. மாறாக, அவர் மூலம் பரதத்திற்கு ஒரு தெய்வீகத் தன்மையைக் கற்பிப்பதாகும்.

பரதத்தின் மொத்தமான தோற்றுவாயே தழிழகம் என்றும் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள ஆடல் வகைகளில் இருந்து தான் அது விருத்தி பெற்றது என்றும் கூறும் மாற்றுக் கருத்தும் குறைபாடானது. சிலப்பதிகாரம், அது எழுதப்பட்டபோது வழக்கிலிருந்த ஆடல் வகைகளை கூறுகிறது. அதற்குப் புறம்பான ஆடல் வகைகளோ, ஆடல் முறைகளோ தமிழ்ச் சமூகத்தால் காலப்போக்கில் உள்வாங்கப்படவில்லை என்பது முற்றிலும் தவறானது. ஒரு உதாரணத்துக்கு, இன்று பரதநாட்டிய நிகழ்வுகளில் தவிர்க்கத்தகாத ஒரு பகுதியாக உள்ள ஷதில்லானா| நடனமும் அதற்கான இசையும் முகலாயர் காலத்தில் வடக்கில் வடிவம் பெற்றவை. அதை ஆடுவதில் வடக்கிற்கும் தெற்கிற்குமான வேறுபாட்டுக்கான காரணம் தில்லானா தெற்கின் நடைமுறைக்கேற்ப சில மாற்றங்களை உள்வாங்கியமை என்றே கொள்ளவேண்டும்.

சிலப்பதிகாரக் காலத்துச் செவ்வியல் நடனம் எதுவாயிருப்பினும் அது இன்று சொல்லப்படுவது போல மதத்துடன் நெருங்கிய தொடர்புடையதாக இருந்தது என்பதற்கு சான்றுகள் தெரியவில்லை. சாதாரண மக்கள் நடுவே ஆடப்பட்டு வந்த கூத்து வடிவங்களில் சமயச் சடங்குகட்கு ஒரு இடம் இருந்திருக்கலாம் என்பது ஏற்கத்தக்கது. எனினும் சடங்குகளில் தொடங்கிய இசையும் நடனமும் சமூகத்தின் பல வேறு செயற்பாடுகளையும் சார்ந்து விருத்தி பெற்றுள்ளன என்பது உண்மை. அதில் மக்களைக் களிப்பூட்டல் முக்கியமான பங்கு வகித்து வந்தது. அதை இன்றைய நாட்டார் கலை வடிவங்களிலும் நாம் காணலாம். எனவே சமூகத்தில் மேல் நிலையில் இருந்தோர் பேணி வந்ததாகக் கூறப்படுகிற செவ்வியல் நடன வடிவம் எப்படிப்பட்டதாக இருந்திருக்க முடியும்?

மேலைநாடுகளில் பார்த்துக் களிப்பதற்கான நடன வகைகள் உள்ளன. அவற்றை விட மனிதர் ஆடிக் களிப்பதற்கானவையும் உள்ளன. இரண்டு வகையானவையும் சமூகத்தில் ஒப்பிடத் தக்க மதிப்புடன் விருத்தி பெற்றுள்ளது. நமது சூழலில் பார்த்துக் களிப்பதற்கானவை நீண்ட காலமாகவே முதன்மை பெற்று விளங்குகின்றன. மக்கள் தம்மிடையே ஆடிக் களிப்பன, நாட்டார் வடிவங்களாகவும் அவற்றுள் கணிசமான பகுதி ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்குரியதாகவும் உள்ளதை அறிவோம். செல்வமும் அதிகாரமும் பெற்றோர் பார்த்துக் களிப்பதற்கான நடனங்கள் அவர்களுடைய பக்தி உணர்வின் மேம்படுத்தலுக்கானவை என்று நம்ப இயலுமா?

