இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக இலங்கையில் செயற்பட்டு வருவதாக இனக்கொலையாளியும் இலங்கையின் பாதுகாப்புச் செயலருமான கோதாபய ராஜபக்ச செயற்பட்டுவருவதாக் அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தார். பொது பல சேனா போன்ற பௌத்த பயங்கரவாத அமைப்புக்களை உருவாக்கி தமிழ்ப் பேசும் முஸ்லிம்களுக்கு எதிரான பயங்கரவாதத்திஅ வளர்க்கும் இலங்கை அரச பாசிசமும் அதன் சூத்திரதாரியான கோத்தாபய ராஜபக்சவும் இலங்கையில் இன்னொரு இரதக்களரியைத் திட்டமிட்டு வருகின்றனர்.
இலங்கையில் முஸ்லிம் தமிழர்களின் வாக்குப் பொறுக்கும் தலமைகளோ இலங்கை அரசுடன் இணைந்து அமைச்சர் பதவிகளையும் சலுகைகளையும் பெற்று வாழ்வாங்கு வாழ்கின்றன. இந்த நிலையில் தவிர்க்க முடியாமல் தமது வாக்குகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காக இந்த அரசியல் வாதிகள் அவ்வப்போது தெரிவிக்கும் கருத்துக்களைக் கூட இலங்கை அரச பாசிஸ்டுக்கள் எதிர்க்கின்றனர்.
இலங்கை இனக்கொலை அரசில் நீதி அமைச்சர் பதவி வகிக்கும் முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த ரவூப் ஹக்கீம் கோத்தாபயவின் பௌத்த பயங்கரவாதக் கருத்துக்களுக்கு ஆங்காங்கு எதிர்ப்புத் தெரிவித்த போது அதற்கு எதிராக கோத்தாபய பொங்கி எழுந்துள்ளார்.
அமைச்சர் ஹக்கீம் கள நிலைமைகளை அறிந்து கொள்ளாது, கண்மூடித் தனமாக கருத்து வெளியிட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். கடும்போக்குவாதம் காரணமாக உலகமே இன்று பாதிக்கப்பட்டுள்ளது என்பதனை புரிந்து கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடும்போக்குவாதத்தை கட்டுப்படுத்த நாம் பல நாடுகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புலனாய்வுப் பிரிவு, சுங்கப்பிரிவு, விமான நிலைய பாதுகாப்பு போன்றவற்றின் காரணமாக கடும்போக்குவாதத்தை கட்டுப்படுத்த முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வடகிழக்குத் தமிழர்களைப் போன்று தனித்துவமான தேசிய இனமான முஸ்லிம்களுக்கு எதிரான இனச் சுத்திகரிப்பைத் நிறுவனமயப்படுதிவரும் இலங்கை அரச பாசிஸ்டுக்கள் ஆட்சி நடத்துவதற்கு இது அவசியமானதாகிறது.
மறுபுறத்தில் முஸ்லிம்களைத் தனியான தேசிய இனமாகவும் அவர்களின் சுய நிர்ணய உரிமையையும் அங்கிகரிக்க மறுக்கும் புலி சார் அமைப்புக்கள் முஸ்லிம்களைத் தம்முடன் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றன. முஸ்லிம் தமிழர்களை இலங்கை அரசைப் போன்றே தனியான தேசிய இனமாக ஏற்றுக்கொள்ள மறுக்கும் அப்பட்டமான பாசிசக் கருத்துக்களைக் கொண்ட இவர்கள் தம்மை ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தைச் சார்ந்தவர்கள் என்று அழைத்துக்க்கொள்வது அத்தேசிய இனத்தின் அவமானம்.
போப் பிரான்சிஸ் இலங்கைக்கு வருகிறார் என்பதை கொழும்பு ஆயர் அலுவலகம் உறுதிப்படுத்தியிருக்கிறது.
இந்த ஆண்டு முன்னதாக இலங்கை ஜனாதிபதி புதிய போப்பை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருப்பதாக ஜனாதிபதி அலுவலகம் கூறியிருந்தது.
