இலங்கை இனக்கொலையாளி கோட்டாபயவின் வழி நடத்தலில் நடத்தப்பட்ட இஸ்லாமியத் தமிழர்கள் மீதான தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இலங்கை அரசின் அடிமைகளான வாக்குப் பொறுக்கும் இஸ்லாமியத் தலைவர்கள் இது குறித்து மூச்சுக்கூட விடவில்லை. இலங்கை அரசின் இனப்படுகொலை முஸ்லிம் மக்களை நோக்கித் தீவிரமடைந்துள்ளது. சிங்கள பௌத்த இனவெறியர்களால் அண்மையில் அலுத்கமவில் ஆரம்பமான தாக்குதல்கள் பல்வேறு பிரதேசங்களுக்கு விரிவடைந்தன.
கோட்டாபயவும் அவரது சகோதரரான மகிந்தவும் நாட்டில் இல்லாத வேளையில் நடத்தப்பட்ட இத் தாக்குதல்களை இலங்கை அரசு இதுவரை கண்டிக்கக்கூட இல்லை. சோரம்போகும் முஸ்லிம் தலைமைகள் திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பிற்கு உள்ளாக்கப்படும் தமது சமூகத்தின் மீதான தாக்குதல்களை அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்கின்றன.
கடந்த காலங்களில் ஏனைய தமிழ்ப் பேசும் சிறுபான்மையினருக்கு எதிராக முஸ்லிம்களைத் தூண்டும் நோக்குடன் செயற்பட்டுவந்த இத் தலைமைகள் பேரினவாத அரசின் நிகழ்ச்சி நிரலில் செயற்படுகின்றன.
இந்த நிலையில்,, அளுத்கம சம்பவம் தொடர்பில் இதுவரையில் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என தேசிய சமாதான முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
தாக்குதல்களிலிருந்து தற்காத்துக்கொள்ள முஸ்லிம் தமிழர்கள் செயற்பட வேண்டிய காலத்தைத் தவறவிட்டால் இனப்படுகொலையில் அழிந்துபோவது தவிர்க்கமுடியாத ஒன்றாகும்.