மக்கள் நடுவே ஆடித் தமக்கான பொருளைத் தேடும் ஆடல் பாடற் கலைஞர்கள் வழங்கும் கலைகள் வசதி படைத்தோரின் நுகர்வுக்கானவையாக மாறும் போது, அவை எத்தகைய உணர்வுகட்கு விருந்தளித்திருக்கக் கூடும்? உயர்நிலையில் இருந்தோருடைய நுகர்வுக்கான ஆடல் பாடல்களில் ஒரு பகுதி முற்றிலும் அவர்களுடைய அந்தரங்கமான மகிழ்ச்சிக்காகவும் இன்னொரு பகுதி விழாக்கள் போன்ற பொது நிகழ்வுகளுக்காகவும் அமைந்திருந்தமை நாம் விளங்கிக் கொள்ளக் கூடியது. இவற்றிற் பின்னையவற்றில் மதம் சார்ந்த பண்புகள் பலவும் காலக் கிரமத்தில் உட்புகுந்ததாகவே நாம் கொள்ள இயலும்.

நடனத்துக்குரிய பேசு பொருள் ஒரு இறைவனாகவும் பாடல் இறைவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, ஒரு இறைவியோ இறைவன் மேற் காமுற்ற ஒரு பெண்ணோ ஏங்குவதாகப் பல இடங்களிலும் அமைவது தென்னிந்தியச் செவ்வியல் ஆடல் பாடற் கலைகளின் முக்கியமான ஒரு பண்பு. இது பிற பண்பாடுகளிலிருந்து இந்திய நடன மரபை (சிறப்பாகத் தென்னிந்திய நடன மரபை) வேறுபடுத்துவதாகும். நம்மிடையே உள்ள புராண இதிகாச மரபுகள் அதற்கு வாய்ப்பாக இருந்தாலும், அரசர்கட்கும் ஆதிக்க வர்க்கத்தினருக்கும் மதத்தின் மூலம் மக்களைக் கட்டுப்படுத்தும் தேவைக்குப் பரதமும் துணை போயுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

பேரரசர்கள் தங்களை இறைவனின் மனித வடிவமாகக் காட்டுகிற போக்கு இந்து மதங்களில் மட்டுமே காணப்பட்ட ஒன்றல்ல. இந்து மதங்களின் செல்வாக்குக்குட்படாத பல சமூகங்களிலும் ஆட்சி அதிகாரத்திலிருப்போர் தமது அதிகாரம் மனித வலிமைக்கும் மேலான ஒரு சக்தியால் அருளப்பட்டது என்று கூறி, அதை மக்கள் ஏற்கும்படி செய்துள்ளார்கள். கோயில்கள், வழிபாட்டுத் தேவைகட்கும் மேலாக, மேட்டுக்குடிகளதும் அவர்களது கூட்டாளிகளாக அமைந்த பூசகர்களதும் ஆதிக்கத்தை அடையாளப்படுத்தின. குறிப்பிட்ட வரலாற்றுக் காலங்களில், கோவில்கள் ஆடல்பாடல்கள் மூலம் மக்களைக் கவர முற்பட்ட ஒரு சூழலில் அரண்மனைகளைச் சார்ந்து மட்டுமன்றி கோவில்களைச் சார்ந்தும் ஆடல் மகளிரும் இசைக் கலைஞர்களும் சமூகங்களாக வாழுகிற நிலை ஏற்பட்டது. தேவதாசி முறை அதன் ஒரு பகுதியேயாகும். வசதி படைத்தோரதும் பூசகர்களதும் காம வேட்கயைத் தணிக்கும் கருவிகளாகவும் அதன் தொடர்ச்சியாக விலைமகளிராகவும் ஆடல் மகளிர் பரம்பரை பரம்பரையாகச் சுரண்டி இழிவு படுத்தப்பட்டனர். அதைக் கூடப் பண்பாட்டின் பேராலும் இந்து தருமத்தின் பேராலும் நியாயப்படுத்துவோர் இன்னமும் உள்ளனர்.

