அவன்கார்ட் மரிரைம் என்ற தனியார் இராணுவ நிறுவனம் தொடர்பான செய்தி நேற்று இனியொருவில் வெளியிடப்பட்டிருந்தது. இது தொடர்பான தொடர்ச்சியான கட்டுரைகள் பல தடைவைகள் வெளிவந்தன. இன்று அவன்கார்ட் மரிரைம் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆயுதங்கள் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கோத்தாபய ராஜபக்சவின் வழி நடத்தலில் இயங்கிவந்த பாதுகாப்பு அமைச்சின் தனியார் இராணுவ நிறுவனமான ரக்ன ஆகாஷ லங்காவுடன் இணைந்து இயங்கிவந்த மற்றொரு நிறுவனமே அவன்கார்ட் மரிரைம் என்பதாகும்.
போலிஸ் தகவல்:
காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலில் சந்தேகத்துக்கிடமான பொருட்கள் இருப்பதாக காலி பிரதி பொலிஸ் மா அதிபர் ஏ.எஸ்.டீ.எஸ் குணவர்தனவுக்கு இன்று நண்பகல் தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் அடிப்படையில் நங்கூரமிடப்பட்டிருந்த மஹநுவர கப்பல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அந்த கப்பல், அவன்கார்ட் மரிரைம் என்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்தினால் குத்தகைக்கு பெறப்பட்டதாகும். அந்த கப்பலில் ஆயுதங்கள் பல இருந்தன.
ரி-56 ரக துப்பாக்கிகள், மெசின் கண், 84 எஸ் ரய்பில் எனும் ஆயுதம் மற்றும் தன்னியக்க ஆயுதங்கள், அரைவாசி தன்னியக்க ஆயுதங்கள் உள்ளிட்ட 3,000 ஆயுதங்கள் இருந்ததாக அந்த கப்பலுக்கு பொறுப்பாக இருந்தவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சிடமிருந்து அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டதாக கப்பலிலிருந்தவர்கள் தெரிவித்தனர்.
அவன்கார்ட் மரிரைம், சர்வதேசக் கப்பற் போக்குவரத்திற்கு பாதுகாப்பு வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட தனியார் இராணுவ நிறுவனமாகும். இலங்கையை மையமாகக் கொண்டு உலகின் பல நாடுகளில் கிளைகளைக் கொண்டிருக்கும் அவன்கார்ட் மரிரைம் கோத்தாபாயவின் வழி நடத்தலில் இயங்கிவந்தது. பிரிதானிய அரசு 2013 ஆம் ஆண்டில் இலங்கைக்கான ஆயுதங்களுக்கு அனுமதி வழங்கியிருந்தது. கடற்கொள்ளையில்ருந்து பாதுகாக்கும் சேவையை இலங்கை வழங்கி வருவதாலேயே இலங்கைக்கு ஆயுதங்களை வழங்குவதாக பிரித்தானிய அரசு தெரிவித்தது. அவன்கார்ட் மரிரைம் நிறுவனம் சோமாலிய கடலிலும் இயங்கி வருகிறது. மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் கடற்பாதுகாப்பு வியாபாரத்தின் ஒரு பகுதியே ஆகும்.
ரக்ன ஆகாஷ லங்கா, அவன்கார்ட் மரிரைம் போன்றவற்றின் ஆயுதங்களைத் தற்காலிகமாகக் கைப்பற்றுவதுடன் மட்டும் இலங்கை அரசு நிறுத்திக்கொள்ளுமா அன்றி நிறுவனங்கள் முழுமையாக மூடப்படுமா என்பது தெளிவாக அறிவிக்கப்படவில்லை. மக்களின் பணத்தைச் சூறையாடி அதனூடாக ஆயுத மற்றும் இராணுவ வியாபாரம் நடத்தும் இந்த நிறுவனங்களை மூடக் கோரி மக்கள் போராடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலதிக தகவல்கள்:
What’s going on here…
Lanka is the centre of Arms shipment…?
Is this we called Asia’s miracle…?
Any connection with KP…?