முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நண்பரும் அதிமுக பிரமுகருமான சசிகலாவின் பெயர் ஆயிரம் விளக்கு தொகுதியின் வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக சிறையில் இருந்து விடுதலையான சசிகலா கடந்த 30 ஆண்டுகளாக போய்ஸ் இல்லத்தில்தான் வசித்து வந்தார். அதையே தனது நிரந்தர முகவரியாகவும் கொடுத்திருந்தார். அதே முகவரியில்தான் அவரது வாக்காளர் பெயரும் இருந்து வந்தது.
இந்நிலையில் ஜெயலலிதா வாழ்ந்த போய்ஸ் இல்லத்தை எடப்பாடி பழனிசாமி அரசுடமை ஆக்கிய நிலையில் அவரது பெயரையும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியிருக்கிறார்கள். இதை நேற்று தெரிந்து கொண்ட சசிகலா தேர்தல் கமிஷனிடம் முறையிட்டிருக்கிறார்.
இந்த பகுதிக்கு உட்பட்ட ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில்தான் ஜெயலலிதாவும் சசிகலாவும் வாக்களிப்பார்கள். ஆனால் இம்முறை அவரால் வாக்களிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. தேர்தல் கமிஷனில் சசிகலா தரப்பு முறையிட்டிருக்கும் நிலையில் அவருக்கு வாக்களிக்கும் உரிமை கிடைக்குமா என்பது நாளைதான் தெரியவரும்.