இலங்கையின் முன்னை நாள் அமைச்சர் மேர்வின் சில்வா கோத்தாபய ராஜபக்சவிற்கு லசந்த விக்கிரமதுங்கவின் கொலௌயுடன் நேரடியான தொடர்புகள் இருப்பதாக குற்றப் புலனாய்வுத் துறையிடம் தகவல்கள் வழங்கியிருப்பதாகக் கூறியுள்ளார். ராஜபக்ச அரசில் நிழல் உலக மாபியாக்களின் பெரும்பகுதியுடன் தொடர்புடையவராகவிருந்த அமைச்சர் மேர்வில் சில்வா சண்டே லீடரின் ஆசிரியரைக் கோத்தாபய ராஜபக்ச தீவிரமாக வெறுத்தார் எனக் கூறிவந்தார்.
அதே வேளை லசந்த விக்ரமசிங்கவின் கொலையை கோத்தாபயவும் சரத் பொன்சேகாவும் இணைந்தே மேற்கொண்டனர் என ஜே.வி.பி கூறி வந்தது. சரத் பொன்சேகா அதிகாரத்திலிருப்பதால் இலங்கைக்குத் திரும்பிச் செல்ல முடியாத நிலையிலிருப்பதாக சண்டே
லீடரின் முன்னை நாள் ஆசிரியர் இலங்கைக்கு வெளியிலிருந்து கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, ராஜித சேனரத்னவிற்கும் கோத்தாபய ராஜபக்சவிற்கும் இடையே சினமன் கிராண் என்னுமிடத்தில் அமைந்துள்ள உணவு விடுதியில் சந்திப்பு ஒன்று நடைபெற்றதாக ஊடகம் ஒன்று கூறியுள்ளது.