Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

சட்டவிரோதமாக மீன் பிடிப்பதில் இந்திய மீனவர்கள் தேர்ச்சி பெற்றவர்கள்- இலங்கை கடற்படை தளபதி.

இனியொரு... by இனியொரு...
09/14/2010
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

வன்னி மக்கள் மீதான் போருக்குப் பின்னர் இலங்கை இராமேஸ்வரம் மீனவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நட்வடிக்கையை மேற்கொள்கிறது. சமீபகாலமாக இலங்கை, இந்தியா இரண்டுமே தமிழக மீனவர்களை எல்லை தாண்டும் திருடர்களைப் போல சித்தரித்து வருகிற நிலையில் கடற்படைத் தளபதியின் பேச்சு அதை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது. வடக்கு இலங்கையில் உள்ளவர்களும் (தமிழ் மீனவர்கள்), இந்திய மீனவர்களும் (தமிழக மீனவர்கள்) ரகசியமாக தகவல் தொடர்பு எதையும் மீண்டும் ஏற்படுத்திக் கொள்ளாமல் தடுக்கத் தீவிரமாகக் கண்காணிப்பது அவசியமாக இருக்கிறது என்று இலங்கைக் கடற்படை துணைத் தளபதி வைஸ்–அட்மிரல் டி.எஸ்.ஜி. சமரசிங்க கூறுகிறார். தமிழ்ப் போராளிகளுடனான போரில் கற்ற பாடங்கள் குறித்து சமரசத்துக்கான கமிஷனிடம் தகவல்களைத் தெரிவித்தபோது இதை அவர் வலியுறுத்தினார். “விடுதலைப் புலிகளை அழித்திருந்தாலும் அவர்கள் மீண்டும் புதிய வடிவிலோ, பெயரிலோ மீண்டும் தங்களைப் புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்பை மறுக்க முடியாது. ராணுவ ரீதியாக விடுதலைப் புலிகளை வெற்றி கொள்வது மிக எளிதாக இருந்ததில்லை. கடல்பரப்பில் அவர்கள் மிகுந்த சாகசக்காரர்களாக இருந்தார்கள். கடல் பரப்பையும் அதில் மீன்பிடிக்க வரும் ஆயிரக்கணக்கான படகுகளையும் கண்காணிப்பது எந்த நாட்டு கடற்படைக்கும் சவாலான வேலை. வடக்கு இலங்கையில் உள்ள தமிழ் மீனவர்கள், இந்தியாவின் (தமிழ்நாட்டு) மீனவர்களோடு எளிதில் தொடர்பு கொண்டுவிடுவார்கள். அவர்களுடைய பேச்சும் பரிமாற்றமும் கடலில் மீன்பிடித்தலோடு இருக்கும்வரை நமக்கு ஆபத்து இல்லை. ஆனால் கடந்தகால அனுபவங்களை நாம் மறக்கக்கூடாது. விடுதலைப் புலிகள் தங்களுக்கு வேண்டிய எரிபொருள், உணவு தானியங்கள், மருந்து – மாத்திரைகள், ஆயுதம் தயாரிப்பதற்கான கருவிகள், வெடிமருந்துகள், வெளிநாடுகளில் ஆயுதத் தரகர்களிடமிருந்து வாங்கிய நவீன ஆயுதங்கள் ஆகியவற்றைக் கடல் வழியாகத்தான் கடத்தி வந்தார்கள். எனவே கடல் போரில் அவர்களை வெல்வது மிகுந்த சவாலாக இருந்தது. 2002-2004 காலத்தில் இலங்கை ராணுவத்துடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துகொண்ட காலத்தில்கூட விடுதலைப் புலிகள் இந்தக் கடல் வழியைத் தங்களுடைய நோக்கத்துக்காகப் பயன்படுத்துவதை நிறுத்தவே இல்லை. அப்போது நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்வது அவசியம் என்று கருதுகிறேன். பிப்ரவரி 6-ம் தேதி இந்திய நாட்டுப் படகு ஒன்று இலங்கையின் கடல் பரப்பில் வந்து கொண்டிருந்தது. அதில் என்ன இருக்கிறது என்று அறிய விரும்பினோம். விடுதலைப் புலிகளுக்காகத்தான் அதில் ஆயுதங்கள் கடத்தி வரப்படுகின்றன என்பதையும் ஊகித்துவிட்டோம். அப்போது இலங்கை கண்காணிப்பு அமைப்பைச் சேர்ந்த வெளிநாட்டு நபர் ஒருவரை இலங்கைக் கடற்படையின் அதிவிரைவு படகில் அழைத்துச் சென்று கொண்டிருந்தோம். அவரையே அந்த இந்தியப் படகில் ஏறி என்னஇருக்கிறது என்று பார்க்குமாறு கூறினோம். அப்போது அவர் அதில் ஏறி ஆயுதங்களும் வெடிகுண்டுகளும் இருப்பதைக் கண்டுபிடித்தார். உடனே அந்தப் படகில் இருந்தவர்கள் அவரை மிரட்டி கடலில் குதிக்க வைத்தனர். நாங்கள் அவரை உயிருடன் காப்பாற்றினோம் என்றாலும், எந்தவித தடயமும் எங்களுக்குக் கிடைக்காமல் இருக்க அந்தப் படகையே வெடி வைத்துத் தகர்த்தனர் விடுதலைப் புலிகள்.இப்போது வாரந்தோறும் திங்கள், புதன், வியாழக்கிழமைகளில் 500-க்கும் மேற்பட்ட இந்திய மீன்பிடி படகுகள் இலங்கைக் கடல் பகுதிக்குள் வருகின்றன. அவை அங்கே இருப்பதை விடுதலைப் புலிகளோ அவர்களுடைய புதிய அவதாரமோ தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளக்கூடும். 2007 டிசம்பர் 26-ம் தேதி 14 பேருடன் இலங்கைக் கடற்படையின் அதிவிரைவு கண்காணிப்புப் படகு கடல் பரப்பில் தன்னுடைய பணியைச் செய்து கொண்டிருந்தது. எங்கிருந்தோ ஒரு கடல்புலி படையைச் சேர்ந்த தற்கொலைப் படை வீரர் அந்தப் படகின் அடியில் வந்து தன்னுடைய உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை இயக்கி அந்தப் படகையே வெடிக்கவைத்து தகர்த்தார். படகில் இருந்த 14 பேரில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார். அதனால்தான் இப்போது இந்தியக் கடல் எல்லையை வெகு கவனமாகத் தொடர்ந்து கண்காணிக்கிறோம். அப்படியும் சட்டவிரோதமான காரியங்கள் எங்கள் கண்ணிலும் சிக்காமல் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இலங்கையின் கடல் பரப்பில் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதால் இனி எதிர்காலத்தில் அடிக்கடி மோதல்கள் நிகழக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. சட்டவிரோதமாக மீன் பிடிப்பதில் இந்திய மீனவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பதால் அவர்களைக் கண்காணிப்பதும் பிடிப்பதும் பெரிய சவாலாக இருக்கிறது‘ என்று கூறியிருக்கிறார் சமரசிங்கே.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

மலையகம் : தமிழர் வீடுகள் தீக்கிரை

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...