ஆதாரங்களை அழி
சேதாரங்களை துடை
துயிலுமில்லங்களைக் கிளறு
நடுகற்களை நாசமாக்கு
வாசனைத்திரவியங்களைத் தெளி
நாற்றத்தை மறை
வருக வருக
ஆசியாவின் அதிசயத்தை பார்க்க வந்த
அம்மையே வருக
நான்காண்டுக்குப் பிறகு
நாடு பார்க்கவந்துள்ளார் வருக
கொத்தாகக் குண்டு போட்டு
குற்றுயிராய் குறையுயிராய்
அக்கினிக் காட்டிடை கிடந்து நாம் துடிக்கையிலே
பன்றிக்கு பால் கொடுத்த பரசிவனாரும் வரவில்லை
பாரம் சுமப்பவரே வாருமென்ற பரமபிதாவும் வரவில்லை
அயலவனும் அடுத்தவனும்
அழித்தவனுக்கே வழி மொழிந்தனர்
அம்மையே ஆண்டு நாலு போய்
திங்கள் மூன்று ஆனபின் இப்போதாகிலும் வந்துள்ளீர்கள்
பிணம் புணரும் தேசம் உங்களை வரவேற்கிறது
கண்ணீரும் ரத்தமும் காய்ந்துவிட்டதென்ற
நம்பிக்கையுடன் வந்திருப்பீர்கள்
வந்து பாருங்கள் தாயே
வெற்றிலை தந்து
வெண்தாமரையையும்
சமாதானப் புறாவையும் காட்டுவார்கள்
பதிவு செய்துவிட்டுப் போங்கள்
தந்ததை வாங்கி தாள் பணிந்து நிற்பவர்
சிலரைப் சாட்சிப் பதிவுகளாக்குவார்கள்
ஒத்திகை பார்த்த பபூன்கள் நன்றாக நடிப்பார்கள்
சலுகைகளை அவர்கள் உரிமைகள் என்பார்கள்
தாயையே விற்றவர்கள்
தரமாக நடிப்பார்கள்
நாடகம் நிகழ்ச்சி நிரலின்படி நடக்கும்
பார்த்துவிட்டுப் போங்கள்
எங்கள் குருதித்துளி
ஒவ்வொன்றுக்கும் கணக்குகள் மனங்களிலுண்டு
காலம் ஒருநாள் ஆய்வு செய்யும்
மரக்காலுடன் நடைபிணமாய் ஒரு கூட்டம்
பொட்டையும் பூவையும்; போருக்களித்த பெண்கள்
தந்தையரை புதைகுழியில் தேடும் குழந்தைகள்
சிறைவாசலெங்கும் பிள்ளைகளுக்காய் தவமிருக்கும் தாய்மார்
அவலங்களை தந்தவனிடமே
மகஜர் கொடுத்து கானல் நீருக்காய் காத்து நிற்கும் கூட்டம்
யாரும் உங்கள் கண்களில் படமாட்டார்
என்செய்வோம்
எல்லாவற்றிற்கும் ஓர் பதிவுகள் எங்களிடமுண்டு
வந்ததுதான் வந்தீர்கள்
வலி மாத்திரை வாங்கித்தருவீர்களா
வலிதந்த பிசாசுடன் முருங்கை மரத்தில்தான் வீடுகட்டி
இணங்கி வாழச்சொல்வீர்களா
அடித்துவிழுத்திவிட்டோமென்ற அகங்காரம் அவர்களுக்கு
இருப்பெல்லாமிழந்துவிட்ட துயரெமக்கு
அடித்துவிட்டோமேயென்ற இரக்கம்கூட அவர்களிடமில்லை
வீழ்ந்துவிட்டோமேயென்ற பெருவலியெமக்கு
ஒன்றை கவனியுங்கள் தாயே
இடைவிடாது இடிவிழுந்தபோதும் எம்பனைகள் சரியவில்லை
வடலிகள் வாடவில்லை
பகை காலில் ஒன்றிரண்டு சருகுகள் விழுந்ததே தவிர
பூவரசு இன்னும் மனோவலியோடுதானுள்ளது உணர்வீர்கள்
பனைமரங்கள் முறியுமேயொழிய வளையாது அம்மா
வேகாத பருப்பென்று தெரிந்தும்
மாகாணசபையில் இறங்கியுள்ளனர் எம்மில் சிலர்
பெருவாழ்வேதும் கிடைக்கப்பெற்றதாய்
அவர்களும் பொச்சடிக்கவில்லை