இப்போது ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலமாகப் பரதம் மிகவும் புனிதப்படுத்தப்பட்டுள்ளது. வறுமைப்பட்டுச் சுரண்டப்பட்ட ஆடல் மகளிரின் ‘சதிர்’ இப்போது பரதநாட்டியம் என்று பேர் சூடியுள்ளது. அதனை ஆடுவது ஒழுக்கக் கேடானவர்கட்குரியதாகக் கருதப்பட்ட நிலை மாறிவிட்டது. அது பணமும் புகழும் கொண்டு வரக்கூடிய ஒரு ஆடம்பர நுகர்பொருளாக்கப்பட்டு விட்டது. திரைப் படங்களின் வருகை மூலம் பரதநாட்டியமும் பரதநாட்டியத்தின் மூலம் திரைப் படங்களும் மக்களிடையே பெற்ற செல்வாக்குக் காரணமாக, இக்கால மேட்டுக் குடிகளின் நுகர்வுக்கானதாக மட்டுமல்லாது புதிதாக உருவாகி வந்த, மேட்டுக்குடிச் சிந்தனையை உடைய நகர் சார்ந்த நடுத்தர வர்க்கத்தாலும் அது உள்வாங்கப்பட்டுள்ளது.

அதன் விளைவாக அது உயர் வர்க்க அடையாளம் பெற்றுள்ளது. அதற்கும் மேலாக அதையே தமிழ் சமுதாயம் அனைத்தினதும் வரலாற்றுத் தொடர்ச்சியுடைய பண்பாட்டு அடையாளமாக்கும் ஒரு போக்கு மேலோங்கியுள்ளது. இதில் புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் வசதி படைத்த பகுதியினரின் பங்கு கணிசமானது. அவர்கட்கும் இந்தியாவின் பண்பாட்டுத் துறை மேட்டுக்குடிகளுக்குமிடையே நெருக்கம் மிகுந்துள்ளது. அதே விதமான போக்கு இலங்கையின் புதிய வசதி படைத்த நடுத்தர வர்க்கத்தினரிடையிலும் வளரந்து வந்துள்ளது.

பரதத்தைச் சமகாலச் சமூகப் பாங்கானதும் மக்களின் வாழ்வு பற்றிப் பேசுகிறதுமான ஒரு கலை வடிவமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கையில் கார்த்திகா கணேசர் 1960களில் முன்னெடுத்த முயற்சியாலும் தமிழகத்தில் சந்திரலேகா போன்றோர் எடுத்த முயற்சியாலும் பரதத்தின் மரபுவாத, மதஞ் சார்ந்த படிமத்தை உசுப்ப முடியவில்லை. அதிகார வர்க்கம் தனது நிலவுடைமைச் சிந்தனையை முற்றாகக் கைவிடாமலே முதலாளிய, நவகொலனியச் செயற்பாடுகளை மேற்கொள்ளலாம் என்பதற்கு இந்துத்துவம் ஒரு சான்று. பரதமும் அவ்வாறு பயன்படுவது கவனிக்கத்தக்கது.

பரதம் மக்களின் கலை வடிவமாக மாறுவதற்கான சூழ்நிலை இன்னமும் உருவாகவில்லை. எனினும் பரந்துபட்ட மக்களின் ஆடல்பாடல் வடிவங்களின் மூலம் மக்கள் தமது அழகியல் உணர்வையும் சமூகத் தேவைகளையும் மேலும் வலுவாக உணர்த்தி அவற்றை மக்கள் பண்பாட்டின் முக்கியமான பகுதியாக வளர்த்தெடுக்க இயலும். ஒரு பாரிய பண்பாட்டு மாற்றச் சூழலின் பின்னணியிலேயே பரதம் மக்களுக்கான ஒரு கலையாக உருமாற இயலும். அதுவரை அது எல்லாருடைய பேரிலும் மேட்டுக்குடிகளின் பழமைவாத அடையாளங்களைத் தொடர்ந்து பேணுவது பெருமளவும் தவிர்க்க இயலாததே.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

மக்களின் விடுதலைக்காகப் போராடுகிறோம்! : த.தே.கூட்டமைப்பு

Comments 13

  1. THAMILMARAN says:
    15 years ago

    ஏற்றத்தாழ்வு இல்லாத உலகம் ஏது? அரிசியில் இருந்து பருப்பு வரை தரப்படுத்தல்தானே?

