சனல் 4 வெளியிட்ட காணொளிக் காட்சிகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் சித்திரவதைகள் மற்றும் படுகொலைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி கிறிஸ்டோபர் ஹெய்ன்ஸுடன் கலந்துரையாட விருப்பம் கொண்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலங்கை அரசு ஒரு வைகையான இணக்கத்திற்கு வருவதற்கான செயற்பாடுகளில் இறங்கியுள்ளது. மேற்கு நாடுகள் இலங்கைக்கு வழங்கும் தற்காலிக அழுத்தங்கள் தமிழ் மக்கள் மீதான அக்கறையுடையதோ அன்றி மனிதாபிமான நடவடிக்கையோ அல்ல. இலங்கை அரசை தமது முழுமையான கட்டுப்பாட்டுக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளே.
70 களின் மத்தியில் வியட்னாமில் நடைபெற்ற 1 மில்லியன் வரையான படுகொலைகளை பொல்பொட்டின் மீது அமரிக்க அரசு சுமத்தியிருந்தது. ஒரு புறத்தைல் அமரிக்க உளவு நிறுவனமும் மறுபுறத்தில் வியட்னாமிய ஆக்கிரமிப்பாளர்களும் நடத்திய அனைத்துப் படுகொலைகளுக்கும் எதிரான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இறுதியில் அனைத்துப் படுகொலைகளுக்கும் பொல் பொட் மட்டுமே பொறுப்பானவர் என்று அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு அமரிக்க நாடகம் நிறைவடைந்தது.
ஏகாதிபத்தியங்களோடு குறித்த இணக்க அரசியலுக்கு இலங்கை அரசு முன்வருமானால் இலங்கை அரசிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் கிடப்பில் போடப்படுவது மட்டுமன்றி புலிகள் மேற்கொண்ட போர்க்குற்றங்களை முன்வைத்து அனைத்துப் போர்க்குற்றங்களையும் புலிகள் மீது சுமத்துகின்ற அபாயம் காணப்படுகிறது.
ஆக, இன்றைய சூழலில் ஏகாதிபத்தியங்களின் மக்கள் விரோத அரசியலைப் புரிந்துகொண்டு சமூகப்பற்றுள்ள போராடும் மக்கள் பிரிவினருடனான இணைவை ஏற்படுத்திக்கொள்வதும், இனப்படுகொலைக்கு எதிரான சர்வதேசப் பிரசார இயக்கம் ஒன்றை முன்னெடுப்பதும் அவசியமானது.
ஐ,நா அறிக்கையும் சனல் 4 ஆவணப்படமும் பல யாராலும் பயன்படுத்திக்கொள்ள வகையிலான இடைவெளிகளைக் கொண்டுள்ளது என்பதை உணர்ந்துகொண்டு மக்கள் பற்றுள்ளவர்கள் இவற்றைப் பயன்படுத்திக் கொள்வதும் புதிய அரசியல் திட்டத்தை வகுத்துக்கொள்வதும் அவசியமானது.








அந்த இணக்கத்துக்கு தயாராவதற்கான காரணம்,ஏலவே துண்டு,துண்டாக வெளியான காணொளிகளில் தோன்றும் இராணுவத்தினர் சரத் பொன்சேகாவின் விசுவாசிகள் என்று கூறப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டு விட்டார்கள் என்பதாலா?அல்லது கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டு விட்டார்கள் என்ற துணிச்சலா?அடையாளம் காட்ட எவருமில்லாததாலா?அவ்வாறு எவரும் இல்லாது விடினும் அது கூட “உங்கள்” கைங்கரியம் தான் என்பதை புரிந்து கொள்ள முடியாத சமூகமா,மேற்குலகம்?
முப்படைகளைக் காட்டி புலம்பெயர் தமிழரை உசுப்பேத்தியவர்களால் இறுதியில்கிடைத்த பலன் யாவரும் அறிந்ததே.இந்த ஆவண்ப்படமும்
இதனைத்தயாரித்தவர்கழும் யாரெனத் தெரியாது. இதுவும் புலம்பெயர் தமிழ்ர்களிற்கு ஓர் முள்ளிவாய்க்காலாக அமையும்போதே உண்மை விளங்கும்.-துரை
துரை மாதிரி லூசிகளால்தான் நாம் வீழ்ந்தோம் இனியும் இதுகள நம்பினால் நம் வாழும் கனவுகளூம் வீழும்.
துரையின் ஆதங்கத்தில் உள்ள ஆழத்தைப் புரியாது மாற்றுக் கருத்துரைப்போரை எல்லாம் துரோகி என்று தமிழனைத் தமிழனே எதிரியாக்கிய புலிப் பாசிசத்தை தமிழர்கள் கைவிடாதவரை தமிழன் யாருக்கோ அடிமையாகத்தான் வாழ்ந்து தீரவேண்தும்.
துரை போன்றோர் பரமசிவன் கழுத்தில் இருக்க விரும்பும் பாம்புகள் அவர்களூக்கு வேதனைகள விட தம் சாதனைகள்தான் முக்கியம்.ஆக இல்லாத புலி இருப்பதாக காட்டி கோத்தாவையும், மகிந்தாவையும் மகிழ்ச்சிப் படுத்துகிறார்கள்.
