இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே சென்னை மாகாணம் என்ற பெயரில் தனி சட்டமன்றத்தைக் கொண்டிருந்தது தமிழகம். இந்தியாவில் நான்கே நான்கு இடங்களில்தான் இதே சட்டமன்றம் இருந்தது. சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழ்நாடு என்ற பெயர் பெற்று இந்த ஆண்டு நூற்றாண்டு விழாவைக் காண்கிறது. சுப்பராயலு ரெட்டியார் முதல் மு க ஸ்டாலின் வரை தமிழ்நாடு சட்டமன்றத்தின் வயது நூறு ஆவதையொட்டி, சட்டமன்றத்தில் இன்று இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களால் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. 13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஐந்து முறை முதல்வராகவும் இருந்த கருணாநிதி படத்தை முந்தைய அதிமுக அரசு திறந்து வைக்க மறுத்து விட்டது.
இப்போது நடந்த விழாவையும் அதிமுக புறக்கணித்து விட்டது. அதிமுகவை உருவாக்கிய எம்.ஜி,.ஆர் படத்தை ஜெயலலிதாவும், ஊழல் வழக்கில் குற்றவாளியான ஜெயலலிதாவின் படத்தை சபநாயகர் தனபாலும் திறந்து வைத்தனர். முந்தைய ஆட்சியில் ஜெயலலிதாவின் படத்தை திறந்து வைக்க எவரும் வராத நிலையில் எடப்பாடி பழனிசாமியே சபாநயகரை வைத்து திறந்து வைத்தார்.கருணாநிதி படத்திறப்பு முக்கிய நிகழ்வாக நடப்பதால் அதை அதிமுகவினர் புறக்கணித்துள்ளனர்.