நாமும் நம்பி நிற்கவில்லை
ஒத்து நிற்பதை உலக வல்லரசுகளிற்கு காட்டவேண்டிய
இழிநிலை எங்களுக்கு
கருவுற்றகாலத்திலிருந்து உணவும் உதிரமும் கொடுத்துக் காத்துவந்த
சுதந்திரக்குழந்தையை
கருவறையில் வைத்தேயழித்த பாவிகளுக்கு
நாமின்னும் ஒத்த உணர்வோடுள்ளோம் என்பதை
எத்தனை தரம் சொல்ல வேண்டும்
பிரதேச சபைத் தேர்தலில்
பாராளுமன்றத் தேர்வில்
எத்தனை தரம் நிரூபிக்க வேண்டும்
உலகச் செவிடர்கள் காதில்
எத்தனை தரம் சங்கெடுத்து ஊத வேண்டும்
தந்ததை வாங்கி நக்கிவிட்டு தாள்பணிந்து நிற்க
தமிழன் ஒன்றும் தரங்கெட்டுப் போகவில்லையென்று
எத்தனை முறை கத்தவேண்டும்
இருந்தாலும் உலகப் பொலிஸ்காரர் கையில்தானாம் அதிகாரம்
உணர்ந்து கொள்ள வேண்டுமென்பதற்காய்
தேர்தலில் நிற்கிறோம்.
உள்ளெரியும் நெருப்பை ஒளித்து வைத்துவிட்டு
உள்ளுராட்சிகளில் நின்றோம்
வேகாத பருப்பென்று தெரிந்தும்
மாகாண சபை தேர்தலில் நிற்கிறோம்
வாருங்கள் அம்மையே
பத்தோடு ஒன்றாய் பார்த்து நீர்; போகாமல்
வீழ்ந்த இனத்தின் வலியறிந்து செல்க
கண்ணீரும் ரத்தமும் காய்ந்த பூமியின் உணர்வறிந்து செல்க
சத்தியமாய் அம்மையே
அவர்கள் பூமியில் அரையங்குலம் கூட வேண்டாமெமக்கு
அங்கே அவர்கள் பாதை போடட்டும்
துறைமுகம் கட்டட்டும்
கடலைக்கூட தம் வசமாக்கி நாட்டுக்குள் கூட்டி வரட்டும்
எதுவும் வேண்டாமெமக்கு
எமது மண் சுடும் பாலைமணலாயினும்
இந்திரலோகம் எமக்கு
எங்கள் தோட்டத்து கள்ளிச் செடி கூட எமக்கு கற்பக விருட்சம்
எங்கள் தோட்டத்து வெருளிகளை
விலக்கச் சொல்லி நிற்கிறோம்
காக்கைகளானாலும் எம்பெண்கள்
கந்தர்வக் கன்னிகள் எமக்கு
உங்களுக்கு எப்படியோ
எம் அன்னை எமக்கு அழகு
விட்டுக் கொடுக்கமாட்டோம்
தட்டிப்பறிக்க நினைத்தால் விட்ட இடத்திலிருந்து
பயணம் தொடங்கும்
பாதி வரை வந்த பயணம் தொடரும்
மீதிப்பயணம் ஆரம்பமாகும்
சக்கரச் சிற்கள் என்றும் கீழேயே நிற்பதில்லை
மீண்டும் மேலேழும்
முதுகுக் கூனல் நிமிர்த்தி
முன்னே சென்றவர் கனவை நெஞ்சிருத்தி
பயணம் தொடரும்
அம்மையே ஒன்றுணர்க!
‘உச்சா’ போவதானாலும்
ஊர் மண்ணில் போவதுதான் பெருமை எமக்கு
-ச.நித்தியானந்தன் யாழ். பல்கலைக்கழகம்-
//////ஆசியாவின் அதிசயத்தை பார்க்க வந்த
அம்மையே வருக/////—–in this poem
///////உனக்காக யார் பேசினார்
தொட்டு ஆறுதல் சொல்ல வேண்டாம்
எட்ட நின்றாவது ஆற்றுப்படுத்தினாரா யாராவது
அழாதே என்று எங்கிருந்தாலும் ஒரு கரம் நீண்டதா
////——
//////////////////////—
above is in the previous .
He says nobody coming , now ridiculing those who come .
