பிலிப்பைன்ஸ் மாவோயிஸ்ட் கட்சிக்கும் பிலிப்பைன்ஸ் அரசிற்கும் இடையேயான பேச்சுவார்த்தை கடந்த நெதர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையின் சமாதான தூதராக நோர்வே செயற்படுகிறது. இன்று நோர்வே சமாதானக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் பிலிப்பைன்ஸ் முழுவதும் இரண்டு பகுதிகளிடையேயும் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது. நோர்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை டிசம்பர் 20ம் திகதியிலிருந்து 26 நாட்களுக்குப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடுகின்றது. பிலிப்பைன்ஸ் அரசும் மாவோயிட் தலைவர்களும் 2013 ஆண்டின் ஆரம்பத்தில் மீண்டும் நெதர்லாந்தில் சந்திப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது என நோர்வே நாட்டின் சமாதானத் தூதுவர் ரூ லென்ட் தெரிவித்தார்.
இலங்கையில் நோர்வே நடத்திய சமாதானப் பேச்சுவார்த்தையின் இரத்தவாடை இன்னும் வீசிக்கொண்டிருக்க பிலிப்பைன்சில் தலையிடுகிறது. தமது முன்னைய அனுபவங்களிலிருந்தும் அண்மைய இலங்கை அனுபவங்களிலிருந்தும் பிலிப்பைன்ஸ் போராளிகள் கற்றுக்கொள்ளவேண்டிய சிக்கலான காலம் இது. நோர்வே எப்போதும் சமாதானத் தூதராக இருந்ததில்லை அழிப்பிற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளும் அமரிக்காவின் கருவியாகவே இருந்துவந்திருக்கிறது.
ஈழத்தில் நோர்வே எவ்வாறு அழிவுகளைத் திட்டமிட்டது என்பது குறித்த ஆய்வுகள் கூட ஆவணமாக இல்லாமல் வியாபாரிகளை விதைத்துவிட்டு ஆர்ப்பாட்டமின்றி தனது வேலையைத் தொடர்கிறது நோர்வே.