  2. S.Kingsley Gomezz says:
    15 years ago

    ஐய்யோ தமிழ்மாறன் கலைகளின் ஆரம்பம் உழைக்கும் மக்களிடம் இருந்து வந்ததே அது மீண்டும் உழைக்கும் மக்களுக்கு பயன்பட வேண்டும் என்ற சிந்தனையை விதைக்கும் சிறந்த கட்டுரையை ஏன்னைய்யா கொச்சைப்படுத்த நிணைக்கின்றீர் வாழ்த்த மனம் இல்லாவிட்டால் பரவாயில்லை வம்பில்லாமல் வாழ கற்றுக்கொள்வது நாகரீத்தின் செயற்பாடாகும்.

    • THAMILMARAN says:
      15 years ago

      உழைக்கும் மக்கள் கலை என்றால் நாட்டுக் கூத்து,தென்மோடி,வடமோடி, தெருக் கூத்து என்றூ தெரிந்த எனக்கு பரத நாட்டியம் உயர்வர்க்க அடையாளம் என தெரிய இத்தனை காலமாயிற்றூ.வாழ்த்தி,வாழ்த்தியே வந்தோர் எல்லாம் வாத்தியாராகி தமிழ்ப் பண்பாட்டு அடையாளம் எது என்றால் பரத நாட்டியம் என்பதாகி விட்டது.தமிழனுக்கு எதுவெல்லாமோ அடையாளமாகி தமிழனுக்கே அடையாளம் இல்லாமல் போய் விட்டது.

  3. பிடுங்கி says:
    15 years ago

    தோழர் சிவசேகரம் அவர்களின் எழுத்துக்கள் என்றைக்கும் உயிரும், ஆதாரமும் கொண்டைவையுமாயிருப்பவை.எழுந்த மானத்தில் அவை புனையப்படுபவையல்ல.
    இக்கட்டுரை மிகு பயன் பாடுடையது. இன்றைய காலகட்டத்திற்கும்,ஈழத்தமிழருக்கும் இன்றியமையாதது.ஏனெனில் நாளுக்கு 10 அல்லது 12 அரங்கேற்றங்கள் புலம் பெயர் நிலங்களில் இன்றக்குச் சராசரியாக இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றன.அவற்றில் வெளியாகும் கையேடுகள் அத்தனையுமே பரதமுனிவருக்குப் பாதபூசை செய்வனவாக இருக்கின்றன. பரதநாட்டியத்தை தமிழாகவே வளர்த்ததில் திருமணி. ருக்மணிதேவி அருண்டேலினதும், கலாசேத்திரத்தினதும் பங்களிப்புகள் முக்கியமானவை.. . .பரதம் என்ற சொல், ப – பாவம், ர – ராகம், த – தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. இது பரதமுனிவரால் அருளப்பட்டது என்பதற்கு தகுந்த ஆதரங்கள் எதுவுமேயில்லை.
    ஆனாலும் உங்களது கட்டுரை பத்மா அவர்களின் கட்டுரை வடிவத்திற்குப் பிறகே பரதமுனிவர் என்கிற கருத்துமேலோங்கியது. என்கிற கருத்தை வலியுறச்செய்துள்ளீகள்.
    உண்மையில் இது பத்மாவிற்கு பலவருடங்களின் முன்பே இக்கருத்து இருந்து வருகிறது. ‘வழுவூர் ராமையா பிள்ளை’, ‘தனஞ்சயன்’, ‘அடையார் லக்ஷ்மணன்’, ‘கலாநிதி நாராயணன்’ ஆகிய பலர் இக்கருத்தை ஏற்கனவே ஏற்றுக்கொண்டவர்கள்.
    இவ்வரிய கட்டுரை எவ்வாறு தமிழின் கலைகள் கொள்ளை போகின்றன எனபதற்கு ஓர் அடையாளாமாகும்.

