கிறீஸ் பூதத்தின் பின்னணியில் இராணுவப் புலனாய்வுத்துறையினரே இருப்பதாகவும், பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்சவின் உத்தரவுக்கமையவே இந்தப் பீதியை அவர்கள் கிளப்பி விட்டிருப்பதாகவும் தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக படைப் புலனாய்வாளர்கள் ‘வெள்ளை வான்‘ களை கொண்டு பீதியூட்டி வந்தனர். தற்போது கிறீஸ்பேய்களைக் கொண்டு மக்களை அச்சுறுத்தி வருகின்றனர் என அவர் கூறினார்.
பொதுமக்களால் கிறீஸ் பேய்கள் என்று பிடிக்கப்பட்டவர்கள் அனைவருமே இராணுவப் புலனாய்வாளர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.
பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட இவர்களில் பலரும் தம்மை படையினர் என்று அடையாளம் காட்டியதும் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிராமங்கள் தோறும் படைமுகாம்களை நிறுவுவதற்காகவே கோத்தாபய ராஜபக்ச இவ்வாறு செயற்படுவதாக மங்கள சமரவீர தெரிவித்தார்.
ஏற்கனவே, இந்தப் பிரச்சினையை காரணம் காட்டி கிழக்குப் பகுதிக்கு 5000 படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
கிறிஸ்மனிதனுக்கும் சிறிலங்கா அரசபயங்கரவாதப்படைக்கும் எத்தொடர்பும் இல்லையென நற்சான்றிதழ் வழங்கும் முஸ்லீம்களின் தலைவர் ரவூப்கக்கீம். கிறிஸ்மனிதனை காரணம்காட்டி மலையகத்தில் விசேட அதிரடிபடைமுகாமைக்க மலையகமக்கள் தலைவர் ஆறுமுகம் தொண்டாமான் சிறிலங்கா அரசபயங்கரவாதப்படைக்கு ஆதரவு. -ஆதாரம் வீரகேசரி நாளிதழ்.
மட்டக்களப்பில் கிறிஸ்மனிதனெனும் பெயரில் நடமாடும் ஈழத்தமிழர் பிரதிநிதிகளான அரியநேத்திரன் யோகேஸ்வரன் தலைமையில் அரசபயங்கரவாதப்படைக்கெதிராக போராட்டம்.- தமிழ்மிரர் இணையம்.
இந்நிலையில் இனியொரு இணையத்தின் தமிழ்மக்களின் உரிமைக்கான போலி போராட்ட முகத்திரை கிழிந்தது அம்மணமாகியுள்ளது. முஸ்லீம்களின் தலைவர் ரவூப்கக்கீமை மலையகமக்கள் தலைவர் ஆறுமுகம் தொண்டாமான் கண்டிக்காது நழுவும் இனியொரு இணையம் தனது சிறிலங்கா விசுவாசத்தை காட்டுகிறது. ததேகூட்டமைப்பை அர்த்தமின்றி கண்டித்து தமது தமிழ்தேசீய எதிர்ப்பை இனம் காட்டியுள்ளது.