Is he working for SL state ?
தரமற்ற விமர்சனங்களைக் காதில் போட்டுக்கொள்ளாமல் இனிஒருவில் தொடர்ந்தும் நீங்கள் உங்கள் கவிதைகளைக் கொடுத்துக் கொண்டிருங்கள்
உங்களைச் சிரம் தாழ்த்தி கண்களில் கண்ணீருடன் வணங்குகின்றேன்
எங்களுக்கும் காலம் வரும்
காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் ( இன்னலுறும் உலக மக்கள் ) அனைவரையும் ( இன மத மொழி பாரபட்சமின்றி ) வாழ வைப்போமே
“குமுறி உமிழப்பட்ட அவர்களது உதிர எச்சலில் உருக்குலைய நேரிடும் இவ்உலகு”.
பெருகி வழியும் தன் உதிரத்தினால் தன் மேலான சுதந்திர தாகத்தினை உலக மானுடத்தின் மனசாட்சியின் முன் நிரூபிக்கிறார்கள் தமிழர்கள் . தம் தொன்மையான தாய்நிலம் பறி போவதை காணச் சகிக்காமல் வெகுண்டெழுந்து போராடிய ஒரு தேசிய இன மக்கள் தங்களின் அளப்பரிய தியாகங்களினால் மூடிக்கிடக்கும் உலகின் கண்களை திறக்க முயல்கிறார்கள் . சமூக நீதி மற்றும் மானுட உரிமையின் மேலும் கட்டமைக்கப்பட்டுள்ளதாக கதைக்கப்படும் உலகின் அறம் தொக்கி நிற்கும் சமூக வாழ்வின் மேல் தன் உதிர எச்சிலை உமிழ்ந்து காட்டி இருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள். அவர்களின் வலியுணராமல் ..நீதி மறுக்கப்பட்ட அநீதியான இந்த உலகச்சமூகத்தின் மெளனம் தொடருமானால்… குமுறி உமிழப்பட்ட அவர்களது உதிர எச்சலில் உருக்குலைய நேரிடும் இவ்உலகு.
மணி.செந்தில்
எந்த நிலைவரும் போதிலும் நிமிர்வோம்
உங்கள் நினைவுடன் வென்றிடுவோம்
////தமிழ் மூடன்தமிழ் மூடன்தமிழ் மூடன்/////
தமிழ் மூடன் தன இணைய முகவரியை நீக்கிவிட்டார் .முகத்தை RAWவாக காட்டியவர்கள் இப்ப ஏன் மறைக்க வேண்டும் இப்ப புரியுதா ? இப்ப மணி செந்தில் சொன்னதாக வருகின்றார் .
மணி செந்திலின் RAWவான முகம் இதோ
உந்த மணி செந்திலின் இணைய முகவரி http://www.manisenthil.com/
இவர் ஜூலை 2007 முதல் இந்த இணையத்தை நடாத்தி வருகின்றார் .
////////தமிழ் மூடன்////////
இடது சாரியம் என்பதில் இடறுப்படும் இவர் 2009 காலத்தில் கூட ஈழத் தமிழர் அவலத்தை எழுதவில்லை .
தமிழ் மூடன் RAWவாக இப்ப அவரை தூக்கிப் பிடிப்பதன் மர்மம் என்ன ?
வோவ்…வோவ்….வோவ்…..லொள்…லொள்….லொள்…..குரைக்கிறநாய் ஒன்று வருகுகிறது….கல்லால் அடித்து விரட்டி அடியுங்கோ தமிழ் மக்களே………………
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஈ.பி.டி.பி இணையும் காலம் விரைவில் வரும்(அரிய புகைப்படங்கள்)!
Posted: 22 Aug 2013 02:20 PM PDT
தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி உடன் திரைக்கு பின்னால் வைத்திருக்கக் கூடிய கள்ள தொடர்பை காட்டுகின்ற புகைப்படங்கள் ஊடகங்களுக்கு கிடைக்கப் பெற்று உள்ளன.
வட மாகாண தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகளின் முக்கியஸ்தர்களை யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேரில் கண்டு பேசினார்.
கூட்டத்தை நிறைவு செய்து கொண்டு வெளியில் வந்தபோது ஈ.பி.டி.பி டக்ளஸ் தேவானந்தாவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் ஓய்வு பெற்ற நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் முக மலர்ச்சியோடு கை இலாகு கொடுத்தார்.