தமிழ்மாறன் இப்படியான் ஓர் ஆளென்றுநான் எதிபார்க்கவில்லை. புலிகள் யார்? வன்னியில் மட்டுமா புலிகள் வாழ்ந்தன? புலிகளை புலிகளே அழித்தன.. அழித்த புலிகள் எங்கு எப்படி வாழ்கின்றன என்ன செய்கின்றனென என்பதை கொஞ்சமாவ்து சிந்தியுங்கோ.-துரை
நல்ல நண்பன் தவறூகள சுட்டிக்காட்டுபவன் அவற்றீற்காக வாதிடுபவனல்ல, இதில் நீங்கள் யார்?இந்த சணல் 4 வீடீயோவை பார்த்து கண்கலங்குது, சமிந்தா வெட் கப்படுகிறார் ஆனால் நீங்களூம், பார்த்திபராசனும் ஏளனம் செய்கிறீர்கள்.எனக்கு நீங்கள் மனிதர்தானா என்றே சந்தேகமாக இருக்கிறது.
துரை பார்த்திபராசன் ”
இந்த ஆவணப்படமும்
இதனைத்தயாரித்தவர்கழும் யாரெனத் தெரியாது
“என்கிறீர்கள். சரி தயாரித்தவர் யாரென உங்களுக்கு தெரிகிறதல்லவா அதை இங்கு ஆதாரத்துடன் சொல்லுங்கள். யார் தயாரித்தது என்பதல்ல விடயம் அதிலுள்ள சம்பவங்கள் உண்மையா! இதற்கான பொறுப்பாளர்கள் யார் என்று உறுதிபடுத்துவதும். இனிவரும் காலங்களில் இந்தக் கொடுமையை தடுப்பதற்கான வழிவகைகளை கண்பிடிப்பதும்தான். அது தவறா! முள்ளிவாய்க்கால் தமிழர்களின் உரிமை போராட்ட முடிவாயிருக்குமென அதீத நம்பிக்கையில் இருந்துள்ளீர்கள் . அப்படியில்லை என்றவுடன் கடுமையாய் கடுப்படைந்து விட்டீர்கள் போலுள்ளது! “துரையின் ஆதங்கத்தில் உள்ள ஆழத்தைப் புரியாது
“என்கிறீர்கள் பார்த்திபராசன் உங்களிற்கு புரிந்ததை எங்களிற்கும் கொஞ்சம் சொல்லுங்கள் கேட்டுத் தெளிவுறுவோம்.
புலிகளென்றால் எல்லோரும் விடுதலைப்புலிகளா? தமிழரின்நலன்ளில்
சாதி,மத பேதமின்றி அக்கறை கொண்டவ்ர்களா? கண்ணை மூடிக்கொண்டு
புலி என்றால் எல்லோரையும் ஆதரித்தீர்களே 25 வருடங்களிற்கு மேலாக அதன் பலன் தான்
முள்ளிவாய்க்காலில் முடிவு என்பதை ஏற்ரீர்களா? இல்லை இன்னமும்
சிங்களவ்ன், மகிந்தா, ஒட்டுப்படை,துரோகி. இதெல்லாம் உங்களிற்கு உங்களை
25வருடமாக் ஏமாற்றியவ்ர்கள் சொல்லித்தந்த பாடங்கள்.
இவர்களின் ஒருபகுதியினரே உங்களை மேலும் ஏமாற்ர ஆவணப் படமெடுத்து
உங்களை ஏமற்ருகின்றார்கள். டெல்கி,கொழும்பு,மேற்குலகம் யாவும் ஏமாற்றுக் காரர்களை
தேடி வலைபோட்டுள்ளன. இவர்கள் உங்களை ஏமாற்ரி தமிழ் ரென்ற போர்வையினுள் மறைந்து வாழ்கின்றனர். இனியாவ்து புரியாவிட்டால் என்னால்
ஒன்றும் சொல்ல முடியாது.-துரை
அய்யா புலிகள் இருந்த இடத்தில் புல்லு முளத்து இப்போது அவற்றீல் சில பற்றயகளாகவும் பல் அரசாங்க விடுதிகளாகவும் மாறீ கண நாளாயிற்றூ இன்னும் நீங்கள் அரிசிமா புட்டுக்கு பழய சம்பலையே தேடுகிறீர்கள்?அடுத்து யாழ்ப்பாணத்தானை யாராவது பேய்க்காட்டேலுமே?என்னய்யா துரை உங்களூக்கு வயதாகி விட்டதா என்ன?
யாழ்ப்பாணத்தானை யாரும் ஏமாற்ர ஏலாதுதான்.
அவ்ர்கள்தானே உலகினை ஏமாற்றுவதில் முன்நிற்க்ன்றார்கள்.அதற்காக ஏன் தாம் தான்
உலக்த்தில் தன்மான்ம் காக்கும் தமிழரென கத்தி கத்தியே தமிழரின் மானத்தையே விலை பேசுகின்றார்கள்.-துரை
2034ம் ஆண்டு நான் உயிருடன் இருந்தால், அன்று இது பற்றி மீண்டும் சில எழுதுவேன். அந்த வருடத்தை நினைவில் வைத்திருங்கள். ஏதாவது நடக்கலாம்… ……..