வன்னியில் நேற்றிரவும் மட்டும் 300 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அங்கு மருத்த்துவப் பணிகளை மேற்கொள்ளும் மருத்துவரொருவரை மேற்கோள் காட்டி பீ.பீ.சி செய்திச் சேவையும் ஏ.எப்.பீ செய்தி நிறுவனமும் செய்தி வெளியிடுள்ளன.
முன்னதாக முன் நாள் புலிகள் தலைவர்களில் ஒருவரான கருணா வெளியிட்ட அறிக்கையில் வன்னியில் எஞ்சியிருப்போர் புலிகளும் புலிகளின் குடும்பத்தினரும் எனத் தெரிவித்திருந்தானது இலங்கை அரசின் இப்படுகொலைகளுக்கு முன்னறிவிப்புப் போன்றதாகும் என பெயர் குறிப்பிட விரும்பாத இலங்கை சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் இனியொருவிற்குத் தெரிவித்தார்.
மருத்துவக் கலாநிதி சண்முகராஜும் அவரின் உதவியாளர்களும் புலிகளால் செல்வாகுச் செலுத்தப்படுகிறார்கள் என இலங்கை இராணுவப் பேச்சாளர் ஊடகங்களுகுத் தெரிவித்தார்.
இதேவேளை புலிகள் சார்பான தமிழ் நெட் ஊடகம் 2000 பேர்வரை கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கிறது.
அகதி முகாம்களில் கூடக் கொலை செய்யும் இலங்கை அரசின் நடவடிக்கைகளை நோக்கும் போது இப்படுகொலைகள் புலிகளுக்கு எதிரான போராகக் கருத்த முடியாது என இங்கிலாந்தைத் தளமாகக் கொண்ட மனித உரிமை வாதி சகரவர்த்தி தெரிவித்துள்ளார்.