    • சிவசேகரம் says:
      15 years ago

      நான் பத்மா சுப்ரமணியம் தான் முக்கியமானவர் என்ற நோக்கில் சொல்லவில்லை. பல காலமாக இருந்து ‘சாஸ்திரியக் கலை’ வட்டங்களில் பரவியிருந்த ஒன்றுக்கு பத்மா சுப்ரமணியத்தின் ‘டாக்டர்’ பட்டம் மேலும் மிக உதவியதையே குறிப்பிட்டேன். 1970களின் முற்பகுதியில் என நினைவு. அந்தக் கதை வராத பிரபல சஞ்சிகை இல்லை எனலாம்.

  4. T.sounthar says:
    15 years ago

    பரதம் என்பது ஒரு கலை வடிவம் என்பது போய் அது போலி அந்தஸ்தின் ஒரு சின்னமாக மாறி நீண்ட காலமாகி விட்டது.தோழர் சிவசேகரம் அவர்கள் குறிப்பிட்டது போல அது மக்கள் கலைவடிவமாக ஆகவேண்டுமாயின் ஒரு பாரிய பண்பாட்டு மற்றம் தேவை .அல்லது மக்களின் விடுதலைக்கான ஒரு போராட்டத்தினூடே அதை சாத்தியமாகும் சூழ்நிலை உருவாக்கலாம்.பள பள அழைப்பிதழ்களும் , விலையுர்ந்த ஆடையலங்காரத்துடன் நடைபெறும் பல அரங்கேற்றங்கள் எல்லாம் பாரத நாட்டியத்தை செல்லாக் காசாக்கிக் கொண்டிருக்கின்றன.
    உணர்ச்சிகளை எல்லாம் அபிநயங்களால் காட்ட வேண்டும் என்பது நாட்டியத்தின் விதி .அப்படி என்றால் இந்த விலையுயர்ந்த அலங்காரம் எல்லாம் எதற்கு.? ஏன் இந்த பொருள் விரையம் ? சிந்திப்போம்.
    நல்ல கட்டுரை தந்த தோழர் சிவசேகரம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  5. T.சௌந்தர் says:
    15 years ago

    ” பரத நாட்டியம் வடமொழியில் தான் தான் தோன்றியது.தமிழில் தோன்றியதற்கு எந்த ஆதாரமும் இல்லை” என்று தமிழிசை சங்க பண்ணிசை மாநாட்டில் ( 1994 ) புழுகினார்.”அதுமட்டுமல்ல சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்ட நடன முறைகள் இன்னதென்றும் தெளிவில்லை..” ( இதன் பொருள் என்னவென்றால் : கதைப்பவர்களின் வாயை அடைப்பது )எனவும் பார்ப்பன கூட்டம் புழுகித் திரிகிறது. சிலப்பதிகாரம் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பர்.ஆனால் பரதர் என்பவர் கி.பி ஐந்தாம் நூற்றாண்டை சேர்ந்ததென்பர். வட மொழியில் தோன்றியிருந்தால் ஏன் பார்பனர்களை அதில் ஈடு படக் கூடாது என்று அவர்களது வேதங்களில் எழுதி வைத்துள்ளனர்.?சரி அவர்கள் ஆடவில்லை என்றால் வட இந்தியாவில் ஏன் இந்த நடனம் புழக்கத்தில் இல்லை என்பதற்கு எந்தவித பதிலும் கிடைக்கப்போவதில்லை.ஆடல பாடல்களில் ஈடுபட்ட பார்ப்பனர்கள்களை ” பார்ப்பன சேரி” களில் ஒதுக்கி வைத்துள்ளனர் என சிலப்பதிகாரம் சொல்கிறது.
    அவர்கள் உண்டாகிய மண்ணாங்கட்டி வேதங்களை அவர்களே மீறுவார்கள் ,ஏன் என்றால் நிறைய வருமானம் கிடைப்பதால்.!! இல்லை என்றால் ஆடலிலும்,பாடலிலும் அவர்கள் ஈடுபட போவதில்லை.தமிழ்நாட்டு மக்கள் போட்ட பிச்சை தான் இந்த நடனம்.

