பிஜாப்பூர் மற்றும் தாண்டேவாடா பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ள பசுகுடா என்ற பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மற்றும் கோயா கமாண்டோக்கள் இணைந்து நடத்திய தாக்குதல் ஒன்றில் 18 பேர் பலியாகியுள்ளனர். பலியான அனைவரும் மாவோயிஸ்டுக்கள் என போலிஸ் அறிவித்துள்ளது. மேலும் 6 போலீசார் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அப்பகுதி கிராமவாசிகள், கொல்லப்பட்டவர்கள் தீவிரவாதிகள் என்று அரசு கூறுவதை ஆட்சேபித்து, எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
மத்திய இந்தியாவின் இப்பகுதிகளில் பல்தேசியக் கம்பனிகளுக்காக கனிமங்களை அபகரிக்கும் நோக்கில் இந்திய அரச படைகள் அப்பாவிமக்கள் மீது தாக்குதல் நடத்திவருவது தெரிந்ததே. அரச படைகளுக்கு எதிராக பழங்குடி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Nobel prize winning economist Amartya Sen wants the government to talk to them. This is a cancer that India has to remove before it can extend its reputation and power in the International scene.