பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவின் கூற்று ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாநாகரசபை மேயர் வேட்பாளர் ஏ.ஜே.எம். முஸாம்மில் தெரிவித்துள்ளார்.
மக்களினால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுடன் கடயைமாற்றுவதே அரசாங்க உத்தியோகத்தர்களின் கடமை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமக்கு விருப்பமானவருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டுமென அண்மையில் பாதுகாப்புச் செயலளார் கோரியதாகவும் இது ஜனநாயக விரோதமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆளும் கட்சியினர் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கையை இலகுபடுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் மோசமான ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட இருவரை கட்சியில் வேட்பாளர்களாக நிறுத்தி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தமக்கு உதவி செய்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மிலிந்த மொரகொட மற்றும் மஹ்ரூப் ஆகியோர் பல்வேறு ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் என தெரிவித்துள்ளார்.
ஜனநாயகம் இலங்கையில் எங்கே உள்ளது அது இருந்தாலல்லவா ஜனநாயக கோட்பாடுகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை சுட்டிக்காட்ட முடியும்…
கரிச்சட்டி புறச்சட்டியை பார்த்தது கறுப்பென்று சொன்னதாம். இதேபோன்றதுதான் இன்றைய அரசியல்வாதிகளின் கூப்பாடும்.