13.09.2008.
புதுடில்லி;
தனியார் தொலைக்காட் சியான ஸ்டார் நிறுவனம் நடத்திய கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் ஏராளமான பணம் மோசடி செய்யப் பட்டுள்ளது கண்டறியப் பட்டுள்ளது. இந்நிறுவனத் துடன் ஏர்டெல் நிறுவனத் துக்கும் சேர்த்து ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப் பட்டுள்ளது.
‘கோன் பனேகா குரோர் பதி’ என்னும் நிகழ்ச்சி ஸ்டார் தொலைக்காட்சி யில் பரபரப்பாக ஒளிபரப் பானது. வினாடி-வினா போட்டியாக நடத்தப் பட்ட இந்நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவர்களுக்கு அதிக பட்சமாக ஒரு கோடி ரூபாய் பரிசளிக்கப் படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் இரண்டாவது பாகத்தில் அதிக பட்ச பரிசு ரூ.2 கோடியாக உயர்த்தப் பட்டது.
இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பார்வையாளர் கள் செல்போன்களில் எஸ். எம்.எஸ் மூலம் போட்டி களில் பங்கேற்கலாம் என் றும் அறிவிக்கப்பட்டது. ஏர்டெல் வாடிக்கையாளர் கள் மட்டும் பங்கேற்கும் வகையில் நடத்தப்பட்ட போட்டியில் ஒரு எஸ்.எம். எஸ் கட்டணமாக ரூ.2.40 வசூலிக்கப்பட்டுள்ளது. இப்போட்டிகளில் பங்கேற் றவர்கள் சுமார் 5 கோடியே 80 லட்சம் எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளனர். இதற் கான தொகையாக ஒரு எஸ். எம்.எஸ்க்கு ஒரு ரூபாய் என் கிற அளவில் அதிகபட்சம் ரூ.5.80 கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ரூ.13.92 கோடி வருவாய் பெறப்பட் டுள்ளது. இதுகுறித்து டில் லியைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பு தேசிய நுகர் வோர் பாதுகாப்பு ஆணை யத்தில் புகார் அளித்தது. இதனை விசாரித்த ஆணை யம், இதில் பெரும் மோசடி நடைபெற்றுள்ளது என வும், ஏர்டெல் மற்றும் ஸ்டார் நிறுவனம் ஒரு கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என் றும் உத்தரவிட்டுள்ளது.
தொலைக்காட்சி போட் டிகள் மூலம் லட்சங்களை யும், கோடிகளையும் பரி சாக பெறலாம் என நினைத்து மீண்டும், மீண்டும் எஸ்.எம். எஸ் அனுப்பியவர்கள் தங் களது பணத்தைத்தான் இழந்துள்ளனர். ஆனால், நிகழ்ச்சி நடத்துபவர்கள் கோடிகளை அள்ளியுள் ளனர் என்பது தற்போது வெளியாகி உள்ளது.