தன் குடும்பத்தினருக்கு அதிக வருவாய் தரகூடிய அமைச்சர் பதவிகளைக் கோரவோ பதவிப் பங்கீடு தொடர்பாக பேசவோ மட்டும்தான் கருணாநிதி டில்லிக்கு சக்கர வண்டியிலேயேச் செல்வார். மற்றபடி தமிழக மக்களின் பிரச்சனைகளுக்காகப் பேசவோ ஈழத் தமிழர் பிரச்சனைகளுக்காவோ அவர் வெறும் பைசா பிரயோஜனம் இல்லாத கடிதங்களை மட்டுமே எழுதுவார். இக்கடிதங்களை டில்லியில் உள்ள பிரதமர் அலுவலகம் குப்பைக் கூடையில் வீசி விடுவது வழமையானது. ஆனாலும் விடாமல் கடிதம் எழுதியே காலத்தைக் கடத்தி வந்தார் கருணாநிதி. இப்போது கருணாநிதியையும் அவரது பாணியிலேயே டீல் செய்யத் துவங்கி விட்டார் மன்மோகன் இவர் கடுதம் எழுதும் போதெல்லாம் ரெடிமேடாக எழுதி வைக்கப்பட்டிருக்கும் கடிதங்களில் கையெழுத்தை மட்டும் போட்டு ஒன்றிர்கு மூன்றாக அனுப்பி விடுகிறார். ஆனால் மன்மோகன் எழுதுகிற கடதங்களை பொக்கிஷம் போல பாதுகாக்கிறார். இப்போது இலங்கை பிரச்சனை தொடர்பாக கடிதம் ஒன்றை கருணாநிதிக்கு எழுதியுள்ளார் மன்மோகன். அக்கடிதத்தில், இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலை குறித்து கடந்த 3-ம் தேதி கடிதம் எழுதினீர்கள். இதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கை அதிபர் ராஜபட்ச அண்மையில் என்னைச் சந்தித்தபோதும், இலங்கை எம்.பி.க்கள் குழுவுடனான சந்திப்பின்போதும் இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது. இலங்கையில் வாழும் தமிழர்கள் சுயமரியாதையுடனும், கண்ணியத்துடனும் வாழ இந்திய அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இயல்பு நிலை திரும்புவதற்கு மத்திய அரசால் ஆன முயற்சிகள் மேற்கொள்ளப்படும். போரினால் இடம் பெயர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு உதவும் வகையில் இந்திய அரசு ஏற்கெனவே ரூ.500 கோடியை ஒதுக்கியுள்ளது. அங்குள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகளைக் கட்டும் பணியிலும் மத்திய அரசு தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உட்கட்டமைப்பு மற்றும் நீடித்த வாழ்க்கைக்கான உதவிகளைச் செய்வதன் மூலம் அங்கு இயல்பான பொருளாதார நிலையை உருவாக்க அரசு முயற்சிக்கும். இந்த நிலையில், இலங்கையில் நிலவிவரும் பிரச்னைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண்பதற்கு உங்களது கருத்துகளையும், ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன் என்று பிரதமர் மன்மோகன் சிங் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஐயா புண்ணியவாஙளே, இனிமேல் கடிதங்களை புறாக்கள் மூலம் அனுப்புங்கள்!!! தங்களின் காதல் கடிதங்கள் மெள்ள< மெள்ள போய்ச்சேரட்டுமே!! சாவது தமிழன் தானே !!!
மன்மோகன் சிங்கே !
முதலில் உனது நாட்டில் இருக்கும் தமிழரை காப்பாற்ற வழி செய்.