பாகிஸ்தானின் பிரதமர் யூசுப் கிலானி, பதவியிலிருக்க தகுதியற்றவர் என்று பாகிஸ்தான் உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்த பிறகு, புதிய பிரதமராக சகாபுதீன் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். இவர் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவரும், ஜவுளித்துறை அமைச்சரும் ஆவார்.
தேர்தல் ஆணையம், இன்று சகாபுதீனை பிரதமராக தேர்வு செய்தது. இன்று பிற்பகல் நடக்கவிருக்கும் பாகிஸ்தான நாடாளுமன்ற கூட்டத்தில் அறிவிக்கப் பட்டு, நாளை முறைப்படி பிரதமராக சகாபுதீன் தேர்வு செய்யப் படுவார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.