அத்துடன் ஈ.பி.டி.பி தேவானந்தாவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிவஞானம் சிறிதரன் எம். பி சிரித்துப் பேசி மகிழ்ந்தார்.
மட்டும் அன்றி ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முதன்மை வேட்பாளர் சின்னத்துரை தவராசாவை நட்புரிமையோடு குசலம் விசாரித்து உடன் சென்றார்.
பொதுமக்களுக்கு மிக அபூர்வமான இக்காட்சிகளை ஊடகவியலாளர்கள் பலரும் புகைப்படங்கள் பிடித்துக் கொண்டனர்.
ஆயினும் ஊடகவியலாளர்களோடு நேரடியாக தொடர்பு கொண்டு பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் இப்புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என்று அழுத்தம் கொடுத்து உள்ளனர்.
தற்போது பேஸ் புக் சமூக இணைப்புத் தளத்தில் உள்நாட்டு மற்றும் புலம்பெயர் தமிழர்களிடையே அதிகம் பேசப்படுகின்ற விடயப் பொருளாக இப்புகைப்படங்கள் மாறி உள்ளன.
தேர்தலை தொடர்ந்து விக்னேஸ்வரன் ஈ.பி.டி.பி கட்சியுடன் சேர்ந்து இணக்க அரசியல் செய்யக் கூடுமென பேஸ் புக் அன்பர்கள் கருத்துக்கள் எழுதி உள்ளார்கள்.
Share
அமெரிக்க நிலைப்பாட்டால் இலங்கை இராணுவம் சிக்கலில்!
Posted: 22 Aug 2013 09:41 AM PDT
இறுதிப் போரின்போது படைநடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவப் படையணிகள் தொடர்பில் அமெரிக்கா கொண்டுள்ள கடுமையான நிலைப்பாட்டினாலேயே, தமது இராணுவ அதிகாரிகள் அமெரிக்க இராணுவ நிகழ்ச்சித் திட்டங்களில் கலந்துகொள்ள முடியாமல் இருப்பதாக இலங்கை இராணுவம் கூறுகிறது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான அமெரிக்காவின் நிலைப்பாட்டினால் தமது மூத்த படையதிகாரிகளுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் அனுமதி மறுத்துவருவதாக இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் கூட்டுத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.
army
நியூசிலாந்தின் ஆக்லண்டில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் நடக்கவுள்ள இராணுவ நிகழ்ச்சித் திட்டமொன்றுக்கு இலங்கை அரசாங்கம் சார்பில் அனுப்பப்படவிருந்த இரண்டு மூத்த இராணுவ அதிகாரிகளை, மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக் கூறல் காரணங்களைக் காட்டி அமெரிக்கா நிராகரித்துவிட்டது.
பசிபிக் இராணுவ முகாமைத்துவ கருத்தரங்குக்கு இலங்கை இராணுவம் அனுப்பவிருந்தவர்களில் தற்போது வன்னிப் படைகளின் தளபதியாக உள்ள பொனிபேஸ் பெரேராவை மட்டுமே அமெரிக்கா ஏற்றுக் கொண்டிருக்கிறது.
கொழும்பில் இலங்கை இராணுவம் இன்று நடத்திய ஊடகச் சந்திப்பொன்றில் செய்தியாளர் இதுபற்றி கேள்வி எழுப்பினார்.
´அமெரிக்க அரசின் கொள்கை ரீதியான முடிவு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த தடவையும் ஜெனரல் சுதந்த ரணசிங்கவை நாங்கள் பாதுகாப்பு கற்கைநெறி ஒன்றுக்காக பிரேரித்தபோதும் அமெரிக்காவில் அதனை நிராகரித்திருந்தார்கள். 53வது படையணியின் தளபதி என்றுதான் காரணம் கூறப்பட்டிருந்தது. ஆனால் அவர் யுத்தம் முடிந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் தான் 53வது படையணிக்கு தளபதியாக நியமனம் பெற்றவர்´ என்றார் ஜகத் ஜயசூரிய.
´அதேபோல் 57வது படையணியின் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸுக்கும் முன்னர் அங்கு தேசிய பாதுகாப்பு கல்லூரியில் கற்கைநெறி ஒன்றை கற்பதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இந்த படையணிகளின் பெயர்களில் தான் பிரச்சனை இருக்கிறது. அந்தப் பிரச்சனைகள் தீரும்வரை சிக்கல்கள் இருக்கும்´ என்றும் ஜகத் ஜயசூரிய கூறினார்.
மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் விவகாரத்தில் அமெரிக்காவின் உயர்மட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டாலே பிரச்சனை தீரும் என்றும் பாதுகாப்புப் படைகளின் கூட்டுத் தளபதி கூறினார்.
ஐநாவின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்யும்போது இந்தப் பிரச்சனை தீர்க்கப்படும் என்றும் இலங்கை பாதுகாப்பு படைகளின் கூட்டுத் தளபதி நம்பிக்கை தெரிவித்தார்.
´மனித உரிமைகள் பிரச்சனை காரணமாக அமெரிக்க தரப்பினர் கொண்டிருக்கின்ற நிலைப்பாடும் எங்களின் நிலைப்பாடும் வெவ்வேறாக இருப்பது தான் இதற்கு காரணம். இம்முறை ஐநாவின் மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு வந்தால் அந்தப் பிரச்சனை தீரும் என்று நினைக்கின்றேன்´ என்றார் ஜகத் ஜயசூரிய.
´நவிபிள்ளையும் நாட்டின் பலபகுதிகளுக்கும் சென்றுபார்ப்பார். உண்மை நிலைமையை வெளிப்படுத்தவேண்டியது அவரது கடமை. அவர் கொழும்பில் தங்கியிருக்கமாட்டார். நாட்டின் பல பகுதிகளுக்கும் செல்வார். யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு பகுதிகளுக்கும் செல்வார்´ என்றார் ஜெனரல் ஜயசூரிய.
இலங்கையின் இறுதிப் போரின்போது வன்னியில் படைநடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவத்தின் 53ம் பிரிவு, 57-ம் பிரிவு மற்றும் தற்போது ஐநாவில் இலங்கையின் பிரதிநிதியாக இருக்கின்ற மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் 58ம் பிரிவு உள்ளிட்ட பல படையணிகள் மீது சர்வதேச அமைப்புகள் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்மை குறிப்பிடத்தக்கது.
அந்தக் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்துவருகிறது.
Share
பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பது: இந்தியா இதுவரையில் தீர்மானிக்கவில்லை!
Posted: 22 Aug 2013 09:36 AM PDT
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில், எந்த மட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்குபற்றுவார்கள் என்பது குறித்து இந்தியா இதுவரையில் தீர்மானிக்கவில்லை என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெறவிருக்கின்ற பொதுநலவாய மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை பங்கேற்க வேண்டாம் எனக் கோரி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவினால் கடந்த மார்ச் மாதத்தில் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
ராஜ்யசபாவில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதேவேளை, இலங்கை சிறைச்சாலைகளிலுள்ள 106 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை சிறைச்சாலைகளில் தற்போது 106 தமிழக மீனவர்கள் உள்ளனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, தமிழக மீனவர்களை மீட்க பலமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இப்போதும், இந்தியா வந்த இலங்கை வெளிவிவகார அமைச்சரிடம் மீனவர்களை விடுதலை செய்யும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும் குர்ஷித் மேலும் குறிப்பிட்டார்.
Share
தமிழரான ஈழ நேருவை இலங்கைக்கு நாடு கடத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை!
Posted: 22 Aug 2013 09:31 AM PDT
இலங்கைத் தமிழரான ஈழ நேருவை இலங்கைக்கு நாடு கடத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இலங்கை அகதிகளான செந்தூரன், ஈழ நேரு, சௌந்தரராசன் ஆகியோரை இலங்கைக்கு நாடு கடத்த இந்திய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஈழ நேருவின் மனைவி, இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்தார். அம்மனுவில், ஈழநேருவை இலங்கைக்கு அனுப்பினால் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அதனால் அவரை இலங்கைக்கு அனுப்புவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இம்மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், மனுவை பரிசீலனை செய்த நீதிபதி, ஈழ நேருவை இலங்கைக்கு அனுப்ப இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், மனுதாரரின் முறைப்பாடு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் எதிர்வரும் செப்டெம்பர் 27ஆம் திகதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
Share
இலங்கை அகதிகளை தடுத்துவைத்தது கொடூரச் செயல்: ஐ.நா!