    குச்சுப்புடி என்ற கிராமத்தில் ( ஆந்திராவில் ) தமிழ் நடனக் கலைஞர்கள் பழக்கிக் கொடுத்த நடனமே இன்று குச்சுப்பிடி நடனம் எனப்படுகிறது.இன்று indian Dance என்றால் அது தமிழரின் பழைய கால் நடனமான சதிராட்டம் ( இன்றைய பரத நாட்டியம் ) தான் உலகெல்லாம் காட்டக் கூடியதாக உள்ளது. இந்திய சினிமா இசையிலும் அவ்வாறே தான் . இளையராஜாவுக்கு நிகரான ஒருவரை காண்பிக்க இயலாது. இளையராஜாவை இந்தியாவின் இசை அடையாளம் எனக் காட்டக்கூடாது என்பதிலும் கருத்த ,வெள்ளை பார்ப்பனீயம் கண்ணும் கருத்துமாக இருக்கிறது.

    • THAMILMARAN says:
      15 years ago

      இளயராஜா அவர்களது இசை எல்லை கடந்து அவரது ராக்கம்மா கையைத் தட்டு முதல் தரத்தில் இருந்தபோது எனது மலேசியத் தமிழர் விழாக் கொண்டாடியது நினைவில் நிற்கிறது.பார்ப்பணர்களே இளயராஜாவுக்கான் இடத்தை தேர்ந்தெடுத்து தந்தார்க்கள் அந்த நன்றீயோ என்னமோ இசைஜானி பார்ன்னணர் மீது விசுவாசமாகவே இருக்கிறார்.பிராமணகள் இருந்த இடத்தில் இசையானியை உட் கார வைத்தோர் பார்ப்பணர்களே.

  6. T.சௌந்தர் says:
    15 years ago

    ” பரத நாட்டியம் வடமொழியில் தான் தான் தோன்றியது.தமிழில் தோன்றியதற்கு எந்த ஆதாரமும் இல்லை” என்று தமிழிசை சங்க பண்ணிசை மாநாட்டில் ( 1994 ) புழுகினார் பத்மா சுப்பிரமணியம்.

  7. S.Kingsley Gomezz says:
    15 years ago

    ஏகலைவனின் விரல் வெட்டப்பட்டு ஆதிக்க வர்க்கத்தினரதும் பார்ப்பணர்களினதும் கீழ்த்தரமான சிந்தனைகளுக்கு மதிப்பு கொடுத்து வாழ்த்தி வணங்கும் எங்களின் வரலாற்றப் பொய்மைகளை தகர்த்தெறிய துணிவு பிறக்காத வரை பத்மா சுப்பிரமணியம் போன்ரவா;களுடன் இணைந்து திராவிடத் தலைவனுகளும் புதிதாக பல கோவில் கட்டுவதானது தொடரப்படும்………………….????????

  8. காறன் says:
    15 years ago

    தொடங்கியிட்டுது அறிவொளிக்கழகத்தின் கூத்து

    • Kingsley Gomezz says:
      15 years ago

      கூத்தில் இருந்து தான் நிச்சயமாக அனைத்து நடனங்களும் ஆரம்பித்தன என்னும் கருத்தை ஆரம்பித்துவைத்தமைக்கு நன்றி

  9. செல்வன் says:
    15 years ago

    காறன்

    பரதம் பற்றி இங்கே சொல்ல ஏதும் செய்திகள் இருந்தால் சொல்லவும்.ஏன் வீண் அவதூறுகள்.வேண்டாமே.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...