கொழும்பு ஆயருக்காகப் பேசவல்ல அருட்தந்தை பெனெடிக்ட் ஜோசப், பிபிசியிடம் பேசுகையில், ” திருத்தந்தை இலங்கைக்கு வருகிறார் என்பதை வத்திக்கான் உறுதிப்படுத்தியிருக்கிறது. இது வரை எங்களுக்கு அவர் விஜயம் குறித்த நாட்கள் அல்லது வேறு விவரங்கள் தரப்படவில்லை. அவர் வருகிறார் என்பது அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை மட்டும்தான் என்னால் சொல்ல முடியும். அவரது விஜயம் குறித்த மேல் விவரங்களை நாங்கள் விவாதித்துக்கொண்டிருக்கிறோம். இந்த விஜயம் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் நடக்கிறதா என்பதையும் என்னால் சொல்ல முடியாது. இந்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை”,என்றார்
It is obvious Gotha wants to carve out his own niche now onwards. Sri Lanka Muslim Congress is also now Four of a Kind. I am with Hassan Ali as his brother Jabar Ali is a Family Friend. I am also Rauf ST – Sinhala and Tamil.
நான் ஓர் மதத்தினருக்கோ இனத்துக்கோ எதிரானவன் அல்ல!
ஆனால் ஒவ்வொரு தேர்தலிலும் பார்க்கிறோம் இவர்கள் நடுவில் நின்று தமக்கு எங்கு சலுகை கிடைக்கிறதோ அங்கு சாய்வார்கள்.
உதாரணத்திற்கு 1983 இனக் கலவரத்தில் பாதிக்கப்பட்டது யார்?
தமிழர்களின் சொத்துக்கள் யாரிடம் கைமாறியது?
இன்று தலைநகர் கொழும்பில் வியாபாரங்கள் யாரிடம் கைமாறியுள்ளது?
தலைநகரிலும் கிழக்கிலும் விகிதாசாரம் எங்கு போகிறது?
போரின் மத்தியில் தமிழ் தெரிந்த அரசாங்க உத்தியோகத்தர் என்ற இடைவெளியை யார் நிரப்புகிறார்கள்?
ஒரு சாரார் அரசாங்கத்துடன் இருந்து சலுகைகளை பெற்று தமது இனத்தை கவனிப்பார்கள்…
மற்ற சாரார் எதிர்க்கட்சியில் இருப்பார்கள்…
ஆனால் இரு சாராருக்கும் தமது இனத்தை நோக்கி ஒற்றுமை இருக்கும்!
இதற்காக என்னை பாதுகாப்பு செயலாளரின் ஆள் என்றும் கூறாதீர்கள்.
மாறி மாறி வரும் அரசாங்கங்களும் எண்ணெய் வள முஸ்லிம் நாடுகளுடன் உறவுகளை பேண அரசாங்கத்தில் முஸ்லிம் அமைச்சர்களை வைத்திருப்பார்கள்…
பிழைக்கத் தெரிந்தவர்கள்!
இது வரலாறு…
எமக்கு நல்ல முஸ்லிம் குடும்ப நண்பர்கள் உள்ளனர், அதே நேரம் போரின் பின் தாயகம் சென்ற போது அன்பாக வரவேற்ற சிங்கள இனத்தவரையும், எம்மிடம் என்ன பிடுங்கலாம் என்ற தமிழில் பேசிய முஸ்லிம் இனத்தவரையும் குடிவரவு இலாகாவில் கண்டேன்.
சுங்கத்தில் பல வருடங்களின் பின் வருகிறேன் என்று சொல்ல அன்பாக வரேவேற்ற சிங்கள இனத்தவரையும் பொதி முழுக்க கொட்டி கிளறி எடுத்து இப்பொருட்கள் யாருக்கு என்று என்னை ஒரு வழிப்பன்னிய தமிழில் பேசிய முஸ்லிம் சகோதரரையும் கண்டேன்.
எங்கே பொய் முட்ட…???
“Muslims of Sri Lanka have reached the end of a Political Road and Need to Change Direction” – By Dr.Ameer Ali
Sri Lanka’s Muslims are at an unprecedented and ominous crossroads. The community there is faced with an existential threat at the hands of an increasingly militant Buddhist minority, while the nation’s Muslim parliamentarians appear to be more powerless and mute than at any time since 1947. This impotence is startling because the current parliament holds the largest number of Muslim cabinet ministers and deputies (four in each category, respectively) in history, although the number of Muslim representatives in the legislature, eighteen in total, is slightly fewer than in 1989 or 1994. In the face of increasing violence against Muslim businesses, mosques, madrassas, and lives, allegedly by Bodu Bala Sena (BBS)–a fascist outfit of the militant Buddhist political organization, Jatika Hela Urumaya (JHU), which is, like the Sri Lanka Muslim Congress (SLMC), a coalition partner in the Rajapaksa Government–the abject silence and weakness of these parliamentarians is difficult to comprehend.
For full article…
http://dbsjeyaraj.com/dbsj/archives/25524