Posted: 22 Aug 2013 09:29 AM PDT
அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் 46 பேரை பாதுகாப்பு காரணங்களைக் காட்டி அஸ்திரேலியா காலவரையின்றி தடுத்துவைத்திருப்பது, கொடூரமான, மனிதத் தன்மையற்ற, இழிவுபடுத்தும் விதமான செயல் என்று ஐக்கிய நாடுகள் சபை குற்றஞ் சாடியுள்ளது.
அஸ்திரேலியாவின் இந்தச் செயல் காரணமாக தடுத்துவைக்கப்பட்டவர்கள் கடுமையான உளவியல் துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று இவர்களது வழக்குகளை பரிசீலித்த ஐ.நா குழுவொன்று கண்டறிந்துள்ளது.
குறைந்தது இரண்டரை ஆண்டுகள் காலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்தத் அகதிகளை அஸ்திரேலியா உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், அவர்களுக்கு நஷ்டஈடும் புனர்வாழ்வும் அளிக்க வேண்டும் என ஜெனீவாவிலிருந்து இயங்கும் மனித உரிமைகள் குழு கேட்டுக்கொண்டுள்ளது.
இலங்கைத் தமிழர்கள் 42 பேர், மியன்மாரிலிருந்து சென்ற ரோஹிஞ்சாக்கள் 3 பேர், குவைத் பிரஜை ஒருவர் ஆகியோர் அடங்கிய இந்த அகதிகள் தாங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளது தொடர்பில் ஐ.நா மனித உரிமைக் குழுவிடம் முறையிட்டிருந்தனர்.
தடுத்துவைக்கப்பட்டதை எதிர்த்து அவுஸ்திரேலிய நீதிமன்றங்களில் வழக்கு தொடர தங்களுக்கு வழியில்லாமல் இருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இவர்களை அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்ப முடியாது. ஆனால் ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்டால் இவர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துவார்கள் என்று கருதப்பட்டு, குடிவரவுத்துறையின் தடுப்புக்காவல் மையத்திலேயே இவர்கள் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த அகதிகள் தடுத்துவைக்கப்பட்டது எதேச்சதிகாரமான செயல் என்றும், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்பாட்டின் 9 ஆம் ஷரத்தை மீறும் செயல் என்றும் சுயாதீன மனித உரிமை நிபுணர்கள் 18 பேர் அடங்கிய ஐ.நா குழு கண்டறிந்துள்ளது.
2009 மார்ச் மாதத்துக்கும் 2010 டிசெம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் அஸ்திரேலியாவுக்கு வந்திருந்த இந்த தஞ்சக் கோரிக்கையாளர்களில் பெரும்பான்மையானோர் முதலில் கிறிஸ்துமஸ் தீவில் இறங்கியிருந்தவர்கள்.
இவர்களில் ஐந்து பேர் கடலில் இருந்து மீட்கப்பட்டு முதலில் இந்தோனேஷியாவில் கரைக்கு கொண்டுவரப்பட்டு பின்னர் கிறிஸ்துமஸ் தீவுக்கு கொண்டுவரப்பட்டவர்கள்.
தாம் ஏன் பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறோம் என்று தமக்குத் தெரிவிக்கப்படவில்லை எனவும், ஆஸ்திரேலிய நீதிமன்றங்களில் தமது தடுப்புக்காவலை எதிர்த்து மறு ஆய்வு மனு தொடுக்கும் சட்ட வழிமுறைகள் தமக்கு இல்லை என்றும் இந்த அகதிகள் ஐ.நா மனித உரிமைக் குழுவிடம் முறையிட்டிருந்தனர்.
தடுத்துவைக்கப்பட்டவர்களில் ஏழு பேர் மட்டும் விடுவிக்கப்பட்டு ஆஸ்திரேலிய சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ளனர் என ஐ.நாவின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
Share
இந்தோனேஷியாவில் 9 புகலிடக் கோரிக்கையாளர்கள் கைது!
Posted: 22 Aug 2013 09:22 AM PDT
இந்தோனேஷியாவில் ஒன்பது புகலிடக் கோரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பபுவா நியூகினித் தீவுகளுக்கும் இந்தோனேஷியாவிற்கும் இடையிலான எல்லைப் பகுதியில் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிப்பதற்கு ஆயத்தங்களை செய்த போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விரைவு படகு மூலம் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்தப் பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட இடத்திலிருந்து சில கிலோ மீற்றர் தூரத்தில் அவுஸ்திரேலிய எல்லைப் பகுதி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டவர்களில் சூடான், ச்சாட் மற்றும் சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க ஆயுத்தமாகிக்கொண்டிருந்த மேலும் 14 பேரைக் காணவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.
Share
புத்தசாசன அமைச்சின் அறிக்கை ஏனைய மதங்களை பாதிக்கும்:மா.கொ.நிலையம்!
Posted: 22 Aug 2013 09:12 AM PDT
பிரதான மதங்களின் இழிவு மற்றும் அனுபவங்கள் தொடர்பாக பௌத்த சாசன அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஏனைய மதங்களைப் பாதிப்பதாக அமையயும் என மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது.
இப் புதிய அறிக்கையின் அடிப்படையில் பிரதான மதங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
எனினும் பௌத்த சாசன அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை ஏனைய மதங்களின் சுதந்திரத்தை பாதிக்கும் முதல் படியாக இருக்கும் என்று நாம் அச்சமடைகிறோம்.
இந்த புதிய சட்டத்தின் மூலம் இலங்கையில் எதிர்பார்க்கப்படுகின்ற இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் என்பவற்றுக்கு பாதிப்பு ஏற்படலாம்.
அத்துடன் இந்த புதிய சட்டம் அரசியல் அமைப்பின் 10வது அமைப்பில் உள்ள மதம் சம்பந்தமான சுதந்திர போக்கை பாதிப்பதாகவும் அமைந்துள்ளது.
எனவே நாடாளுமன்றத்தில் இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும் போது அதனை நாடாளுமன்றம் நிராகரிக்கவேண்டும் என்றும் மாற்றுக்கொள்கைக்கான நிலையம் கோரியுள்ளது.
Share
பறியுங்கள் துப்பாக்கிகளை! யாழில் தேர்தல் ஆணையாளர் உத்தரவு!
Posted: 22 Aug 2013 09:03 AM PDT
சிவிலியன்களிடமுள்ள அனுமதி பெற்ற துப்பாக்கிகளாயினும் அவற்றைப் பறிமுதல் செய்யுமாறு பிரதிப் பொலிஸ்மா அதிபருக்குத் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று யாழ்ப்பாணத்தில் வைத்து உத்தரவிட்டுள்ளார்.
வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொலிஸார் ஆகியோருடன் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று யாழ். பொது நூலகத்தில் கலந்துரையாடல் நடத்தினார்.
வலி. வடக்கைச் சேர்ந்த இடம் பெயர்ந்தவாக்காளர் வடமராட்சியில் தங்கியுள்ளனர். இவர்கள் வலி.வடக்கு வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிப்பதற்குரிய போக்குவரத்து வசதிகளை இலவசமாக மேற்கொள்ளுமாறு அரசியல் கட்சிகள் தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்தன. இதனைத் தேர்தல்கள் ஆணையாளர் ஏற்றுக்கொண்டார்.
யாழ். தீவகப் பகுதிக்குப் பிரசாரத்துக்குச் செல்லும் அரசியல் கட்சிகள் தேவை என்றால் பொலிஸ் பாதுகாப்புப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.தேர்தல் காலப்பகுதியில் சிவிலியன்கள் யாரும் அனுமதி பெற்ற துப்பாக்கிகளையும் வைத்திருக்க முடியாது. அவ்வாறு வைத்திருந்தால் அவற்றைப் பறிமுதல் செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாள
/////////ச.நித்தியானந்தன்///////கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பகிஸ்கரிப்பு கோரிக்கை
தவறானது என்கிறேன் நான் .
நீர் என்ன சொல்லுகின்றீர்.
ஆம் அல்லது இல்லை என்ற இரு பதில்களே உண்டு .
தெளிவான நழுவல் அற்ற பதில் சொல்லும் .
That will be the best way to know who you are ?
சரி எண்டும் சொல்லலாம் பிழை எண்டும் சொல்லலாம் ஏனென்டால் என்டு நீளமா இழுத்து எந்த முடிவும் இல்லாமல் எந்தப்பக்கம் வெண்டாலும் சுய இருப்புக்கு ஏற்றதாக பேசுவீர் என்பதே என் எதிர் பார்ப்பு . இதைத் தான் நான் வெறுக்கின்றேன் . சொல்வதை செய். செய்வதைச் சொல் . எதிரியானாலும் உன்னை மதிப்பேன் நான் . நீர் எழுவது அய்